🤴Harappan🤴 Profile picture
May 17 25 tweets 5 min read
#Part2 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

Black July 1983

பிரபாகரன் செய்தது ஞயாயமானதாக இருந்தாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை அவர் உணராதவராக இருந்தார்.தான் செய்யும் காரியங்களுக்கு விளைவுகளை பற்றி சிந்திக்காதவராக பல இடங்களில் இருந்தார் பிரபாகரன்
தமிழர்களின் 200 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன, பல நூறு தமிழர்களின் உயிர் ஈவு இரக்கமின்றி அரசு ஆதரவுடன் சூறையாடப்பட்டது.ஒரு 10 வயது சிறுவனின் கையை வெட்டி அவன் துடிப்பதை நடனம் ஆடி கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற படுகொலை தமிழர்கள் மீது ஏவப்பட்டது.பல தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர்.
கலைஞர் ,எம்.ஜி.ஆர், மூப்பனார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நரசிம்ம ராவ் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் இந்திரா காந்தி.

இலங்கை செல்லும் முன் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆரை சந்திக்காமல் நேராக கொழும்பு புறப்பட்டதுக்கு திமுக கடுமையான விமர்சனம் வைத்தது.
அதிமுக இது தங்களுக்கு நேர்ந்த அவமானம் என்றுக்கூட உணரவில்லை.

நரசிம்ம ராவ் முகாமை பார்க்க விரும்பியபோது அனுமதி மறுக்கப்பட்டு ஜெயவர்தனாவால் அவமானப்படுத்தப்பட்டார்.

இதனை வன்மையாக கண்டித்த கலைஞர் 1983 ஜூலை 31 அன்று இராமநாதப்புரத்தில் இலங்கை தமிழர் பாதுக்காப்பு மாநாடு நடத்தினார்.
அதை தொடர்ந்து 1983 ஆகஸ்ட் 5ஆம் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினார் கலைஞர்.தமிழ்நாடே ஸ்தம்பித்த போராட்டம் இது.கட்சி வேறுபாடு இன்றி தமிழக மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு இனக்கலவரத்துக்கு எதிராக போராடினர்.

தொடர்ந்து 2 கோடி கையெழுத்து வாங்கி அதை ஐநா மனித உரிமை கவுன்சிலுக்கு அனுப்பி
வைத்தார் கலைஞர்.

1984 ஆகஸ்ட் 8 நாடாளுமன்றம் முன்பு திமுக MP வைகோ மற்றும் L.கணேசன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர்.

தொடர்ந்து இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புமாறு திமுக தலைமையில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.அதிமுகவினரே தமிழ் உணர்வால் திமுக போராட்டத்தில்
கலந்துக்கொள்ளும் அளவுக்கு தீவிரம் அடைந்தது.

இறுதியாக யாரும் செய்யாத ஒரு முடிவை எடுத்தார் கலைஞர்.ஆம் தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜினாமா செய்தார் கலைஞர்.

அதோடு நிற்கவில்லை கலைஞர்
1983 ஆகஸ்ட் 23 மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய கலைஞர் ஒரு கோரிக்கையை முன் வைத்தார் "மத்திய அரசு இராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துகொடுத்தால் திமுக அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது" என்று அறிவித்தார்.

இது காங்கிரசை விட எம்.ஜீ.ஆருக்கு மிகவும் நெருடலாக இருந்தது
எம்.ஜி.ஆர் தன் இமேஜை காப்பாற்ற ஈழ அரசியலில் தீர்க்கமாக நுழைகிறார்.அதிமுகவும் போராட்டத்தை திமுக போல் தொடங்கியது.

இதன் விளைவாக போராட்டக்குழுக்களுக்கு ஆயுத பயிற்சி வழங்க இந்திரா அரசு முடிவு செய்தது.

