மாணவி லாவண்யா மரணம்… பா.ஜ.க போராட்டம்… சி.பி.ஐ க்கு மாற்றப்படுகிறதா வழக்கு..? #JusticeFor_TNHinduGirl
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர்.இந்த நிலையில் மாணவி லாவண்யா
திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.காவல்துறை வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்
இந்த நிலையில் இறப்பதற்கு முன் லாவண்யா
பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.அந்த வீடியோவில் இரண்டாண்டுக்கு முன் எனது பெற்றோர்களிடம் பள்ளி ஆசிரியர்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாற சொன்னதாகவும் மதம்மாற மறுத்ததை தொடர்ந்து மாணவி என்னை கொடுமைபடுத்தியதாக மாணவி லாவண்யா கூறியுள்ளார்.இதேபோல் அவரது பெற்றோரும் கூறினார்கள்
இந்த நிலையில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பா.ஜ.க தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது . மேலும் சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பதிவிட்ட ‘ஹேஷ்டேக்’ தேசிய அளவில் ‘ட்ரெண்ட்’ ஆனது.இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று,
தஞ்சாவூர் எஸ்.பி., ரவுளி பிரியா விளக்கம் அளித்துள்ளார்.மாணவி ஜன., 19ல் உயிரிழந்தார், முன்னதாக, 16ம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்தார்.அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இதன்தொடர்ச்சியாக மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாணவியின் மரண வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு,
ஒரு ‘ஹேஷ்டேக்’கை பா.ஜ.க வினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ‘ஹேஷ்டேக்’ தேசிய அளவில், ‘ட்ரெண்ட்’ ஆகியுள்ளது.இதனிடையே, சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சாவூர் எஸ்.பி., மீது குற்ற வழக்கு
பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.மேலும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் டெல்லி மேல்மட்டத்தில் லாவண்யா மரணம் தொடர்பாக குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அண்ணாமலை அவர்களும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள். இதனால் விரைவில் வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அடுத்த விக்கெட்டை வீழ்த்திய அண்ணாமலை, இந்த முறை முக்கிய அமைச்சர் பதுங்கல்!
~ @annamalai_k
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதலில் தங்கள் கட்சியினரை சட்ட போராட்டம் நடத்தி பாதுகாப்பது குறிப்பாக ஆளும் திமுக அரசிற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் பாஜகவினரை கைத்துசெய்வதாக புகார் எழுந்த போது அதனை,
சட்ட ரீதியாக எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க முழு வீச்சில் வழக்கறிஞர் குழுவை செயல்பட அறிவுரை வழங்கியத்துடன் அவரே மேற்பார்வையும் செய்துள்ளார் இதன் மூலம் பாஜகவினர் ஆளும் தரப்பின் மிரட்டலுக்கு பயம் கொள்ளாமல் களப்பணியாற்றி வருகின்றனர்.இது ஒன்று என்றால் அடுத்தது,
ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும்
- அண்ணாமலை. @annamalai_k
கோவை செல்வபுரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.அப்போது அண்ணாமலை உறியடி போட்டியில்,
கலந்து கொண்டு பானையை உடைத்தார். பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “தேசிய தலைவர்கள் இல்லை என்பதால் டெல்லி குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் படங்கள் பொறுத்திய தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது பொய்யான தகவல்.
ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கும் கவர்னர்!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது, கவர்னர் ரவிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம், இதுகுறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,
2021 செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றது; அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு! 🔥 @annamalai_k@Murugan_MoS
தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுத்தி வந்தார்கள்.
இனி பிரதமரையோ அல்லது தாய்நாட்டை அவமதித்தால் சும்மா இருக்கப்போவதில்லை என சட்டையை சுழற்றியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஜீ நெட்ஒர்க் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது.அந்த தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும்
பெரியார், பெரியாறு – வித்தியாசம் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின்..! திருவள்ளுவர் தினத்தில் தமிழுக்கு வந்த சோதனை..!
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில்,
அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு,
அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா?