வருடாந்திர appraisals இந்நேரம் முடிவடைந்து சம்பள உயர்வு கடிதங்கள் இந்நேரம் உங்கள் கையில் கிடைத்திருக்கும் இல்லையா? சம்பள உயர்விலிருந்து கூடுதல் பணத்தை எவ்வாறு செலவிடுவது என்று உங்களில் பெரும்பாலோர் ஏற்கனவே திட்டமிட்டிருப்பீர்கள் இல்லையா?
என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எதில் EMI கட்டி வாகனங்கள்/எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கலாம், எங்கெங்கு வெளிநாட்டு சுற்றுலா செல்லலாம் போன்றவற்றை திட்டமிட தொடங்கி இருப்பீர்கள்.
கொஞ்சம் பொறுங்கள்.
நான் சொல்வதை கேட்ட பிறகு, உங்கள் பிளானிங்கை தொடருங்கள் (உங்கள் மனது மாறாவிட்டால்).
அதற்கு முன்னர்:
Financial planning எப்படி செய்வது என்கிற வழிமுறைகளை கீழ்க்கண்ட திரட்டியில் தந்துள்ளேன். படித்து, புரிந்துகொண்டு, முயற்சி செய்து பார்க்கவும்.
தற்போதைய சம்பளத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் நடத்திக் கொண்டிருந்தால், உங்களது அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை நீங்கள் சேமிப்பது தான் விரைவாக நீங்கல் financial independence நிலையினை அடைய சிறந்ததொரு வழி.
எப்படி? பார்க்கலாம்.
நீங்கள் ஏற்கனவே MF/பங்குகளில் முதலீடு செய்திருந்தால், வருடா வருடம் உங்கள் சம்பள உயர்வுக்கேற்ப, வருடாந்திர முதலீட்டு தொகையினை அதிகரித்துக் கொண்டே வர வேண்டும்.
உங்கள் முதலீட்டு பயணத்தை இன்னும் நீங்கள் தொடங்கவில்லையென்றால், இந்த சம்பள உயர்வைத் தவிர சரியான சமயம் வேறொன்றுமில்லை.
சராசரியாக, வருடத்திற்கு உங்கள் முதலீடுகளை 10% நீங்கள் அதிகரித்துக் கொண்டே வரலாம்.
"வர்ற காசு செலவுக்கே சரியா இருக்கு. இதுல எங்க சேமிக்கிறது?" என்று கேள்வி கேட்பவர்கள் DM வரவும். Something's fundamentally wrong with the way you are managing your money.
இது எந்த அளவிற்கு பலனளிக்கும் என்று கீழ்க்கண்ட உதாரணத்தில் பார்ப்போமா?
மூன்று நண்பர்கள். A, B & C. மூவரும் ஒரே சமயத்தில் Equity சார்ந்த பரஸ்பர நிதிகளில் மாதம் ₹5,000 முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள்.
இதில் வருடா வருடம்,
A, 10% மும்,
B, 15% மும்,
C, 0% மும்
தங்களது முதலீடுகளை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
30 வருடங்கள் கழித்து, அவர்களது முதலீடுகளின் மதிப்பு பின்வருமாறு:
A - ₹3.96 கோடி.
B - ₹7.64 கோடி.
C - ₹1.53 கோடி.
என்ன?
ஒரு சிறிய தொடக்கம், மலையாக வளர்ந்து நிற்பதை கண்டு ஆச்சரியமாக இருக்கிறதா?
Discipline மற்றும் consistency யின் ரிசல்ட்.
சம்பளம் அதிகரிப்பதால் செலவுகள் அதிகரிக்க வேண்டியதில்லை. புதிய இலக்குகள் அல்லது ஏற்கனவே உள்ள முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவைப்பட்டால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும். தற்போதுள்ள செலவுகளை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
சம்பள உயர்வு திருப்திகரமாக இல்லாவிட்டால் அல்லது உயர்வே இல்லையென்றால், உங்கள் திறனுக்கேற்ப முதலீடு செய்யுங்கள்.
அவசிய செலவினங்களைக் குறைப்பதன் மூலம் உங்கள் தற்போதைய standard of life ஐ குறைக்காதீர்கள். இப்படிப்பட்ட முறை உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்காது.
முதலீட்டை அதிகரிக்க வேண்டுமே என்பதற்காக கடன் வாங்கியும் முதலீடு செய்ய வேண்டாம். தற்போதைய சம்பளம் போதவில்லையென்றால், நிறுவனத்தை மாற்றுங்கள் அல்லது find ways to make extra money.
இவ்வாறான முதலீட்டு strategy, உங்களது நெடுங்கால/குறுகிய கால goals ஐ விரைவாக அடைய உதவும்.
அதி விரைவில் நீங்கள் financial independence நிலையினை அடையலாம்.
மேலதிக தகவலுக்கு:
Financial Independence (பொருளாதாரச் சுதந்திரம்) என்றால் என்ன?
பொருளாதாரச் சுதந்திரத்தை அடைவதற்கான வழிகள்:
இந்த இரண்டு வீடியோக்களையும் பார்க்கவும்.
