#மஹாபெரியவா சொல்கிறார் “அம்மா குழந்தைக்கு பால் கொடுத்து ஆளாக்கிற மாதிரி, அம்பாள் குரு வடிவாக வந்து ஞானப் பால் கொடுத்து, ஒருத்தனோட அக்ஞானத்தைப் போக்கறா. அதுனாலதான் அம்பாளோட உபாசனைக்கு ஸ்ரீவித்யா உபாசனைன்னு பேர்”
(இது உண்மையில் பெரியவாளுக்கு தான் பொருந்தும்.) அந்த
ஞானத்தை அம்பாள்தான் கொடுக்கிறாள் என்பதற்கு பெரியவா #கேனோபநிஷத்தில் இருந்து ஒரு சம்பவம் சொல்கிறார். அதாவது தேவர்களுக்கே கூட அம்பாள் தான் ஞானத்தைக் குடுத்தாள் என்பதை. ஒரு தடவை தேவாசுர யுத்தத்தின் போது, தேவர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள். வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ஒருவரை
ஒருவர் புகழ்ந்து கொண்டு அதிக ஆட்டம் பாட்டம்! பரமாத்மா பார்த்தாராம். இது என்னடா, இந்த தேவர்களுக்கே ஜெயிச்ச உடனே, அசுர குணம் வந்துடும் போல இருக்கே, என்று நினைத்து, அப்படி கெட்டுப் போகக் கூடாது என்று பக்கத்திலேயே ஒரு அடிமுடி காண முடியாத மாதிரி ஜோதி ஸ்வரூபமா ஒளி வடிவமா பகவான் காட்சி
கொடுக்கிறார். இது என்னவென்று புரியாமல் அதை யக்ஷம் என்று நினைத்தனர். அந்த யஷத்திடம் தேவர்கள் முதலில் அக்னியை அனுப்புகிறார்கள். அக்னி போயி நீ யாருன்னு கேட்பதற்குள், அந்த யஷம் அக்னிய பாத்து நீ யாரு என்று கேட்கிறது. உடனே அக்னி “என் பேர் ஜாதவேதஸ். அக்னி பகவான்”, என்று சொன்ன உடனே, உன்
சக்தி என்ன என்று அந்த யஷம் கேட்கிறது. அதுக்கு அக்னி பகவான், நான் எதையும் பஸ்பம் ஆக்கி விடுவேன் என்றார். உடன், யக்ஷம் ஒரு துரும்பை கீழ போட்டு இதை எரி பாக்கலாம் என்றது. அக்னி தன் முழு பலத்தையும் பயன்படுத்தி அதை எரிக்கப் பாக்கிறார். முடியவில்லை. அக்னி பகவான் வெட்கப்பட்டு திரும்பி
வந்துவிடுகிறார். அப்புறம் வாயுவை அனுப்புகிறார்கள். வாயு அதனிடம் போன உடனே, நீ யார் என்று யக்ஷம் கேட்கிறது. வாயு, என் பேர் மாதரீஷ்வன், நான் எதையும் புரட்டி போட்டு விடுவேன் என்கிறார். திரும்பவும் யக்ஷம் ஒரு துரும்பை போட்டு, இத தூக்கு பாக்கலாம் என்றது. தன் முழு பலத்தையும் வைத்து அதை
தூக்கப் பார்க்கிறார். வாயு பகவானால தூக்க முடியவில்ல. வாயுவும் வெட்கப் பட்டு திரும்புகிறார். நாம் வெற்றி விழா கொண்டாடும் போது, இந்த ஒரு யக்ஷம் நமக்கு தோல்வியைத் தருகிறதே, நம் பக்கத்தில் மிகுந்த சக்திமானான அக்னி, வாயு இருவரும் தோத்துப் போய் விட்டார்களே என்ற நிலையில் வெற்றிவிழா
பிசுபிசுத்துப் போய் விடுகிறது. அதனுடன் கொஞ்சம் நல்லறிவும் வருகிறது. விநயம் வருகிறது. இந்திரன் பணிவுடன் யக்ஷத்தை நெருங்கி வணங்கினான். அப்பொழுது அந்த யக்ஷம் இருந்த இடத்தில் ஒரு ஸ்திரீ ரூபத்தில், உமா தேவி, ஹைமவதியாக காட்சி கொடுத்தாள் என்று உபநிஷத்தில வருகிறது.“பஹு ஷோபமானா” ரொம்ப
அழகோடு காட்சி கொடுத்தாள். “ஞானம் தான் ஷோபை” என்று ஆதி சங்கரர், ஆச்சார்யாள் இங்கே பாஷ்யம் எழுதி உள்ளார்கள். அப்படி ஞான வடிவமான அம்பாள் தங்கமயமாக ஒளி உருவமாக காட்சித் தந்தாள். அப்போது இந்திரன் “இங்கே இப்போ ஒரு ஜோதி தெரிஞ்சுதே, அது என்ன” என்று கேட்கிறான். அம்பாள் சொல்கிறாள், "அது
தான் பரப்ரம்மம், அகண்டமான சக்தி. அந்த அகண்டமான சக்தியோட துளித்துளி தான் நம் எல்லோரிடமும் உள்ளது. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், மனுஷ்யர்களுக்கும் எல்லார்கிட்ட இருக்கற சக்தியும் அந்த பரப்ரம்மத்தோட சக்தி தான்” என்று ஞானோபதேசம் செய்கிறாள் என்ற உபநிஷத்தில் வந்திருப்பதை சொல்லி
