#மகாபெரியவா#பகவத்கீதை
நம்மில் முக்கால்வாசி பேர் #கீதை என்றால் அது ஏதோ தெரியாத புரியாத விஷயம் என்று நினைக்கிறோம். அப்படி என்னதான் கீதை சொல்கிறது என்று கொஞ்சம் பொறுமையோடு படிக்கிறவனுக்கு, தலையை சுற்றுகிறது. ஏன் இந்த கிருஷ்ணன் முன்னுக்கு பின் முரணாக சொல்கிறார் என்று தோன்றுகிறது.
ஒரு விஷயம் தான் மொத்தத்தில். ஆத்மா. அது எங்கும் எதிலும் எவற்றிலும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதுவே சர்வ ஆதாரம். வெளியே இருந்தால் பரமாத்மா. உள்ளே இருந்தால் ஜீவாத்மா. கிருஷ்ணனை சரியாக புரிந்து கொண்டால் குழம்பவே மாட்டோம். தெள்ளத் தெளிவாக தெரிவார். மஹா பெரியவா தெய்வத்தின்
குரலில் சொல்கிறார், ''நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன என்று கீதையில் ஒரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்.
யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி
எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம்
என்று ஆகுமே. இதில் எது சரி என்ற குழப்பம் ஏற்படலாம். ஸ்வாமி அல்லது ஆத்மாவே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதுதான் சரி. அவர் எல்லாவற்றுக்குள்ளும் இருக்கிறார் என்பதால் எல்லா ஜீவராசிகளும் அவருக்கு ஆதாரம் என்று ஆகிவிடாது. இவர்தான் அவற்றையும், சகலத்தையும் ஆட்டிப் படைப்பவர், இதைத்தான் ஸ்ரீ
கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.” ஈச்வரனே பிரபஞ்சத்தை, அதன் ஜீவராசிகளை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.
ஈச்வர, ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா என்கிறார் கிருஷ்ணன்.
எல்லாப் பொருட்களிலும் நான் இருக்கிறேன். எல்லாப்
பொருட்களும் என்னிடத்தில் உள்ளன என்று கூறுவபரே, என்னிடத்தில் ஒரு பொருளும் இல்லை. நானும் ஒரு பொருளும் இல்லை என்று கூறுகிறார்.
ந ச மத் ஸ்தானி பூதானி, ந சாஹம் தேஷி அவஸ்தித
இங்கே ஆத்மா எல்லாலற்றையும் கடந்தது என்று தத்துவம் பேசப்படுகிறது. இது நம்மை குழப்பும். நான் எல்லாருக்கும்
விளங்குவதில்லை
ந அஹம் ப்ரகாச: ஸர்வஸ்ய:
அதுதான் என் யோகமாயை
யோக மாயா ஸமாவ்ருத:
என்று சொல்கிறார். நன்கு ஆலோசித்துப் பார்த்தால் குழப்பத்துக்குத் தெளிவு வரும். நான் ஒருவனுக்கும் விளங்கமாட்டேன் என்று பகவான் சொல்லியிருந்தால், ஆயிரம்பேர் இருந்தால் ஆயிரம் பேருக்கும் விளங்க மாட்டேன்
என்று அர்த்தமாகும். ஆனால் அப்படியின்றி, நான் எல்லோருக்கும் விளங்க மாட்டேன் என்றால், ஆயிரம் பேரில் 999 பேருக்கும் விளங்காமல் இருந்தாலும் ஒருவனுக்காவது விளங்குவேன் என்றுதான் பொருள். பகவான் எல்லாருக்கும் (ஸர்வஸ்ய) விளங்க மாட்டேன் என்றாரேயன்றி ஒருவனுக்கும் (கஸ்யாபி) விளங்க
மாட்டேன் என்று சொல்லவில்லை. அப்படியானால் அவரும் சிலருக்கு விளங்குகிறார் என்றாகிறது. அந்தச் சிலர் யார்? இவர் சொன்ன யோக மாயையால் பாதிக்கப்படாத ஞானிகள். நான் எல்லாப் பொருளிலும் இருக்கிறேன். ஒரு பொருளும் என்னிடம் இல்லை என்று பகவான் முரண்பாடாகப் பேசியது போலத் தோன்றுவதற்கு இத்தகைய
ஞானிகளே விளக்கம் தந்து தெளிவு செய்வார்கள். தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு ஐயோ, பாம்பு பாம்பு என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு
இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான். மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான். இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான்
இருக்கிறேன். பிரபஞ்சம் என்னிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம். மாலைக்குள் பாம்பு இருக்கிறது. பாம்புக்குள்தான் மாலை இருக்கிறது என்பது எப்படியோ அப்படிதான். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தானே.
