#KashmirFiles
இந்த படம் நம் சமுதாயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்த மாபெரும் அநீதியை, அதைக் கண்டு வாளாவிருந்த நாம் எப்படிப்பட்ட முட்டாள்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய இப்படத்தை இயக்கி வெளியுட்டுள்ள விவேக் அக்னிஹோத்ரிக்கு நம் நாடே நன்றிகடன்
பட்டுள்ளது. இதுவரை காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டது குறித்து பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லை, சமுதாயத்தில் எந்த கொந்தளிப்பும் ஏற்படவில்லை என்பது அவர்களுக்கு எத்தனை துயரத்தைக் கொடுத்திருக்கும்! சொந்த நாட்டிலேயே 3௦ ஆண்டுகளாக அகதிகளாக வாழ்ந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்கள்
இல்லாத அக்காலத்தில் எப்பேர்பட்ட அநியாயத்தையும் மூடி மறைத்திருக்க முடியும் என்றாலும் இந்த சம்பவங்கள் குறித்து நாம் இதுவரை தெரிந்து கொள்ளாததும் எந்த நடவடிக்கையும் எடுக்காததும் மன்னிக்க முடியாத குற்றம். இன்றும் படம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் போதே இப்படத்தில் கூறப்
பட்டுள்ளவைக்கு எதிராக விமர்சனங்கள் வருகின்றன. இடதுசாரியின் ecosystem எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது! They may have the Government, but we have the system என்று படத்தில் வரும் JNU பேராசிரியை கூறுகிறார். இது உண்மை என்பதை இந்த அரசு கொண்டு வரும் எந்த நல்ல நடவடிக்கையையும் தோற்கவைக்க
அரசு இயந்திரங்களையே அவர்கள் பயன்படுத்தி போராடி வருவது மூலம் அறியலாம். #காஷ்மீர்ஃபைல்ஸ் நாம் கேள்விப்பட்ட ஆனால் இதற்கு பின் விவாதிக்கபடாத, சட்டரீதியாக பின்தொடரப்படாத, அரசியல் சமூக ரீதியாக நியாயம் கொடுக்கப்படாத, நம் சமுதாயத்தின் நினைவில் இருந்து அழிக்கப்பட்ட ஒரு கொடும் நிகழ்வை
பதிவு செய்துள்ளது. டில்லியில் இன்றும் படேல் நகர் பகுதியில் ஏராளமான காஷ்மீர் ஹிந்துக்கள் தங்கள் வீடு நிலங்களை விட்டு ஓடி வந்து 3௦ ஆண்டுகளாக என்றாவது ஒரு நாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு காட்சியில் இனப்படுகொலை பற்றி விவாதிக்கையில்
முன்னாள் பத்திரிக்கையாளருக்கும் டாக்டருக்கும் கைகலப்பு ஏற்பட நடுவில் வந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பத்திரிக்கையாளரை ஒரு தட்டு தட்ட அவர் உருண்டு போய் விழுகிறார். இது நகைச்சுவைக்கான காட்சி இல்லை. ஆனாலும் தியேட்டரே மொத்தமாக சிரித்தது. அது நகைச்சுவையை ரசித்ததன் அடையாளம் அல்ல. மாறாக
1௦௦௦ ஆண்டுகால இனப்படுகொலைகளை கண்டும் அனுபவித்தும் ஏற்பட்டிருக்கும் ஆதங்கம் மற்றும் அச்ச உணர்வுக்கான ஆறுதல் மற்றும் வடிகால்தான். அசந்தர்ப்பமாக சிரித்து தன் இயலாமையை மூடி மறைக்க முயலும் ஹிந்து சமுதாயத்தின் மேல் பரிதாபம் தான் வந்தது. இந்த படம் இப்போ தேவையா? இவ்வளவு நாள் கழித்து
எதுக்கு இதை கிளறுகிறார்கள் என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். நம் சமுதாயம் இதுவரை மிகவும் அமைதியும் சமாதானமும் தவழும் ஒரு ஆசிரமமாக தான் இருந்து வருகிறதா? காஷ்மீரில் நடந்தது அதற்கு முன்னும் அதற்கு பின்னும் நாட்டின் பல பகுதிகளில் நடந்துள்ளது. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுகொள்ளாத
எந்த சமுதாயமும் அதற்கான தண்டனையை பெறும். இந்த படத்தில் ஒய்வு பெற்ற IAS அதிகாரி பிரம்மா தத் ஆக நடித்த மிதுன் ஒரு காட்சியில் உண்மையை ஏற்க மறுக்கும் பேரனிடம் “கோழைகளுக்கு, உண்மைக்கும் பொய்க்கும் வித்யாசம் கண்டுபிடிக்க தெரியாது. உன் பிரச்சினையும் அதுதான்” என்பார். நம் பிரச்சினையும்
