ஸ்ரீதர் Profile picture
Engineering | Interested in Music, Travel | Rajini, Ilaiyaraja & SPB | Live your life and help others
Mar 28, 2022 10 tweets 3 min read
#Covid #Lockdown #2YearsMemories #Caring
இந்தியாவில், கோவிட் லாக்டவுன் மார்ச் 2020 இறுதியிலும், சிங்கையில், ஏப்ரல் 2020 முதல் வாரத்திலும் ஆரம்பித்தது. அந்த சமயத்தில் லாக்டவுன் இரண்டு மாதங்கள் வரை நீடித்ததுனு நினைக்கிறேன். கோவிட் லாக்டவுன் காலங்களில், இந்தியா & Middle Eastல் உள்ள எனது நண்பர்களை, அலைபேசியில் Whatsapp மூலம் ஒவ்வொருத்தருக்கு call பண்ணி பேச ஆரம்பித்தேன். சென்னைல நான் பணிபுரிந்த கம்பெனியில் ஒரு சிலர் தொடர்பில் இருந்தாலும் பலர் தொடர்பில் இல்லை. 20 பேர்கிட்ட call பண்ணி ஒரு வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கினேன். சென்னைல இருக்கறவங்களே பலர் 20
Mar 20, 2022 26 tweets 11 min read
#Thread #TNBudget #Polytechnic #Education #Tamilnadu
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற #TNBudget ன் கல்வித்தொகை உதவித்திட்டம் பல மாணவிகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுக்கும். அது அவர்களின் உயரத்தை அடைய ஓரளவுக்கு உதவும் என நம்புகிறேன். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. நேற்று காலை டிவி செய்திகளில், சில மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு சரியான வருமானம் இல்லை எனவும்,
Feb 21, 2022 5 tweets 2 min read
A must read thread about Bruce Lee to know his history, growth, his famous movies, his death conspiracy. I also felt many times he should have lived long & the tragedy was his son also died at young age. I was also thinking about the relation to family curse as written by Chocks. His movies, action sequences came to popular in a short time and he disappeared even before he reached his peak. I have also read and watched many of his death conspiracy videos. The inspiring video of Bruce Lee playing with his nunchucks with a tennis player was not real.
Feb 21, 2022 8 tweets 4 min read
#MotherLanguage Day
#TamilLanguage in Singapore
சிங்கையில் தமிழ்மொழி!

சிங்கப்பூரில் தமிழ் ஒரு தேசிய மொழி
சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மொழியாக, சிங்கப்பூரில் கிடைக்கும் எல்லா சுவரொட்டிகளிலும் தமிழைக் காணலாம்.
பஸ் அல்லது ரயிலில் செல்லும்போது கூட தமிழில் அறிவிப்புகளை கேட்கலாம். தமிழ் மொழி சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமாக இந்திய சிங்கப்பூரர்களுக்காக வழங்கப்படும் மொழியாகும். சிங்கப்பூரின் கல்வி முறையில் தாய்மொழி கட்டாயப் பாடமாக இருப்பதால், தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய சிங்கப்பூரர்கள் தொடக்கப்பள்ளி முதல் தமிழ் கற்க வேண்டும்.
Feb 20, 2022 11 tweets 3 min read
#Thread #PleaseRead A job experience from a #SecurityGuard work!
இந்தப் பதிவைப் பார்த்ததும் சிலர், அவருடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம், பிறந்தநாள் செய்தியை கேக்கில் எழுதியிருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நிறுவனத்தின் நுழைவாயிலில் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்ந்திருக்கலாம். ஆனால் சிறிய/நடுத்தர நிறுவனங்களில், பாதுகாப்பு ஊழியர்கள் நுழைவு வாசலில் நின்று அல்லது உட்கார்ந்து, ஊழியர்களுக்கு கதவைத் திறந்து காலை வணக்கம் சொல்ல வேண்டி இருக்கும்.
Feb 19, 2022 8 tweets 4 min read
#Kadhalan #ARR #Shankar #Prabudeva #SPB
காதலனுக்கு முன், ARR 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா டூயட் என ஹிட்களை கொடுத்து மக்களிடையே அவர் பிரபலமடைந்து வந்தார். கல்லூரி செல்லும் மாணவர்கள், டீன் ஏஜ் பசங்க கிட்ட காதலன் பாடல்கள் அதிக வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் பிரபுதேவாவும் நக்மாவும் புதியவர்கள். தெரிந்த முகங்கள் குஞ்சுமோகன், ஷங்கர், ARR மட்டும். அதனால் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய உத்திகளை (Grand visuals, Computer graphics) அப்போது அறிமுகப்படுத்தினர். கண்ணாடியினால் செய்யப்பட்ட பேருந்து, கிராபிக்ஸில்
Oct 3, 2021 21 tweets 11 min read
#Thread
#Engineering Opportunities in #OilandGas Sector – Part 2
#CivilEngineering
Civil பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய (1/18) விஷயங்களைப்பற்றி இன்று எழுதுகிறேன்.
Building Strong, Basement weak அப்படின்னு வடிவேலு சொல்வது போல் இல்லாமல் இரண்டும் வலுவாக இருக்க வடிவமைப்பதே Civil & Structural Engineeringன் சிறப்பம்சம்.
சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். (2/18)
Sep 14, 2021 15 tweets 8 min read
#Thread
#Engineering Opportunities in #OilandGas Sector
#MechanicalEngineering
பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய விஷயங்களை (1/n) எழுதலாம் என்று தோன்றியது. சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன்.
So lets start.
While you study Mech Engg, please check and take if there is any special modules as Pressure vessels, Heat Exchangers, Pumps, Compressors, Gas Turbines (2/n)