#Thread#PleaseRead A job experience from a #SecurityGuard work!
இந்தப் பதிவைப் பார்த்ததும் சிலர், அவருடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம், பிறந்தநாள் செய்தியை கேக்கில் எழுதியிருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நிறுவனத்தின்
நுழைவாயிலில் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்ந்திருக்கலாம். ஆனால் சிறிய/நடுத்தர நிறுவனங்களில், பாதுகாப்பு ஊழியர்கள் நுழைவு வாசலில் நின்று அல்லது உட்கார்ந்து, ஊழியர்களுக்கு கதவைத் திறந்து காலை வணக்கம் சொல்ல வேண்டி இருக்கும்.
ஒரு ஃப்ளாஷ்பேக்: பல வருடங்களுக்கு முன்பு ஒரு செமஸ்டர் விடுமுறையில், நான் Dyanora சர்வீஸ் சென்டர் அடையாரில் 1.5 மாதங்கள் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தேன். கீழே Woodlands ஹோட்டல் இருக்கும். ஒரு மாதம், நான் பஸ் பாஸைப் பயன்படுத்தினேன், மீதி 15 நாள் என் அப்பா பாஸை நீட்டிக்க முடியாது
என்று சொன்னதால், அயனாவரத்திலிருந்து அடையாருக்கு சுமார் 15 கிமீ சைக்கிளில் செல்ல வேண்டியிருந்தது. அந்த ஆபீஸில் அப்போது சுமார் 15க்கும் குறைவான Staffs பணிபுரிந்தனர். எல்லாரும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவங்கதான். நான் நுழைவாயிலில் ஒரு டேபிள் சேர் போட்டு அமர்ந்திருப்பேன்,
கதவைத் திறக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும்போது எழுந்து நிற்க வேண்டும், நான் காலை வணக்கம் சொல்ல வேண்டும். சில லேடீஸ் ஸ்டாப் என்னிடம் சொல்வார்கள், தம்பி நீ சின்ன பையனா இருக்கே எதுக்கு இந்த வேலைக்கு வந்தேன்னு கேட்டாங்க, நல்லாவும் பேசுவாங்க. நீ எழுந்து
நிற்க வேண்டாம்னு சொல்லிடுவாங்க. ஆனால் ஒரு சில ஜென்ட்ஸ் ஸ்டாப் அலுவலகத்திற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும் நான் நிற்கனும், எழுந்து காலை வணக்கம் சொல்லணும்னு எதிர்பாத்தாங்க. எழுந்துக்கலன்னா, என்ன உக்காந்துட்டு போகத்தான் இங்கே வேலைக்கு வந்தியான்னு கேட்பாங்க, நார்மலாவே
பேசமாட்டாங்க. ஆனா அவங்க கொடுக்கற எல்லா வேலையும் செய்துடுவேன். அந்த 1.5 மாத வேலை எனக்கு வாழ்க்கையில் சில விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. 1. ஒருவரின் வேலை / பதவியை மட்டும் பார்க்காம நாம் எவ்வாறு மக்களை மதிக்க வேண்டும். 2. பணம் சம்பாதிக்க பெற்றோர்கள் எப்படி கடினமாக உழைக்கிறார்கள் என
புரிந்தது. 3. வாழ்க்கைக்கு பணம் முக்கியம்னாலும் நேர்மையா சம்பாதிப்பது முக்கியம் என புரிந்தது. 4. அதைவிட மனிதர்கள் முக்கியம் என புரிய வைத்ததது.அந்த வேலைக்கு என்னுடைய சம்பளம் 800 ரூபாய். 800 ரூபாய் சம்பாதிப்பதற்காக சுமார் 26 நாட்கள் உழைத்தேன், 400 ரூபாய் (அரை மாத சம்பளம்)
சம்பாதிப்பதற்காக 15 நாட்கள் சைக்கிள் ஓட்டினேன். 15 km சைக்கிள் ஓட்டிட்டு போனா அப்படியே வேர்த்து ஊத்தும். போய்ட்டு டிரஸ் மாத்திட்டு சேரில் உட்காருவேன்.
அந்த சம்பளம் அதுவே என் வாழ்க்கையில் நான் பெற்ற முதல் சம்பாத்தியம் மற்றும் என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில்
ஒன்றாக அமைந்தது. அந்த வேலை முடித்த பிறகு என் அப்பா மீது மிகுந்த மதிப்பு வந்தது. என்னுடைய வேலை கடைசி நாளில் நானும் என் அப்பாவும் நேராக திருப்பதிக்கு அப்போது என் அப்பா வாங்கி இருந்த செகண்ட் ஹேண்ட் பைக் ஹோண்டா எக்ஸ்புளோரர் மூலம் சென்றோம்.
