#அறிவோம்_மடங்கள்#அஹோபிலமடம்#அழகியசிங்கர் அஹோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஹோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. இது 108 திவ்யதேசத்தில் 97 வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது. இங்குள்ள அகோபில மடம் ஆதிவண்
சடகோப மகாதேசிகரால் பொயு 1400ல் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் முதல் ஜீயராக ஆதிவண் சடகோப மகாதேசிகர் இருந்தார் என்று கூறப்படுகிறது. வைணவத் துறவியான ஆதிவண் சடகோபர், வேதாந்த தேசிகரின் தலைசிறந்த மாணவர். பஞ்சாத்ரா முறைப்படி மடத்தை நிறுவினார். தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும்.
அகோபிலத்தில் எழுந்தருளியுள்ள நரசிம்மர் 600 ஆண்டுகளுக்கு முன் (கி.பி. 1398 ) காஞ்சியில் இருந்த கிடம்பி ஸ்ரீநிவாசாச்சாரியார் கனவில் வந்து அவரை அகோபிலம் வருமாறு அழைத்தார். அகோபில மலையில் அவரது கையில் மாலோல நரசிம்ஹர் விக்ரஹமாக வந்து சேர்ந்தார். அத்துடன் வயோதிகர் உருவில் வந்து கிராமம்
கிராமமாகச் சென்று மக்களை ஆற்றுப்படுத்த ஆணையிட்டார். அதன்படியே அகோபில மடம் உருவானது. அவர் ஆதிவண் சடகோபன் என்ற ஒரு திருநாமத்தை ஏற்று வைணவ சம்பிரதாயம் தழைக்க ராமானுஜர் வழியில் விசிஷ்டாத்வைத மரபைப் பரப்பினார். இந்த மடம் வடகலை சம்பிரதாயத்தைச் சார்ந்தது. ஆதிவண் சடகோப ஜீயர் தென்கலை
சம்பிரதாயத்தின் ஆதி குருவான மணவாள மாமுனிகளுக்கு சந்நியாசம் அளித்தார் என்றும் வரலாறு கூறுகிறது. அவரது நாட்களில் வடகலை-தென்கலை வேறுபாடுகள் இல்லை என்று அறியலாம். ஆந்திராவைச் சேர்ந்த #அன்னமாச்சாரியார் திருவேங்கடவன் மேல் பல பாடல்கள் எழுதியுள்ளார். இவர் ஆதிவண் சடகோப ஜீயரின் சீடர் ஆவார்
ஆதிவண் சடகோப ஜீயர் வழியில் வந்தோர் #அழகியசிங்கர் என்றும் #சடகோபஜீயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (அழகிய சிங்கம் என்பது நரசிம்மப் பெருமானைக் குறிக்கும்.) இம்மடத்தின் ஆளுமையில் சில திருமால் கோவில்கள் உள்ளன. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில், ஆதனூர் புள்ளபூதங்குடி கோவில்கள்,
அகோபில நரசிம்மர் கோவில் முதலியன சில. அவை தவிர மடத்தின் மூலம் பல வேத, ஆகம, பிரபந்த பாடசாலைகளும் நடத்தப் படுகின்றன. இதில் சேர்ந்து படிக்கக் கட்டணம் தேவை இல்லை. கடந்த அறுநூறு ஆண்டுகளாக தொடர்ந்த குரு பரம்பரை வழியில் பல ஆயிரக்கணக்கான சீடர்கள் கொண்ட ஒரு வைணவ மடமாக அகோபில மடம் செயல்பட்ட
வருகிறது. இதன் 44-வது பட்டம் ஜீயரின் பெரு முயற்சியால் ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரம் ஆசியாவிலேயே உயர்ந்ததாக, 236 அடி உயரத்தில் #திருவரங்கம்_ராஜகோபுரமாக உருவானது. (1979 மே, 20 கும்பாபிஷேகம் நடந்தது) 44வது ஜீயரால் தேர்வு செய்யப்பட்ட வில்லிவலம் கிருஷணமாச்சாரியார் 45-வது ஜீயராக 1991ஆம்