அதே! உண்மையை நம்ப வேண்டும் என்றால் அதனை ஜீரணிக்கும் திறன் வேண்டும். முக்கியமான கேள்விகள் தொக்கி நிற்கும். இதில் நம் பங்கு என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். நாளை இதுபோல உனக்கு நடந்தால் உன்னுடைய எதிர்வினை என்னவாக இருக்கும் என்று இன்னொரு கேள்வி வரும். இதெல்லாம் ஆண்மை
உள்ளவர்களுக்கு தோன்றும் கேள்விகள். கோழையாக இருந்தால் இந்த கேள்விகளே எழாது. இதில் காஷ்மீர் பண்டிட்கள் என்று குறிப்பிடாமல் ஹிந்துக்கள் என்று குறிப்பிட காரணம் இருக்கிறது. அவர்கள் பிராமணர்கள் என்பதால் தாக்கப் படவில்லை, மாறாக அவர்கள் ஹிந்துக்கள் என்பதால் தாக்கபட்டார்கள். பண்டிட்கள்
மட்டுமில்லாமல் சீக்கியர்கள், ஜாட்கள்கூட தாக்கப்பட்டார்கள். இது ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தின் பிரச்சினை. பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பான்மையினர் பண்டிட்கள் அவ்வளவுதான். அவர்கள் இந்த 7ஆண்டுகளில் திரும்ப குடியேறி இருக்கலாமே என்று சில அறிவுஜீவிகள் கேட்கிறார்கள். அங்குள்ள demography
முற்றிலும மாறிவிட்டதே. பாதுகாப்பில்லாத இடத்தில அவர்கள் திரும்ப குடியேறுவது தற்கொலைக்கு சமம். நாளை எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று காஷ்மீர் ஹிந்துக்களுக்கு உத்தரவாதம் உள்ளதா திரும்ப அங்கு குடி போவதற்கு?அங்கு செய்ய வேண்டிய மாற்றங்கள் நிறைய உள்ளன. ஹிந்துக்களின் குடியேற்றம் அதன்
பின் நடக்கலாம். முதலில் அங்கு நடந்த பிரச்சினை எவ்வளவு பெரியது என்பதை இந்தியர்களாகிய நாம் உணர வேண்டும். இந்த மாதிரி பிரச்சினை தமிழகத்திலும் நாளை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? சரியாக சிந்தித்து வாக்களிப்பதில் உள்ளது நம் பாதுகாப்பு.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾 #KashmirFiles
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மிகவும் போற்ற தக்க பஞ்ச கன்னியர்களில் ஒருவர் #திரௌபதி. திரௌபதி ஐந்து கணவர்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் அர்ஜுனனை மணக்கவில்லை. விதிவசத்தால் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள். அதற்குக் காரணம் அவள் முற்பிறவியில் நல்ல கணவன் அமைய தவம் செய்தபோது, இறைவன் அவள் முன் தோன்ற, இறைவனைப்
பார்த்த மகிழ்ச்சியில், ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் என்று கேட்க, அவரும் அவ்வரத்தை அளித்துவிட்டார். வரத்தை பெற்ற பிறகு அதிர்ச்சியுற்ற அவளை சமாதானப் படுத்தி இவ்வரத்தினை அடுத்த பிறவியில் அனுபவிக்க அருளினார். அதனால் அவளின் அடுத்த பிறவியில் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள்.
ஒவ்வொருவருடனும் அவள் ஒரு வருடம் வாழ்க்கை நடத்தி பின் அக்னி பிரவேசம் மூலம் நெருப்பில் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு அடுத்த கணவருடன் சேர்ந்து வாழ்வாள். இல்வாழ்க்கை நன்றாக அமையவேண்டும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி எனப்படும்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ராவணனின் மனைவி மண்டோதரி சீதையை விட்டு விடும்படி ராவணனுக்கு
எவ்வளவோ புத்திமதி சொன்னாள். அவன் கேட்கவில்லை. ஒருவேளை ராமன் உருவில் ராவணன் சீதையைக் களவாடிவானோ என்கிற சந்தேகம் வந்து அவள் ராவணனை இதைப் பற்றி கேட்கிறாள். அதற்கு அவன் ராமனை நினைத்த மாத்திரத்தில் என்
மனத்தில் சொல்லொணாத ஆனந்தம் உண்டாகின்றது. சொர்கமும் கூட
வெறுப்பாகிவிடும் போலத் தோன்றுகிறது.
அப்படியிருக்க அவனுடைய திவ்விய ரூபத்தை எடுத்துக் கொண்டால் எனக்குத்
தீய எண்ணங்களில் மனம் எப்படி செல்லும் என்று பதில் சொன்னான்.
