நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு பிள்ளையார் தான். ஆனால் அவருக்குப் பல பெயர்களும் ரூபங்களும் உள்ளன.
வக்ரதுண்டர்: காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டு வந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரை
தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.
சிந்தாமணி கணபதி: அபிஜித் என்ற அசுரனுக்கும் குணவதிக்கும் பிறந்த கணன் என்பவன் கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார.
அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.
கஜானனர்: பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன.
விக்ன விநாயகர்: வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி
விக்னங்களை அகற்றியவர் விக்ன விநாயகர். இவர், வரேண்யன் என்பவனுக்கு உபதேசித்ததே #கணபதி_கீதை ஆயிற்று.
மயூரேச கணபதி: சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடித்து வழிபட்ட பார்வதிதேவியிடம் அவதரித்து, மயில் வடிவினனான ஸிந்து என்ற அசுரனை அழித்து, அவனையே வாகனமாகக் கொண்டவர் இந்த விநாயகர்.
பாலசந்திரர்: தேவர்களை அடக்கியாண்ட அநலன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கி னார். அதனால் உண்டான வெம்மை நீங்க, மிக குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்து பாலசந்திரர் என்று பெயர் பெற்றார்.
தூமகேது: புகை வடிவான அசுரன் ஒருவனை அழிப்பதற்காக அவதரித்தவர் தூமகேது விநாயகர். மாதவன், ஸுமுதா
என்ற அரச தம்பதியருக்குப் பிள்ளையாகத் தோன்றி, தூம கேதுவை வதைத்தார் இந்த பிள்ளையார்.
கணேசர்: பலி என்னும் அரக்கனைக் கொல்ல கணங்களுக்குத் தலைவனாக வந்து வெற்றி கண்டதால் கணேசர் என்ற திருப்பெயர் பெற்றார் பிள்ளையார்.
கணபதி: பார்வதி பரமேஸ்வரர் யானையின் சித்திரத்தைப் பார்த்துக் களிக்கும்
போது அவதரித்தவர் கணபதி.
மகோற்கடர்: காச்யப முனிவரின் பிரார்த்தனையால், அதிதியிடம் பிறந்தவர் மகோற்கடர். தேவாத்த நாராத்ரர்கள் இவரால் சம்ஹாரம் செய்யப்பட்டனர்.
துண்டி கணபதி: துராஸதன் என்ற அரக்கனை அழிக்க, உமையவளின் திருவருளால் அவதரித்தவர் துண்டி கணபதி.
வல்லப கணபதி: மரீசி முனிவரின் மகள்
வல்லபையை மணந்து வல்லப கணபதி என்று பெயர் பெற்றார்.
இவை தவிர
1.பால கணபதி :
குழந்தை போன்ற உருவத்தில், செங்கதிர் நிறத்தில் காட்சி தரக்கூடியவர். இவர் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பலம், கரும்பு ஆகியவற்ற தன் நான்கு திருக்கரங்களில் தாங்கியவர்.
2.தருண கணபதி
சிவந்த திருமேனியை கொண்ட தருண
கணபதி, அங்குசம், பாசம், ஒடிந்த தந்தம், கரும்புத் துண்டு, நெற்கதிர்கள், மோதகம், விளாம்பழம், நாவற்பழம் ஆகியவற்றை தன் 8 கரங்களில் ஏந்தியவர்.
3.பக்தி கணபதி
வெள்ளை நிறத்தில் காணப்படும் பக்தி கணபதி, தனது நான்கு திருக்கரங்களில் பாயாசக் கிண்ணம், தேங்காய், மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை
வைத்திருப்பார்.
4.வீர கணபதி:
சிவந்த திருமேனியுடன் காணப்படும் வீர கணபதி, தன்னுடைய 16 திருக்கரங்களில் வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறு பொருட்களை திருக்கரங்களிலும் ஏந்தியிருப்பார்.
