#ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்பிகை ஆலயங்களில் பல உள்ளன. நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஒன்பது கட்டுகள்கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு
தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன. ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித்
தருகிறாள். சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி - வடிவமாக ஓம் என்பது தான் ஸ்ரீ சக்கரமானது. சக்கரத்தின் கீழாக நோக்கிய முக்கோணங்கள் ஐந்தும் மேல் நோக்கிய முக்கோணங்கள் நான்கும் சிவாத்மகம் என்பர். ஸ்ரீசக்கரம் என்பது வரை
படம். மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
1. காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ர நாமத்தை
இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர். 2. மாங்காட்டில் ஆதிசங்கரர் தன்னுடைய கரத்தாலேயே அர்த்த மேருவை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த மேருவானது அஷ்ட கந்தங்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் சந்தனம். அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், ஜடாமாஞ்சில்,
கச்சோலம் ஆகிய எட்டு விதமான நறுமணப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. 3. கும்பகோணம்- மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. 4. புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால்
ஸ்தாபிக்கப்பட்டது. 5. ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார். 6. சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது. 7. திருச்சிக்கு அருகே திருவானைக்காவில் அருள்
புரியும் அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் தாடங்க வடிவில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. உக்கிரமாக இருந்த அம்பாளுக்கு ஸ்ரீசக்கரம் அணிவித்து சாந்தமாக்கியவர் ஆதி சங்கரர். 8. கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.
9. சென்னை-காளிகாம்பாள் ஆலய மேருவில் அந்தந்த மாத்ருகா அட்சரங்கள் அந்தந்த ஸ்தானத்தில் செதுக்கப்பட்டுள்ளன. குபேரன் வழிபட்ட தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம் இங்குள்ளது. 10. சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சந்நதியிலும் ஸ்ரீசக்ரப்
பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. த்ரிபங்க நிலையில் வீற்றருளும் இவள் மிக்க வரப்பிரசாதி. 11. சென்னை-நங்கநல்லூரில் திதிநித்யா தேவிகளின் சக்ரங்களும் விக்ரகங்களும் இரு புறங்களிலும் திகழ, 16 படிகளின் மேல் மகாமேருவுடன் கோலோச்சுகிறாள், ராஜராஜேஸ்வரி. 12. நேபாளம் குஹ்யேஸ்வரி ஆலயத்திலுள்ள
தாமரை மொட்டின் நடுவே அமைந்துள்ள ஸ்ரீசக்ரத்தை அனைவரும் தொட்டு பூஜிக்கலாம்.
அதில் பொங்கி வரும் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு பிரசாதமாகவும் உட்கொள்ளலாம். 13. திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்ரத்தை தனி சந்நதியில் தரிசிக்கலாம். 14. தாம்பரம்-
ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக் கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வாராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் யந்திர வடிவாக அருள்கிறார்கள். 15. திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சந்நதி ஸ்ரீசக்ர வடிவில் அமைந்துள்ளது.
16. கேரளாவில் ஓணத்தக்குளம் அருகே உள்ள செட்டிக்குளத்தில் அம்பிகை சந்நதியில் ஸ்ரீசக்ரம் பொருத்தப்பட்டிருக்கிறது. 17. காசி-அனுமன் காட்டில் முத்துஸ்வாமி தீட்சிதர் ஆராதனை செய்த சிவலிங்கத்தின் உச்சியில் ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது. 18. மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான
கோபாலஸுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்ரம் வைத்து வழிபடப்ப டுகிறது. 19. திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு. 20. புன்னை நல்லூர் மாரியம்மனின் முன் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை
செய்தவர், மகான் சதாசிவ பிரம்மேந்திரர்.
மனிதன் தன்னை கட்டுப் படுத்தி சித்தபுருஷாக வளர்ந்து அன்னையின் அருளை உணரும் ஆன்மீக நிலையின் முடிவே, ஸ்ரீசக்கர தத்துவமாகும்.
