#ஒப்பிலியப்பன்_கோயில்
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 13-வது தலமாக திகழ்கிறது. இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். நம்மாழ்வாருக்கு இந்த ஆலயத்தில், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன், முத்தப்பன் ஆகிய 5
கோலங்களில் பெருமாள் காட்சி தந்தருளினார். இதில்
முத்தப்பன் சன்னிதி இப்போது இல்லை. உப்பில்லாத நைவேத்தியங்களை ஏற்பதால், ‘உப்பிலியப்பன்’என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ‘ஒப்பிலியப்பன்’ என்றும் இத்தல பெருமாளுக்கு பெயர் வந்தது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை நம்மாழ்வார்,
பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். கருவறையில் நின்ற கோலத்தில் உப்பிலியப்பனை தரிசிக்கலாம். அவருக்கு வலதுபுறத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் பூமாதேவியும், இடபுறத்தில் மார்க்கண்டேயரும் காட்சி தருகின்றனர். பாதம் நோக்கியபடி இருக்கும் மூலவரின் வலது கரத்தில்
‘மாம் ஏகம் சரணம் விரஜ’ என்று எழுதப்பட்டுள்ளது. கீதை உபதேசமான இதற்கு ‘என்னை சரணடைபவர்களை காப்பேன்’ என்று பொருள். பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், இறைவனுக்கு இடதுபுறத்தில்தான் பூமாதேவி இருப்பார். பூமாதேவியை பெருமாள் மணம் முடித்த தலம் இது என்பதால், இறைவனுக்கு வலது புறத்தில் தாயார்
இருக்கிறார். தன் மகளாக அவதரித்த பூமாதேவியை, பெருமாளுக்கு மார்க்கண்டேயர் மணம் முடித்து தந்தபோது, ‘மகளை ஒருபோதும் பிரியக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். எனவே உற்சவ காலங்களில் கூட, பெருமாள் தாயாருடன் இணைந்தே பவனி வருவார். திருமால், மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டுவந்தது ஒரு பங்குனி
மாத திருவோண நட்சத்திரம் ஆகும். பெருமாள், பூமாதேவி திருமணம், ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் நடந்தது. எனவே இந்த ஆலயத்தில் ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் இறைவனுக்கு, சாம்பிராணிதூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபமும், வால் தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை தரிசித்தால், செல்வம்
பெருகும் என்பது நம்பிக்கை. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இருப்பது போல, தனி சுப்ரபாதம் இத்தல உப்பிலியப்ப பெருமாளுக்கு உண்டு. மார்க்கண்டேயர் வழிபாடு செய்த திருத்தலம் என்பதால், இங்கு ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது. ஆவணி திருவோண நட்சத்திரம் அன்று, காலையில்
பெருமாள் கருட வாகனத்தில் ‘உதய கருட சேவை’ புரிவார். பின் ‘தட்சிண கங்கை’ என்று அழைக்கப்படும் நாட்டாறு தீர்த்தத்தில் நீராடுவார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெறும். #தல_வரலாறு மார்க்கண்டேய மகரிஷிக்கு மகளாக துளசி செடியின் கீழ் பூமாதேவி அவதரித்தாள். அவளுக்கு ‘துளசி’ என்று பெயரிட்டு
வளர்த்தார், மார்க்கண்டேயர். திருமண வயது வந்ததும், திருமால் ஒரு வயோதிகர் வடிவில் வந்து துளசியை பெண் கேட்டார். மார்க்கண்டேயர் மறுத்துவிட்டார். ஆனாலும் முதியவர் வேடத்தில் வந்த பெருமாள் விடவில்லை. அப்போது மார்கண்டேயர் “என் மகள் சிறு பெண். அவளுக்கு உணவில் சரியாக உப்பு போட்டு கூட
சமைக்கத் தெரியாது. அப்படிப்பட்ட பெண்ணை நீங்கள் மணம் முடிப்பது சரியாக இருக்காது” என்றார். அதற்கு முதியவராக வந்த பெருமாள், “உப்பில்லாத சமையலாக இருந்தாலும் சாப்பிட்டுக்கொள்கிறேன்” என்றார். அவரது உறுதியைக் கண்டு, வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்த மார்க்கண்டேயர், தனது மகளை
பெருமாளுக்கு மணம் முடித்துக் கொடுத்ததாக தல வரலாறு சொல்கிறது. ஒவ்வொரு வருட ஐப்பசி ஸ்ரவண நக்ஷத்ரத்தன்றும் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தைப் பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக
உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்குச் சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.
ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (3481)
“என்னப்பன், எனக்காய், இருளாய், என்னைப் பெற்றவளாய், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என் அப்பனுமாய், மின்னப்பொன் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்,
தன் ஒப்பாரில்லப்பன், தந்தனன் தன தாள் நிழலே”.
ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளே சரணம் திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீரங்கம் போன்றே தொன்மையான தலங்களில் ஒன்று அப்பக்குடத்தான் திருக்கோயில்.
துர்வாச முனிவரின் சாபத்தால் தன்பலம் இழக்கிறான் உபமன்யு என்ற மன்னன். இந்தத்தலத்தில் இலட்சம் பேருக்கு அன்னதானம் அளித்தால் விமோசனம் கிட்டும் என்றறிந்து தானமிடத் தொடங்குகிறான். ஒருநாள்
திருமாலே முதிர்ந்த வைணவரின் தோற்றத்தில் இங்குவந்து அன்னம் கேட்கிறார். பரிமாறப்படுகிறது. அன்றைய தினத்துக்கான உணவுமுழுவதையும் முதியவர் உண்டு விடுகிறார். வியந்த மன்னன், இன்னும் என்ன வேண்டும் என்று வினவுகிறான். ஒரு குடம் அப்பம் வேண்டும் என்கிறார். அப்பக் குடத்தைக் கையில் வாங்கியதும்
மன்னனின் சாபம் தீர்ந்து பெருமாளின் தரிசனமும் கிடைக்கப் பெற்றான். #தலத்தின்_சிறப்புகள்
பஞ்ச ரங்கம் என்று குறிப்பிடப்படும் ஐந்து அரங்கத் தலங்களின் இதுவும் ஒன்று. 1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்). 2. அப்பால ரங்கம் - திருப்பேர் நகர் (அப்பக்குடத்தான்). 3. மத்தியரங்கம் -
#நரசிம்ம_அவதார_சிறப்பு அதர்வண வேதம் ரொம்ப அழகாக நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் சக்தி. கரண்டைத் தொட்டோம் என்றால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் நம்மை! நரசிம்ஹருக்கும், அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர். தன்னை அடித்த ஹிரண்யனின் கையை
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார் எம்பெருமான். மற்றொரு கையால் சிரசை, சிகையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ஏன் அவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்று கேட்டால், அந்தப் பிடி மூலமாகவே தன் பலத்தைக் காட்டினாராம் பரமாத்மா. இந்த முட்டாள் நம்மோடு சண்டை போடுகிறானே!