5.சக்தி கணபதி:
அந்தி வானம் போல சிவந்த மேனியுடன் இருக்கும் சக்தி கணபதி, தன் மடியில் பச்சை நிறத்திலான தேவியை, ஒரு கையால் இருப்பில் தேவியை அனைத்திருப்பது போலவும், மற்ற கைகளில் அபய ஹஸ்தம் , பாசம், பூமாலை ஆகியவற்றை தாங்கியவர்.
6. துவிஜ கணபதி:
வெண்மையான திருமேனியை உடைய துவிஜ கணபதி,
நான்கு முகங்கள், புத்தகம், அட்சமாலை, கமண்டலம், தண்டம் ஆகியவற்றை தன் கரங்களில் தாங்கியவர்.
7. சித்தி கணபதி:
பொன் மற்றும் பசுமை நிறம் கலந்த சித்தி விநாயகர், தன் 4 திருக்கரங்களில் பரசு, பூங்கொத்து, எள்ளுருண்டை, மாம்பழம் ஆகியவற்றையும், தன் துதிக்கையில் மோதகத்தை தாங்கி இருப்பார்.
8. உச்சிஷ்ட கணபதி;
நீல நிறத்தில் காட்சி அளிக்கும் உச்சிஷ்ட கணபதி, தன் 6 திருக்கரங்களில் இரண்டில் நீலோத்பவ மலர்களும், மாதுளம் பழம், நெற்கதி, அட்சமாலை, வீணை ஆகியவற்றை தாங்கி இருப்பார். அதோடு தான் காம மோகிதராக, பெண்ணின் மேனியில் தன் துதிக்கையை வைத்து காணப்படுவார்.
9.விக்ன கணபதி:
தங்க நிறத்தை உடைய விக்ன கணபதி, தனது 10திருக்கரங்களில் சக்கரம், சங்கு, கோடாரி, ஒடிந்த தந்தம், பாணம், கரும்பு வில், பூங்கொத்து, புஷ்ப பாணம், பாசம், மாலை ஆகியவற்றுடன் காணப்படுகின்றார்.
10.ஷிப்ர கணபதி
செந்நிறத்தில் இருக்கும் ஷிப்ர கணபதி, தன் கைகளில் ஒடிந்த தந்தம், கற்பகக் கொடி, பாசம்
அங்குசம் ஆகியவற்றை தன் 4 திருக்கரங்களில் ஏந்தி ரத்ன கும்பத்தை துதிக்கையில் கொண்டிருப்பார்.
11. ஹேரம்ப கணபதி
ஐந்து முகங்களை கொண்ட ஹேரம்ப கணபதி, தனது 10 கரங்களில் இரண்டு அபய மற்றும் வரத முத்திரையோடும், இதர கரங்களில் பாசம், பரசு, சம்மட்டி, தந்தம், மாலை, அட்சமாலை மோதகம், பழம்
ஆகியவற்றை ஏந்தியுள்ளார்.
12. லட்சுமி கணபதி
வெள்ளை நிறத்தில் இருக்கும் லட்சுமி கணபதி, நீல நிற தாமரைப் பூவை தனது கையில் ஏந்தி, இரு தேவிகளுடன் காணப்படுவார். தனது 8 திருக்கரங்களில் கலசம், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, கட்சம், வரதம், கிளி, மாதுளம் பழம் ஆகியவற்றை கொண்டிருப்பார்.
13. மகா கணபதி
செந்நிற திருமேனியுடன் காணப்படும் மகா கணபதி, 10 கைகளையும், மூன்று கண்களையும், ட்தன் முடியில் பிறைச்சந்திரனும் உடையவர். தாமரை மலரை ஏந்திய தேவி, இடது தொடையில் தேவியை அமரவைத்து, தனது கையால் அனைத்து இருப்பார். மற்ற கரங்களில் கதை, கரும்பு, வில், சக்கர, பாச, தந்தம், ரத்ன
கலசம், நெற்கதிர், நீலோத்பலம், மாதுளை ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.
