#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சரித்திரக் காலம் முதல் திருப்பதி பெருமாளுக்கு பல வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்கள் எண்ணிக்கை பலவாகப் பெருகியது. அரசவையில் பணிபுரிந்த சேகர மல்லாண்ணன் எனும் அமைச்சர், பெருமாளின் நைவேத்தியத்துக்காகப் பல
தானங்களை வழங்கினாராம்.
அப்போதுதான் `ஸ்ரீவாரி நைவேத்திய சமயம்’ எனும் முறை ஏற்படுத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன. மேலும், பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என்ற
அழைக்கப்பட்டது. பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன. இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாட்கள் தாங்காது. மற்ற பிரசாதங்கள் கெட்டுப் போய்விடும் நிலையில் அவற்றை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போனது. இதனால் அதிக நாட்கள்
கெடாமலிருக்கும் வடைக்குத்தான் அப்போது மவுசு இருந்தது. இதை கவனத்தில் கொண்ட மதராஸ் அரசாங்கம் 1803-ம் ஆண்டிலிருந்து பிரசாதங்களை விற்பனை செய்யத் தொடங்கியது. ஸ்ரீவாரி ஆலயத்தில் பிரசாத விற்பனைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது லட்டு பிடிப்பதற்கு முன்னர் உதிரியாக இருக்கும பூந்தி,
இனிப்புப் பிரசாதமாக வழங்கப்பட்டது. அந்த பூந்திதான் லட்டாக உருப்பெற்றது. ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்படும் பிரசாதங்கள் வடை, பொங்கல், சர்க்கரைப்பொங்கல் இப்படி எத்தனையோ உண்டு. அவை அனைத்தையும் தாண்டி அன்றும், இன்றும், என்றும் முதல் இடத்தில் நிற்பதென்னவோ லட்டு மட்டும்தான்.
ஏழுமலையானுக்கு பிரசாதங்களைத் தயாரித்து பூஜைக்கு வழங்கியவர் கல்யாண ஐயங்கார் குடும்பத்தினர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் திருமலையில் லட்டு பிரசாதம் உருவான வரலாற்றை பார்ப்போம். லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை `திட்டம்’ என்று அழைப்பார்கள். லட்டை அன்றாடப் பிரசாதம
ஆக்கிய பெருமை அப்போது ஆலயப் பிரசாதங்களைத் தயாரித்து அளித்த, எல்லோராலும் அன்புடன் கல்யாணம் ஐயங்கார் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமான் பூதேரி பத்தங்கி ஸ்ரீனிவாசராகவனைச் சாரும். இவர், திருமணம் என்று யார் பத்திரிகை கொடுத்தாலும், அவர்களுக்கு பட்டுப்புடவை, மாங்கல்யம் போன்ற சீர்வரிசை அளித்து
ஆசீர்வாதம் செய்துவிட்டு வருவார். இவர் காஞ்சிபுரம் அருகேயுள்ள பூதேரி என்ற கிராமத்திலிருந்து தமது உறவினர்களுடன் திருப்பதியில் தங்கி திருமலை ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்ய தம்மையும் தம் குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டவர். நாள்தோறும் திருமலைக்கு நடந்து படியேறிச் சென்று
பெருமாளுக்கு அன்றாடப் பிரசாதங்களைத் தயாரித்து அளிக்கும் திருப்பணியை செய்துவந்தார். ஒருநாள் பெரும் செல்வம் படைத்த வியாபாரி ஒருவர், கோவிந்தன் தனது கோரிக்கையை நிறைவேற்றினால், மலை போன்ற பிரமாண்டமான லட்டைத் தயாரித்து பெருமாளின் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு
அளிப்பதாக வேண்டிக் கொண்டாராம்.
பெருமாளும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார். அப்போது உருவானதுதான் லட்டுப் பிரசாதம்.
பக்தரின் லட்டு வேண்டுகோளைக் கேட்ட கல்யாண ஐயங்கார், அப்போது இருந்த திருமலை தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, மிகப் பிரமாண்ட லட்டைத் தயாரித்து, அதை உடைத்து
வழங்குவதைவிட சிறிய லட்டாக அன்றைய தினம் கல்யாண உற்சவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அளிக்கலாமே என்று யோசனை தெரிவித்தார். இதை ஒப்புக்கொண்ட தேவஸ்தானம், அதன்படியே அன்றைய தினம் கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதத்தை அளித்தது. அன்றிலிருந்து சில காலம
கல்யாண உற்சவத்தில் மட்டும் லட்டு அளிக்கும் முறை உருவானது. பின்னர் அதுவே இன்றளவில் அனைத்து சேவைகளுடன் லட்டு அளிக்கும் முறையாக மாறியது. இந்தப் பிரசாதங்கள் ஆலயத்தின் உள்புறத்தில் கொலுவிருக்கும் பெருமாளின் அன்னையான வகுளாதேவியின் நேரடிப் பார்வையில் மடப்பள்ளி அறையில் தயாரிக்கப்
படுகின்றது. அங்கு தன் மகனுக்கு (பெருமாளுக்கு) தயாரிக்கப்படும் பிரசாதங்களை தாய் வகுளாதேவி மேற்பார்வையிட்டு அனுப்புவதாக ஐதீகம். உண்மைதான்! அன்னையை விட மகன் மேல் யாருக்கு அக்கறை அதிகம் இருக்கும்!
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு பிள்ளையார் தான். ஆனால் அவருக்குப் பல பெயர்களும் ரூபங்களும் உள்ளன.
வக்ரதுண்டர்: காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரை
தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.
சிந்தாமணி கணபதி: அபிஜித் என்ற அசுரனுக்கும் குணவதிக்கும் பிறந்த கணன் என்பவன் கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார.
அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.
கஜானனர்: பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன.
விக்ன விநாயகர்: வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி
ஆதி சங்கரர் மூணு வகை கிரந்தங்கள் எழுதியுள்ளார். ஒன்று #பாஷ்ய_கிரந்தம். உபநிஷத், பிரம்ம சூத்ரம், பகவத் கீதா என்கிற தொகுப்பு பிரஸ்தான த்ரையி எனப்படும். அதற்கு பாஷ்யம் (விளக்கவுரை-commentary) எழுதியுள்ளார். இரண்டாவது, #பிரகரண_கிரந்தம். இது அவரே எழுதியவை, ஆனால் அதன் கரு (crux)
வேதாந்தத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு உதாரணம் அவர் இயற்றிய #விவேகசூடாமணி. மூன்றாவது வகை #ஸ்தோத்திர_கிரந்தம். அவர் இயற்றிய சௌந்தர்யா லஹரி, சிவானந்த லஹரி இந்த வகையில் வரும். இவை வேதாந்தம் கிடையாது ஆனால் தெய்வங்களை போற்றி பாடப்பட்டிருக்கும் ஸ்தோத்திரங்கள். அம்பாள் மேல்
சௌந்தர்ய லஹரி சிவன் மேல் சிவானந்த லஹரி, பிள்ளையார் மேல் கணேச பஞ்சரத்னம், சுப்பிரமணியர் மேல் சுப்பிரமணிய புஜங்கம், மகா விஷ்ணுவின் மேல் கோவிந்தாஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம், லக்ஷ்மியின் மேல் கனகதாரா ஸ்தோத்திரம் என்று பல. இவை பக்தி கிரந்தங்கள். ஆச்சார்யாள் எப்படி பக்தி பண்ணனும் என்று
பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட
வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே
விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான். சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக் கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன்
#மகாபெரியவா பந்தநல்லூர் ஸ்ரீ பந்தாடு நாயகி சமேத பசுபதிநாதர் கோவிலில் உள்ள துர்க்கையின் கண்களில் இருந்து கண்ணீர் ஓரமாக கசிந்து கொண்டே இருந்தது. பக்தர்களும் இதை கவனிக்கத் தொடங்கினர். அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யும் ஶிவஸ்ரீ ஜகதீஶ ஶிவாச்சார்ய குருக்கள் அவளுடைய கண்களை பதமாக
துடைத்து விட்டாலும் அது நின்றபாடில்லை! கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிவு தெரிந்தது. அவர் மனசும் மிகவும் வேதனைப் பட்டது. அம்மா! உனக்கே ஏன் இந்த வேதனை என்று வருந்தினார். ஒரு கன்னியாப் பெண்ணை துர்க்கையாக பாவித்து, ஆராதனை செய்து, அவளுக்கு சௌபாக்ய திரவ்யங்களை சமர்ப்பித்தார். பிறகு
நவாக்ஷரி மந்த்ர ஜபம் செய்தார். பிறகு துர்க்கையாக ஆராதனை செய்யப்பட்ட பெண்ணின் முன்னால் அமர்ந்து கொண்டு, "அம்மா! என்ன குறை? ஏன் இந்தக் கண்ணீர்?" தாயிடம் கெஞ்சிக் கேட்டார். அந்தப் பெண்ணும் ஏதோ ஒருவித 'trance'ல் இருந்தாள். இவர் இப்படிக் கேட்டதும், அந்தப் பெண் "பச்சை நிறத்தில் பாவாடை
சாபங்கள் மொத்தம் 13 வகையானவை. 1) பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுவதாலும் சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
2) பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும்,
பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
3) பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்
கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
4) சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால் கால-
15/3/2022 பங்குனி செவ்வாய்.
பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடக்கம் செவ்வாய்க் கிழமையில் அமைந்திருக்கிறது. இந்நாள் குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அளிக்கும் நாளாக அமைகிறது. பங்குனி செவ்வாயில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு
நீண்ட நாள் வேண்டுதல் கூட விரைவாக நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. பல வருடங்களாக குழந்தை பேறுக்காக வேண்டி காத்திருப்பவர்கள், எப்படியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்று தவம் இருப்பவர்கள், விரும்பிய வேலை கிடைக்க, விரும்பிய தொழிலை செய்ய இப்படி நீங்கள் நீண்ட நாட்களாக
நினைக்கும் விஷயங்கள் கூட இந்நாளில் பிணை செய்தால் நிறைவேறும். அதிகாலையில் எழுந்து நீராடி விபூதி பூசிக் கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் இடுவது போன்ற அலங்காரங்களை செய்து முடித்த பின் முருகன் படம் மற்றும் முருகனுடைய வேல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனுடைய விக்ரஹம்