இந்த காலக்கட்டத்தில்தான் அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் கலைஞர்.
கூட்டத்தின் நோக்கம் பிரிந்து நின்று சண்டையிடுவதால் எந்த பயனும் இல்லை ஒற்றுமையாக போராடினால்தான் எதிரியை வீழத்த முடியும்.எனவே சகோர சண்டையை கைவிட்டு ஒற்றுமையாக போராட செய்வதை வலியுறுத்தவே கலைஞர் அழைத்திருந்தார்.

தூங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் கலைஞர் அழைத்த அடுத்த நாள் தன்னை வந்து
சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.

ஒருபக்கம் தங்களுக்காக பதவியை இழந்த கலைஞர் மறுப்பக்கம் அதிகாரம் உள்ள எம்.ஜி ஆர்.ஒருவரை சந்தித்து இன்னொருவரை சந்தித்தால் மனக்கசப்பு ஏற்படும் என்ற சூழ்நிலை அன்று.

LTTE,PLOT தவிர மற்ற இயக்கங்கள் கலைஞரை சந்தித்தனர்.

இவர்கள் இருவரையும் நாடுக்கடத்த
இருந்த இந்திரா அரசை தடுத்து நிறுத்திய கலைஞரை புறக்கணித்தனர் பிரபாகரனும் மகேஷ்வரனும்.

கலைஞரை சந்தித்ததால் மறுநாள் LTTEற்கு மட்டும் அழைப்பு விடுத்து மற்ற இயக்கங்களை வர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.

அதோடு நிற்காமல் தன்னை மதிக்காத மற்ற இயக்கங்களை பலி வாங்க
2 கோடி ரூபாய் பணமும் கொடுத்தார்.மேலும் அந்த சந்திப்பின் போது PLOT இயக்கத்தின் சந்திப்பையும் ரத்து செய்ய வைத்தனர் புலிகள்.

தன் சுய egoவிற்காக இயக்கங்கள் ஒன்றுக்கூடுவதை தடுத்தார் எம்.ஜி ஆர்.ஈழப்போரட்டத்தின் வீழ்ச்சி இங்கு இருந்தே தொடங்கியது.

இந்திரா காந்தி படுகொலை

ராஜிவ் வருகை
வெறியுறவு கொள்கை மாற்றம்.

1985 இந்தியா வெடிப்பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கிறது.அப்போது கலைஞர் வைகோவை நாடாளுமன்றத்தில் எதிர்த்து பேச வைக்கிறார்.அதற்கு ராஜிவ் "அந்த தோட்டாவில் ஒன்றும் தமிழர்களை கொல்ல என்று " எழுதவில்லை என்கிறார்

அதற்கு கலைஞர் மறுநாள் " உங்கள் தாயாரை
சுட்டத்தோட்டாவில் கூடத்தான் இந்திரா என்று எழுதவில்லை" என்று பதிலடி கொடுத்தார்

அடுத்தக்கட்டமாக ஈழத்தமிழர் பாதுக்காப்பு மற்றும் உரிமை சார்ந்த அரசியலை ஒரு குடையின் கீழ் கொண்டுவர "TESO"அமைப்பை உருவாக்கினார் கலைஞர்.அதன் தலைவராகவும் அவரே நீடித்தார்.

அந்த அமைப்பில் திமுக,Forward block
தி.க, சுப.வீரப்பாண்டியன், நெடுமாறன் மேலும் பலர் இருந்தனர்.எல்லா ஈழத்தமிழர் பிரச்சனைக்கும் இந்த அமைப்பு கூடி எடுக்கும் முடிவே இறுதியானது என்று கொள்கை வகுக்கப்பட்டது.இது சிதறிக்கிடந்த ஈழ ஆதரவாளர்களை ஒரு குடையின் கீழ் இணைத்தது.

இந்த சமையத்தில் இலங்கை
அரசுக்கும் போராளிகளுக்கும் ஒரு பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தது இந்திய அரசு.

1985 ஜூலை 5 பூட்டான் நாட்டில் கூட்டம் நடந்துக்கொண்டிருக்கும்போதே சிங்கள இராணுவம் தமிழர்கள் பகுதியில் குண்டு மழை பொழிந்தது.