14. விஜய கணபதி
பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்திருக்கும் விஜய கணபதி, பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தன் 4 கரங்களில் ஏந்தியிருப்பார்.
15. நிருத்த கணபதி
பொன் நிற மேனியுடைய நிருத்த கணபதி, ஆறு திருக்
கரங்களையும், அதில் மோதிரங்கள் அணிந்த கரங்களில், அங்குசம்,ம் பாசம். அபூபம், கோடாரி, தந்தம் ஆகியவற்றைத் ஏந்தி, கற்பக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பார். இந்த கணபதியை கூத்தாடும் பிள்ளையார் எனவும் அழைப்பதுண்டு.
16. ஊர்த்துவ கணபதி
தங்கம் போல் ஜொலிக்கும் ஊர்த்துவ கணபதி, தாமரை மலர்களை
தன் கரங்களில் தாங்கி, பச்சை நிற மேனி தேவையை அணைத்தவாறு, தந்தம், பாணம், தாமரை, கரும்பு வில், நீல புஷ்பம் ஆகியவற்றை ஏந்தி இருப்பார்.
17. ஏகாட்சர கணபதி
செந்நிறமாக இருக்கும் ஏகாட்ச கணபதி, செந்நிற உடை, செம்மலர் மாலையை அணிந்து, பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார்
மூன்று கண்களும், முடியில் பிறைச்சந்திரனை சூடியும் இருப்பார்.
18. வர கணபதி
சிவந்த திருமேனியை உடைய வர கணபதி, தனது நான்கு கரங்களில் பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியை தாங்கி இருப்பார். பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு.
19. திரயாக்ஷர கணபதி
பொன்னிற மேனியில்
இருக்கும் திரயாக்‌ஷர கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார்.
20. க்ஷிப்ரபிரசாத கணபதி
பெரிய வயிற்றினை கொண்ட க்ஷிப்ரபிரசாத கணபதி, ஆபரணங்களை சூடி, ஆறு திருக்கரங்களில், பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை
ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர்.
21.ஹரித்ரா கணபதி
மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஹரித்ரா கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை, 4 திருக்கரங்களில் ஏந்தி இருப்பார்.
22. ஏகதந்தி கணபதி
நீல நிற மேனியான ஏகாந்த கணபத
பெரிய வயிறு கொண்டிருப்பார். கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு ஆகியவற்றை, நான்கு திருக்கரங்களில் ஏந்தி காணப்படுகிறார்.
23. சிருஷ்டி கணபதி
சிவந்த மேனியுடன் இருக்கும் சிருஷ்டி கண்பதி தன் 4 கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் ஏந்தியவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து
காட்சி கொடுக்கிறார்.
24. உத்தண்ட கணபதி
தனது பத்து திருக்கரங்களில்பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை வைத்திருப்பார். இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவர்.
25. ரணமோசன கணபதி
வெண்பளிங்கு மேனியுடன்
இருக்கும் ரணமோசன கணபதி, செந்நிறப் பட்டாடை உடுத்தி இருப்பார். தன் கரங்களில், பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கி காணப்படுகிறார்.
26. துண்டி கணபதி
நான்கு திருக்கரங்களில், அட்சமாலை, கோடரி, ரத்ன கலசம், ஒடிந்த தந்தம் இவைகளோடு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில்
மிகவும் பிரசித்தி பெற்றவர்.
27. துவிமுக கணபதி
இரண்டு முகங்களை கொண்ட துவிமுக கணபதி, பசுமையான நீல நிற கொண்டவர். செம்பட்டாடை உடுத்தி, தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை ஆகியவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியவர்.
28. மும்முக கணபதி
மூன்று முகத்துடன் பொற்றாமரை ஆசனத்தில் காணப்
படுபவர். சிவந்த மேனியை உடைய இவர், பாசம், அங்குசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கி காட்சி தருகிறார்.