பாம்பு என்று அலறுபவனுக்குப் பாம்பு, மாலையைத் தனக்குள் விழுங்கி விட்டது. அவன்
பார்வையில் ஆதாரமாக இருப்பது பாம்பு. அஞ்ஞானம் நீங்கி இது மாலைதான் என்று உணர்ந்து கொண்டவனுக்கு மாலை, பாம்பை தன்னுள் மறைத்து விடுகிறது. மாலைதான் ஆதாரமாகத் தெரிகிறது. மாயையினால் மூடப்பட்டவன் பிரபஞ்சத்தை சத்தியம் என்று பார்த்தாலும், வாஸ்தவத்தில் பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருந்து
தாங்குபவன் ஈசுவரன்தான். நம்மாழ்வாரைப் பற்றி சடகோபரந்தாதி பாடின பரம வைஷ்ணவரான கம்பர், பரமாத்ம ஸ்வரூபத்தை இப்படி ஸ்வச்சமான அத்வைத பாஷையில் ஒரு அருமையான செய்யுள் எழுதி வைத்திருக்கிறார். அதைப் பார்ப்போம்:
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறு பாடுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர் என்பர் கைவி லேத்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்.
அலங்கல் = மாலை. அரவு= பாம்பு. இருட்டு நேரத்தில் கண் சரியாக பார்க்க முடியாத போது மாலை ஒன்று காற்றில் அசையும்போது அது பொய்யாக ஒரு பாம்பாக தோன்றியது. பாம்பு போல்
நிஜமாகவே இருந்தது அந்த பொய்த் தோற்றம். இப்படித்தான் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான இந்த உலகம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப் போய் பாம்பு அல்ல மாலை என்று தெரியவரும். ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியை கண்டால் என்கிறார் கம்பர்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
In a small village in Thanjavur district, all the families were devoted to the SriMatham. There was bitter enmity in the street where the Brahmins lived and they had fallen apart to form two groups. The reason was not worth a pinch of salt, though the enmity grew
to enormous proportions. By some quirk of circumstances, both Ananthu and Sethu, who spear-headed the two groups respectively, came to Sri Maha Periyava at the same time. They prostrated to Periyava.
"Excellent!" said Periyava. "Have you both come together?"
"Yes", they lied in
one voice, not wanting to broadcast their enmity in Periyava's presence. Periyava chatted with them for long. In between, He gestured to the attendants in a way in which they alone could understand, to pack a separate parcel of prasada and put it aside. Practically everything
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் வீரவர்ம சோழன் போட்டி ஒன்றை அறிவித்தான். அப்போட்டி கோட்டைக் கதவைக் கைகளால் தள்ளி திறக்க வேண்டும் என்பதே. வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில்
கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் தாமோதரன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். அவன் சிறந்த கல்விமான், ஸ்ரீமந் நாராயண பக்தன். தம்பி 'போட்டியில் தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள் ஊர் பொதுமக்கள். தாமோதரன் சொன்னான்,
'ஸ்ரீமந் நாராயண மந்திரம் சொன்னால் நம் பலம் இரண்டு மடங்கு ஆகும், பயம் தெளியும், பக்தன் பிரகாலதனுக்காக அவதாரம் எடுத்த எம்பெருமான் எனக்கும் அருள் புரிவார். மேலும் வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்றான். ஓம் நமோ நாராயணா என்று கூறி விட்டு கோட்டைக்
#MahaPeriyava
A gentleman came from Pattukottai for Sri Maha Periyava’s darshan. “I bought a new car. From the time I got it, there have been many accidents. I sought the advice of astrologers and performed a number of expiatory rites. Nothing has helped.”
Periyava was silent for
a while. Then he asked the gentleman a question,
“Is there a village called Kanyakurichi near your town?”
The gentleman was taken aback.
