#மகாபெரியவா "கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
"வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
"அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல
சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னார்கள்.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"
மௌனமாக இருந்தார்கள். அவரே பதில் சொல்வார் என்று தெரியும்.
"இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு
தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும், தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத் தான். மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசண
பரங்கி, கத்திரி, முருங்கைக்கா ஏதோ ஏதோ இருக்குமே அது தான் #தான் என்பது இல்லையா. நாம எல்லாம் பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே, தான் என்கிற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம #குழம்பி போயிடறோம். அந்தத் #தானை கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்த கட்டத்துக்குப் போறோம்.
அப்போ #தான் இல்லாததால் ஒரு
தெளிவு வந்துடறது இல்லையா. அதாவது #ரசமான மனநிலை. அதுதான் ரசம். தான் இல்லாம தெளிவா இருக்கற மனசுல ரசமான எண்ணம் வருது. அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் ஆயிடறது. கடேசியா மோர். மோர் என்கிறது என்ன எப்படி கிடைக்கிறது? பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து
வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய்வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர். அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை. இந்த போஜன ஸம்ப்ரதாயத்தில் இருந்து என்ன புரியறது? நாமளும் அகங்காரத்தை விட்டு மனசு தெளிஞ்சு ரசமா
வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடேசில பரமாத்மாவோட கலந்துட்டா. அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!'. சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் பண்ணறச்சே ஒரு நிமிஷமானும் இத
நினைச்சுப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கணும். அப்படிங்கற உயர்வான எண்ணத்துலதான் நாம தினமும் அனுசரிக்கற போஜன முறையையே நம்ம வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தற மாதிரிதான் அமைச்சிருக்கா" சொல்லி முடிச்சார்.
மஹாபெரியவா திருவடிக்கு சரணம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வித்தியாசமான #தட்சிணாமூர்த்தி திருக்கோலங்கள் 1. மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் சாலையில் 15 கிமீல் உள்ளது கழுகத்தூர். இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும். 2. சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிமீ தொலைவில் உள்ளது சிவபுரி எனும் திருநெல்வாய். இந்த ஊரை அடுத்த திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட
பளிங்குக் கல்லால் ஆனது. 3. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இளைஞன் மாரி ஒரு வெள்ளிக் கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்க ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை
ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கேயே அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது. அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன. அய்யா, இந்த வெள்ளியை
எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும் என்று கொல்லனிடம் கேட்டான் மாரி. இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும், வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும் என்று அதிலிருந்து பார்வையை
#அறிவோம்_மகான்கள்#அறிவோம்_திருத்தலங்கள்#திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும்
சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்கொண்டிருந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை
வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் பட்டுவிட்டன. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர்.
#MahaPeriyava One of my most vivid memories which changed the entire course of my life was the granting of permission by Maha Periyaval for me to go abroad. It was around April or May 1960. The first batches of students for the prestigious Commonwealth Scholarships were to be
selected. The scholarship scheme was a unique decision from the Commonwealth Prime Ministers’ Conference at Colombo a few weeks earlier. I appeared for the interview at Delhi and a few days later I received intimation of being selected for neurosurgical training at Edinburgh for
two years. I informed my father (Dr V.Subramaniam) who was at Trichy. In those days I knew that Maha Periyaval did not favour the idea of young boys from orthodox families going abroad for a long period of time. My father told me that I could go abroad only if Maha Periyaval gave
#ஶ்ரீராமானுஜர்
எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. அவை நவரத்தினங்களாக கருதப்படுகின்றன. #ஸ்ரீபாஷ்யம் அவரின் மிகச் சிறந்த படைப்பு. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் இது. #வேதாந்த_சங்கரஹம். உபநிஷத்துகள்
புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு. #வேதாந்த_சாரம், #வேதாந்த_தீபம் இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது. #கீதா_பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை. #நித்யக்கிரந்தங்கள்.
அன்றாட வைதீகச் சடங்குகளும், பூஜை முறைகளும். பக்தியின் வெவ்வேறு நிலைகளை விளக்கும் நூல். #கத்யத்ரயம் - #சரணாகதிகத்யம், பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. #ஸ்ரீரங்ககத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. #வைகுண்டகத்யம் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான
#மகாபெரியவா
என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் ஓன்று சேர்ந்து எங்களுடைய பூர்வீக கிராமமான (தஞ்சாவூர் பந்தனை நல்லூர் அருகிலுள்ள) ஸ்ரீரங்கராஜபுரத்தில் மஹாவாமிகளுக்கு ஒரு திருக்கோயில் அமைத்து 2021 மார்ச் 10ஆம் தேதியன்று காஞ்சி பால பெரியவா முன்நிலையில் குருவருளுடன் கும்பாபிஷேகம்
செய்வித்தோம். அதன் பிறகு என் தந்தை பெயரில் S.V. Raja mani Iyer Educational & Chartable Trust என்ற ஒரு டிரஸ்டை தொடங்கி செவ்வனே நிர்வகித்து வருகிறோம். அடுத்த கட்டமாக தேவையான வசதிகளுடன் மஹாஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் ஒரு கோசாலை தொடங்கப் பட்டது. அதன் முதல் கட்டமாக 3 கறவைப் பசுகளை
வாங்கினோம். வாங்கிய முதல் பசுவை பரசவித்த 4 வது நாளே கோசாலைக்கு கொண்டு வந்தோம். அந்த பசு பரசவித்த போது நஞ்சு முற்றிலும் வெளியேறாமல் கொஞ்சம் கர்பப்பையிலேயே தங்கியுள்ளது. அதை யாரும் அறிந்திருக்கவில்லை. கோசாலைக்கு வந்த 5 நாளுக்குள் பசுவின் உடல்நலத்தில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.