#ராணி_தாராபாய் சத்ரபதி சிவாஜி ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின் அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு
உணவாகப் போடப்பட்டார். அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார். அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத் தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக
ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யம். டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர்! ராஜாராம் இறந்த 3வது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர். அப்படி
சரணடைய நேர்ந்தால் அத்தனை கோவில்களும் இடிக்கப்படும். அர்ச்சாவதார திருமேனிகள் அனைத்தும் உடைக்கப்படும். ஹிந்துக்கள் மீண்டும் படுகொலை செய்யப்படுவார்கள். பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக பிடித்து சென்று விற்பனை செய்யப்படுவார்கள். சமூகம் மீண்டும் கொலைகார முகலாயருக்கு முழு அளவில்
அடிமைப்பட வேண்டியிருக்குமென நெஞ்சம் பதைத்து நின்றனர் ஹிந்துக்கள். அந்த சமயத்தில் ராஜாராம் இறந்து ஆறாவது நாளில் அனைத்து காரியமும் நடைபெற வேண்டுமெனவும் ஏழாவது நாள் அரசவை கூடி புதிய ராஜாவை அரியணையில் அமர்த்த வேண்டும் எனவும் 19 வயதில் கைம்பெண்ணான ராஜாராமின் மனைவி தாராபாய் வேண்டுகோள்
கலந்த ஆணை விடுத்தார். அவர் சுல்தான்களுக்கு பயந்து போய் ஈம காரியங்களை சீக்கிரம் முடித்துவிட்டு தனது பத்து மாத குழந்தையுடன் தப்பியோட உத்தேசித்திருப்பதாக பலரும் நினைத்தார்கள். இந்த தகவல்கள் உளவாளிகள் மூலம் சுல்தான்களுக்கு கிடைத்தது. சுல்தான்கள் சிவாஜி மகாராஜ் அரும்பாடுபட்டு
ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தின் கதியை எண்ணி எக்காளமிட்டனர்! அப்போது கண்ணில் பட்ட ஹிந்துக்களை ஜிஸியா வரி வசூலித்து சாறாகப்பிழிந்தும் அவ்வப்போது ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்து விற்றும் சுக ஜீவனம் செய்து வந்த சில முகலாய சிற்றரசர்கள் மராட்டாக்களோடு கூட்டணி வைக்க தூது அனுப்பினார்கள். சில
மராட்டா தலைவர்கள் அச்சத்தில் அந்த முகலாயர்களின் ஆதரவை ஏற்பது சரியென்றனர். ஆக மொத்தத்தில் எல்லாம் முன்னைவிட குழப்பமாக இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு மஹாராஜ் ராஜாராம் மனைவி ராணி தாராபாய் அரசவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. அரசவையில் ஒரு விதமான அமைதி நிலவியது. தாராபாயும்
தாதிகள் புடைசழ வந்தார். அவரைப் பார்த்த அரசவை அதிர்ந்தது. விதைவைக்கான எந்த அறிகுறியும் இன்றி சர்வ அலங்காரத்துடன் பட்டாடை அணிந்து தங்க வைர ஆபரணகள் சூடி, உடை வாளுடன் நிமிர்ந்த நடையுடன் அரசவையை ஊடுருவும் பார்வையுடன் கம்பீரமாக வந்து அரியணையில் அமர்ந்தார். அவையோரின் ஆலோசனை முடிவு என்ன
என்று தலைமை அமைச்சரை கேட்டார். ராணி தாராபாய் ஒரு கைம்பெண்ணுக்கான விதிகளை மீறி பரிபூரண ஆடை அலங்காரத்துடன் அரசவைக்கு வந்ததுமல்லாமல் தான் ஒரு விதவை என்பதையும் மறந்து அரியணையில் அமர்ந்ததை பார்த்ததால் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர், இன்னும் தெளிவு பிறக்கவில்லை என கூறினார்.
