#Covid#Lockdown#2YearsMemories#Caring
இந்தியாவில், கோவிட் லாக்டவுன் மார்ச் 2020 இறுதியிலும், சிங்கையில், ஏப்ரல் 2020 முதல் வாரத்திலும் ஆரம்பித்தது. அந்த சமயத்தில் லாக்டவுன் இரண்டு மாதங்கள் வரை நீடித்ததுனு நினைக்கிறேன். கோவிட் லாக்டவுன் காலங்களில், இந்தியா & Middle Eastல்
உள்ள எனது நண்பர்களை, அலைபேசியில் Whatsapp மூலம் ஒவ்வொருத்தருக்கு call பண்ணி பேச ஆரம்பித்தேன். சென்னைல நான் பணிபுரிந்த கம்பெனியில் ஒரு சிலர் தொடர்பில் இருந்தாலும் பலர் தொடர்பில் இல்லை. 20 பேர்கிட்ட call பண்ணி ஒரு வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கினேன். சென்னைல இருக்கறவங்களே பலர் 20
ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பை இழந்துள்ளனர். WA மூலம் மீண்டும் இணைவதில் பலர் மகிழ்ச்சியடைந்தனர். ஸ்கூல் Whatsapp குரூப் முன்னாடியே இருந்தாலும், 2-3 நண்பர்களை, எங்கே இருப்பாங்கன்னு யோசிச்சு அவங்களை பிடிக்க ட்ரை பண்ணலாமானு தோணிச்சு. கூட படித்த 10th friend ஒருவன், சாந்தோமில்
+2 படிச்சிட்டு, CITயில் டிகிரி படிக்க போய்ட்டான். அவனை, கடைசியா 96ல் பார்த்தேன். அவனை எப்படியாவது பிடிக்கணும் னு Facebook, LinkedIn லாம் ட்ரை பண்ணி US ல இருக்கானு தெரிஞ்சி போன் பண்ணி பேசினேன். அவன் செம ஷாக் ஆகிட்டான், எப்படிரா என்னை பிடிச்சேன்னு. லாக்டவுன் ஆரம்பிச்சி 3-4 வாரம்,
இதே வேலையா இருந்தேன். ஒருத்தரிடம் பேச ஆரம்பிச்சா, பழைய கதைகள், சென்னைல time spend பண்ணது, tour போனது, ஸ்கூல் daysன்னு பேசிக்கிட்டே இருப்பேன். மனைவியும் மகளும், அப்பா பழைய வரலாறு பேச ஆரம்பிச்சுட்டார் இடத்தை காலி பண்ணுவோம்னு கிண்டல் பண்ணுவாங்க. அந்த லாக்டவுன் நேரத்தில், கோவிட்
பீதியின் தொடக்க கட்டத்தில் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதை அறிய எனது பெரும்பாலான நண்பர்களிடம் ஒரு தடவையாவது பேசிடனும்னு ஆரம்பிச்சது. இப்படியெல்லாம் நான் செய்வதைப் பார்த்து, ஒரு நாள் என் மகள் என்னிடம் கேட்டாள். அப்பா, நீங்க உங்க நண்பர்களுக்கு போன் பண்ணி பல பழைய நண்பர்களிடம்
பேசறீங்க, அவங்க எங்கே எப்படி இருக்காங்கனு check பண்றீங்க. உங்கள் பழைய நண்பர்கள் யாராவது, உங்களுக்கு call பண்ணி பேசினங்களான்னு கேட்டுச்சு. Actually, நான் அப்படி யோசிச்சு பார்க்கலன்னாலும், ஆனால் நான் சொன்னேன், சரிம்மா அது எனக்கு முக்கியமில்லை. Call பண்ணி பேசிய எல்லாரும் happy,
வாட்ஸ்அப் குரூப் create பண்ணதுக்கு happy, அது போதும்னு சொன்னேன்.
சில வாரங்களுக்கு முன் தமிழிசை போட்டிருந்த ட்வீட் பார்த்துட்டு இதை எழுதலாம்னு தோணிச்சு. அவங்க எழுதினது, "Have Someone who is addictive to talk to you. Its chill thrill".
இந்த மாதிரி பலர் அந்த சமயத்தில் உங்க friendsக்கு தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பீர்கள் என நினைக்கிறன்.
I would say; 'Have someone to remember to call you or text you at least in some interval'. A short caring call or message makes a difference to someone ❤️
#Thread#TNBudget#Polytechnic#Education#Tamilnadu
அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ₹1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற #TNBudget ன் கல்வித்தொகை உதவித்திட்டம் பல
மாணவிகளுக்கு அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொடுக்கும். அது அவர்களின் உயரத்தை அடைய ஓரளவுக்கு உதவும் என நம்புகிறேன். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. நேற்று காலை டிவி செய்திகளில், சில மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு சரியான வருமானம் இல்லை எனவும்,
இந்த ஊக்கத் தொகை அவர்களுக்கு மிகவும் பயன்படும் என்று பேசினர். மாணவர்கள், மாணவிகள் கல்லூரி பட்டப்படிப்புகளை படிக்க நான் எப்போதும் ஊக்குவிப்பேன். ஆனால், பட்டப்படிப்பு நேரடியாக சேர இயலாதவர்கள், அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விரைவாக வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், அல்லது டிப்ளமோ
A must read thread about Bruce Lee to know his history, growth, his famous movies, his death conspiracy. I also felt many times he should have lived long & the tragedy was his son also died at young age. I was also thinking about the relation to family curse as written by Chocks.