இது ஏன் சொல்லலாம்னு தோணிச்சுன்னா,
அந்த செக்யூரிட்டி ஊழியருக்கு கேக் வாங்கி கொடுத்தது அந்த ஒரு நாள் அவருக்கு சந்தோஷமா இருக்கலாம். ஆனால் தினமும், அவரை மதித்து நடந்து கொண்டால் போதும்., மேலும் சந்தோஷமா உணர்வார். Respect everyone in Job.
Thanks for taking time and reading this!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A must read thread about Bruce Lee to know his history, growth, his famous movies, his death conspiracy. I also felt many times he should have lived long & the tragedy was his son also died at young age. I was also thinking about the relation to family curse as written by Chocks.
His movies, action sequences came to popular in a short time and he disappeared even before he reached his peak. I have also read and watched many of his death conspiracy videos. The inspiring video of Bruce Lee playing with his nunchucks with a tennis player was not real.
சிங்கப்பூரில் தமிழ் ஒரு தேசிய மொழி
சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மொழியாக, சிங்கப்பூரில் கிடைக்கும் எல்லா சுவரொட்டிகளிலும் தமிழைக் காணலாம்.
பஸ் அல்லது ரயிலில் செல்லும்போது கூட தமிழில் அறிவிப்புகளை கேட்கலாம்.
தமிழ் மொழி சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமாக இந்திய சிங்கப்பூரர்களுக்காக வழங்கப்படும் மொழியாகும். சிங்கப்பூரின் கல்வி முறையில் தாய்மொழி கட்டாயப் பாடமாக இருப்பதால், தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய சிங்கப்பூரர்கள் தொடக்கப்பள்ளி முதல் தமிழ் கற்க வேண்டும்.
இங்கு வசிக்கும் இந்தியத் தமிழர்களும் தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்கின்றனர்.
இந்த இணையதளத்தில் வாழும் மொழி வாழும் மரபு என்ற தலைப்பில் சில மொழி விளக்கங்கள் உள்ளது – Part 1
#Kadhalan#ARR#Shankar#Prabudeva#SPB
காதலனுக்கு முன், ARR 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா டூயட் என ஹிட்களை கொடுத்து மக்களிடையே அவர் பிரபலமடைந்து வந்தார். கல்லூரி செல்லும் மாணவர்கள், டீன் ஏஜ் பசங்க கிட்ட காதலன் பாடல்கள் அதிக வரவேற்பை
பெற்றது. அந்தப் படத்தில் பிரபுதேவாவும் நக்மாவும் புதியவர்கள். தெரிந்த முகங்கள் குஞ்சுமோகன், ஷங்கர், ARR மட்டும். அதனால் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய உத்திகளை (Grand visuals, Computer graphics) அப்போது அறிமுகப்படுத்தினர். கண்ணாடியினால் செய்யப்பட்ட பேருந்து, கிராபிக்ஸில்
அசத்திய பிரபலமான முக்காப்லா பாடல். SPB பிரபுதேவா கலந்து கட்டிய காதலிக்கும் பெண்ணின் கைகள், உன்னிகிருஷ்ணன் அறிமுக பாடலான என்னவளே என மாறுபட்ட டியூன்களாக அமைந்தது. பேட்ட ராப் மெட்ராஸ் வார்த்தைகளைக் கொண்டு ஷங்கரால் எழுதப்பட்டது. பெரும்பாலான பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார்.
#Thread #Engineering Opportunities in #OilandGas Sector – Part 2 #CivilEngineering
Civil பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய (1/18)
விஷயங்களைப்பற்றி இன்று எழுதுகிறேன்.
Building Strong, Basement weak அப்படின்னு வடிவேலு சொல்வது போல் இல்லாமல் இரண்டும் வலுவாக இருக்க வடிவமைப்பதே Civil & Structural Engineeringன் சிறப்பம்சம்.
சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். (2/18)
While you study Civil Engg, please study modules such as 1) Industrial Structure 2) Powerplant Structure 3) Offshore Structures which will boost knowledge in Engg & design. Those who did Diploma, it is recommended to do a degree for more job opportunities & career growth. (3/18)
#Thread #Engineering Opportunities in #OilandGas Sector #MechanicalEngineering
பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்களை (1/n)
எழுதலாம் என்று தோன்றியது. சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.
So lets start.
While you study Mech Engg, please check and take if there is any special modules as Pressure vessels, Heat Exchangers, Pumps, Compressors, Gas Turbines (2/n)
If you have done Mech Engg degree, you may do Masters in you have interest in fields like Offshore Technology, Engineering Design, Energy Engineering, Industrial Engineering. Masters will enhance your technical capability & will have better chance among others. (3/n)