அனைவரது நடவடிக்கையிலும் இவர் 19 வந்து சிறு பெண்தானே என்கிற அலட்சியம் இருந்தது. ஆனால் ராணியின் தீர்க்கமான முகம் அவர்களுக்கு ஒருவித தயக்கத்தை கொடுத்தது. கம்பீரமாக எழுந்து நின்ற ராணி சைகை காட்ட ஒரு தாதி ராணியின் பத்து மாத குழந்தையை கொண்டு வந்து ராணியிடம் கொடுத்தாள். அந்த குழந்தையை
ராஜாவாக அறிவித்த ராணி, ராஜ்ஜியத்தையும் ராணுவத்தையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்தார். குழப்பமான ராஜ சபையில் சிலர் முனக ஆரம்பித்தனர். ஒரு வயதான தளபதி எழுந்து முகலாய குறுநில மன்னர்கள் சமாதானம் வேண்டி தூது அனுப்பியுள்ளதை நினைவு படுத்தினார். நிமிர்ந்து பார்த்த ராணி நமது
ஆட்களுக்கு முதல் பலி அவர்கள் தான் என்று கூற அரசவை மீண்டும் அதிர்ந்தது. அவர்கள் குறுகிய பகுதிகளை ஆண்டாலும் அவர்கள் இடத்தில் போய் அவர்களை தாக்குவது புவியல் ரீதியாக ஆபத்து என சில படைத்தலைவர்கள் கூறினர். பலரும் அதை ஆமோதித்தனர். ராணி பிறப்பித்த அடுத்த உத்தரவு அவர்களை சிலையாக்கியது.
இன்னும் மூன்று நாழிகையில் படைகள் நகரும் என்றும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து பாய்ந்தோடிய மராட்டா குதிரைப்படை யாரும் எதிர்பாரதா நேரத்தில் அந்த குறுநில படைகள் மீது பாய்ந்தது. என்ன
நடக்கிறது என அவர்கள் அனுமானிக்கும் முன் வெட்டிச்சாய்க்கப்பட்டனர். ராணுவ கூடங்கள் மீது நெருப்பு அம்புகள் வீசப்பட்டு பற்றி எரிந்தன. மிகக்கேவலமாக மிருகங்களைப்போல் வாயில் புல்லைக் கடித்துக்கொண்டு சரணடைந்த இஸ்லாமியர்கள் வெட்டித்தள்ளப்பட்டனர்!மராட்டா படை முழு வெற்றியுடன் ராஜ கைதிகள்
அனைவரையும் வெட்டித்தள்ளியது. ராணி தாராபாய் கடந்த காலத்தில் ஹிந்து மன்னர்கள் நடத்திய தர்மயுத்தம் என்கிற முட்டாள்தனத்தை செய்யவில்லை! எதிரிகளை எதிரிகளாகவே பார்க்கும் நல்லறிவுடன் சாகச யுத்தங்களை நடத்தினார். எதிரிகள் மீது கொடூரத் தாக்குதல்களை தொடுத்தார். ராணியின் குதிரைப் படைகள்
பாய்ந்தோடிய இடங்களிலெல்லாம் எதிரிகளின் ரத்த ஆறு ஓடியது! அடுத்து மாராட்டா ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி கலகம் விளைவித்த கல்யாண்பிவாண்டி கோட்டை தலைவன் பாஜிராவ் கோர்பதே என்ற துரோகியை தண்டிக்க, பல சாகசங்களை கையாண்டு முகலாயர்களாலேயே தகர்க்க இயலாத கோட்டை கதவை
பெயர்த்து துரோகிகளை கொன்றொழித்து ருத்தர தாண்டவமாடினார் ராணி தாராபாய். அது வரை அவரை இளகாரமாக பார்த்த படைத்தலைவர்கள் அச்சத்துடனும் மரியாதையுடனும் அவரை பார்த்தனர். இந்த ராணி தாராபாய் – சிவாஜி மஹாராஜரது மாவீரப் படைத் தலைவர்களில் ஒருவரான ஹம்பிராவ் மோஹித் என்பவரது தவப் புதல்வி ஆவார்.
