அடுத்த விக்கெட்டை வீழ்த்திய அண்ணாமலை, இந்த முறை முக்கிய அமைச்சர் பதுங்கல்!
~ @annamalai_k
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் முதலில் தங்கள் கட்சியினரை சட்ட போராட்டம் நடத்தி பாதுகாப்பது குறிப்பாக ஆளும் திமுக அரசிற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் பாஜகவினரை கைத்துசெய்வதாக புகார் எழுந்த போது அதனை,
சட்ட ரீதியாக எதிர்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க முழு வீச்சில் வழக்கறிஞர் குழுவை செயல்பட அறிவுரை வழங்கியத்துடன் அவரே மேற்பார்வையும் செய்துள்ளார் இதன் மூலம் பாஜகவினர் ஆளும் தரப்பின் மிரட்டலுக்கு பயம் கொள்ளாமல் களப்பணியாற்றி வருகின்றனர்.இது ஒன்று என்றால் அடுத்தது,
பிரதமர் குறித்தோ அல்லது பாஜக திட்டங்கள் குறித்தோ ஊடகங்களோ அல்லது அரசியல் கட்சியினரோ தவறான தகவலை பகிர்ந்தால் உடனுக்குடன் நடவடிக்கையில் இறங்குகிறார், இதற்கு சமீபத்திய உதாரணம் ஜீ தமிழ் விவகாரம் மற்றும் குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக,
ஊடகங்கள் பரப்பிய போலி செய்திக்கு உடனடியாக விளக்கத்தை அளித்து முற்றுப்புள்ளி வைத்தார் அண்ணாமலை.
இதன் மூலம் பாஜக குறித்து ஏதேனும் EXCLUSIVE செய்திகளை வெளியிட வேண்டும் என்றால் ஒன்றிற்கு இரண்டு முறை ஊடகங்கள் செய்தியை உறுதிப்படுத்தி வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன் மூலம் இதுநாள் வரை "ஊடகங்களை" வைத்து பாஜகவிற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பிம்பம் முழுவதும் சரிய தொடங்கியுள்ளது.
அடுத்தது அண்ணாமலை கைவைத்த இடம்தான் முக்கியமானது தமிழக அமைச்சரவை மற்றும் திமுக முக்கிய தலைகளை அண்ணாமலை சிதறடித்து இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்,
முதல் விக்கெட் தயாநிதி மாறன் ஒருமையில் பேசினார் மத்திய அரசை கடுமையாக விமர்சனமும் செய்தார் இந்த சூழலில்தான் அண்ணாமலை எச்சரிக்கை ஒன்றை விடுத்தார் அதில்,நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்,மத்தியிலும் ஆட்சியில் இருக்கிறோம் உங்கள் தொழில்முதலீடு குறித்து,
அனைத்து தகவலையும் வெளியிட வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார் அண்ணாமலை அவ்வளவுதான் அன்றில் இருந்து ஆப்லயன் சென்றுவிட்டார் தயாநிதி மாறன். .
இரண்டாவது விக்கெட் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் GST கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விமர்சனத்தை பழனிவேல் தியாகராஜன் மீது
பாஜக தலைவர் அண்ணாமலை வைக்க மிகவும் தரக்குறைவாக ஒருமையில் ட்விட்டரில் அண்ணாமலையை விமர்சனம் செய்தார் பிடிஆர், அண்ணாமலை ஏன் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு 10 ரூபாய் வரை குறைந்த பின்பும் மாநில அரசு குறைக்கவில்லை என்று தொடர் கேள்வி
எழுப்பி வந்தார். இந்த சூழலில்தான் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து திமுகவின் ஐடி விங் மாநில செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது விக்கெட் செந்தில் பாலாஜி மின்துறையில் கொள்முதல் செய்வதில் ஊழல் நடைபெறுகிறது என அண்ணாமலை குற்றசாட்டு வைக்க விஷயம் விஸ்வரூபம் எடுத்தது,
மேலும் கொங்கு பகுதிகளில் உள்ள தொழில் அதிபர்களை மிரட்டுகிறார் எனவும் அண்ணாமலை குற்றசாட்டு வைத்தார் இந்த சூழலில் பார் டெண்டர் விஷயத்திலும் செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றசாட்டு எழ அப்படியே அமைதியாகிவிட்டார் செந்தில் பாலாஜி,அண்ணாமலை குறித்தோ பாஜக குறித்தோ எங்குமே வாயே திறப்பது இல்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது விக்கெட் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.. கோவில்களை திறக்கவில்லை என்றால் பாஜகவினர் மாநிலத்தை ஸ்தம்பிக்க வைப்போம் என எச்சரிக்கை விடுத்தார் அப்போது திமுகவினர் வரலாறு தெரியவில்லை எனவும் மிரட்டும் தொனியில் பதில் கொடுத்தார் அமைச்சர் சேகர்பாபு..
அதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய அண்ணாமலை பாஜகவினர் மீது கைவைத்தால் வட்டியும் மொதலுமாக திருப்பி கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார். அடுத்த பேட்டியில் நான் எச்சரிக்கை விடுக்கவில்லை அன்பில் அவ்வாறு கூறினேன் என கூறி அமைதியானார் சேகர் பாபு.கோவில் நகை உருக்குதல்,
கோவில் பணத்தில் கல்லூரி நடத்ததுதல் என அடுத்தடுத்து விவகாரத்தில் நீதிமன்றம் கொட்டு வைக்க அமைதியானார் சேகர்பாபு. ஐந்தாவது விக்கெட் அமைச்சர் ராஜ கண்ணப்பன் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குவதில் பெரும் ஊழல் என அண்ணாமலை குறிப்பிட டெண்டரை குளோஸ் செய்துவிட்டு,
இனி ஆவினில் மட்டுமே இனிப்புகள் கொள்முதல் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார் தலைமை செயலாளர் இறையன்பு.
இந்த சூழலில் அடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல் என அண்ணாமலை குறிப்பிட்ட சூழலில் விரைவில் அமைச்சர் சங்கரபாணியின் விக்கெட் விழும் என்று எதிர்பார்க்க படுகிறது.
அமைச்சர் பதவியை வைத்து கொண்டு சம்பாரிக்கவும் முடியாமல் உள்ளூர் லெவலில் அதிகாரமும் முழுமையாக செலுத்த முடியாமல் இருப்பதால் பலர் அண்ணாமலை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
மாணவி லாவண்யா மரணம்… பா.ஜ.க போராட்டம்… சி.பி.ஐ க்கு மாற்றப்படுகிறதா வழக்கு..? #JusticeFor_TNHinduGirl
அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர்.இந்த நிலையில் மாணவி லாவண்யா
திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.காவல்துறை வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்
இந்த நிலையில் இறப்பதற்கு முன் லாவண்யா
ஒரு வெல்லத்தை கூட உருப்படியாக கொடுக்க முடியவில்லை டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கை அழைத்து வந்து விசாரிக்க வேண்டும்
- அண்ணாமலை. @annamalai_k
கோவை செல்வபுரம் பகுதியில் பா.ஜ.க சார்பில் “நம்ம ஊரு மோடி பொங்கல் விழா” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.அப்போது அண்ணாமலை உறியடி போட்டியில்,
கலந்து கொண்டு பானையை உடைத்தார். பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “தேசிய தலைவர்கள் இல்லை என்பதால் டெல்லி குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார் மற்றும் சிதம்பரனார் படங்கள் பொறுத்திய தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி இல்லை என்பது பொய்யான தகவல்.
ஸ்டாலின் ஆட்சி மீது கடும் அதிருப்தி ! அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்கும் கவர்னர்!
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி மீது, கவர்னர் ரவிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம், இதுகுறித்து அவர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அடுத்த வாரம் டில்லி சென்று, ஆதாரங்களை அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோஹித்,
2021 செப்டம்பர் மாதம் மாற்றப்பட்டார். புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார். மருத்துவ படிப்புக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளித்து, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்றது; அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு! 🔥 @annamalai_k@Murugan_MoS
தமிழகத்தில் பிரதமர் மோடி பதவியேற்றத்திலிருந்து தவறான நோக்கில் விமர்சனம் செய்வது வழக்கமாய் கொண்டுள்ளது தனியார் தொலைக்காட்சிகள். மேலும் படங்களிலும் காட்சிகள் வைக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இதுவரை கருத்து சுதந்திரம் என்று படைப்பாளிகள் கம்பு சுத்தி வந்தார்கள்.
இனி பிரதமரையோ அல்லது தாய்நாட்டை அவமதித்தால் சும்மா இருக்கப்போவதில்லை என சட்டையை சுழற்றியிருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.ஜீ நெட்ஒர்க் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது.அந்த தொலைக்காட்சியில் குழந்தைகள் உட்பட பலர் பங்கு பெரும்
பெரியார், பெரியாறு – வித்தியாசம் தெரியாத முதல்வர் மு.க.ஸ்டாலின்..! திருவள்ளுவர் தினத்தில் தமிழுக்கு வந்த சோதனை..!
தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனாரின் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, புகழஞ்சலி செலுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக அவர் தமிழில் வெளியிட்டு இருந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தில்,
அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
தமிழகத்தில் நடக்கும்சதி திட்டம் அம்பலம்! கியா தொழிற்சாலை போல் ஆப்பிள்தொழிற்சாலையும் கை நழுவுகிறதா?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை, ஒப்பந்த அடிப்படையில், பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து அளிக்கிறது. இதில் சுமார் 2,000 பேர் பணிபுரிகின்றனர். டிசம்பர் 15 அன்று மதிய உணவு உட்கொண்ட சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு,
அருகே உள்ள மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் தான் ஸ்டெர்லைட் பிரச்சனையும் ஆரம்பித்தது., ஐஃபோன் தயாரிப்பை மீண்டும் சீனாவுக்கு கொண்டு போக சீனா தன் விசுவாசிகளை கொண்டு செய்யும் சதி நாடகமா?