29. சிங்க கணபதி
சிங்க வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் சிங்க கணபதி வெண்மையான நிறத்தில் இருப்பதோடு தனது இரண்டு திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும், ஆறு
திருக்கரங்களில், கற்பகக் கொடி, வீணை, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை தாங்கியவர்.
30. யோக கணபதி
செஞ்சூரியன் நிறத்தில், நீல நிற ஆடையை தரித்த இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் ஏந்தி, யோக நிலையில் தோற்றமளிக்கிறார்.
31. துர்க்கா கணபதி
பசும் பொன் நிறத்தில்
இருக்கும் துர்கா கணபதி,தன் 8 திருக்கரங்களில் அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காணப்படுபவர்.
32. சங்கட ஹர கணபதி
இளஞ்சூரியன் நிறத்த்தில், தன் இடது தொடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியை வைத்திருப்பார். நீல நிற ஆடை
அணிந்து, செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி அருள் பாலிப்பவர்.
எல்லா விக்னங்களையும் நீக்கி நம் வாழ்வை வளம் பெற வைக்கும் விநாயகரை நமக்கு இஷ்ட ரூபத்தில், இஷ்ட பெயரில் போற்றி வழிபடுவோம்.
விநாயகர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஏக தந்த்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமகி தன்னோ தந்த் ப்ரஜோதயாத் பொருள்: கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 17
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சரித்திரக் காலம் முதல் திருப்பதி பெருமாளுக்கு பல வகையான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் தேவராயர் காலத்தில் நைவேத்தியங்கள் எண்ணிக்கை பலவாகப் பெருகியது. அரசவையில் பணிபுரிந்த சேகர மல்லாண்ணன் எனும் அமைச்சர், பெருமாளின் நைவேத்தியத்துக்காகப் பல
தானங்களை வழங்கினாராம்.
அப்போதுதான் `ஸ்ரீவாரி நைவேத்திய சமயம்’ எனும் முறை ஏற்படுத்தப்பட்டது.
அந்தக் காலத்தில் திருமலையில் உணவகங்கள் அவ்வளவாக இல்லை. பிரசாதங்கள்தான் பக்தர்களின் பசியைப் போக்கும் அருமருந்தாக இருந்தன. மேலும், பக்தர்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம் ‘திருப்பொங்கல்’ என்ற
அழைக்கப்பட்டது. பின்னரே அதிரசம், அப்பம், வடை, சுய்யம், மனோகரப்பொடி பிரசாதங்கள் தயார் செய்யப்பட்டன. இவற்றில் வடை தவிர வேறு எதுவும் வெகு நாட்கள் தாங்காது. மற்ற பிரசாதங்கள் கெட்டுப் போய்விடும் நிலையில் அவற்றை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல இயலாமல் போனது. இதனால் அதிக நாட்கள்
Read 13 tweets
Mar 16
ஆதி சங்கரர் மூணு வகை கிரந்தங்கள் எழுதியுள்ளார். ஒன்று #பாஷ்ய_கிரந்தம். உபநிஷத், பிரம்ம சூத்ரம், பகவத் கீதா என்கிற தொகுப்பு பிரஸ்தான த்ரையி எனப்படும். அதற்கு பாஷ்யம் (விளக்கவுரை-commentary) எழுதியுள்ளார். இரண்டாவது, #பிரகரண_கிரந்தம். இது அவரே எழுதியவை, ஆனால் அதன் கரு (crux)
வேதாந்தத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இதற்கு உதாரணம் அவர் இயற்றிய #விவேகசூடாமணி. மூன்றாவது வகை #ஸ்தோத்திர_கிரந்தம். அவர் இயற்றிய சௌந்தர்யா லஹரி, சிவானந்த லஹரி இந்த வகையில் வரும். இவை வேதாந்தம் கிடையாது ஆனால் தெய்வங்களை போற்றி பாடப்பட்டிருக்கும் ஸ்தோத்திரங்கள். அம்பாள் மேல்