தாராபாய் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது அவரது தாய் பீஜப்பூர் படை தாக்குதலில் இறந்து போனார். உடன் பிறந்தவர்கள் இல்லாத அவர் சிறு வயது முதல் தனது தந்தையுடன் படை முகாம்களில் வளர்ந்தவர். 8 வயதிலேயே எந்த குதிரை மீதும் பாய்ந்து ஏறி சவாரி செய்யத் திறமை பெற்றார். 10 வயதில் வில்
வித்தையில் தேர்ச்சிபெற்றார். 12 வயதில் வாட் சண்டை பயில ஆரம்பித்து சில ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றார். துப்பாக்கி சுடுவதிலும் நன்கு தேர்ச்சியடைந்தார். உரிய வயதில் பெரியோர் விருப்பப்படி இளவரசர் ராஜாராமுக்கு மணமுடிக்கப்பட்டு இல்வாழ்க்கையை நடத்தி வந்தவர் தனது கணவரது அகால மரணத்தால்
பெரிய பொறுப்புகளை மிகச்சிறிய வயதில் துணிந்து ஏற்றுக் கொண்டார். ராணியை கைது செய்து தனது அந்தப்புரத்தில் சேர்க்கும் நோக்கத்துடன் சுல்தான்களால் அனுப்பபட்ட படைகள் எல்லாம் மராட்டாக்களின் வாளுக்கு இரையாகின! ராணுவத்தினர் சிறு தவறு செய்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். தீரச்செயல்
செய்தவர்கள் பாராட்டப்பட்டனர். கைகால்களை இழந்த வீரர்களுக்கு சகல வசதியும் செய்துகொடுக்கப்பட்டது. ராணி தாராபாய் இறுதிவரை தனக்கென எந்த சிறப்பு சலுகை/வசதி செய்து கொள்ளவில்லை. ராணுவ உடை அணிந்து ஆயுதங்கள் பூண்டு எப்பொழுதும் போர்க் கோலத்திலேயே இருந்தார். மற்ற ராணுவ வீரர்கள் உண்ணும் உணவை
உண்டார். உறங்குவதற்கு தனி கூடாரம் கூட வைத்துக்கொள்ளாமல் மற்ற ராணுவ வீரர்களைபோலவே மைதானத்தில் உறங்கினார். தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத இளம் தாயான அவர் தனது மார்பில் சுரக்கும் தாய்ப்பாலை பீய்ச்சி மருத்துவ பயன்பாட்டுக்காக மருத்துவர்களிடம் கொடுப்பாராம். அடிபட்டுகிடக்கும
ராணுவ வீரர்களை ஒருநாளும் அனாதையாக விடமாட்டாராம். மிகவும் மோசமாக காயம்பட்டு உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் ராணுவ வீரர்களை கண்டால் அவர்களது தலையை உயிர் பிரியும்வரை தனது மடியில் வைத்து அணைத்துக் கொள்வாராம். கண்டிப்பும் கருணையும் ஒருங்கே படைத்த ராணியை தங்களது தாயாகவே ராணுவ
வீரர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். அவரது படையில் சேர்வதே பெரும் பாக்கியம் என கருதிய ஹிந்து இளைஞர்கள் அணியணியாக வந்தனர். படை வளர்ந்து கொண்டே இருந்தது. அதுவரை பல நூற்றாண்டுகள் ஹிந்துக்கள் மீது கொடூரங்களை இழைத்து வந்த முகலாயர்கள் மீது ராணியின் ராணுவம் ஓயாது போர்தொடுத்தது. கோவில்களை
கேந்திர முக்கியத்துவம் மிக்க கோட்டைகளை காப்பது போல் காத்தார் ராணி. வேதியர்கள் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு கோவில் காரியங்களும் வைதீக காரியங்களும் செவ்வனே நடக்க ஆவன செய்தார் ராணி!வேத பாடசாலைகளுக்கு ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மதத்திற்கு விரோதமாக பேசினால் அவனது தலை
துண்டிக்கப்பட்டது. நமது மதியூக ராணி பீஜப்பூர் மீது படையெடுக்க ஆவன செய்வது போல நடித்துக்கொண்டே எதிர்பார்க்காத அதி சாகசத்துடன் கொடூரத்துக்கு பெயர்போன கோல்கொண்டா, பாமினி, அஹமத் நகர் சுல்தான்களை திடீரென்று தாக்கி கூண்டோடு அழித்தார்.பீஜப்பூரை தாக்க ராணி அஞ்சுகிறார் என அனைவரும்
நினைத்தார்கள். ராணியை தாக்க பீஜப்பூரின் படைகள் அணிதிரள ஆரம்பித்தன. அப்போது அவுரங்கசீப் கைப்பற்றிய தனது கோட்டைகளை தாக்கி மீட்கப்போவதாக அறிவித்தான். உளவாளிகள் தீவிரமாக மராட்டியத்தின் வடபகுதியில் செயல்பட்டனர். அதே போல ராஜ்கர், புரந்தர், கிங்காட் கோட்டைகளில் இருந்த மராட்டா படைகள்
வடக்கு நோக்கி நகர்ந்தன. ஆனால் அவை பாதியில் குழுக்களாக பிரிந்து மலைகாடுகளில் மறைந்து தெற்கு நோக்கி பயணித்து சந்திரபாக நதிக்கரையில் இன்றைய பண்டரீபுரத்திற்கு அருகில் ஒன்றுகூடி பீஜப்பூர் மீது எமகிங்கரர்களைப் போல பாய்ந்தனர். ஜெய் சம்போ மகாதேவ் என்கிற பேரிரைச்சல் விண்ணை முட்டியது.