ராவணனைத் தடுத்து
நிறுத்தும் மண்டோதரி கூறிய பாடல்
ஏர்தரு
மேழுல கேத்த எவ்வுரு
வுந்தன் நுருவாய்
ஆர்கலி சூழ்தென்னி லங்கை
யழகமர் வண்டோதரிக்குப்
பேரரு ளின்ப மளித்த பெருந்
துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்
பாண்டி நாடனைக் கூவுவாய்
–குயில்பத்து, திருவாசகம்
பொருள்: கடல் சூழ்ந்த அழகிய
இலங்கையில் வண்டோதரிக்கு
எழுச்சியை
#மகாபெரியவா
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர். ஒரு நாள் இவர் படுத்துக் கொண்டிருக்கும் போது கிழவர் ஒருவர் வந்தார். பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை. அடிக்கடி ஜுரம் வருது, ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு என்று பெரிய பட்டியல்
போட்டு, பெரியவாதான் காப்பத்தணும் என்று கும்பிட்டார்.
பெரியவா முனகிக் கொண்டே "ஒக்காரு! உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா" என்று ஆரம்பித்தார்.
"ஒரு கிராமத்திலே, கோயிலில் குறி சொல்லும் பூசாரி ஒருவர் இருந்தார். அவர் சொன்னதெல்லாம் பலித்துவிடும். அதே ஊரில் இருந்த ஒரு போலீஸ்காரர், பூசாரியின்
நெருங்கிய நண்பன். ஒரு நாள் அந்த பூசாரி கோயிலைத் திறந்தார். பல சாமான்கள் திருட்டுப் போய் விட்டதைப் பார்த்தார். உடனே தன் போலீஸ் நண்பனிடம் தெரிவிக்க ஓடினார். அதே சமயம் அந்த போலீஸ்காரர் பூசாரியைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தார். தேடிப்போன மூலிகை காலில் சுத்திண்டது போல நீயே வந்துட்டியே
#MahaPeriyava
When Sivasankaran, a long-standing devotee of SriMatham came for darshan one day, an attendant treated him very harshly. Sivasankaran was very upset. He felt that he had been insulted. When it was his turn to meet Periyava he said, "Some attendants at the Matham are
pronouncedly bad. They commit wrong. They covet monetary gifts. I wonder how Periyava manages with such people around him".
Periyava was full of laughter. His expression seemed to suggest, "What you say is not new to me". He then began to speak, "Consider a factory where
thousands work. Is everyone skilled and straightforward? Lakhs of people are working in Government offices. Everyone does not have the same level of commitment. Many do not work properly. Or if they do, they do their work imperfectly. It is not possible to send them home. The
கண்வ நதிக்கரையில் அமைந்துள்ள தொட்டா மல்லூர் ஸ்ரீ அப்ரமேயசுவாமி மற்றும் தவழும் நவநீத கிருஷ்ணர் கோயில் (அம்பேகாலு நவநீத கிருஷ்ணா) மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள பிரதான தெய்வம் ஶ்ரீ அப்ரமேயசுவாமி உடனுறை அரவிந்தவல்லி தாயார். அப்ரமேய பெருமாள் நான்கு கரங்களில் சங்கம், சக்கரம், கதை,
பத்மத்துடன் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் உள்ள சன்னிதிகள் ஸ்ரீ வைகுண்ட நாராயணசுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி, ராமானுஜர் மற்றும் ஆழ்வார்கள். இக்கோவிலில் உள்ள குழந்தை கிருஷ்ணரின் வசீகரிக்கும் கண்கள், அழகான தோரணை நம் மனத்தை மயக்கும். நவநீத கிருஷ்ணரை முழு வெண்ணெய்
காப்புடன் அல்லது நகைகள், ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் கோலங்களில் தரிசிக்கலாம். பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிமீ தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா. அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் உள்ளது. புத்திர பாக்கியம் இல்லாதோர்
#மகாபெரியவா
ஒரு ஏழை கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது, மகாப் பெரியவாளைத் தான் தெரியும். தினமும் வந்து வந்தனம் செய்வாள். பல செல்வந்தர்கள் பெரியவாளுக்குக் காணிக்கையாக, விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, 'தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே'
என்று ஏங்கினாள். ஒரு நாள் மனமுருகி பெரியவாளிடம் சொல்லி விட்டாள். பெரியவாள் சொன்னார்கள், "அவர்கள் கொண்டுவந்து கொடுக்கிற, எந்தப் பொருளையும் நான் தொடுவது கூட இல்லை. நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை. என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! எனக்குப் பிடிச்ச ஒரு
வேலை சொல்றேன், செய்கிறாயா?"
பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.
"மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காயவைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உப்யோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்"
பாட்டியின்