கண்வ நதிக்கரையில் அமைந்துள்ள தொட்டா மல்லூர் ஸ்ரீ அப்ரமேயசுவாமி மற்றும் தவழும் நவநீத கிருஷ்ணர் கோயில் (அம்பேகாலு நவநீத கிருஷ்ணா) மிகவும் புகழ்பெற்றது. இங்குள்ள பிரதான தெய்வம் ஶ்ரீ அப்ரமேயசுவாமி உடனுறை அரவிந்தவல்லி தாயார். அப்ரமேய பெருமாள் நான்கு கரங்களில் சங்கம், சக்கரம், கதை,
பத்மத்துடன் அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் உள்ள சன்னிதிகள் ஸ்ரீ வைகுண்ட நாராயணசுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி, ராமானுஜர் மற்றும் ஆழ்வார்கள். இக்கோவிலில் உள்ள குழந்தை கிருஷ்ணரின் வசீகரிக்கும் கண்கள், அழகான தோரணை நம் மனத்தை மயக்கும். நவநீத கிருஷ்ணரை முழு வெண்ணெய்
காப்புடன் அல்லது நகைகள், ஆபரணங்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும் கோலங்களில் தரிசிக்கலாம். பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிமீ தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா. அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் உள்ளது. புத்திர பாக்கியம் இல்லாதோர்
இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிடைத்ததும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன்
சமர்ப்பித்து மகிழ்கிறார்கள். கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை குருஷ்ணன் சன்னிதி இங்கு மட்டும் தான் உள்ளது. இங்குள்ள கருடனும் அழகு! ஶ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் கீர்த்தி அதிகம். ஶ்ரீ புரந்தரதாசர் ‘ஜகதோதாரண’ என்ற புகழ்பெற்ற கிருதியை இவரின் மேல் தான் இயற்றியுள்ளார்.
11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் ராஜேந்திர சிம்மனால் கட்டப்பட்டது. கண்வ நதிப் படுகையில் அமைந்திருப்பதால் இவ்விடத்திற்கு முதலில் மணலூர் என்ற பெயர். பின் மருவி மல்லூர் என்று ஆகிவிட்டது. இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம்,
பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது. நாமும் வணங்கி நற்கதி அடைவோம்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 22
மிகவும் போற்ற தக்க பஞ்ச கன்னியர்களில் ஒருவர் #திரௌபதி. திரௌபதி ஐந்து கணவர்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் அர்ஜுனனை மணக்கவில்லை. விதிவசத்தால் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள். அதற்குக் காரணம் அவள் முற்பிறவியில் நல்ல கணவன் அமைய தவம் செய்தபோது, இறைவன் அவள் முன் தோன்ற, இறைவனைப் Image
பார்த்த மகிழ்ச்சியில், ஐந்து முறை நல்ல கணவன் வேண்டும் என்று கேட்க, அவரும் அவ்வரத்தை அளித்துவிட்டார். வரத்தை பெற்ற பிறகு அதிர்ச்சியுற்ற அவளை சமாதானப் படுத்தி இவ்வரத்தினை அடுத்த பிறவியில் அனுபவிக்க அருளினார். அதனால் அவளின் அடுத்த பிறவியில் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள்.
ஒவ்வொருவருடனும் அவள் ஒரு வருடம் வாழ்க்கை நடத்தி பின் அக்னி பிரவேசம் மூலம் நெருப்பில் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு அடுத்த கணவருடன் சேர்ந்து வாழ்வாள். இல்வாழ்க்கை நன்றாக அமையவேண்டும், நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி எனப்படும் Image
Read 11 tweets
Mar 22
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ராவணனின் மனைவி மண்டோதரி சீதையை விட்டு விடும்படி ராவணனுக்கு
எவ்வளவோ புத்திமதி சொன்னாள். அவன் கேட்கவில்லை. ஒருவேளை ராமன் உருவில் ராவணன் சீதையைக் களவாடிவானோ என்கிற சந்தேகம் வந்து அவள் ராவணனை இதைப் பற்றி கேட்கிறாள். அதற்கு அவன் ராமனை நினைத்த மாத்திரத்தில் என் Image
மனத்தில் சொல்லொணாத ஆனந்தம் உண்டாகின்றது. சொர்கமும் கூட
வெறுப்பாகிவிடும் போலத் தோன்றுகிறது.
அப்படியிருக்க அவனுடைய திவ்விய ரூபத்தை எடுத்துக் கொண்டால் எனக்குத்
தீய எண்ணங்களில் மனம் எப்படி செல்லும் என்று பதில் சொன்னான்.