கொடூரங்களுக்கு பெயர்போன ஈவு இரக்கமற்ற பிஜப்பூர் இஸ்லாமிய காட்டுமிராண்டிகளின் படைகள் ஆங்காங்கே சுற்றிவளைக்கப்பட்டு வெட்டிச் சாய்க்கப்பட்டனர். அவர்களது கூச்சல் அவர்களுக்கே கேட்கவில்லை. அதுவரை அப்பாவி ஹிந்துக்களை கொன்றே பழக்கப்பட்ட முகலாயர்கள் மராட்டாக்களின் வாட்களுக்கும் துப்பாக்கி
குண்டுகளுக்கும் இரையாகினர். பீஜப்பூரின் 90% படைகளை அழித்த ராணி ஒரு குறுகிய எல்லைக்குள் ஒடுங்கிய பீஜப்பூரின் தற்காப்பு படைகளை அழிக்க முயன்றால் தனது படைகளுக்கு உயிர் சேதம் அதிகம் ஏற்படும் என்று கருதி நாடு திரும்பினார். அப்போது அவரது ராணுவத்தின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்ந்து
முகலாயர்களை குலை நடுங்கவைத்துக் கொண்டிருந்தது. அப்பொழுது இந்திய வரலாறு மிகப்பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது! கொங்கன் கடற்கரையில் அமைந்திருந்த ராஜபுரி என்கிற நகரத்தில் அமைந்திருந்த வெள்ளையர்களின் வியாபார மற்றும் ஆயுத தொழிற்கூடங்கள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து
இருந்தன! பாரத தேசமெங்கும் வெள்ளையர்கள் உலவ ஆரம்பித்திருந்தனர். போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றி ஹிந்துக்களை மதமாற்ற இன்குசிஷன் (Inquisition) என்னும் கொடூர விசாரணை முறைகளால் லட்சக்கணக்கான ஹிந்துக்களை சித்ரவதை செய்து மதமாற்றி வரும்வதாகவும் மதமாற மறுத்தவர்களை கொடூரமாக கொலை
செய்து வருவதாகவும் ராணிக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தன. இவை குறித்து சிந்தித்து முடிவெடுக்க இயலாத வண்ணம் டெல்லி சுல்தான் அவுரங்கசீப்பின் படைகள் ராணிக்கு தொல்லை கொடுத்தன. ராணி தனது முழுப்பலத்தையும் திரட்டிக்கொண்டு டெல்லி படைகளை தாக்கினார். அவுரங்கசீப்பின் முக்கால்வாசி படையினர்
மராட்டாக்களுக்கு இரையாகினர். தப்பியோடிய அவுரங்கசீப்பின் படைகளை நர்மதை நதிவரை துரத்தி சென்றார் ராணி தாராபாய்! ராணியின் படையிலிருந்த சந்தோஷ்ராவ் தேஷ்முக் என்கிற இளைஞன் படைகளுடன் நர்மதை நதியையும் தாண்டி இஸ்லாமியர்களுக்கு பயம் காட்டிவிட்டு வந்தான். தனது தலைநகர் வரை ஒரு காஃபிர்-
பெட்டைசாத்தான் வந்துவிட்டாளே என்கிற அவமானம் தாங்காமல் அவுரங்கசீப் ஓபியம் என்னும் போதை வஸ்த்துவை அளவுக்கு அதிகமாக தின்றுவிட்டு முடங்கி கிடந்தான். பாரதத்தை எண்ணூறு ஆண்டுகள் ஆண்டபோதும் இஸ்லாமியர்களால் ஏன் முழு இஸ்லாமிய நாடாக்க முடியவில்லை என்பது தெரிகிறதா? அன்னிய மதவெறியர்கள் ஈன
ஜென்மங்களின் பொய் பிரச்சாரத்தை நாம் உரிய வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு தர்க்க ரீதியாக எதிர்கொள்ளாவிட்டால் நமது முன்னோர்களின் வீர வரலாறு அடியோடு அழிக்கபடும்! ராணி தாராபாயின் வீர வரலாறு தியாக வரலாறான சரித்திரம்! அவுரங்கசீப் மராட்டக்களை வெல்லவேண்டும் என்ற தனது ஆசை நிறைவேராமல
இறந்து போனான். சிவாஜி மஹராஜ் காலத்து மாவீர தளபதிகளான பாலாஜிராவ், பாஜிராவ், மோஹன்ராவ் பாண்டுரங், டானாஜி ராவ், ஏஷாஜிராவ் தேஷ்முக், சிவ்நாத்ராவ், கங்காநாத் கோர்பதே, டானாஜி ராவின் காதலியும் பெண் சிறுத்தை என்று அழைக்கப்பட்டவருமான பிரபாவதி உள்ளிட்ட பலர் போரிட்டு போரிட்டு போர்க்களத்தில்
