பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், பொயு 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்
கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின்
நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.
தம் தாயார் இறந்த
பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
பட்டினத்தடிகளின் பாடல்
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே;
பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும்
தாம்
மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
பித்தானால் என்செய்வாள்
பின்
ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்பார்
நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு
நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு
சுற்றத்தை
வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
வாழ்வை குடங்கவிழ் நீர்
ஓட்டமென்றே இரு
நெஞ்சே உனக்குபதேசம் இதே...
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்
கொண்டே
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே
தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள்
பிரகாஷ் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தன், எப்பொழுதும் எந்த வேலையை முடித்தாலும் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறுவது வழக்கம். ஒரு முறை தனது விலையுயர்ந்த காரை தன் வீட்டின் முன்பாக வீதியில்
நிறுத்தியிருந்தான். அந்த வழியாகச் சென்ற தெரு நாய் ஒன்று அதன் மீது
மஇயற்கை உபாதையை கழித்தது. இதைப் பார்த்த பிரகாஷ் சிரித்தான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பன் சிவா, நண்பா ஏன் நாயைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறாய் என்று ஆச்சரியத்துடன் கேட்டான். பிரகாஷ் மிகவும் சாந்தமாக, நாய் அதன் அறிவிற்கு எட்டியதைச் செய்கிறது. அதற்கு
இக்காரின் மதிப்பைப் பற்றித் தெரியாது. சொன்னாலும் அதற்குப் புரியாது என்று சிரித்துக் கொண்டே சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என கூறினான். கேள்வி கேட்ட நண்பன் சிவா இப்படி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது போலத் தான் நம் வாழ்விலும் நமது மதிப்பை அறியாதவர்கள் நம்மை
#நற்சிந்தனை ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதிகளில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம், நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அழைத்தார்கள். ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி, அவர்களிடம் ஒரு பாகற்காயை
கொடுத்து, நீங்கள் புனித நதிகளில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என்றார். அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி
வந்த பாகற்காய். இப்போது சாப்பிட்டுப் பாருங்கள் தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது! தித்திக்கும்னிங்க கசக்குதே என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன். பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும் அதன் சுபாவத்தை
#மடி#ஆசாரம் என்றால் என்ன?
இது பற்றி இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு அன்றே #ஶ்ரீபுரந்தரதாசர் விடை அளித்துவிட்டார். சுத்தமும் தேவை, அதையும் விட முக்கிய தேவையை தெரிந்துகொளவோம்.
மடிமடி என்று அடிக்கடி சொல்வார்கள். மடியாக இருக்க வேறு வழி உண்டு. ஓடி விளையாடும் சிறுவனின் (ஸ்ரீகிருஷ்ணனின்) திருவடிகளை விடாமல் நினைத்து, அதைப்பற்றி பாடுவதே நிஜமான மடியாகும்.
பட்டெய நீருளகத்தி ஒணகிஸி
உட்டுகொண்டரே அது மடியல்லா
ஒட்டெயொளகின காம
க்ரோத
மத மத்ஸர பிட்டு நடெதரே அது மடியு
(கட்டிக்கொள்ளும்) ஆடையை நீரில் நனைத்து, காய வைத்து அணிந்து கொண்டால், அது மடியல்ல. நம் உடம்பில் இருக்கும் காமம், குரோதம் (கோபம்) மதம் (கர்வம்), மத்ஸரம் (பொறாமை) ஆகியவற்றை விட்டுவிட்டாலே அது மடிதான்.
#ஸர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில். அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை நான்கு மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களை எல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தர
வேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான். பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது
போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு மாலை சூட்ட போனால் ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் காட்சி தருவார். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு, இதெல்லாம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை நீ எடுத்துக்
கொள் என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். ஆஹா நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன்
காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான். அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்
#மகாபெரியவா
ஒரு சமயம் சாதுர்மாஸ்யத்தை ஒட்டி ஸ்ரீமடத்திலேயே முகாமிட்டிருந்தார் மகாபெரியவா. வித்வத் விவாதங்கள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன, அந்த சமயத்தில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மகா பெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்துல நாற்பத்தைந்து ஐம்பது வயது
மதிக்கத் தக்க பெண்மணி ஒருவரும் இருந்தார். அவர் முகத்தைப் பார்க்கிற போதே, ஏதோ ஒரு கலக்கம் அதில் இருப்பது தெரிந்தது. மகா பெரியவாளை அவர் தரிசிக்கற முறை வருவதற்குள், கிட்டத்தட்ட கதறி அழுதுவிடுகிற நிலைமைக்கே போய்விட்டார் அந்தப் பெண்மணி. ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவுமே சொல்லாம
கேவிக்கேவி அழ ஆரம்பித்தார். ரெண்டு மூணு நிமிஷத்துக்குப் பிறகு, "என்ன ஆச்சு?" என்று கேட்கிற பாவனையோட அந்தப் பெண்மணியைப் பார்த்தார் மகாபெரியவா.
"சுவாமி நான் ரொம்ப பயந்து போயிருக்கேன். எனக்கு சீக்கிரமே உசுரு போயிடுமோ, என்னோட பொண்ணுகள் அநாதை ஆயிடுவாளோன்னு தோணறது. நீங்கதான்