#திருப்பரங்குன்றம் #ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன்
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி
பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது. கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப் பட்டுள்ளன.
சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் மிக
நேர்த்தியானவை. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜேஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப் பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின்
அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன.
சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773ல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற
பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க மன்னர்களில் வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர் (1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள் (1689-1706)
திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன. கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடு மிக்கது. இதன் சிகரப் பகுதியில் காணப்படும் சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவை. சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி தெருவில் பழமையான சொக்கநாதர் கோயில்உள்ளது
திருப்பரங்குன்றத்தின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அதன் தென் பகுதியில் (தென்பரங்குன்றம்) உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது. மலையின் வடமேற்குப் பகுதியில் சமணர் கற்படுகைகள் உள்ள ஒரு குகை உள்ளது.
#தல_வரலாறு
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஒம் எனும் பிரணவ
(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்து இருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது அவரும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும்
மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. முருகப் பெருமான் பிரணவ மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரே ஆனாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக
அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் இங்கு வந்து தவம் செய்தார். சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்னும்
பெயரில் உள்ளனர். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் ஐதீகம். முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை
மாதம் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
#பெயர்க்காரணம்
பரம்பொருளான
சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம். திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என
ஆயிற்று. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சி அளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான்
இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். சங்க இலக்கியங்களில், அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் இம்மலை பற்றி கூறுகின்றன. லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக்
குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்ட திருத்தலம்.
மதுரை நகரிலிருந்து தென்மேற்கில் தேசிய
நெடுஞ்சாலை வழியே 9-கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று முருகப் பெருமான், அவன் பெற்றோர் சகிதம் அனைவரின் அருளையும் பெருவோம்.
ஓம் சரவணபவாய
ஓம் நமசிவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 25
#ஶ்ரீஆதிசங்கரர் துதி
ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் | |
திருவள்ளூர் அருகே #திருப்பாச்சூர் என்ற இடத்திலுள்ளது அருள்மிகு #தங்காதலி_வாசீஸ்வரர் என்ற மிகப் பழமையான கோவில். இந்த கோவிலின் வரலாறு ஆச்சர்யங்கள் நிறைந்தவை. இக்கோவிலில் Image
ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாக வரலாறு. தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள். இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாக Image
பிறக்கும்படி செய்தார் சிவன். பூலோகத்தில் சிவபெருமானை திருமணம் முடிக்க எண்ணி, வேண்டி தவம் செய்த இடமே திருப்பாச்சூர். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப் படுகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடி அன்னியோன்யம் Image
Read 17 tweets
Feb 25
#அறிவோம்_வரலாறு உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கிறது. அதற்குக் காரணம் #மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு. எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேரா கொள்கை கொண்ட இந்தியாவினை போட்டு
சாத்துவது சீன வழக்கம். இந்தியா யார் அணியிலும் சேராத நாடு என நேரு அறிவித்திருந்தார். அதனால் யார் அடித்தாலும் கேட்க ஆளில்லா நாடு எனும் அபாயம் இருந்ததை அவர் கவனிக்கவில்லை அதுதான் நேரு. இதனால் தான் கென்னடியும் மாவோவும் கியூபாவில் 1962ல் உரசியபொழுது அடித்தால் யாரும் கேட்க வராத ஆளில்லா
இந்தியாவினை அணிசேரா இந்தியாவினை போட்டு சாத்தியது சீனா. அப்படியே 1965 யுத்தத்தில் பாகிஸ்தானை முடக்கி இந்தியா வெற்றிபெற்றாலும் காஷ்மீர் சிக்கலை தீர்க்காமல் சாஸ்திரியினை முடக்கியது சீன ரஷ்ய கூட்டணி. 1971லும் இதுவேதான் நடந்தது. இந்திராவும் காஷ்மீரைத் தொட அஞ்சினார். அதுவும் பாகிஸ்தான்
Read 13 tweets
Feb 25
#மதமாற்றம் #மிஷினரிகள் இந்துக்கள் அனைவரும் மதம் மாறினால் தான் இந்து மதம் அழியும் என்றில்லை இந்து தர்மத்தின் அடையாளங்களையும் வரலாறுகளையும் சடங்குகளையும் திரித்து கூறினாலே போதும் அதற்கு பங்கம் ஏற்படும். அந்த அடையாளங்களை அழிக்கும் வேலைகளை தான் செய்து வருகின்றன கிறிஸ்தவ மிஷினரிகள். ImageImage
1. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கிறித்தவர் என்றும் பைபிளில் வரும் தாமஸ் என்பவர் பரங்கி மலையில் அமர்ந்து சொல்ல சொல்ல திருவள்ளுவர் திருக்குறளே எழுதியதாக இதற்காக பல போலியான ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு உள்ளார்கள். முதலில் செயிண்ட் தாமஸ் இந்தியா வரவேயில்லை. முழு பூசணிக்கயை
சோற்றில் மறைத்தாயிற்று. திமுக போன்ற கட்சிகளும் இதற்கு ஆதரவு. சொல்லிக் கொண்டே இருந்தால் பொய்யையும் உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டமும் இங்குள்ளது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து அவை தான் உண்மை என வரலாறு மாற்றி எழுதப்பட போகிறது நாமும் எது எப்படி போனால் என்ன என்று விரல் சூப்பி சென்று
Read 14 tweets
Feb 24
Experiences with #MahaPeriyava:
It was during the days when SriMatham functioned with Kumbakonam as its head quarters. There was a large cattle shed behind the Matham. One day a cow that did now belong to SriMatham was found in the shed feeding on the hay and drinking at the
water-trough. No one knew whose cow it was. The news was passed around in the neighbourhood, but no one came to claim it. Four or five days passed. The Manager asked Sri Maha Periyava, ‘Shall we drive away the cow?’
"If the cow must be driven out because it does not belong to
SriMatham, then several people in our Matham should also be sent out". There were indeed many people living in the Matham, eating and sleeping there, doing no particular work. "The cow cannot speak for itself. We do not know who its master is. Let it stay on in our cattle-shed.
Read 9 tweets
Feb 23
மிகப் பெரும் செல்வந்தர், அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரித்தார். விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன்
இரண்டு பெரிய வண்ண கவர்களை வைக்கப்பட்டன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் ஶ்ரீராமாயண புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டு இருந்தது. அவர்களிடம் அவர், நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன். என்
இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது. என் செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணப் புத்தகம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார். முதலாமவர் தயங்கியவாறே, முதலாளி
Read 10 tweets
Feb 23
#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று
கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.
வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(