#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இளைஞன் மாரி ஒரு வெள்ளிக் கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்க ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை
ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கேயே அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது. அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன. அய்யா, இந்த வெள்ளியை
எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும் என்று கொல்லனிடம் கேட்டான் மாரி. இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும், வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும் என்று அதிலிருந்து பார்வையை
எடுக்காமல் சொன்னான் கொல்லன். இளைஞனுக்கு உடனே ஒரு சந்தேகம்! அது சுத்தமாகி விட்டது, சூடு செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டான். எப்போது என் முகம் தெளிவாக வெள்ளியில் தெரிகிறதோ அப்போது வெள்ளி முழுமையாகத் தூய்மையாகி விட்டது என்று அர்த்தம், உடனடியாக
நிறுத்தி விடுவேன் என்றான் கொல்லன். ஸ்ரீ கிருஷ்ணனாகிய கொல்லனிடம் நம் வாழ்க்கையை ஒப்படைத்து, மிக அழகான நிலைமைக்கு மாற்றச் சொல்லி நாம் இடைவிடா பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் வாழ்வின் பொருளே அது தான். இந்த உலகில் நாம் ஜென்மம் எடுப்பதே ஒரு உயர்வான நிலைக்கு மாறத்தான். வந்தபடியே உலகில்
இருந்து விடை பெற்றால் அப்படிப்பட்ட வாழ்வில் என்ன அர்த்தமுள்ளது? இதையே திருவள்ளுவரும் ஒரு குறளில் அழகாகச் சொல்கிறார்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
(நெருப்பிலே இட்டுச் சுடச் சுடத் தங்கம் ஒளி விடுவது போல துன்பம் வருத்த வருத்த தவம் செய்பவரின்
மெய்யறிவு மிகும்)
எனவே வாழ்க்கையின் வெப்பம், கஷ்டம் தாளாமல் வருத்தப்படும் போதெல்லாம் இந்த உவமையை நாம் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஸ்ரீ கிருஷ்ணன் கண்காணிப்பில் இருக்கிறது. இந்த வெப்பம் நம் வாழ்க்கையை அழிப்பதற்காக அல்ல, ஒரு அழகான ஆபரணம்
ஆக்குவதற்காகத் தான். இது புரியும் போது வெப்பத்தில்/கஷ்டத்தில் சுருண்டு விட மாட்டோம். நாம் ஆபரணமாகிக் கொண்டிருக்கிறோம் என்று புரிதலுடனும், நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக் கொள்வோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வித்தியாசமான #தட்சிணாமூர்த்தி திருக்கோலங்கள் 1. மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் சாலையில் 15 கிமீல் உள்ளது கழுகத்தூர். இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும். 2. சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிமீ தொலைவில் உள்ளது சிவபுரி எனும் திருநெல்வாய். இந்த ஊரை அடுத்த திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட
பளிங்குக் கல்லால் ஆனது. 3. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
#மகாபெரியவா "கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
"வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
"அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல
சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னார்கள்.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"
மௌனமாக இருந்தார்கள். அவரே பதில் சொல்வார் என்று தெரியும்.
"இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு
தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும், தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத் தான். மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசண
#அறிவோம்_மகான்கள்#அறிவோம்_திருத்தலங்கள்#திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும்
சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்கொண்டிருந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை
வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் பட்டுவிட்டன. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர்.
#MahaPeriyava One of my most vivid memories which changed the entire course of my life was the granting of permission by Maha Periyaval for me to go abroad. It was around April or May 1960. The first batches of students for the prestigious Commonwealth Scholarships were to be
selected. The scholarship scheme was a unique decision from the Commonwealth Prime Ministers’ Conference at Colombo a few weeks earlier. I appeared for the interview at Delhi and a few days later I received intimation of being selected for neurosurgical training at Edinburgh for
two years. I informed my father (Dr V.Subramaniam) who was at Trichy. In those days I knew that Maha Periyaval did not favour the idea of young boys from orthodox families going abroad for a long period of time. My father told me that I could go abroad only if Maha Periyaval gave
#ஶ்ரீராமானுஜர்
எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. அவை நவரத்தினங்களாக கருதப்படுகின்றன. #ஸ்ரீபாஷ்யம் அவரின் மிகச் சிறந்த படைப்பு. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் இது. #வேதாந்த_சங்கரஹம். உபநிஷத்துகள்
புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு. #வேதாந்த_சாரம், #வேதாந்த_தீபம் இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது. #கீதா_பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை. #நித்யக்கிரந்தங்கள்.
அன்றாட வைதீகச் சடங்குகளும், பூஜை முறைகளும். பக்தியின் வெவ்வேறு நிலைகளை விளக்கும் நூல். #கத்யத்ரயம் - #சரணாகதிகத்யம், பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. #ஸ்ரீரங்ககத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. #வைகுண்டகத்யம் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான
#மகாபெரியவா
என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் ஓன்று சேர்ந்து எங்களுடைய பூர்வீக கிராமமான (தஞ்சாவூர் பந்தனை நல்லூர் அருகிலுள்ள) ஸ்ரீரங்கராஜபுரத்தில் மஹாவாமிகளுக்கு ஒரு திருக்கோயில் அமைத்து 2021 மார்ச் 10ஆம் தேதியன்று காஞ்சி பால பெரியவா முன்நிலையில் குருவருளுடன் கும்பாபிஷேகம்
செய்வித்தோம். அதன் பிறகு என் தந்தை பெயரில் S.V. Raja mani Iyer Educational & Chartable Trust என்ற ஒரு டிரஸ்டை தொடங்கி செவ்வனே நிர்வகித்து வருகிறோம். அடுத்த கட்டமாக தேவையான வசதிகளுடன் மஹாஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் ஒரு கோசாலை தொடங்கப் பட்டது. அதன் முதல் கட்டமாக 3 கறவைப் பசுகளை
வாங்கினோம். வாங்கிய முதல் பசுவை பரசவித்த 4 வது நாளே கோசாலைக்கு கொண்டு வந்தோம். அந்த பசு பரசவித்த போது நஞ்சு முற்றிலும் வெளியேறாமல் கொஞ்சம் கர்பப்பையிலேயே தங்கியுள்ளது. அதை யாரும் அறிந்திருக்கவில்லை. கோசாலைக்கு வந்த 5 நாளுக்குள் பசுவின் உடல்நலத்தில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.