ஆண்டு பொறுப்பேற்று நாராயண யதீந்திர மஹா தேசிகன் என்ற சந்நியாசப் பெயர் பெற்றார். அதற்கு முன் இவர் தமிழ்ப்பண்டிதராகவும் பாடசாலை ஆசிரியராகவும் பணியாற்றி வைணவம் சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். மடத்தின் பொறுப்பேற்றபின் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். அஹோபிலம், புள்ளபூதங்குடி,
திருவள்ளூர் கோவில்களைச் செப்பனிட்டார். தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தினார். எல்லாரும் சென்று பெருமாளைச் சேவிக்க வேண்டும், இறைஅருள் பெறவேண்டும் என்று கருதி அகோபிலத்தில் பக்தர்கள் எளிதில் சென்று சேவிக்கவும் தங்கி அருள் பெறவும் பெரும் பொருட்செலவில் பல வசதிகளைச் செய்தார் 45 ம் பட்டம்
அழகியசிங்கர். எளிதில் அணுகக் கூடியவராகவும், வெளிப்படையாகப்பேசக் கூடியவராகவும், கடினமான வடமொழி காவியங்களையும் பக்தி இலக்கியங்களையும் பாமரர் அறியும் வண்ணம் எளிய தமிழில் உபன்யாசம் செய்யும் ஆற்றல் கொண்டதால் பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர தனது 87 வது வயதில் பரமபதம்
அடைந்தார். ஸ்ரீரங்கத்தில் தனது ஆச்சாரியாரின் பிருந்தாவனத்தருகில் தானும் பிருந்தாவனம் கொள்கிறார். 46வது ஜீயராக, ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள், 58 வயதில் வடக்கு வாசலில் தசாவதார சன்னதியில், 46வது ஜீயராக, பட்டம் ஏற்றுக் கொண்டார். தற்போதைய ஜீயர், 2009ம் ஆண்டு முறைப்படி,
இளைய பட்டமாக, தீட்சை பெற்றவர். இவர் பூர்வாசிரம் பெயர் ரங்கராஜாச்சாரியார். இவர் ரிக் வேதத்தில் மகா பண்டிதர். தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றம்” என்றும் , “சென்று காண்டற்கு அரிய கோவில்” என்று ஆழ்வார்கள் அகோபில மலையில் காட்டின் நடுவே உள்ள மாலோல நரசிம்மர் கோவிலைப்
பற்றிப் பாடி உள்ளனர். இந்த மடத்தின் கிளைகள் முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. செந்தமிழும் வட மொழியும் கலந்து திருமாலைப் பணியும் தொன்மையான மரபு சார்ந்த வைணவ மடங்களில் முதன்மையானது அகோபில மடம். சென்று சேவித்து ஆசி பெறுவோம்.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
அய்யா நான் மகா விஷ்ணுவைக் கண்ணால் காண முடியுமா என குரு ஒருவரிடம் கேட்டான் சுரேஷ்.
“தம்பி, நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
அய்யா எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை நான்
எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்!
“தம்பி, கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் பரிபூரண ஸ்ரீ மகா விஷ்ணுவின் அன்பை உணரும் நுட்பமும் திட்பமும் அமைந்து
இருக்க வேண்டும். உடம்பை நீ பார்க்கிறாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகிறதா?”
ஆம். நன்றாகத் தெரிகிறது.
“தம்பி, அவசரப்படாதே. எல்லாம் தெரிகிறதா?”
என்ன ஐயா விளையாட்டு! தெரிகிறது தெரிகிறது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம் தான் தெரிகிறது.
“தம்பி, எல்லா அங்கங்களும் தெரிகிறதா?”