“There is a Mahamaya temple there, very powerful deity. Send fifty rupees for abhishekham to be performed to the Ambal there. Have the words,
‘In the Protection of Kanyakurichi Amman,’ painted on the front side of your car.”
The gentleman was dumbfounded. Recovering himself he said, “Kanyakurichi Amman is our Kula Deyvam’ (family deity) . My father and mother would visit that temple every year. They would have
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வடுவூரில் வாழ்ந்த ஸ்ரீநிதி சுவாமிகள் தினமும் ராமனின் புன்னகையைக் குறித்து ஒரு ஸ்லோகம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுப் #புன்னகைராமாயணம் என்ற ராமாயணமே உருவாகிவிட்டது. ஒருநாள் ராமனை அவர் தரிசிக்கையில் அவர உள்ளத்தில்
ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி தோன்றியது. வனவாச காலத்தில் அத்ரி, சரபங்கர், அகஸ்தியர் உள்ளிட்ட பல முனிவர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று அவர்களை வணங்கினான் ராமபிரான். அந்த வகையில் சுதீட்சணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தை ஒருநாள் மாலை லட்சுமணனும் சீதையுடன் அடைந்தான் ராமன்.அவர்களுக்காக
விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சுதீட்சணர். ராமன் அவரிடம், “மகரிஷியே! நீண்ட தூரம் நடந்து வந்த நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம். அதனால் சீக்கிரமாக உணவைப் பரிமாறுங்கள்!” என்றான். “இப்போது இயலாது ராமா! சற்றுப் பொறுத்திரு!” என்றார் சுதீட்சணர். ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணன்
இவ்வுலகில் நம் நேரம் மிகக் குறைவு என்பதை நாம் உணர வேண்டும். பயனற்ற வாக்குவாதம், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காது இருத்தல், அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பவை. யாராவது உங்களைக் காட்டிக் கொடுத்தார்களா? மிரட்டினார்களா? ஏமாற்றினார்களா? அவமானப்
படுத்தினார்களா? உங்களுக்குப் பிடிக்காத கருத்தைக் கூறினார்களா? ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். அமைதியாய் இருங்கள். அவர்களை புறக்கணியுங்கள். ஆனால் அவர்களை உங்கள் மனத்தில் வைத்து இன்னும் அதிகமாக நேசியுங்கள். ஏனென்றால், நம் பயணம் மிகவும் குறுகியது. நம் வாழ்க்கைப்
பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது. நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாராட்டுவோம். அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம். அவர்களை மதிப்பவராக, மரியாதையாக, அன்பாக, மன்னிப்பவராக இருப்போம். ஒவ்வொரு நாளும் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
#இதிகாசம்#இதிஹாசம் இதி ஆஸம் என்றாலே 'இப்படி நடந்தது' என்ற பொருள். நடுவிலே ஒரு 'ஹ' போட்டிருப்பதால், 'நிச்சயமாக' 'உறுதியாக' என்று அழுத்தம் கொடுக்கிற பொருள் வரும். எனவே சிறிது கூட பொய்யோ மிகைப்படுத்துதலோ இல்லாமல், உள்ளதை உள்ளபடியே, அவை நடைபெற்ற காலத்திலேயே எழுதப்பட்டவைகளே இதிஹாசம்
(இதிகாசம்) ஆகும். ஶ்ரீராமர் வாழ்ந்தக் காலத்தில் வாழ்ந்திருந்த வால்மீகி மகரிஷியால் இயற்றப்பட்டதே இராமாயணம் (வால்மீகி ராமாயணம்). பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும், ஶ்ரீகிருஷ்ணரும் வாழ்ந்திருந்தக் காலத்தில் வாழ்ந்தவரே #வியாசர். வேத வியாச தான் கண்ணால் கண்டவற்றையே மஹாபாரதம் என எழுதினார்.
(தான் சொல்ல, சொல்ல விநாயகரையே எழுத வைத்தார்! வியாசர்). மஹாபாரதப் போரை நேரடியாக அப்படியே பார்க்கும்படியாக, திருதராஷ்டிரனின் தேரோட்டியான சஞ்சயனுக்கு ஞானத்திருஷ்டியை அளித்தார் வேதவியாசர். சஞ்சயன் போரில் நடப்பதை அப்படியே கண்டு பார்வையற்ற திருதராஷ்டிரனுக்குக் கூறி வந்தார். கிருஷ்ணர்,