ஸ்ரீ அம்பிகை திருவடிகளே சரணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ‘விஸ்வம்’ என்றால் பெரிய என்று ஒரு பொருள் உண்டு. ‘ரூபம்’ என்றால் உருவம். ஸ்ரீரங்கத்தில் ‘விஸ்வரூபம்’ என்றழைக்கப்படும் காலை முதல் நேர பூஜை மகத்தானது. இது ஸ்ரீரங்கத்திற்கே உரித்தான ஒரு தனி வழிப்பாட்டு முறையாகும். இங்கு உறையும் பெருமாளுக்கே பெரிய பெருமாள் என்று
தான் திருநாமம். பெரிய பெருமாள் காலை உறங்கியெழும் இந்த வேளைக்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தது சரியே! தேசிகர் தமது பாதுகாஸஹஸ்ரம் வைதாளிகப் பத்ததியில் (242 சுலோகம்) இந்த திருப்பள்ளியெழுச்சியின் போது உன் திருவடிகளினால் சுகம் பெற்று கொண்டிருக்கும், சக்ரவர்த்தினியாய் விளங்கும்
பாதுகையை நீ சாற்றிக் கொண்டு எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றார். இதனால் தானே என்னவோ ஆகம ரீதியாகவும் காவேரியிலிருந்து யானையின் மேல் புனித நீர் கொண்டு வந்தவுடன், அந்த நீர் கொண்டு அர்ச்சகர்களால் முதலில் பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்விக்கப் படுகின்றது. இதற்கு ‘திருவடி
காஞ்சி மகா பெரியவர் பற்றி கவியரசர் கண்ணதான் சொன்னது:
காஞ்சிப் பெரியவரின் அருமை இப்போது தெரியாது. இன்னும் 50 ஆண்டுகள் போனால், இந்து மதம் என்றால் என்ன என்று கேட்டால், 'மஹா பெரியவர்' என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான் என்று கவியரசர் கண்ணதாசன் 1973ம் ஆண்டு 'அர்த்தமுள்ள இந்துமதம்'
கட்டுரையில் கூறியிருந்தார். உண்மையில் மஹா பெரியவர் ஸ்தூல சரீரத்துடன் நடமாடிய போது கொண்டாடப்பட்டதை விட தற்போது தான் அதிகம் ஆராதிக்கப்பட்டு வருகிறார்.
மஹா பெரியவா 1973ம் ஆண்டு, தேசமெங்கும் பாத யாத்திரை கிளம்பினார். அப்போது கவியரசர் கண்ணதாசன் தினமணியில் 'அர்த்தமுள்ள இந்துமதம்'
எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதிய அத்தியாயம் இது- பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அவர் ஒருவரே! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகிய யோகங்கள் கைவந்த ஒருவர், காஞ்சிப் பெரியவர். அதோ, அவர் எங்கே போகிறேன் என்று சொல்லாமலே போய்க் கொண்டிருக்கிறார். இந்த வயதிலும்
இத்திருப்புகழ் அருணகிரிப் பெருமான் உலகில் உள்ள மக்களின் மீதுள்ள அளவற்ற கருணையால் பாடியருளியது.
இத்திருப்புகழை தினமும் ஒருமுகத்துடன் ஓதினால், நோய்கள் விலகும், கரோனா போன்ற புதிய நோய் தீண்டாது. நோயின்றி வாழ்ந்து வளம் பெற:
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ
ரிழிவுவி
டாத தலைவலி சோகை
யெழுகள மாலை யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை விடுவானே
தருநிழல் மீதி லுறைமுகி
இன்று தை அமாவாசை.
மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அமாவாசை என்பது முன்னோர்களை வணங்கி மரியாதை செய்யக்கூடிய விரத நாளாகும். அமாவாசை தினம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்கக்கூடிய மிகச் சிறந்த நாள். அமாவாசை அன்று நாம் எந்த வழிபாட்டைச்
செய்தாலும் அந்த வழிபாட்டின் பலன் மும்மடங்காகக் கிடைக்கும் என்பது ஐதீகம். அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியை
போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசை என 12 அமாவாசைகள் ஒரு வருடத்தில் வருகின்றன. அந்த அமாவாசைகளில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை மிக மிக விசேஷமாக விரதம் கடைபிடிப்பது வழக்கம்.
ஒருவன் தன் பெற்றோரை,
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் ஒருநாள் அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக கனவு கண்டான். இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக அரச நாடி ஜோதிடர் வேலவனை வரவழைத்தான். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்
சுவடியை எடுத்து அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’ என்று பலன் சொன்னார். உடனே அரசன் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று
உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானம் அடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடர் சங்கரனை வரவழைத்தார். அவரோ மிகுந்த ஸ்ரீஹரி கோவிந்த பக்தன். எந்த செயல் செய்தாலும் ஸ்ரீஹரி கோவிந்தா, ஸ்ரீஹரி கோவிந்தா என சொல்லாமல் செய்வது இல்லை.
அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று
#ராணி_தாராபாய் சத்ரபதி சிவாஜி ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின் அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு
உணவாகப் போடப்பட்டார். அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார். அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத் தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக
ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யம். டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர்! ராஜாராம் இறந்த 3வது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர். அப்படி