#மகாபெரியவா
ஒரு சமயம், காஞ்சி மகாபெரியவர், சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்க முகாம் இட்டிருந்தார். ஒரு நாள் இரவு, தேவகோட்டையில் இருந்து ஒரு பஸ் நிறைய மக்கள் அவ்வூருக்கு வந்தார்கள், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக. ஏகமாய் சத்தம் கேட்க, பெரியவர்
அங்கிருந்த கஜானா ராமச்சந்திர அய்யரை அழைத்து, "வெளியே நிறைய பேர் வந்திருக்கிறார்கள் போல் தெரிகிறது. யாரென்று பார்த்து வா” என்றவர், அவரை நிறுத்தி, "அவர்களெல்லாம் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரித்து வா” என்றார். அவரும் விசாரித்து வந்தார்.
“சுவாமி! அவர்கள் தேவகோட்டையில் இருந்து
வருகிறார்களாம். அவர்கள் வந்த பஸ், வழியில் ரிப்பேராகி விட்டதால், தாமதமாக வந்திருக்கிறார்கள். யாரும் சாப்பிடவில்லையாம்” என்றார். “ராமச்சந்திரா! வெளியே பூஜைக் கட்டில் மேலூர் மாமா படுத்திருப்பார். அவர் பக்கத்தில் கட்டுப்பெட்டி சாவி கிடக்கும். நீ சந்தடி செய்யாமல் அதை எடுத்துப் போய்
#கர்மவினை#கர்மா
இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் எடுத்து இருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்து இருக்கிறோம். அந்தக் கூட்டின் பெயரே #சஞ்சித_கர்மா. அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப் படுகிறது. அதுவே #பிராரப்த_கர்மா. பிராரப்த
கர்மா நிறைவடையாமல்
இந்தப் பிறவி முடிவடையாது. இது தவிர #ஆகாம்ய_கர்மா என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல, கெட்ட செயல்களால் ஏற்படுவது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர் செய்வினையின் பயனாலேயே அவரவர்
அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம வழியே. இதைத் தான், தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது.
நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு. அதனால்
ஆகாமி
#ஒரு_மண்டலம்#48நாட்கள்
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவது நமக்குத் தெரிகிறது. அது போல நம் பூமியைச் சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுந்து, முழுமையாக நம்மை பாதித்து நம்
உடலில், மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதே போல நம்மை சுற்றிலும் உள்ள
கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது விழுந்து தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை இருக்கும் தூரத்தின் காரணமாக, அவற்றின் உருவ வேறுபாடு காரணமாக அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப் போல கண்களுக்குத்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கலியனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலை இல்லாதது மேலும் கூடுதல் வேதனை. இத்தனைக்கும் ஒவ்வொரு முறையும் ஸ்ரீமந் நாராயணன் நாமம் கூறிக் கொண்டே எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான்.
கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுவான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள். அவனின் வெறுப்பெல்லாம் ஹரே நாராயணா நான் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதே என் குறைகளை
சொல்லித்தானே விண்ணப்பிக்கிறேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பது தான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் அந்த நாராயணனை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான். கலியனுடைய முறை
#மகாபெரியவா
மூன்று நாள்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார் அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும். பெரியவாள் மௌனம். நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார்கள் பெரியவாள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர் ஓடோடி அருகில் வந்தார்.
"அதுக்காகத்தான் மூணுநாளா
காத்திண்டிருந்தியோ?"- பெரியவா.
பக்தருக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. அது என்ன, அவ்வளவு கணக்காக மூன்றுநாள்? ரென்டு மூணு நாள் என்று சொல்லியிருக்கப் படாதோ?
"குடும்ப விஷயம் ரகசியமாகப் பேசணும்." -பக்தர்.
"என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்குத் தெரிஞ்சதாலே
ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாது." -பெரியவா.
பக்தரின் முன்னோர்கள் செழிப்புடனும், செல்வாக்குடனும் இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், எப்படியோ தாங்கமுடியாத கஷ்டம், பொருள் நெருக்கடி வந்துவிட்டது. தாத்தா காலத்தில், கடன் சுமையைத் தாங்க முடியாமல் போகவே விளை நிலம் ஏலத்துக்குப் போயிற்று.