பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.
#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.
இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.
இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.
மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,
தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.
முல்லைத் திணைக்குரிய #மேய்ச்சல் இன மக்களால் உருவாக்கம் பெற்றவையே பெருவழிகள்.
#ஆயர் புலப்பெயர்ச்சி உலகம் முழுவதும் இன்றும் மேய்ப்பரிடையில் நிலைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானத்து #பலூசிகள் இன்றும் மேய்ச்சல் நிலம் வேண்டி குடிபெயர்ந்து வருகின்றனர்.
அவர்கள் குடிப்பெயர்ச்சி குத்து மதிப்பாக நடப்பதில்லை.
குறிப்பிட்ட குடியினர் குறிப்பிட்ட வழியில் மட்டுமே குடி பெயர்வர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
ஆதலால் பெருவழிகளைப் பற்றிய செய்திகளைக் கூறும் அகநானூற்று பாடல்கள்,
செம்முல்லையின் அரும்பு விரிந்த குளிர்ந்த செவ்வியைக் கொண்ட பெருவழி என்று பெருவழியெங்கும் முல்லை மலர்கள் மலர்ந்து கிடந்ததைத் தெரிவிக்கிறது.
மேலும் பெருவழிகள் பண்டு முல்லை நிலத்தில் மட்டும் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும் என்பதை அப்பாடல்கள்,
முல்லைத்திணையில் தொகுக்கப் பெற்றிருப்பதோடு, முல்லைக்குரிய கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளையும் கொண்டுள்ளன என்பதுவும் இங்கு நோக்கத்தக்கது.
இதனால் முல்லைத்திணைக்கும்,, பெருவழி உருவாக்கத்திற்கும் இடையில் நிலைபெற்றிருந்த தொடர்பு தெளிவாகின்றது.
மேலும் பண்டு அரசு உருவாக்கமானது #வேள் என்னும் குறுநில ஆட்சிமுறையாக முல்லை நிலத்தில் தான் முதலில் தோன்றியது என்பது அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளதும் நாம் அறிந்ததே!
பல்வேறு குடிகளின் ஆளுகைக்குட்பட்ட சிறுசிறு நிலப்பகுதிகளை ஆளுகை செய்த வேளிர்களை, மூவேந்தர்கள் தங்கள் ஆளுகையின் கீழ் இணைத்துக் கொண்டதற்குப்பின் வேந்தர்களும், வணிகர்களும் சென்றுவர உருவாக்கப்பெற்ற வழி #பெருவழி எனக்கூறலாம்.
ஏனெனில் வாணிகம் மேலோங்கிய நிலையில் நகர உருவாக்கம் எழுந்தது.
இப்பெரு வணிக நகரங்களை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர, அந்நிலப்பகுதியை ஆண்ட குறுநில வேளிரோடு போரிட்ட நிலையில் #வேந்தர்கள் எழுச்சி பெற்றனர்.
மேலும், பல வணிக நகரங்களை தம் அரசோடு இணைத்துக் கொள்வதற்காக வேந்தர்கள் மேற்கொண்ட போர்களுக்கான வழித்தடமாகவும்...
அயல்நாட்டோடு மேலோங்கிய வாணிகத்தினை மேற்கொண்ட வணிகர்களுக்கு, அவர்தம் வணிகப் பொருட்களைக் கொண்டு செல்லும் வழியாகவும் இப்பெருவழிகள் பயன்படுத்தப்பெற்றன.
இவ்வழியில் 'அகன்ற தேர்கள்' சென்றதை அகம். 14-வது பாடல் கூறும்.
வணிகச் சாத்துகள் பெருவழியில் சென்றதை பெரும்பாணாற்றுப்படைக் கூறும்.
சங்ககால இலக்கியங்கள் காட்டும் மூவேந்தர்களின் எழுச்சி (ம) வணிகத்தில் சிறந்த நகரங்களான #புகார், #கொற்கை, #முசிறி, #கரூர், #மதுரை ஆகியவற்றின் சிறப்பு இவைகளை நோக்குங்கால்,
தமிழகத்தைப் பொறுத்தவரை, வரையறுக்கப்பட்ட சங்ககாலத்திற்கு பல நூற்றாண்டுக்கு முன்னரே #பெருவழிகள் உருவாகிவிட்டன!
அவ்வழிகள் வணிகத்தில் சிறந்தோங்கிய மேற்கண்ட நகரங்களை இணைக்கும் வழிகளாகவும் அமைந்தன எனலாம்.
வழிகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பெற்ற பல்வேறு சொற்களில் #பெருவழி என்ற சொல்,
அகநானூற்றில் முல்லைத் திணையிலும், பாலைத் திணையிலும் #பெருவழி பற்றிய குறிப்புகள் காட்டப்பட்டுள்ளன.
பூம்புகாருக்குச் சென்ற ஒரு பெருவழியைப் பற்றி ‘இடைப்புலப் பெருவழி' என்று #புறநானூறு 30-வது பாடல் குறிப்பிடுகின்றது.
#அகநானூறு முல்லைத் திணைப் பாடல்களான 64, 74, 104, 114 ஆகியவற்றில் பெருவழிகள் பற்றிய செய்திகள், பெருவழியின் இயல்புகள் முதலியன காணப்படுகின்றன.
இப்பாடல்களில் பெருவழி 'தண்பதப் பெருவழி', 'செந்நிலப் பெருவழி' என்று கையாளப்பட்டுள்ளன, உறுதி செய்கின்றன.
இச்செய்தியினை பின்வரும் அகநானூற்று முல்லைத்திணைப் பாடல்கள், பெருவழியின் தன்மையினை உறுதி செய்கின்றன.
வினைமுற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்கு கூறுவதாக அமைந்தது இப்பாடல்.
தேர் செல்லும் பெருவழியின் இயல்பினை தலைவன் கூற்றாக இப்பாடல் காட்டி நிற்கின்றது.
இப்பாடல் மேற்கண்ட செய்திகளில் சொல்லப்பட்டுள்ள ஆயர் பெயர்ச்சியினையும், வேந்தர்களின் எழுச்சி நிலையில், போருக்கான வழியாக #பெருவழி இருந்ததைத் தெற்றெனக் காட்டுகிறது.
#வேந்தன் மேற்கொண்ட போரில் பங்குகொண்ட தலைவன், வினைமுடித்து பெருவழியில் தேரில் வந்து கொண்டிருக்கிறான்.
எனவே, பெருவழிப்பாதையில் தான் 'போருக்கான நகரம்' அமைந்திருக்க வேண்டும் என அறியலாம்.
மேலும் இப்பெருவழி இருமருங்கிலும் 'செவ்விய முல்லை மலர்கள்' நிறைந்திருத்தலைக் காண்கையில்,
இது முல்லைத் திணைக்குரிய மக்கள் அதாவது 'ஆயர்கள் செல்லும் வழித்தடம்' என அறியலாம்.
சங்ககால வணிகத்தில் ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!
தமிழக கிரேக்க, ரோமானியக் கடல் வணிகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிகள் பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியமும், கிரேக்க மாலுமி எழுதிய 'செங்கடல் வழிகாட்டி' நூலும் பட்டியலிட்டுள்ளன.
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!
கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.