கலைஞர் ராஜிவ் காந்திக்கு அவசரமாக ஒரு தந்தியை அனுப்பினார்.இலங்கை
அரசாங்கத்தின் நாடகத்தை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இங்கு கூட்டம் நடந்துக்கொண்டிருக்கும்போதே தமிழர்களை கொன்றொழித்துக்கொண்டிருக்கிறது சிங்கள இராணுவம் எனவே போராளி குழுக்களை திருப்பி அனுப்புமாறு குறிப்பிட்டிருந்தார்.

போராளி குழுக்களும் வெளியேறினர்.இந்திய அரசின் கோரிக்கையை ஏற்காததால்
போராளி குழுக்களின் பிரதிநிதிகளான ஆண்ரன் பாலசிங்கம் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரை ஆகஸ்ட் 23 ஆம் தேதி லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது இந்திய அரசு.

இதை எதிர்த்து ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தினார் கலைஞர்.மேலும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழகத்தில்
ஒரு ரயில் ஓடினாலும் அங்கு தமிழன் இல்லை என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் போராட்டத்துக்கு உசுப்பேத்தினார் கலைஞர்.

தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வீரியம் அடைந்தது.கலைஞர் உட்பட திமுக தலைவர்கள் அனைவரும் கைது செய்தார் எம்.ஜி ஆர்.போராட்டம் மேலும் வலுவானது.

இறுதியில் ராஜிவ் பின்வங்கினார்
1986 மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதலை நடத்தியது சிங்கள இராணுவம்.

அப்போதுதான் கலைஞர் ஒரு முடிவு எடுத்தார் TESO அமைப்பை இந்தியா முழுவதும் எடுத்துச்சென்று இந்தியா முழுவதும் உள்ள கட்சிகளிடம் ஈழ அதரவு பெறுவது.

இதுதான் தனி நாடு கிடைப்பதற்கு ஒரே தீர்வு என்று நினைத்தார் கலைஞர்
1986 மார்ச் 26 மதுரையில் TESO மாநாட்டை நடத்தி அதில் இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்திருந்தார் கலைஞர்.இவர்களும் தமிழீழ போராளி குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.

ஈழப்போராட்ட வரலாற்றிலேயே இந்த முன்னெடுப்புதான் ஈழத்துக்கான கனவை நனவாக்கும் Diplomatic
Strategyஆக கருத்தப்பட்டது.அந்த கூட்டத்தில் ஈழம் அமைவது குறித்தும் ஈழத்தமிழர்கள் படும் துன்பத்தை பற்றியும் எடுத்து உரைக்கப்பட்டது.இறுதியில் ஈழம் அமைக்க உறுதி ஏற்போம் என்ற வாசகம் கலைஞரால் படிக்கப்பட அது அனைத்து தலைவர்களாலும் வழிமொழியப்பட்டது.

காங்கிரஸ் அல்லாத பெருன்பான்மை
இந்திய நாட்டு கட்சியின் ஆதரவை இதன் மூலம் ஈழம் அமைவதற்கு ஆதரவாக கூட்டி வைத்திருந்த கலைஞர் அதே மாநாட்டில் போராளி குழுக்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.அது இனிமேலாவது சகோதர யுத்தத்தை கைவிட்டு ஒற்றுமையாக போராடுங்கள் என்பது.

ஆனால் இந்த கூட்டம் முடிந்த இரண்டாவது நாள்
விடுதலை புலிகள் இயக்கத்தால் TELO அமைப்பின் தலைவர் சபாரத்தினம் கொலை செய்யப்பட்டார்.இதற்கு காரணம் TELO அமைப்பு இதற்கு முன்பு LTTE இயக்கத்தின் தளபதி லிங்கத்தை கொலை செய்தது.

எதுவாயினும் எம்.ஜி.ஆர் தனது EGOவால் இயக்கங்களை பிரித்து ஈழப்போராட்டத்தை பின்னடைவு ஏற்படுத்தியதுப்போல்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🤴Harappan🤴

🤴Harappan🤴 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @haraappan

May 17
#Part3 #திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக

சகோதர யுத்தத்தால் தங்களுக்கு தாங்களே ஈழப்போராட்டத்தை பின்னோக்கி இழுத்து சென்றன அனைத்து இயக்கங்களும்.

