வித்தியாசமான #தட்சிணாமூர்த்தி திருக்கோலங்கள் 1. மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் சாலையில் 15 கிமீல் உள்ளது கழுகத்தூர். இங்குள்ள சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும். 2. சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிமீ தொலைவில் உள்ளது சிவபுரி எனும் திருநெல்வாய். இந்த ஊரை அடுத்த திருக்கழிப்பாலை என்ற இடத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட
பளிங்குக் கல்லால் ஆனது. 3. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
4. எல்லாக் கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் தக்ஷிணாமூர்த்தி, திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார். 5. திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். இவர்
காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது. 6. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோவிலிலும், சென்னை திரிசூலம் கோவிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
7. திருவொற்றியூர், தியாகராஜர் - வடிவுடையம்மன் கோவில் வாசலுக்கு முன்புள்ள பக்க மண்டபத்தில் வடக்கு நோக்கி 9 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட பிரமாண்ட வடிவத்தில் அருள்பாலிக்கிறார். 8. பொதுவாக சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தெற்கு திசை
நோக்கி அருள்பாலிப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தியை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியே இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள
தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னிதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். 9. தஞ்சாவூர் மாவட்டம் மேலைத் திருப்பூந்துருத்தியில் புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள
தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள் பாலிக்கிறார். 10. கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார், தட்சிணாமூர்த்தி. இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு
சீடர்கள் மட்டும் உள்ளனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன், அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையிலேயே, இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோலம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவரை
தவ தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. 11. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது, திருவிடைமருதூர். இங்கு மகாலிங்க சுவாமி கோவிலுள்ளது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். 12. தில்லை காளி என்ற பெயரில் சிதம்பரத்தில் தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் 'கடம்பவன தக்ஷணரூபிணி' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். விரிந்த கூந்தலுடன் கல்லால மரத்தடியில் காட்சி
தருகிறார். அருகில் சனகர், சனந்தனர், சனவாதனர், சனத்குமாரர் என்ற முனிவர்கள் வீற்றிருக்கின்றனர். கல்வியில் சிறப்பு பெற மாணவர்கள் வியாழனன்று நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர். 13. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை
மடித்து அமர்ந்திருக்கிறார். வலதுகை சின்முத்திரை காட்ட, வலது பின்கை ருத்ராட்ச மாலையை ஏந்தியுள்ளது. இடது முன்கையில் சுவடி, இடது பின்கையில் ஞான தீபம். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில் அமர்ந்த கோலத்தில் குருபகவானை தரிசிக்கலாம். 14. ஆந்திர மாநில எல்லையில்
சுருட்டப்பள்ளி நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார். இவர் இல்லறத்தில் ஏற்படக் கூடிய பிணக்குகளை விலக்கி, இணக்கத்தை ஏற்படுத்துவார்.
இன்னும் பல அபூர்வ தக்ஷிணாமூர்த்திகள் உள்ளன. அங்கெல்லாம் போக இயலாதவர்கள் இருந்த இடத்தில் மௌனமாய் காயத்திரி மந்திரத்தை
#மகாபெரியவா "கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
"வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
"அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல
சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னார்கள்.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"
மௌனமாக இருந்தார்கள். அவரே பதில் சொல்வார் என்று தெரியும்.
"இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு
தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும், தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத் தான். மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசண
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இளைஞன் மாரி ஒரு வெள்ளிக் கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்க ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை
ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கேயே அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது. அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன. அய்யா, இந்த வெள்ளியை
எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும் என்று கொல்லனிடம் கேட்டான் மாரி. இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும், வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும் என்று அதிலிருந்து பார்வையை
#அறிவோம்_மகான்கள்#அறிவோம்_திருத்தலங்கள்#திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும்
சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்கொண்டிருந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை
வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் பட்டுவிட்டன. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர்.
#MahaPeriyava One of my most vivid memories which changed the entire course of my life was the granting of permission by Maha Periyaval for me to go abroad. It was around April or May 1960. The first batches of students for the prestigious Commonwealth Scholarships were to be
selected. The scholarship scheme was a unique decision from the Commonwealth Prime Ministers’ Conference at Colombo a few weeks earlier. I appeared for the interview at Delhi and a few days later I received intimation of being selected for neurosurgical training at Edinburgh for
two years. I informed my father (Dr V.Subramaniam) who was at Trichy. In those days I knew that Maha Periyaval did not favour the idea of young boys from orthodox families going abroad for a long period of time. My father told me that I could go abroad only if Maha Periyaval gave
#ஶ்ரீராமானுஜர்
எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. அவை நவரத்தினங்களாக கருதப்படுகின்றன. #ஸ்ரீபாஷ்யம் அவரின் மிகச் சிறந்த படைப்பு. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் இது. #வேதாந்த_சங்கரஹம். உபநிஷத்துகள்
புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு. #வேதாந்த_சாரம், #வேதாந்த_தீபம் இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது. #கீதா_பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை. #நித்யக்கிரந்தங்கள்.
அன்றாட வைதீகச் சடங்குகளும், பூஜை முறைகளும். பக்தியின் வெவ்வேறு நிலைகளை விளக்கும் நூல். #கத்யத்ரயம் - #சரணாகதிகத்யம், பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது. #ஸ்ரீரங்ககத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. #வைகுண்டகத்யம் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான
#மகாபெரியவா
என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் ஓன்று சேர்ந்து எங்களுடைய பூர்வீக கிராமமான (தஞ்சாவூர் பந்தனை நல்லூர் அருகிலுள்ள) ஸ்ரீரங்கராஜபுரத்தில் மஹாவாமிகளுக்கு ஒரு திருக்கோயில் அமைத்து 2021 மார்ச் 10ஆம் தேதியன்று காஞ்சி பால பெரியவா முன்நிலையில் குருவருளுடன் கும்பாபிஷேகம்
செய்வித்தோம். அதன் பிறகு என் தந்தை பெயரில் S.V. Raja mani Iyer Educational & Chartable Trust என்ற ஒரு டிரஸ்டை தொடங்கி செவ்வனே நிர்வகித்து வருகிறோம். அடுத்த கட்டமாக தேவையான வசதிகளுடன் மஹாஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் ஒரு கோசாலை தொடங்கப் பட்டது. அதன் முதல் கட்டமாக 3 கறவைப் பசுகளை
வாங்கினோம். வாங்கிய முதல் பசுவை பரசவித்த 4 வது நாளே கோசாலைக்கு கொண்டு வந்தோம். அந்த பசு பரசவித்த போது நஞ்சு முற்றிலும் வெளியேறாமல் கொஞ்சம் கர்பப்பையிலேயே தங்கியுள்ளது. அதை யாரும் அறிந்திருக்கவில்லை. கோசாலைக்கு வந்த 5 நாளுக்குள் பசுவின் உடல்நலத்தில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.