விட்டு பெரியவா சொல்கிறார், “நான் ஸ்ரீகாளஹஸ்திக்கு போயிருந்தேன். அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினேன். அங்கே மலை மேலே ஒரு சஹ்ஸ்ர லிங்கம் கோவில் இருந்தது. அந்த லிங்கத்தை தரிசனம் பண்ணினேன். பக்கத்துலேயே யக்ஷ லிங்கம்னு ஒண்ணு இருக்கு. அது பக்கத்துல இந்திர லிங்கம்னு ஒண்ணு இருக்கு.
காலஹஸ்தில பெரிய கோவிலில் அம்பாள் பெயரும் “ஞான ப்ரஸுனாம்பா” “ஞானப்பூங்கோதை” னு தமிழ்ல சொல்றா. அதுனால இந்த அடிமுடி காணாத ஜோதி ஸ்வரூபம்னு சொன்னவுடன் உங்களுக்கு திருவண்ணாமலை அருணாசலம் ஞாபகம் வந்திருக்கும். ஆனா எனக்கு, இந்த காளஹஸ்தியில் தான் இந்த கேனோபநிஷத் சம்பவம் நடந்து இருக்குனு
தோணறதுனு”
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
Excerpts from valmikiramayanam.in
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கெடு_வைக்கும்_உபிஸ்_கவனத்திற்கு!
திருமுருக #கிருபானந்தவாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக் கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே
‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டுள்ளார். 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்த பொழுது அண்ணாதுரைக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist
வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார். நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார். "மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால், ஆனானப்பட்ட மில்லராலும் அவனை வெற்றி கொள்ள முடியாது" என்று ஒரு சொற்பொழிவில் கூறினார். அவ்வளவு தான். அண்ணாவை இழிவு படுத்திவிட்டதாக
#திமுக ரவுடிகள் அவரை சூழ்ந்து தாக்கினர்கள். மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டு காயமின்றி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன. அவர் பூஜை அறையில் புகுந்து விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வால்மீகி தனது ராமாயணத்தை முடித்ததும் நாரதர் அதை பார்த்தார். நன்றாக உள்ளது ஆனால் அனுமனின் ராமாயணமே சிறந்தது என்றார். இது வால்மீகிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அனுமனின் ராமாயணம் வாழை மரத்தின் 7 அகன்ற இலைகளில் பொறிக்கப்பட்டிருப்பத்தை கொண்டார். அவர் அதை
படித்து, அது மிகவும் சரியானதாக இருப்பதைக் கண்டார். இலக்கணம் மற்றும் சொல்லகராதி, மீட்டர் மற்றும் மெல்லிசை மிக நேர்த்தியாக அமைந்திருப்பதை கண்டார். அவர் மனமுடைந்து அழத் தொடங்கினார். அவ்வளவு மோசமா என்று அனுமன் கேட்டான். இல்லை, மிகவும் அருமையாக உள்ளது என்றார் வால்மீகி. அப்புறம் ஏன்
அழுகிறாய் என்று அனுமன் கேட்டான். ஏனென்றால், உங்கள் ராமாயணத்தைப் படித்த பிறகு என்னுடைய ராமாயணத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்று பதிலளித்தார் வால்மீகி. இதைக் கேட்ட அனுமன், என்னுடையதை இப்போது யாரும் படிக்க மாட்டார்கள் என்று வாழை இலைகளைக் கிழித்தார். ஏன் கிழித்தீர்கள் என்றார்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாதவேந்திர பூரி/மாதவேந்திர புரி கோஸ்வாமி என்றும் அழைக்கப்படுபவர், 14 ஆம் நூற்றாண்டு வைஷ்ணவ துறவி. அவர் மத்வாச்சாரியாரின் த்வைத வேதாந்தத்தில் தீட்சை பெற்றவர். சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைணவத்தில் மிகவும் மதிக்கப் பட்டார். பிருந்தாவன மதுராவில் வைணவ மையத்தை