இந்திய தலைவர்களின் அதிருப்தியால் TESOவை கலைத்தார் கலைஞர்.

கலைஞர் எடுத்த political move சகோதர யுத்தத்தால் நாசமாகின.
இதற்கிடையில் ஜெயவர்தனேவை வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க பணிய வைத்தார் ராஜிவ் காந்தி.இதை விடுதலை புலிகள் கடுமையாக எதிர்த்தனர்.எம்.ஜி.ஆரை அழைத்து புலிகளிடம் பேச வைத்தார்.பலனளிக்கவில்லை எனவே ராஜிவ் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி சில வாக்குறுதிகளை தந்தார்.இதனையடுத்து 1987 ஜூலை 29
ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் நிறைவேறியது.

இதன்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புலிகளும் தங்கள் ஆயுதத்தை ஒப்படைத்தனர்.ஆனால் ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயல்பட இந்தியா அமைதி காத்தது.திலீபன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.இதே சமயத்தில் ஆயுதம் வைத்திருந்ததாக
Read 25 tweets
May 17
#திராவிடம் #ஈழம் #பெரியார் #அண்ணா #கலைஞர் #திமுக #Thread

திமுகவும் ஈழப்போராட்டமும்

1951 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சாலமன் பண்டார நாயகா விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். தொடக்கத்தில் சிங்களமும் தமிழும் ஆட்சி மொழியாக்கப்படுமென்று அறிவித்தார்.
ஆனால், பின்னர் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்று கொள்கையை மாற்றிக் கொண்டார். இதன் எதிரொலியாக ஐக்கிய தேசியக் கட்சியும் அதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி எனத் தீர்மானித்தது.

1956 இல் நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி
பெற்றது சாலமன் பண்டார நாயகா பிரதமரானார். 1956 ஜுன் 5 ஆம் நாள் தமிழர்களுக்குக் கொடும் தீங்கினைத் தந்த நாளாகும். அன்றுதான் ‘சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி’ என்ற தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது

தமிழ்த் தலைவர்களும், தமிழ் மக்களும் அதனை எதிர்த்து உண்ணாவிரத அறப்போர்
Read 31 tweets
Dec 29, 2021
#SunTV #Sungroup

தமிழ்ல எல்லாம் எவன் satellite TV பார்ப்பான் என்று அவமானப்படுத்தி அனுப்பிய Satellite TV NETWORK-ஐ 30 வருடம் தென் இந்தியாவில் நுழையவிடாமல் பெரிய சாம்ராஜ்ஜியம் கட்டிய எழுப்பிய கலாநிதி மாறன் அவர்கள் சாதித்தது எப்படி.
அமெரிக்காவில் MBA படிக்கும்போது அங்கே Satellite TV நிகழ்ச்சிகள் மக்களிடம் பிரபலம் அடைந்து வருவதை கவனித்த கலாநிதி மாறன் இந்தியாவில் Satellite TV தொடங்க வேண்டும் என்ற கனவை அப்போதே வளர்த்துக்கொண்டார்.படிப்பை முடித்த பிறகு தமிழ்நாட்டில் Sumangali Publications என்ற நிறுவனத்தில்
Circulation clerk ஆக பணியில் சேருகிறார்.சில வருடம் அந்த அனுபவத்தை வைத்து தனது சொந்த செலவில் Poomalai என்ற Video magazine ஆரம்பித்தார்.நிகழ்ச்சிகளை தொகுத்து அதை வீடியோ வடிவில் விற்பனை செய்வதே அதன் concept.அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் media என்பது அரசு நிறுவனமான Doordharsan
Read 14 tweets
Dec 25, 2021
மதுரை அருகே மாங்குளத்தில் கிடைத்த இந்த கல்வெட்டின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. அதாவது முதல் சமஸ்கிருத கல்வெட்டுக்கும் 200 ஆண்டுகள் பழைமையானது, அசோகன் பிராகிரத பிராமி கல்வெட்டுக்கும் 100 ஆண்டுகள் பழைமையானது.இந்திய துணைக்கண்டத்தில் 4 வது பழையான கல்வெடு.முதல் மூன்றும்
தமிழ்மொழியில்தான்.

