அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் மனிதர்களான நமக்கு, இமையம் அவர்களின் "எங் கதெ" புத்தகம், அவருடைய நாட்குறிப்பை படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது...
அடுத்தவர் வாழ்க்கை என்றும் மற்றவர்களுக்கு கதை தானே.
(1/n)
அதே வரிசையில் அவர் வாழ்வின் 10 வருடங்கள், இல்லை... இல்லை...அவர் மட்டுமல்ல, அவருடன் கமலா, கமலாவின் இரண்டு மகள்கள், மற்றும் இமையம் அவர்களின் மொத்த குடும்பம் அவரின் ஊர், முக்கியமாக கடலூர் என பலரையும் பலதையும் அவர்களின் 10 வருடங்களையும் நமக்கு காண்பிக்கும் இந்த புத்தகம்.
(2/n)
எதையும் நேரடியாக கற்பிக்கவில்லை, ஆனால் நாம் நம் வாழ்க்கை, நம்மை சுற்றி உள்ளவர்களை, உள்ளவைகளை, நம் மனதை இந்த உலகத்தைப் பற்றி எல்லாம் நம்மை சிந்திக்க தூண்டும் "எங் கதே"
கமலா ஒரு ஆழமான கிணறு, அதில் விழுந்த சிறு எறும்பு இமையம்.
(3/n)
எறும்பு தெரியாமல் விழவில்லை, விரும்பி விழுந்தது.... எழ நினைக்கவில்லை, எழ நினைக்கும் போது முடியாமல் தவிக்கிறது....
மனங்களின் போராட்டம் தான் உலகின் மிகப் பெரிய போர்க்களம்... அந்த போரில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை, சிலர் தோற்கலாம், இவர் தோற்றாரா இல்லையா!?
(4/n)
தோற்க யாருக்குத் தான் பிடிக்கும், ஆனால் இவர்!?
சில வேளை பைத்தியக்காரனின் உளறல் என தோன்றும் இந்த புத்தகம், ஆனால் அதிலும் சில அர்த்தங்கள் உள்ளது. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.
“நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன்.” - (கீதை 4:13)
(1/n)
“ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது.
(2/n)
ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது: ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது.”
(கீதை 3:35)
சங்கப்பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2381.
இதில் 1862 பாடல்கள் அகப்பாடல்களாகும்.
சங்கப்புலவர்களின் எண்ணிக்கை 473.
இதில் அகப்பாடல்களைப் பாடியோர் எண்ணிக்கை 378.
(1/n)
இதிலிருந்தே நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும் சங்க இலக்கியப் பாடல்களில் முதன்மையாகத் திகழ்வது அகத்திணையாகும்
உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஒன்றுகூடி தாம் அனுபவித்த இன்பம் இப்படிப்பட்டது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் அகத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சியே அகத்திணை
(2/n)
உதாரணமாக சில பாடல்களை பார்க்கலாம்,
"விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே –
மும்பையை களமாகக் கொண்ட பல சிறுகதைகள், சில வெளிநாடுகளிலும்... ஒவ்வொரு வீட்டின் ஜன்னல் வழியே விரியும் கதைகள். மனித உணர்வுகளையும் மாண்புகளையும் உடன் நிறுத்தி அவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.
(1/n)
ஒவ்வொரு கதையிலும் தொக்கி நிற்கும் உணர்வுகள் மனதின் பல கோணங்களை அடையாளம் காட்டுகிறது.
உடல் நலிந்த அப்பா, "தொண்டைப் புடைத்த காகம்" போல் அவளிடம் வந்தாரா!!!
நெருப்பில் எறிந்த கண்டவப் பிரஸ்தத்தின் மேல் எழுந்த இந்திரப்பிரஸ்தம் போல் "சாம்பல் மேலெழும் நகரம்" !!!
(2/n)
கற்றாவின் மனம் கசியும் தன் அம்மாவின் புத்தகம் தேடி சென்ற மகளின் "பயணம் 21"
வாழும் மனிதர் காலாவதியாகும் நேரம்? இங்கு அனைத்தும் சிதறிப்போகும் "வீழ்தல்" எது!
செம்மாா்பு குக்குறுவானின் குரல் ஒலி. மௌனத்தை வீழ்த்தும் ஒலி. "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை" நம்மில் பலர்.