இந்த ஒரு பிடியே ம்ருத்யு பிடியாக இருக்கிறதே என்று விழுந்து சரணாகதி பண்ணுகிறானா பார்ப்போம் என்ற எண்ணத்துடன் ஹிரண்யகசிபுவின் சிரஸைப் பிடித்தாராம். சரணாகதி பண்ணினால் இவனை மன்னித்து விட்டு விடுவோம் என்று நினைத்தாராம். பகவான் தான் எத்தனை காருண்ய மூர்த்தி! இவ்வளவு உக்கிரமாகத்
#மந்திராலயம் மாஞ்சாலாவில் குரு #இராகவேந்திரர் தமது பிருந்தாவனத்தை அமைக்க தேர்ந்தெடுத்தற்கான காரணம் பிரகலாதராக இருந்த காலத்தில் இவர் யாகம் செய்த இடம் இது. குரு இராகவேந்திரரிடம் மாமிசத்தைப் படைத்து அவமரியாதை செய்ய நினைத்த, அந்த இடத்தை ஆண்ட நவாபின் படையலை பழங்களும் மலர்களுமாக
மாற்றிய அவரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும் கேட்க வேண்டினான். அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார். நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த வறண்ட பூமி வேண்டாம், வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். இராகவேந்திரர் அன்மீக
சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான். பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு ஒரு ஆலயமும் எழுப்பினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு
#திருக்கடையூரில் தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார் சிவனார். இது புராணம். காலம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வந்த காலதேவனைக் காலால் உதைக்கலாமா? தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனையே தண்டிக்கலாமா? அப்படியானால், ஆயுள்
முடியும் போது அனைவருமே அந்த சிவனை ஆலிங்கனம் செய்து கொண்டு, எமனிடமிருந்து தப்பிவிட மாட்டார்களா? இவையெல்லாம் நியாயமான கேள்விகள்தான்! இவற்றுக்குப் பதில் காண முயலும் போது, புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன. எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன். தேவர்கள், மானிடர்கள்,
நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு. எல்லோரும் இறைவனின் திருவடிகளைச் சிரத்தில் ஏற்க விரும்பினார்கள் என்றால், உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஐயன்மீர் என்ன காரியம் செய்து வீட்டிர்கள் என நடுங்கி விட்டார் ஏழே வயதான குழந்தை பராசரர், ஞானி மார்க்கண்டேயர் கையைப் பிடித்துக் கொண்டு. ஐயன்மீர் இது என்ன விபரீதமான அனுஷ்டானம்? ஏழு கல்ப யுகம் வாழ்ந்த முனிவர் தாங்கள் எங்கே, ஏழே வயதான குழந்தையான நான் எங்கே! என்னை
தாங்கள் வணங்குவதாவது என்றது குழந்தை. அதற்கு மார்க்கண்டேயர் சொன்ன பதில், “ஒருவருடைய வயதை அவர் வாழ்ந்த காலத்தைக் கொண்டு நிர்ணயம் பண்ணக் கூடாது. எதை வைத்து வயதை நிர்ணயிப்பது என்பதற்கு ஒரு உதாரணம் இதோ. விவசாயி ஒருவன் இருக்கிறான். தன்னுடைய நிலத்தைப் பயிரிட்டு, அறுவடை செய்து, நெல்லைக்
கொண்டு வந்து களத்திலே அடித்து அம்பாரமாய் குவித்து வைத்திருக்கிறான். குவித்து வைத்த நெல்லை அவன் அப்படியே அளப்பதில்லை. நெல்லை ஒரு முறத்தில் எடுத்து நீளமாக தூற்றுதல் என ஒரு காரியம். அதவாது இப்படியும் அப்படியும் விசிற வேண்டும். விசிறியதால் தும்பு, தூசி எல்லாம் அகன்று போய் விடும்.
1. சுக்லாம்பரதரம்-வெண்மையான
ஆடை உடுத்தவர். 2. விஷ்ணும்-எங்கும் நிறைந்தவர். 3. சசிவர்ணம்-நிலவு
போன்ற ஓளி நிறத்தினர். 4. சதுர்புஜம்-நான்கு கைகள் உள்ளவர். 5. ப்ரஸன்ன வதனம்-நல்ல மலர்ந்த முகமுள்ளவர்.
இந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும். மஹா கணபதியை தியானித்து உச்சந்தலையில் உள்ள அமிருதம் எல்லா நாடிகளிலும்
இறங்கிப் பாய்வதாக எண்ணி வலக்கையை இடக்கையின்
முன் வைத்து வலக்கையால் இடது முன் தலையிலும், இடது கையால் வலது முன் தலையிலும் முஷ்டிகளால் மெதுவாகக் குட்டிக்
கொள்வது முறை. விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகஸ்தியரின் கமண்டலத்தில் இருந்த நீரைக் கவிழ்த்து காவிரி நதி பெருக்கெடுத்து ஓடுமாறு