சரி கல்வெட்டு என்ன சொல்கிறது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது பணியாளர்களான கடலன் மற்றும் வழுதியிடம் சமண முனிவர்களுக்கு படுக்கை உருவாக்கி கொடுத்தான் என்பதே கல்வெட்டு.

அதாவது கடைச்சங்க காலமான கி.மு.3 ஆம் நூற்றாண்டே முதலே சமணம் தமிழகத்தில் இருந்துள்ளது.
கடைச்சங்க காலத்திற்கு முன் கிடைத்த கி.மு.6 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.4 ஆம் நூற்றாண்டு கல்வெட்டும் (மொத்தம் 3 தான் இந்திய துணைக்கண்டத்தில் கிடைத்துள்ளது 3ம் தமிழியில்) எந்த மத சம்பந்தமான கல்வெட்டும் இல்லை.

நமது இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் 4 சமண பெளத்த நூல்கள்,
Read 7 tweets
Dec 6, 2021
#Ambedkar #Myleader

இந்திய அரசியலமைப்பு சட்ட மசோதாவை நிறைவேற்றி அதன் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருந்த காலம்.அன்று ஒரு மாலை அம்பேத்கர் தீவிரமாக பல புத்தகங்களை புரட்டிப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்.அவரின் வீட்டு பணியாளரான ரட்டு என்றும் இல்லாத அளவு இன்று அம்பேத்கர்
மிகவும் கவலையாகவும் படப்படப்புடனும் இருப்பதை பார்க்கிறார்.வேலைநேரம் முடிந்துவிட்டதால் விடைப்பேற வேண்டி அம்பேத்கரிடம் "சாப் என் வேலை முடிந்துவிட்டது நான் கிளம்புகிறேன் உங்களுக்கு வேறு எதாவது உதவி வேண்டுமா" என்கிறார்.அப்போது மாலை 6 மணி.
அன்பேத்கர் "ரட்டு எனக்கு ஒரு கப் சாய் மட்டும் வைத்துவிட்டு போக முடியுமா " என்கிறார்.ரட்டுவும் ஒரு கப் சாய் மேஜையின் மீது வைத்துவிட்டு விடைப்பெறுகிறார்.அடுத்த நாள் காலை 6 மணிக்கு ரட்டு வந்துப்பார்க்கும்போது திடுக்கிட்டு நிற்கிறார்.மேஜை மீது வைக்கப்பட்ட தேநிர் குடிக்கப்படவில்லை
Read 18 tweets
Oct 13, 2021
#Kanniyakumari #Thackaley

கனிம வள கொள்ளை

உண்மை நிலவரம் என்ன ?

நாம் தமிழர் சீமானின் நரித்தன அரசியல் என்ன?

திமுக என்ன செய்தது ?

அதிமுக என்ன செய்தது?

வாருங்கள் பார்ப்போம்
இந்த கனிம வள கொள்ளை எதோ திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது போலவும் திமுக காரர்கள் தான் கனிம வளங்களை கொள்ளையடிப்பது போலவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரகடனம் செய்கின்றனர்.

உண்மையில் இந்த கனிம வள கொள்ளை சீமானின் சித்தப்பா எடப்பாடியாரால் 2019 ஆம் ஆண்டு அனுமதி வாங்கிஅ
ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது அதை எதிர்த்து போராடியவர்கள் திமுக மற்றும் கம்யூனிஸ்டுகள்.

அந்த பகுதியானது வான்பரப்பளவில் 10 சதுர கி.மீ பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது என்வே அந்த 10 சதுர கி.மீ பரப்பளவில் எந்த கல் குவாரியோ, மரவெட்டுதலோ , தொழிற்சாலைகளை அமைப்பதோ கூடாது
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(