His movies, action sequences came to popular in a short time and he disappeared even before he reached his peak. I have also read and watched many of his death conspiracy videos. The inspiring video of Bruce Lee playing with his nunchucks with a tennis player was not real.
சிங்கப்பூரில் தமிழ் ஒரு தேசிய மொழி
சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வ மொழியாக, சிங்கப்பூரில் கிடைக்கும் எல்லா சுவரொட்டிகளிலும் தமிழைக் காணலாம்.
பஸ் அல்லது ரயிலில் செல்லும்போது கூட தமிழில் அறிவிப்புகளை கேட்கலாம்.
தமிழ் மொழி சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் முக்கியமாக இந்திய சிங்கப்பூரர்களுக்காக வழங்கப்படும் மொழியாகும். சிங்கப்பூரின் கல்வி முறையில் தாய்மொழி கட்டாயப் பாடமாக இருப்பதால், தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய சிங்கப்பூரர்கள் தொடக்கப்பள்ளி முதல் தமிழ் கற்க வேண்டும்.
இங்கு வசிக்கும் இந்தியத் தமிழர்களும் தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்கின்றனர்.
இந்த இணையதளத்தில் வாழும் மொழி வாழும் மரபு என்ற தலைப்பில் சில மொழி விளக்கங்கள் உள்ளது – Part 1
#Thread#PleaseRead A job experience from a #SecurityGuard work!
இந்தப் பதிவைப் பார்த்ததும் சிலர், அவருடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம், பிறந்தநாள் செய்தியை கேக்கில் எழுதியிருக்கலாம் என்று எழுதியிருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள செக்யூரிட்டிகள் நிறுவனத்தின்
நுழைவாயிலில் உள்ள ஒரு சிறிய அறையில் அமர்ந்திருக்கலாம். ஆனால் சிறிய/நடுத்தர நிறுவனங்களில், பாதுகாப்பு ஊழியர்கள் நுழைவு வாசலில் நின்று அல்லது உட்கார்ந்து, ஊழியர்களுக்கு கதவைத் திறந்து காலை வணக்கம் சொல்ல வேண்டி இருக்கும்.
ஒரு ஃப்ளாஷ்பேக்: பல வருடங்களுக்கு முன்பு ஒரு செமஸ்டர் விடுமுறையில், நான் Dyanora சர்வீஸ் சென்டர் அடையாரில் 1.5 மாதங்கள் செக்யூரிட்டியாகப் பணிபுரிந்தேன். கீழே Woodlands ஹோட்டல் இருக்கும். ஒரு மாதம், நான் பஸ் பாஸைப் பயன்படுத்தினேன், மீதி 15 நாள் என் அப்பா பாஸை நீட்டிக்க முடியாது
#Kadhalan#ARR#Shankar#Prabudeva#SPB
காதலனுக்கு முன், ARR 12 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா டூயட் என ஹிட்களை கொடுத்து மக்களிடையே அவர் பிரபலமடைந்து வந்தார். கல்லூரி செல்லும் மாணவர்கள், டீன் ஏஜ் பசங்க கிட்ட காதலன் பாடல்கள் அதிக வரவேற்பை
பெற்றது. அந்தப் படத்தில் பிரபுதேவாவும் நக்மாவும் புதியவர்கள். தெரிந்த முகங்கள் குஞ்சுமோகன், ஷங்கர், ARR மட்டும். அதனால் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய உத்திகளை (Grand visuals, Computer graphics) அப்போது அறிமுகப்படுத்தினர். கண்ணாடியினால் செய்யப்பட்ட பேருந்து, கிராபிக்ஸில்
அசத்திய பிரபலமான முக்காப்லா பாடல். SPB பிரபுதேவா கலந்து கட்டிய காதலிக்கும் பெண்ணின் கைகள், உன்னிகிருஷ்ணன் அறிமுக பாடலான என்னவளே என மாறுபட்ட டியூன்களாக அமைந்தது. பேட்ட ராப் மெட்ராஸ் வார்த்தைகளைக் கொண்டு ஷங்கரால் எழுதப்பட்டது. பெரும்பாலான பாடல்களை வைரமுத்து எழுதி இருந்தார்.
#Thread #Engineering Opportunities in #OilandGas Sector – Part 2 #CivilEngineering
Civil பட்டப்படிப்பு முடித்த நிலையில் இருப்பவர்களுக்கும் முடித்து சில ஆண்டுகள் வேலையில் இருப்பவர்களுக்கும், இந்த Oil & Gas துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள், நீங்கள் கற்று கொள்ள வேண்டிய (1/18)
விஷயங்களைப்பற்றி இன்று எழுதுகிறேன்.
Building Strong, Basement weak அப்படின்னு வடிவேலு சொல்வது போல் இல்லாமல் இரண்டும் வலுவாக இருக்க வடிவமைப்பதே Civil & Structural Engineeringன் சிறப்பம்சம்.
சில terms ஆங்கிலத்தில் மட்டுமே சொல்ல முடியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுகிறேன். (2/18)
While you study Civil Engg, please study modules such as 1) Industrial Structure 2) Powerplant Structure 3) Offshore Structures which will boost knowledge in Engg & design. Those who did Diploma, it is recommended to do a degree for more job opportunities & career growth. (3/18)