வீரசொர்க்கம் அடைந்தும் வயது மூப்பால் செயலிழந்தும் போனதால் மராட்டா ராணுவத்தில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டது. ராணிக்கு எதிராக அந்த மூடர்களால் பங்காளிப் பகை வளர்க்கப்பட்டு ராணியின் செயல் பாடுகள் முடக்கப்பட்டது. ஊண் உறக்கமின்றி போர்க்களங்களை சந்தித்து வந்த ராணிக்கு உள்ளூர் துரோகிகளின்
செயல்களை எதிர்கொள்ள இயலாமல் போனது. ஆனாலும் ராணி தாராபாய்க்காக எதையும் செய்ய அவரது படையணிகள் தயாராகவே இருந்தன. ராணி நினைத்திருந்தால் நான்கு நாட்களுக்குள் கலகக்காரர்கள் கொன்று புதைக்கப் பட்டிருப்பார்கள். ஆனால் பங்காளிப் போரால் மராட்டாக்கள் அழிந்துபோவதை விரும்பாத ராணி, சத்ரபதி
சிவாஜி அவர்களின் முதல் ராணி சாயிபாய் வயிற்று பேரனான ஷாஹூவிடம் ஆட்சியையும் ராணுவத்தையும் அமைதியாக ஒப்படைத்தார். தனது 19வயதில் கையிலெடுத்த வாளை முப்பத்தாறு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு 55 வயதில் உறையில் போட்டார் ராணி தாராபாய். அப்பொழுது தரைமேல் ஒரு இஸ்லாமிய அரசு கூட முழுவதுமாக இல்லாமல்
போயிருந்தன. தனது சாகச யுத்த திறமையாலும் தேர்ந்த மதியாலும் இஸ்லாமியர்களின் 700-800 ஆண்டு கால கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார் ராணி. அவர் தனக்கு ஆதரவு வேண்டி யாரையும் யாசிக்கவில்லை. காத்து கொண்டிருக்கவில்லை. மாறாக கடவுள் மீதும் தர்மத்தின் மீதும் நம்பிக்கை வைத்து
வீரத்துடன் எதிரிகளை எதிர்த்தார். கொடூரங்களுக்கு பெயர்போன முகலாயர்களை நாசமாக்கினார். அவரைப் பற்றி விவரிக்கும் ஜாதுநாத் ஜவகர் என்கிற வரலாற்று பேராசிரியர் கீழ்கண்டவாறு ஒப்பிடுகிறார். சத்ரபதி சிவாஜி மகராஜ் ஹிந்துக்களை காக்க தனது இறுதி மூச்சுவரை நிம்மதியாக தூங்கியதில்லை. ஆனால் ராணி
தாராபாய் முகலாயர்களை ஒருநாளும் நிம்மதியாக தூங்கவிட்டதில்லை என்கிறார். இந்த ராணியின் மாவீர வரலாற்றை நமது நேருவின் கைக்கூலி வரலாற்று ஆசிரியர் பெருமக்கள் முற்றும் முழுதாக மறைத்துவிட்டார்கள். மேலும் ஆங்கிலேயர்கள் வந்துதான் இந்தியாவை இஸ்லாமியர்களிடமிருந்து மதமாற்றத்திலிருந்து
காப்பற்றியதாக கதை சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ராணி தாராபாய் அத்தனை சுல்தானிய அரசுகளையும் முற்றாக அழித்து விட்டிருந்தார். இருந்த சில முகலாயர்களும் ராணிக்கு பணிந்து வாழவேண்டிய சூழல் உருவாகியிருந்தது. இன்னும் ஒரு 10 ஆண்டுகள் ராணியின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால்
ஒட்டு மொத்த முகலாயர்களுக்கும் சமாதி கட்டியிருப்பதுடன் வெள்ளையர்கள் பாரத புண்ணிய பூமியில் காலடி வைக்க இயலாத அளவுக்கு ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியிருப்பார்! இவ்வாறான மாவீரர் வீராங்கனைகள் தங்கள் சுக துக்கங்களை புறந்தள்ளி அன்னிய மதவெறியர்களுடன் தொடர்ந்து போரிட்டதாலயே சனாதான
தர்மம் இம்மட்டும் பிழைத்திருக்கிறது. அந்த மாவீரப்போராளிகளால் தான் நமது தாய் மதம் அழிவிலிருந்து காக்கப்பட்டது! தாராபாயின் மறைக்கப்பட்ட வரலாற்றை அனைவரும் நினைவில் கொள்வோம்!

