#ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்பு சொல்லில் அடங்காது. இக்கோவிலின் ஒரு விசேஷம் 7 என்ற எண்ணிக்கையில் பல அதிசயங்களை கொண்டுள்ளது இத்திருத்தலம்.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம்
வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.
இங்கு வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
(1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
இங்கு நடைபெறும்
நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
7வது அவதாரமான இராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.
இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை
கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.
ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.
ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி
சாலி அலங்காரம்.
திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்
திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.
ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.
திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5)
வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை
சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம்,
(4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.
நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் - தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் - தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு
- தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை - தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் - தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் - தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் - தை, மாசி, சித்திரை
மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.
கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் - ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.
மற்ற கோவில்களில்
காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி
பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிபோம். அனைத்து நலன்களையும் பெறுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#திருப்பரங்குன்றம்#ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்.
முருகனின்ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு இது, அவற்றில் மிகப் பெரியதும் ஆகும். இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சித் தருகிறார். முருகப்பெருமான் அவதாரம் செய்ததன்
நோக்கமே சூரபத்மனையும் அவன் சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் தேவர்கள் துன்பம் நீங்கி மகிழ்ச்சியடைந்தார்கள்.
அதனால் நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி
Experiences with #MahaPeriyava:
It was during the days when SriMatham functioned with Kumbakonam as its head quarters. There was a large cattle shed behind the Matham. One day a cow that did now belong to SriMatham was found in the shed feeding on the hay and drinking at the
water-trough. No one knew whose cow it was. The news was passed around in the neighbourhood, but no one came to claim it. Four or five days passed. The Manager asked Sri Maha Periyava, ‘Shall we drive away the cow?’
"If the cow must be driven out because it does not belong to
SriMatham, then several people in our Matham should also be sent out". There were indeed many people living in the Matham, eating and sleeping there, doing no particular work. "The cow cannot speak for itself. We do not know who its master is. Let it stay on in our cattle-shed.
மிகப் பெரும் செல்வந்தர், அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, பரோபகாரி. ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குச் சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரித்தார். விருந்து முடிந்தவுடன், ஒவ்வொருவருடைய இருக்கைக்கு முன்
இரண்டு பெரிய வண்ண கவர்களை வைக்கப்பட்டன. ஒன்றில் பணம் என்றும் மற்றொன்றில் ஶ்ரீராமாயண புத்தகம் என்றும் எழுதி வைக்கபட்டு இருந்தது. அவர்களிடம் அவர், நீங்கள் எனக்காக உண்மையாக உழைக்கிறீர்கள். உங்கள் வேலைக்கேற்ற அல்லது அதற்கும் அதிகமாகவே உங்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்துள்ளேன். என்
இந்த செல்வம் இறைவனால் அருளப்பட்டது. என் செல்வத்தை எவ்வாறு செலவழித்தேன் என்று இறைவனுக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். உங்கள் முன் இரண்டு கவர்கள் உள்ளன. ஒன்றில் பணம், மற்றொன்றில் ராமாயணப் புத்தகம். இதில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார். முதலாமவர் தயங்கியவாறே, முதலாளி
#தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ளது. தாயார் பெயர் கற்பகாம்பாள். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இங்கு திருமணம் நடந்து, திருமால் தன் அன்புத் தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால் 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் இத்தலத்துக்கு வந்ததென்று
கூறுவர். 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர்.
வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.
ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும். அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண, கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை
வதைத்ததே மாபெரும் வீரச் செயல் என்றார். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க, ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள்? மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்டார். அகஸ்தியர், ராமா எல்லாம் அறிந்தவன் நீ. ஆனால் ஏதும் அறியாதவன் போல லக்ஷ்மணனின்
பெருமையை என் வாயால் கூறவேண்டும் என்று இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய், சரி நானே சொல்கிறேன் என்று தொடர்ந்தார். சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. நான்முகக் கடவுளான பிரம்மா இந்திரனை
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு ஊரில் விஷ்ணுபக்தர் ராகவன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் தினமும் தன் தோட்டத்தில் உள்ள துளசியை மாலையாகவும் பூக்களை வைத்து அர்ச்சனை செய்வதும் வழக்கம். சில பூக்களே தோட்டத்தில் இருந்தாலும் சரி அவற்றைப் பறித்து அர்ச்சனை செய்துவிடுவார் ராகவன். ஒரு நாள் புயலுடன
கூடிய பலத்த மழை ஏற்பட்டது. அர்ச்சனை செய்ய பூக்களை பறிக்க தோட்டத்துக்குப் போனால் புயலின் காரணமாக அனைத்து பூக்களும் நாசமடைந்திருந்தன. சரி துளசியை கொண்டாவது அர்ச்சிக்கலாம் என்று எண்ணி துளசி பறிக்க சென்றார் ராகவன். அதில் உள்ள இலைகளும் சில உதிர்ந்திருந்தன. அதில் உள்ள துளசி இலைகளை
வைத்து மாலை மட்டுமே கட்ட இயலும். அர்ச்சனை செய்ய என்ன செய்வதென புரியாமல் மிகவும் வேதனைப் பட்டார். ராகவன் வீடோ தனித்திருந்தால் உதவி கேட்க கூட சிறிது தூரம் செல்ல வேண்டி இருக்கும். மழையும் புயலும் நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் அதற்கும் வழியின்றி தவித்து கொண்டிருந்தவர் அருகில்