#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீரங்கம் போன்றே தொன்மையான தலங்களில் ஒன்று அப்பக்குடத்தான் திருக்கோயில்.
துர்வாச முனிவரின் சாபத்தால் தன்பலம் இழக்கிறான் உபமன்யு என்ற மன்னன். இந்தத்தலத்தில் இலட்சம் பேருக்கு அன்னதானம் அளித்தால் விமோசனம் கிட்டும் என்றறிந்து தானமிடத் தொடங்குகிறான். ஒருநாள்
திருமாலே முதிர்ந்த வைணவரின் தோற்றத்தில் இங்குவந்து அன்னம் கேட்கிறார். பரிமாறப்படுகிறது. அன்றைய தினத்துக்கான உணவுமுழுவதையும் முதியவர் உண்டு விடுகிறார். வியந்த மன்னன், இன்னும் என்ன வேண்டும் என்று வினவுகிறான். ஒரு குடம் அப்பம் வேண்டும் என்கிறார். அப்பக் குடத்தைக் கையில் வாங்கியதும்
மன்னனின் சாபம் தீர்ந்து பெருமாளின் தரிசனமும் கிடைக்கப் பெற்றான். #தலத்தின்_சிறப்புகள்
பஞ்ச ரங்கம் என்று குறிப்பிடப்படும் ஐந்து அரங்கத் தலங்களின் இதுவும் ஒன்று. 1. ஆதிரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம் (மைசூர்). 2. அப்பால ரங்கம் - திருப்பேர் நகர் (அப்பக்குடத்தான்). 3. மத்தியரங்கம் -
ஸ்ரீரங்கம் (அரங்கநாதன்). 4. சதுர்த்த ரங்கம் - கும்பகோணம் (ஆராவமுதன்). 5. பஞ்சரங்கம் - திருஇந்தளூர் (பரிமள ரங்கநாதன்).
நம்மாழ்வார் இத்தலத்துப் பெருமாளைத் தான் கடைசியாகப் பாடிவிட்டு முக்தியடைந்தார். 108 திருப்பதிகளில் தினந்தோறும் இரவில் பெருமாளுக்கு அப்பம் படைக்கப்படும் ஒரே
திருத்தலம். திருப்பேர் நகர் என்பது தலத்தின் தொன்மையான வழக்கு. இன்றைய தினங்களில் பலருக்குத் தெரியாது. கோயிலடி என்றே பரவலாக அறியப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஆறாவது திருப்பதி. திருச்சியிலிருந்து 15 மைல் தொலைவிலும், கல்லணையிலிருந்து 4 மைல் தொலைவிலும் உள்ளது.
மூலவர்-அப்பக்குடத்தான்
அப்பால ரங்கநாதன். பள்ளி கொண்ட திருக்கோலம்.
தாயார் - இந்திரா தேவி, கமலவல்லி.
பொய்கை - இந்திரப் பொய்கை.
பாடியவர்கள் - நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார். (மொத்தம் 33 பாடல்கள்.)
நம்மாழ்வார் பாசுரம்
பேரே உறைகின்ற பிரான் இன்றுவந்து
பேரேனென்று என்னெஞ்சு
#ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்பிகை ஆலயங்களில் பல உள்ளன. நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு
தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன. ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித்
தருகிறாள். சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது. சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சிவாத்மகம் என்பர். ஸ்ரீசக்கரம் என்பது வரை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் ஒருநாள் அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக கனவு கண்டான். இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக அரச நாடி ஜோதிடர் வேலவனை வரவழைத்தான். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்
சுவடியை எடுத்து அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார். உடனே அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று
உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானம் அடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடர் சங்கரனை வரவழைத்தார். அவரோ மிகுந்த ஸ்ரீஹரி கோவிந்த பக்தன். எந்த செயல் செய்தாலும் ஸ்ரீஹரி கோவிந்தா, ஸ்ரீஹரி கோவிந்தா என சொல்லாமல் செய்வது இல்லை.
அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று
#ராணி_தாராபாய் சத்ரபதி சிவாஜி ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின் அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு
உணவாகப் போடப்பட்டார். அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார். அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத் தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக
ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யம். டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர்! ராஜாராம் இறந்த 3வது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர். அப்படி
#நரசிம்ம_அவதார_சிறப்பு அதர்வண வேதம் ரொம்ப அழகாக நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் சக்தி. கரண்டைத் தொட்டோம் என்றால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் நம்மை! நரசிம்ஹருக்கும், அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர். தன்னை அடித்த ஹிரண்யனின் கையை
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார் எம்பெருமான். மற்றொரு கையால் சிரசை, சிகையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ஏன் அவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் என்று கேட்டால், அந்தப் பிடி மூலமாகவே தன் பலத்தைக் காட்டினாராம் பரமாத்மா. இந்த முட்டாள் நம்மோடு சண்டை போடுகிறானே!
இந்த ஒரு பிடியே ம்ருத்யு பிடியாக இருக்கிறதே என்று விழுந்து சரணாகதி பண்ணுகிறானா பார்ப்போம் என்ற எண்ணத்துடன் ஹிரண்யகசிபுவின் சிரஸைப் பிடித்தாராம். சரணாகதி பண்ணினால் இவனை மன்னித்து விட்டு விடுவோம் என்று நினைத்தாராம். பகவான் தான் எத்தனை காருண்ய மூர்த்தி! இவ்வளவு உக்கிரமாகத்
#மந்திராலயம் மாஞ்சாலாவில் குரு #இராகவேந்திரர் தமது பிருந்தாவனத்தை அமைக்க தேர்ந்தெடுத்தற்கான காரணம் பிரகலாதராக இருந்த காலத்தில் இவர் யாகம் செய்த இடம் இது. குரு இராகவேந்திரரிடம் மாமிசத்தைப் படைத்து அவமரியாதை செய்ய நினைத்த, அந்த இடத்தை ஆண்ட நவாபின் படையலை பழங்களும் மலர்களுமாக
மாற்றிய அவரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும் கேட்க வேண்டினான். அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார். நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த வறண்ட பூமி வேண்டாம், வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். இராகவேந்திரர் அன்மீக
சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான். பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு ஒரு ஆலயமும் எழுப்பினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு
#திருக்கடையூரில் தன் மீதே பாசக் கயிற்றை வீசிய எமனைத் தன் காலால் உதைத்தார் சிவனார். இது புராணம். காலம் தவறாமல் தன் கடமையைச் செய்ய வந்த காலதேவனைக் காலால் உதைக்கலாமா? தன்னை ஒரு பக்தன் வழிபட்டுவிட்டான் என்பதற்காக, நீதி வழங்க வந்த நீதி தேவனையே தண்டிக்கலாமா? அப்படியானால், ஆயுள்
முடியும் போது அனைவருமே அந்த சிவனை ஆலிங்கனம் செய்து கொண்டு, எமனிடமிருந்து தப்பிவிட மாட்டார்களா? இவையெல்லாம் நியாயமான கேள்விகள்தான்! இவற்றுக்குப் பதில் காண முயலும் போது, புதிய உண்மைகள் வெளிப்படுகின்றன. எமதர்மன் சர்வேஸ்வரனான சிவனை தினமும் உபாஸிப்பவன். தேவர்கள், மானிடர்கள்,
நல்லவர்கள், கெட்டவர்கள், தெய்வத்தை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அவரவரின் கர்மவினைகளுக்கேற்ப, காலமறிந்து நீதி வழங்கும் பொறுப்பு அவனுக்கு உண்டு. எல்லோரும் இறைவனின் திருவடிகளைச் சிரத்தில் ஏற்க விரும்பினார்கள் என்றால், உணர்ச்சிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடம்