#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தார். சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர், அப்பனே பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி
என்றார். அதற்கு கிருஷ்ணர், பரவாயில்லையே சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது. என்னுடன் வா என அழைத்துச் சென்றார். பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடன் சென்றார். சிறிது தூரம் சென்றதும் "பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக
உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளை இட்டார். பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார். வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார். உங்கள் வீட்டிலிருந்து சொம்பில் தண்ணீர் வாங்கி வரச் சொன்னார்” எனச்
சொல்ல அந்த செல்வந்தரோ "யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது.
அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது. தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார். பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார்
எனச் சொல்ல பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சிரித்தாவாறு, இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார். பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே போனார். அடுத்து அவர்கள் சென்றது வறுமை குடி கொண்டிருக்கும் ஓர் குடிசை வீடு. அங்கு கணவர், குழந்தைகள்
இன்றி அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார். ஒரே ஒரு மாடு வைத்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த வயதான பெண்மணி வீட்டில்
தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல, சரி என்றவாறு வீட்டு வாசலுக்குச் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார். தண்ணீர் தாகமாக உள்ளதாம், தண்ணீர் கொடுங்கள் என்றதும், அந்த வயதான பெண்மணி "நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து
இருக்கிறாரா? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார். தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு கிளம்பினார். கொஞ்ச
தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த பசுமாடு இறந்து போகட்டும்" எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார். ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழப்பம்! “பகவானே முதலில் ஒரு செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம். அவர் தண்ணீர் இல்லை என்றார்.
அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள், இரண்டாவதாக ஒர் வயதான பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார். அவருக்கு மாடு செத்துப் போகட்டும் என்கிறீர்கள். கிருஷ்ணரே, கஷ்டப் படுகிறவர்களுக்கு சாபமும், செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே! இதுதான் உங்கள்
தர்மமா என கேட்க பகவான் கிருஷ்ணர் சொன்னார், “பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள். எவன் ஒருவன் அளவுக்கு அதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான். அதனால் தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சொன்னேன். அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய்!
இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை. அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான். அதுவும் இறந்து விட்டால் இந்தப் பெண்மணியும் இறந்துவிடுவாள். மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காகவும், நல்ல உள்ளத்திற்காகவும்
சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன்” எனச் சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார். பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 10
#மகாபெரியவா
ஒருசமயம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து ரொம்பவே எளிமையான பக்தர் ஒருவர் தன் குடும்பத்துடன் பெரியவாளை தரிசனம் செய்வதற்கு மடத்துக்கு வந்திருந்தார். மகா பெரியவாளை தரிசனம் செய்து விட்டு, ஏதோ ஒரு விஷயத்தை அவரிடம் சொல்ல வந்திருந்த அவருக்கு, கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கூச்ச Image
சுபாவம் இருந்தது. அவரோட ஏழ்மையும் ஒரு காரணமா இருக்கலாம். எல்லா சமயத்திலேயுமே நிறையப் பேர் இருந்ததால் பெரியவா இடம் நெருங்கிப் போய் தன் குறைகளைச் சொல்ல அவரால் முடியவில்லை. வறுமையான நிலையில் ஓட்டல் போன்ற இடங்களில் ஆகாரம் சாப்பிடாத ஆசாரம் கொண்டு இருந்ததால் அந்த இரண்டு நாட்களிலும்
குடும்ப சகிதம் ஸ்ரீமடத்திலேயே சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிட வந்தவரை கவனித்த மடத்து ஊழியர் ஒருவர், அடுத்த நாள் இங்கே சாப்பிட வரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லி அனுப்பிவிட்டார். தங்க இடமும் இல்லை, சாப்பாட்டுக்கும் வழி இல்லை.