சௌந்தர்ய லஹரி சிவன் மேல் சிவானந்த லஹரி, பிள்ளையார் மேல் கணேச பஞ்சரத்னம், சுப்பிரமணியர் மேல் சுப்பிரமணிய புஜங்கம், மகா விஷ்ணுவின் மேல் கோவிந்தாஷ்டகம், கிருஷ்ணாஷ்டகம், லக்ஷ்மியின் மேல் கனகதாரா ஸ்தோத்திரம் என்று பல. இவை பக்தி கிரந்தங்கள். ஆச்சார்யாள் எப்படி பக்தி பண்ணனும் என்று
Read 4 tweets
Mar 16
பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட
வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே
விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான். சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக் கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன்
Read 5 tweets
Mar 16
#மகாபெரியவா பந்தநல்லூர் ஸ்ரீ பந்தாடு நாயகி சமேத பசுபதிநாதர் கோவிலில் உள்ள துர்க்கையின் கண்களில் இருந்து கண்ணீர் ஓரமாக கசிந்து கொண்டே இருந்தது. பக்தர்களும் இதை கவனிக்கத் தொடங்கினர். அம்பாளுக்கு அபிஷேக, அலங்காரங்கள் செய்யும் ஶிவஸ்ரீ ஜகதீஶ ஶிவாச்சார்ய குருக்கள் அவளுடைய கண்களை பதமாக
துடைத்து விட்டாலும் அது நின்றபாடில்லை! கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிவு தெரிந்தது. அவர் மனசும் மிகவும் வேதனைப் பட்டது. அம்மா! உனக்கே ஏன் இந்த வேதனை என்று வருந்தினார். ஒரு கன்னியாப் பெண்ணை துர்க்கையாக பாவித்து, ஆராதனை செய்து, அவளுக்கு சௌபாக்ய திரவ்யங்களை சமர்ப்பித்தார். பிறகு
நவாக்ஷரி மந்த்ர ஜபம் செய்தார். பிறகு துர்க்கையாக ஆராதனை செய்யப்பட்ட பெண்ணின் முன்னால் அமர்ந்து கொண்டு, "அம்மா! என்ன குறை? ஏன் இந்தக் கண்ணீர்?" தாயிடம் கெஞ்சிக் கேட்டார். அந்தப் பெண்ணும் ஏதோ ஒருவித 'trance'ல் இருந்தாள். இவர் இப்படிக் கேட்டதும், அந்தப் பெண் "பச்சை நிறத்தில் பாவாடை
Read 15 tweets
Mar 16
சாபங்கள் மொத்த‍ம் 13 வகையானவை.
1) பெண் சாபம்
பெண்களை ஏமாற்றுவதாலும் சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும்,
பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்
கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால் கால-
Read 12 tweets
Mar 15
15/3/2022 பங்குனி செவ்வாய்.
பிலவ வருடத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் தொடக்கம் செவ்வாய்க் கிழமையில் அமைந்திருக்கிறது. இந்நாள் குறிப்பாக முருகனை வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் அளிக்கும் நாளாக அமைகிறது. பங்குனி செவ்வாயில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருபவர்களுக்கு
நீண்ட நாள் வேண்டுதல் கூட விரைவாக நிறைவேறி விடும் என்பது நம்பிக்கை. பல வருடங்களாக குழந்தை பேறுக்காக வேண்டி காத்திருப்பவர்கள், எப்படியாவது சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்று தவம் இருப்பவர்கள், விரும்பிய வேலை கிடைக்க, விரும்பிய தொழிலை செய்ய இப்படி நீங்கள் நீண்ட நாட்களாக
நினைக்கும் விஷயங்கள் கூட இந்நாளில் பிணை செய்தால் நிறைவேறும். அதிகாலையில் எழுந்து நீராடி விபூதி பூசிக் கொண்டு, பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் இடுவது போன்ற அலங்காரங்களை செய்து முடித்த பின் முருகன் படம் மற்றும் முருகனுடைய வேல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகனுடைய விக்ரஹம்
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(