முடிவாக, உங்களுக்காக நீங்கள் செய்யும் முதலீடுகள் தான் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் ஆனந்தமாக வைத்துக்கொள்ள உதவும்.
வாசகர்கள் அனைவரும் பொருளாதாரச் சுதந்திரமடைய வாழ்த்துக்கள்.
பணவீக்கம் என்பது பலருக்கும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் அதன் தாக்கத்தை நாம் அனைவரும்தினசரி அனுபவிக்கிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், அதே விலைக்கு குறைவான quantity கிடைப்பது போன்றவை பணவீக்கத்தை நமக்கு உணர்த்துகின்றன.
பணவீக்கம் எவ்வாறு செயல்படுகிறது?
அது உங்கள் பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
பணவீக்கம் உங்களது பொருளாதாரத்திற்கு எதிரி. அந்த எதிரி எப்படியெல்லாம் உங்களை தாக்கக் கூடுமென்று புரிந்து வைத்துக்கொள்வது வரப்போகும் சிக்கல்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள உதவும்.
பணவீக்கம் என்பது காலப்போக்கில் பணத்தின் மதிப்பு அதிகரிப்பதாகும். அது - மளிகைப் பொருட்கள், போக்குவரத்து, மின்சாரம், வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் முதலீடுகளின் வருமானத்தையும் பாதிக்கிறது. உதாரணமாக ஒரு பொருள் இந்த வருடம் ₹100க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
There is quite a good reason why I ask my clients not to go to these so-called "New-Age Startups". Better to go for a full-service broker with stronger and more efficient systems than these 'half-baked' start-ups.
Crores lost today.
Its weekly options expiry today and people are suffering. Sad that I couldn't able to help. I can only advise people to avoid these companies. The decision is theirs ultimately. People take only costs into account and they suffer.
Low cost means low service. Understand that.
Start-ups are NO GOOD in anyway. They are just glitter. Once you see past the glitter, its the same shit as any other pathetic startups who have a so-called trading system.
Your money is NEVER SAFE in these startup brokers.
இலங்கையில், கடந்த சில மாதங்களாக பணவீக்கம் (22.1%) அதிகரித்து வருவதாலும் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதாலும், அந்த நாட்டில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான வருமானம் சுற்றுலா மூலமாகவே வருகிறது.
அபரிமிதமான பணவீக்கத்தினால், எண்ணெய், அரிசி, சமையல் எரிவாயு போன்ற அடிப்படைத் தேவைகள் பெருமளவிற்கு விலையேற்றத்தை சந்தித்தன. பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதும் இதற்கொரு காரணம். ராணுவம் தலையிட்டு பொருட்கள் மக்களுக்கு சரிசமமாக கிடைக்க வழிவகை செய்தது.
கொரோனா காலகட்டத்தில், உலக அளவில் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிப்படைந்தது. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால், அந்நிய செலாவணி வருவாயும் குறைந்து போனது. சுற்றுலாத்துறையை வெகுவாக நம்பியிருந்த இலங்கையின் பொருளாதாரம் இதனால் சுமார் 3.6% வீழ்ச்சியடைந்தது.
Investors who earned long-term capital gains during the financial year from the sale of land or building or both are eligible to get exemption under section 54EC of the income tax act.
Investors can avail of the exemption by investing in bonds issued by PFC (Power Finance Corporation Ltd), REC (Rural Electrification Corporation Ltd), Indian Railway Finance Corporation (IRFC) and NHAI (National Highways Authority of India).
The investment should be made within a period of 6 months from the date of sale of these specified assets to get exemption under section 54EC of the income tax act.
Salient features:
Allows to save tax on Long term capital gains and provides fixed interest income.
சென்ற வாரம் அன்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். Portfolio மேனேஜ்மென்ட் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், அவருடைய உறவினர் ஒருவருக்கு, பங்குச்சந்தையில் டிரேடிங் செய்யும் ஒரு நிறுவனத்திடமிருந்து வந்த offer பற்றி என்னிடம் சொன்னார்.
அதாவது, நாம் அவர்களிடம் டீமேட் அக்கௌன்ட் தொடங்கி, ₹1,00,000 டெபாசிட் செய்து, ID மற்றும் Password அவர்களிடம் கொடுத்து விட்டால், நமது சார்பாக டிரேடிங் செய்து அவர்கள் நமக்கு வரும் லாபத்தில் 30% எடுத்துக்கொண்டு 70% நமக்கு தந்து விடுவார்களாம்.
இது போல நிறைய நிறுவனங்கள் செயல்படுகின்றன. Modus Operandi மேலே சொன்ன முறைகள் தான். இந்த அணைத்து நிறுவனங்களும் தங்களுக்கே உரிய properietory டீமேட் applications வைத்துள்ளன. இவர்களுடைய நோக்கம் நமக்கு லாபம் சம்பாதித்து கொடுக்க அல்ல. அவர்களுக்கு brokerage ஈட்டவும், நம்முடைய balance