#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் விஷ்ணுபக்தர் ராகவன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் தோட்டத்தில் உள்ள துளசியை மாலையாகவும் பூக்களை வைத்து அர்ச்சனை செய்வதும் வழக்கம். சில பூக்களே தோட்டத்தில் இருந்தாலும் சரி அவற்றைப் பறித்து அர்ச்சனை செய்துவிடுவார் ராகவன். ஒரு நாள் புயலுடன
கூடிய பலத்த மழை ஏற்பட்டது. அர்ச்சனை செய்ய பூக்களை பறிக்க தோட்டத்துக்குப் போனால் புயலின் காரணமாக அனைத்து பூக்களும் நாசமடைந்திருந்தன. சரி துளசியை கொண்டாவது அர்ச்சிக்கலாம் என்று எண்ணி துளசி பறிக்க சென்றார் ராகவன். அதில் உள்ள இலைகளும் சில உதிர்ந்திருந்தன. அதில் உள்ள துளசி இலைகளை
வைத்து மாலை மட்டுமே கட்ட இயலும். அர்ச்சனை செய்ய என்ன செய்வதென புரியாமல் மிகவும் வேதனைப் பட்டார். ராகவன் வீடோ தனித்திருந்தால் உதவி கேட்க கூட சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும். மழையும் புயலும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் அதற்கும் வழியின்றி தவித்து கொண்டிருந்தவர் அருகில்
உள்ள ஒரு மரத்தின் அடியில் இயலாமையை எண்ணி சோகமாக நின்றார். தன்னால் அர்ச்சனை செய்ய முடியாமல் போய் விடுமோ என்று எண்ணி நாராயணா நாராயணா என்று அரற்றினார். அப்போது வீசிய காற்றின் காரணமாக மரத்தில் இருந்த இலைகள் உதிர ஆரம்பித்தன. அப்போது அவருள் ஓர் உதயம்! இந்த இலைகளை வைத்து ஏன் அர்ச்சனை
செய்ய கூடாது என்று உடனே மரத்தில் உள்ள இலைகளை வேகமாக பறித்து மடமடவென வீடு சென்றார் ராகவன். அப்போது இறைவனிடம் பூக்கள் இல்லாததற்கு மன்னிப்பை கோரி துளசி மாலையை அணிவித்து பின் நாராயணன் நாமத்தைச் சொல்லி ஒவ்வொரு இலையாக பகவானுக்குச் சமர்ப்பித்தார். அப்போது நடந்த ஆச்சர்யத்தில் பக்தனின்
கண்களில் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் சுரந்தது. ஆம் அந்த இலைகள் அனைத்தும் புஷ்பமாக மாறிப் போயின. பகவானின் அன்பை கண்டு அவர் பாதங்களை நமஸ்கரித்தான். பகவான் #கீதையில்
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி|
ததஹம் பக்த்யுபஹ்ருதம் அச்நாமி ப்ரயாத்மன: ||
என்கிறார்.
பகவான் ஸ்ரீ விஷ்ணு நம்மிடம் பணமோ பொருளோ வேண்டுவதில்லை. அவன் தருவதை தான் நாம் வைத்திருக்கிறோம். அவன் நம்மிடம் பார்ப்பது தூயமனம், அன்பு மற்றும் பக்தியையே. தூய மனம் மற்றும் அன்போடு காய்ந்த இலைகளை சமர்பித்தாலும் அவன் பூமாலையாக ஏற்கிறான். என்ன தான் தீயவனாக இருந்தாலும் மனம் வருந்தி
அன்பு மற்றும் பக்தி செலுத்தினால், அதை ஏற்கும் இறைவனை போன்ற அன்பாளர் வேறு யாராகவும் இருக்க முடியாது. எனவே உலக சுகங்களில் மட்டுமே மூழ்காமல் இறைவனை தூய மனத்தோடு வணங்குவோம் .
ஸ்ரீ விஷ்ணுவின் அன்பை பெறுவோம் .
ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திருப்பரங்குன்றம்#ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன்
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி
Experiences with #MahaPeriyava:
It was during the days when SriMatham functioned with Kumbakonam as its head quarters. There was a large cattle shed behind the Matham. One day a cow that did now belong to SriMatham was found in the shed feeding on the hay and drinking at the
water-trough. No one knew whose cow it was. The news was passed around in the neighbourhood, but no one came to claim it. Four or five days passed. The Manager asked Sri Maha Periyava, ‘Shall we drive away the cow?’
"If the cow must be driven out because it does not belong to
SriMatham, then several people in our Matham should also be sent out". There were indeed many people living in the Matham, eating and sleeping there, doing no particular work. "The cow cannot speak for itself. We do not know who its master is. Let it stay on in our cattle-shed.
மிகப் பெரும் செல்வந்தர், அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரித்தார். விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன்
இரண்டு பெரிய வண்ண கவர்களை வைக்கப்பட்டன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் ஶ்ரீராமாயண புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டு இருந்தது. அவர்களிடம் அவர், நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன். என்
இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது. என் செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணப் புத்தகம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார். முதலாமவர் தயங்கியவாறே, முதலாளி
#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று
கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.
வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.
#ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்பு சொல்லில் அடங்காது. இக்கோவிலின் ஒரு விசேஷம் 7 என்ற எண்ணிக்கையில் பல அதிசயங்களை கொண்டுள்ளது இத்திருத்தலம்.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம்
வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.
இங்கு வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண, கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை
வதைத்ததே மாபெரும் வீரச் செயல் என்றார். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க, ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்? மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்டார். அகஸ்தியர், ராமா எல்லாம் அறிந்தவன் நீ. ஆனால் ஏதும் அறியாதவன் போல லக்ஷ்மணனின்
பெருமையை என் வாயால் கூறவேண்டும் என்று இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய், சரி நானே சொல்கிறேன் என்று தொடர்ந்தார். சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான்முகக் கடவுளான பிரம்மா இந்திரனை