ராவணனைத் தடுத்து
நிறுத்தும் மண்டோதரி கூறிய பாடல்
ஏர்தரு
மேழுல கேத்த எவ்வுரு
வுந்தன் நுருவாய்
ஆர்கலி சூழ்தென்னி லங்கை
யழகமர் வண்டோதரிக்குப்
பேரரு ளின்ப மளித்த பெருந்
துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே தென்
பாண்டி நாடனைக் கூவுவாய்
–குயில்பத்து, திருவாசகம்
பொருள்: கடல் சூழ்ந்த அழகிய
இலங்கையில் வண்டோதரிக்கு
எழுச்சியை
Read 7 tweets
Mar 22
#மகாபெரியவா
கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர். ஒரு நாள் இவர் படுத்துக் கொண்டிருக்கும் போது கிழவர் ஒருவர் வந்தார். பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை. அடிக்கடி ஜுரம் வருது, ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு என்று பெரிய பட்டியல் Image
போட்டு, பெரியவாதான் காப்பத்தணும் என்று கும்பிட்டார்.
பெரியவா முனகிக் கொண்டே "ஒக்காரு! உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா" என்று ஆரம்பித்தார்.
"ஒரு கிராமத்திலே, கோயிலில் குறி சொல்லும் பூசாரி ஒருவர் இருந்தார். அவர் சொன்னதெல்லாம் பலித்துவிடும். அதே ஊரில் இருந்த ஒரு போலீஸ்காரர், பூசாரியின்
நெருங்கிய நண்பன். ஒரு நாள் அந்த பூசாரி கோயிலைத் திறந்தார். பல சாமான்கள் திருட்டுப் போய் விட்டதைப் பார்த்தார். உடனே தன் போலீஸ் நண்பனிடம் தெரிவிக்க ஓடினார். அதே சமயம் அந்த போலீஸ்காரர் பூசாரியைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தார். தேடிப்போன மூலிகை காலில் சுத்திண்டது போல நீயே வந்துட்டியே
Read 6 tweets
Mar 22
#MahaPeriyava
When Sivasankaran, a long-standing devotee of SriMatham came for darshan one day, an attendant treated him very harshly. Sivasankaran was very upset. He felt that he had been insulted. When it was his turn to meet Periyava he said, "Some attendants at the Matham are Image
pronouncedly bad. They commit wrong. They covet monetary gifts. I wonder how Periyava manages with such people around him".
Periyava was full of laughter. His expression seemed to suggest, "What you say is not new to me". He then began to speak, "Consider a factory where
thousands work. Is everyone skilled and straightforward? Lakhs of people are working in Government offices. Everyone does not have the same level of commitment. Many do not work properly. Or if they do, they do their work imperfectly. It is not possible to send them home. The
Read 9 tweets
Mar 21
#மகாபெரியவா
ஒரு ஏழை கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது, மகாப் பெரியவாளைத் தான் தெரியும். தினமும் வந்து வந்தனம் செய்வாள். பல செல்வந்தர்கள் பெரியவாளுக்குக் காணிக்கையாக, விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, 'தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே'
என்று ஏங்கினாள். ஒரு நாள் மனமுருகி பெரியவாளிடம் சொல்லி விட்டாள். பெரியவாள் சொன்னார்கள், "அவர்கள் கொண்டுவந்து கொடுக்கிற, எந்தப் பொருளையும் நான் தொடுவது கூட இல்லை. நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை. என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! எனக்குப் பிடிச்ச ஒரு
வேலை சொல்றேன், செய்கிறாயா?"
பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.
"மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காயவைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உப்யோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்"
பாட்டியின்
Read 4 tweets
Mar 20
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அழுதால் உன்னைப் பெறலாமே என்று மாணிக்கவாசகர், திருவாசகத்தில் சொன்னார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் பிற்காலத்தில் இதையே சொன்னார். இதற்கு அவர் சுவையான எடுத்துக்காட்டுகளையும் தருகிறார். ஒரு பக்தர் பரமஹம்சரிடம் கேள்வி கேட்டார்: கடவுள் தரிசனத்தை எப்படிப் பெறுவது? Image
பரமஹம்சர் கூறினார், “பகவானை அடைய வேண்டி உருகிய உள்ளத்துடன் உன்னால் அழமுடியுமா? மனைவி, மக்கள், பணம், கடன் இவற்றுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் கடவுளைக் காணவேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடும் வரை தாயார், சமையல் முதலிய
வேலைகளைச் செய்கிறாள். இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டு பொம்மைகள், குழந்தையின் பசியைப் போக்குவதில்லை. எனவே அவைகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் குழந்தை கோவென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும் சாதம் பாதி வடித்துக் கொண்டிருந்தாலும் கூட அதை
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(