நிறுவியவர். சைதன்யாவிற்கு முன்பே கௌடிய வைணவ சித்தாந்தத்தை அவர் போதித்ததாக நம்பப்படுகிறது. ஒரு நாள் கோபாலன் அவர் கனவில் தோன்றி அவர் மறைந்திருக்கும் இடத்தை வெளிப்படுத்தி, நான் தற்போது மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளிகொணர்ந்து, கோவர்த்தன மலையின் உச்சியில் மீண்டும் நிறுவுங்கள்
என உத்தரவிட்டார். கோபாலன் கனவில் கூறி அந்த இடத்தில் மறைந்திருந்த விக்ரகம் வெளிக் கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்த கோவிந்த குளத்தின் நீரால் எண்ணற்ற குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் கோவர்த்தன மலையில் நிறுவப்பட்டார். அங்கு ஒரு அழகான கோயில் எழுப்பப்பட்டு சாஸ்திர விதிகளின்படி
#கணியன்_பூங்குன்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார். கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
பாடல், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு, இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தால் வெளியிடப் பட்டுள்ளது. 2019-இல் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பாடலின் ஓரிரு வரிகள் மட்டும் பிரபலமாகியுள்ளது. முழு
பாடலும் அதன் பொருளும் பலருக்குத் தெரியாது. முழு பாடல் வரிகள், நம் வாழ்க்கை தத்துவத்தை இந்து மத நம்பிக்கைகளின் படி எளிதாக விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்
#MahaPeriyava
Many decades back, when Maha Periyava was camping in Madras, He visited the house of Madurai Mani Iyer, a doyen of Carnatic music, early in the morning without notice. Mani Iyer was doing his Sadhana practicing Sangeetha, deeply immersed in it. When someone
announced that MahaPeriyava was entering his house, Mani Iyer was stunned and it took some time for him to react. When Iyer came and met the Sage, the Sage asked him to sing a song. Madurai Mani Iyer replied hesitatingly that he had not even had his bath. The Sage replied “Since
you always swim in the Sangeetha Sagara (ocean of music), there is no need for you to have another bath. Go ahead with your song! Moved to tears, Madurai Mani Iyer fell at His feet, crying “Parmeshwara!” “Now, start” said Periyava. “You saw the mridangam man leave just now. How
#மகாபெரியவா
இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள #காளஹஸ்தியை அறியாதவர் இருக்க முடியாது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காளஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார். சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தலம் திருகாளஹஸ்தி அழைக்க படுகிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகாபெரியவா ஒரு முறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.
ஒரு நாள் அந்த பக்தர் பூஜை அறையில் பூஜையை முடித்துவிட்டு பிரசாதமாக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில்
அள்ளி போட்டது தான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது. வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார். வந்தது சாக்ஷாத் மகா பெரியவா. வாய் நிறைய கற்கண்டை வைத்துக் கொண்டு இருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை. பெரியவரை பலமுறை