#கணியன்_பூங்குன்றனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தார். கணியன் பூங்குன்றனாரின்  புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
பாடல், அமெரிக்காவின் டர்ஹாம் சிம்பொனி உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்களால் பாடப்பட்டு, இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்தால் வெளியிடப் பட்டுள்ளது. 2019-இல் சிகாகோவில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டின் கீதமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பாடலின் ஓரிரு வரிகள் மட்டும் பிரபலமாகியுள்ளது. முழு
பாடலும் அதன் பொருளும் பலருக்குத் தெரியாது. முழு பாடல் வரிகள், நம் வாழ்க்கை தத்துவத்தை இந்து மத நம்பிக்கைகளின் படி எளிதாக விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே;
வாழ்தல் இனிது
என
மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே;
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்
ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே.

– கணியன் பூங்குன்றனார்

பொருள்:

யாதும் ஊரே யாவரும் கேளிர்
எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால், இந்த வாழ்வு தான் நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது!

தீதும் நன்றும் பிறர் தர வாரா
தீமையும், நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை நம் வினைப்பயன் எனும் உண்மையை உணர்ந்தால், சக மனிதர்களிடம், விருப்பு வெறுப்பில்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.

நோதலும் தனிதலும் அவற்றோ ரன்ன
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை. மனம் பக்குவப் பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்.
சாதல் புதுமை யில்லை;
பிறந்த நாள் ஒன்று உண்டெனில் இறக்கும் நாளும் ஒன்று உண்டு. இறப்பு புதியதல்ல அது இயற்கையானது, எல்லோருக்கும் பொதுவானது. இந்த உண்மையை உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால் எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.

வாழ்தல்இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னாது என்றலும் இலமே;
இந்த வாழ்க்கையில் எது, எவர்க்கு, எப்போது, என்னாகும் என்று எவர்க்கும் தெரியாது. இந்த வாழ்க்கை மிகவும் நிலை அற்றது. அதனால் இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம், துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து
இயல்பாய் வாழ்வோம்.

மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாதுகல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்;
இந்த வானம் நெருப்பாய் மின்னலையும் தருகிறது, நாம் வாழ மழையையும் தருகிறது. இயற்கை வழியில்அது அது அதன்
பணியை செய்கிறது. ஆற்று வெள்ளத்தில் கற்களோடு அடித்து முட்டி செல்லும் படகு போல வாழ்க்கையும் சங்கடங்களில் அவர் அவர் ஊழ்படி அதன் வழியில் அடிபட்டு போய் கொண்டு இருக்கும். இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.

ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும்
இலமே;
இந்த தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து மிகவும் வியந்து பாராட்டவும் வேண்டாம், சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வு அவரவர்க்கு.
அவற்றில் அவர் அவர்கள் பெரியவர்கள்.
இதை விட வேறு எவர் வாழ்க்கைப் பாடத்தை அழகாக சொல்லித் தர முடியும்?
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 24
#கெடு_வைக்கும்_உபிஸ்_கவனத்திற்கு!
திருமுருக #கிருபானந்தவாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக் கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே
‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டுள்ளார். 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்த பொழுது அண்ணாதுரைக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist Image
வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார். நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார். "மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால், ஆனானப்பட்ட மில்லராலும் அவனை வெற்றி கொள்ள முடியாது" என்று ஒரு சொற்பொழிவில் கூறினார். அவ்வளவு தான். அண்ணாவை இழிவு படுத்திவிட்டதாக
#திமுக ரவுடிகள் அவரை சூழ்ந்து தாக்கினர்கள். மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டு காயமின்றி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌. அவர் பூஜை அறையில் புகுந்து விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையும்
Read 16 tweets
May 24
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வால்மீகி தனது ராமாயணத்தை முடித்ததும் நாரதர் அதை பார்த்தார். நன்றாக உள்ளது ஆனால் அனுமனின் ராமாயணமே சிறந்தது என்றார். இது வால்மீகிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அனுமனின் ராமாயணம் வாழை மரத்தின் 7 அகன்ற இலைகளில் பொறிக்கப்பட்டிருப்பத்தை கொண்டார். அவர் அதை Image
படித்து, அது மிகவும் சரியானதாக இருப்பதைக் கண்டார். இலக்கணம் மற்றும் சொல்லகராதி, மீட்டர் மற்றும் மெல்லிசை மிக நேர்த்தியாக அமைந்திருப்பதை கண்டார். அவர் மனமுடைந்து அழத் தொடங்கினார். அவ்வளவு மோசமா என்று அனுமன் கேட்டான். இல்லை, மிகவும் அருமையாக உள்ளது என்றார் வால்மீகி. அப்புறம் ஏன் Image
அழுகிறாய் என்று அனுமன் கேட்டான். ஏனென்றால், உங்கள் ராமாயணத்தைப் படித்த பிறகு என்னுடைய ராமாயணத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்று பதிலளித்தார் வால்மீகி. இதைக் கேட்ட அனுமன், என்னுடையதை இப்போது யாரும் படிக்க மாட்டார்கள் என்று வாழை இலைகளைக் கிழித்தார். ஏன் கிழித்தீர்கள் என்றார்
Read 7 tweets
May 23
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மாதவேந்திர பூரி/மாதவேந்திர புரி கோஸ்வாமி என்றும் அழைக்கப்படுபவர், 14 ஆம் நூற்றாண்டு வைஷ்ணவ துறவி. அவர் மத்வாச்சாரியாரின் த்வைத வேதாந்தத்தில் தீட்சை பெற்றவர். சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைணவத்தில் மிகவும் மதிக்கப் பட்டார். பிருந்தாவன மதுராவில் வைணவ மையத்தை
நிறுவியவர். சைதன்யாவிற்கு முன்பே கௌடிய வைணவ சித்தாந்தத்தை அவர் போதித்ததாக நம்பப்படுகிறது. ஒரு நாள் கோபாலன் அவர் கனவில் தோன்றி அவர் மறைந்திருக்கும் இடத்தை வெளிப்படுத்தி, நான் தற்போது மறைந்திருக்கும் இடத்தில் இருந்து வெளிகொணர்ந்து, கோவர்த்தன மலையின் உச்சியில் மீண்டும் நிறுவுங்கள்
என உத்தரவிட்டார். கோபாலன் கனவில் கூறி அந்த இடத்தில் மறைந்திருந்த விக்ரகம் வெளிக் கொண்டு வரப்பட்டது. அங்கு இருந்த கோவிந்த குளத்தின் நீரால் எண்ணற்ற குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின் கோவர்த்தன மலையில் நிறுவப்பட்டார். அங்கு ஒரு அழகான கோயில் எழுப்பப்பட்டு சாஸ்திர விதிகளின்படி
Read 11 tweets
May 23
#MahaPeriyava
Many decades back, when Maha Periyava was camping in Madras, He visited the house of Madurai Mani Iyer, a doyen of Carnatic music, early in the morning without notice. Mani Iyer was doing his Sadhana practicing Sangeetha, deeply immersed in it. When someone
announced that MahaPeriyava was entering his house, Mani Iyer was stunned and it took some time for him to react. When Iyer came and met the Sage, the Sage asked him to sing a song. Madurai Mani Iyer replied hesitatingly that he had not even had his bath. The Sage replied “Since
you always swim in the Sangeetha Sagara (ocean of music), there is no need for you to have another bath. Go ahead with your song! Moved to tears, Madurai Mani Iyer fell at His feet, crying “Parmeshwara!” “Now, start” said Periyava. “You saw the mridangam man leave just now. How
Read 5 tweets
May 22
#மகாபெரியவா
இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள #காளஹஸ்தியை அறியாதவர் இருக்க முடியாது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காளஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார். சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தலம் திருகாளஹஸ்தி அழைக்க படுகிறது.
இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகாபெரியவா ஒரு முறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் அவருடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.
ஒரு நாள் அந்த பக்தர் பூஜை அறையில் பூஜையை முடித்துவிட்டு பிரசாதமாக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில்
அள்ளி போட்டது தான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது. வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார். வந்தது சாக்ஷாத் மகா பெரியவா. வாய் நிறைய கற்கண்டை வைத்துக் கொண்டு இருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை. பெரியவரை பலமுறை
Read 8 tweets
May 22
#மஹாபெரியவா சொல்கிறார் “அம்மா குழந்தைக்கு பால் கொடுத்து ஆளாக்கிற மாதிரி, அம்பாள் குரு வடிவாக வந்து ஞானப் பால் கொடுத்து, ஒருத்தனோட அக்ஞானத்தைப் போக்கறா. அதுனாலதான் அம்பாளோட உபாசனைக்கு ஸ்ரீவித்யா உபாசனைன்னு பேர்”
(இது உண்மையில் பெரியவாளுக்கு தான் பொருந்தும்.) அந்த
ஞானத்தை அம்பாள்தான் கொடுக்கிறாள் என்பதற்கு பெரியவா #கேனோபநிஷத்தில் இருந்து ஒரு சம்பவம் சொல்கிறார். அதாவது தேவர்களுக்கே கூட அம்பாள் தான் ஞானத்தைக் குடுத்தாள் என்பதை. ஒரு தடவை தேவாசுர யுத்தத்தின் போது, தேவர்கள் வெற்றி பெற்று விடுகிறார்கள். வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். ஒருவரை
ஒருவர் புகழ்ந்து கொண்டு அதிக ஆட்டம் பாட்டம்! பரமாத்மா பார்த்தாராம். இது என்னடா, இந்த தேவர்களுக்கே ஜெயிச்ச உடனே, அசுர குணம் வந்துடும் போல இருக்கே, என்று நினைத்து, அப்படி கெட்டுப் போகக் கூடாது என்று பக்கத்திலேயே ஒரு அடிமுடி காண முடியாத மாதிரி ஜோதி ஸ்வரூபமா ஒளி வடிவமா பகவான் காட்சி
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(