பாரத் மாதா கி ஜெய்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 1
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ‘விஸ்வம்’ என்றால் பெரிய என்று ஒரு பொருள் உண்டு. ‘ரூபம்’ என்றால் உருவம். ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும். இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்று Image
தான் திருநாமம். பெரிய பெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே! தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும் ImageImage
பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார். இதனால் தானே என்னவோ ஆகம ரீதியாகவும் காவேரியிலிருந்து யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன், அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி Image
Read 8 tweets
Feb 1
காஞ்சி மகா பெரியவர் பற்றி கவியரசர் கண்ணதான் சொன்னது:
காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், இந்து மதம் என்றால் என்ன என்று கேட்டால், 'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்' Image
கட்டுரையில் கூறியிருந்தார். உண்மையில் மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிய போது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
மஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் 'அர்த்தமுள்ள இந்துமதம்' Image
எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய அத்தியாயம் இது- பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர். அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும்
Read 12 tweets
Jan 31
இத்திருப்புகழ் அருணகிரிப் பெருமான் உலகில் உள்ள மக்களின் மீதுள்ள அளவற்ற கருணையால் பாடியருளியது.
இத்திருப்புகழை தினமும் ஒருமுகத்துடன் ஓதினால், நோய்கள் விலகும், கரோனா போன்ற புதிய நோய் தீண்டாது. நோயின்றி வாழ்ந்து வளம் பெற:

இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி Image
டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை விடுவானே
தருநிழல் மீதி லுறைமுகி Image
லூர்தி
     தருதிரு மாதின் மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு பெருமாளே.
பதம் பிரித்தால்:
இருமல், உரோகம், முயலகன், வாதம்,
எரிகுண, நாசி விடமே, நீர்இழிவு, விடாத தலைவலி, சோகை,
எழுகள மாலை, இவையோடே,
பெருவயிறு, ஈளை, எரிகுலை, சூலை, பெருவலி, வேறும் உளநோய்கள்,
பிறவிகள்
Read 5 tweets
Jan 31
இன்று தை அமாவாசை.
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி மரியாதை செய்யக்கூடிய விரத நாளாகும். அமாவாசை தினம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக்கூடிய மிகச் சிறந்த நாள். அமாவாசை அன்று நாம் எந்த வழிபாட்டைச் Image
செய்தாலும் அந்த வழிபாட்டின் பலன் மும்மடங்காகக் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை Image
போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை என 12 அமாவாசைகள் ஒரு வருடத்தில் வருகின்றன. அந்த அமாவாசைகளில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை மிக மிக விசேஷமாக விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
ஒருவன் தன் பெற்றோரை,
Read 7 tweets
Jan 30
#ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்பிகை ஆலயங்களில் பல உள்ளன. நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு
தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன. ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித்
தருகிறாள். சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது. சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சிவாத்மகம் என்பர். ஸ்ரீசக்கரம் என்பது வரை
Read 15 tweets
Jan 30
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் ஒருநாள் அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக கனவு கண்டான். இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக அரச நாடி ஜோதிடர் வேலவனை வரவழைத்தான். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்
சுவடியை எடுத்து அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார். உடனே அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று
உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானம் அடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடர் சங்கரனை வரவழைத்தார். அவரோ மிகுந்த ஸ்ரீஹரி கோவிந்த பக்தன். எந்த செயல் செய்தாலும் ஸ்ரீஹரி கோவிந்தா, ஸ்ரீஹரி கோவிந்தா என சொல்லாமல் செய்வது இல்லை.
அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(