Read 13 tweets
Aug 10
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு செல்வ செழிப்பான ராஜா இருந்தார். அவருக்கு நான்கு மனைவிகள். அவர் நான்காம் மனைவியை மிகவும் நேசித்தார். அனைத்து செல்வங்களையும் அவளுக்காகவே செலவிட்டார். தன்னிடம் உள்ளதில் சிறப்பானதை மட்டுமே அவளுக்கு கொடுத்தார். அவர் மூன்றாம் Image
முன்றாம் மனைவியையும் நேசித்தார். அவளுக்கு அவரது மற்ற ராஜாங்கத்தை காட்டி மகிழ்வூட்டுவார். ஆனாலும் அவள் என்றாவது வேறொருவனுடன் சென்றுவிடுவாள் என அஞ்சினார். அவர் தனது இரண்டாம் மனைவியையும் நேசித்தார். அவள் எப்போழ்தும் அவரிடம் அன்பாய் நடந்துகொள்வாள். அவர் சோர்ந்து போகும் போதோ அல்லது
அவர் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கும் போதோ அவள் ஆதரவாக இருந்து ஆலோசனையும் வழங்குவாள். ராஜாவின் முதல் மனைவி மிகவும் முக்கியமானவள். ராஜாங்க சொத்துகளை கவனிப்பதற்கும், ராஜா ஆட்சி செய்வதற்கும் அதிக பங்கு அவளையே சேரும். அவளே அனைத்திற்கும் காரணமானவள். எனினும் ராஜாவுக்கு முதல் மனைவி மீது
Read 14 tweets
Aug 10
#MahaPeriyava
When Periyaval was camping in Kollankode, He had convened a vidvat sadas (assembly of scholars) there. Since the invitation came to our Thatha also, he had gone there. Whatever else is not available for my Thatha in the morning, a cup of coffee was a must! But in Image
ShrImatham there was no coffee supply. Strict niyama (regulations)! When Thatha was yearning for a cup of coffee, a man came and took him outside the Matham and bought him a cup of coffee. Only then Thatha felt his life-force returning to his body! Thatha went and sat in the
Sadas. In a short while Periyaval came there. After doing namaskaram to the sage, Thatha went near him. Looking at Thatha, Periyaval asked, "Had your coffee?"
What reply to give? Thatha was confused. With the remorse that no one present there took a cup of coffee except him, he
Read 6 tweets
Aug 9
#Kerala is indeed God’s own land! #கேரலா_கோவில்கள் மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமனால் உருவாக்கப்பட்டது கேரளம். இன்று அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக கிறுஸ்துவர்களாக மாறிவிட்ட போதும் அங்கிருக்கும் இந்துகள் வழிபாட்டு முறையும், கோவில்களில் இருக்கும் ஒழுங்கும், கோவிலின் உள்ளே
பக்தர்களின் ஒழுக்கமும், அர்ச்சகர்களின் சுத்தம், பூஜையில் ஒரு முக கவனமும் பிற மாநில இந்துகள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அங்கே சிவ, விஷ்ணு பேதங்கள் இல்லை. மஹா தேவர் என்று அழைக்கப்படும் சிவ சன்னிதானத்தில் கூட சந்தனம் மட்டுமே பிரசாதம். ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி,
சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்.
தெருவுக்கு ஒரு புதிய கோவில், அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் கிடையாது. கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை. எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம் கிடையாது. எல்லாமே பணம் கொடுக்காமல் கிடைக்கும்
Read 14 tweets
Aug 9
#மகாபெரியவா
மகா பெரியவாவை பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருகை தருவார்கள். நிறைய கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் ஒரு பக்தன் கண்களில் கண்ணீரோடு முகத்தில் வாட்டதோடு வந்து மகா பெரியவா அவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, குங்குமத்தை பிரசாதமாகவும் வாங்கிக்
கொண்டு செல்கிறான். இதே போல மூன்று நாட்களும் நகர்ந்து சென்றது. மூன்று நாட்களும் மகா பெரியவா, கஷ்டத்தில் வந்த அந்த பக்தனை கவனித்துள்ளார். நான்காவது நாளும் அந்த பக்தன் கஷ்டத்தோடு வந்து, சொல்ல வந்த கஷ்டத்தை சொல்லாமல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மஹா பெரியவாவை கடந்து சென்ற போது, மகா
பெரியவா அந்த பக்தனை நிறுத்தி, “சொல்ல வந்த கஷ்டத்தை ஏன் சொல்லாமல் செல்கிறாய்” என்று கேடார். கண்கலங்கி கஷ்டத்தை சொல்லத் தொடங்கினான். “தீர்க்கவே முடியாத பணக்கஷ்டம். அள்ளி அள்ளிக் கொடுத்த எங்களுடைய குடும்பம் இப்போது கிள்ளி கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லாமல் நிற்கிறது. அன்றாட
Read 11 tweets
Aug 9
#MahaPeriyava
When Maha Periyava was staying in a village in Thanjai, a number of sugarcane bundles were submitted to SriMatham after the recent harvest. When a child saw a sugarcane bundle, it started crying that it wanted a sugarcane. The parents of the child said to Periyava
that the child was suffering from a disease called kaNai kulaikkatti (a wasting disease of childhood characterized by lymphatic glands), so sugarcane couldn't be given.
Maha Periyava raised his hand to pacify them. He asked the assistant to give the child a sugarcane.He said to
the child, "You have seen our Mutt elephant? Are you not fond of the animal?"
"I have seen it! Anai (elephant) is my favourite animal!"
"That animal will now come for the puja. Will you give the sugarcane to the animal? It will break the sugarcane with a noise and eat it! And it
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(