#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு செல்வ செழிப்பான ராஜா இருந்தார். அவருக்கு நான்கு மனைவிகள். அவர் நான்காம் மனைவியை மிகவும் நேசித்தார். அனைத்து செல்வங்களையும் அவளுக்காகவே செலவிட்டார். தன்னிடம் உள்ளதில் சிறப்பானதை மட்டுமே அவளுக்கு கொடுத்தார். அவர் மூன்றாம்
முன்றாம் மனைவியையும் நேசித்தார். அவளுக்கு அவரது மற்ற ராஜாங்கத்தை காட்டி மகிழ்வூட்டுவார். ஆனாலும் அவள் என்றாவது வேறொருவனுடன் சென்றுவிடுவாள் என அஞ்சினார். அவர் தனது இரண்டாம் மனைவியையும் நேசித்தார். அவள் எப்போழ்தும் அவரிடம் அன்பாய் நடந்துகொள்வாள். அவர் சோர்ந்து போகும் போதோ அல்லது
அவர் ஏதேனும் பிரச்சனையை சந்திக்கும் போதோ அவள் ஆதரவாக இருந்து ஆலோசனையும் வழங்குவாள். ராஜாவின் முதல் மனைவி மிகவும் முக்கியமானவள். ராஜாங்க சொத்துகளை கவனிப்பதற்கும், ராஜா ஆட்சி செய்வதற்கும் அதிக பங்கு அவளையே சேரும். அவளே அனைத்திற்கும் காரணமானவள். எனினும் ராஜாவுக்கு முதல் மனைவி மீது
அவ்வளவு பற்றுதல் இல்லை. எப்போதாவது அவர் அவளை கவனத்தில் கொள்வார். ஒரு நாள் ராஜா மரண படுக்கையில் விழுந்தான். அவரது ராஜ வாழ்கையை எண்ணினார், "எனக்கு நான்கு மனைவிகள், ஆனால் நான் மரணமடைந்தால் நான் தனியாக இருப்பேனே" என்று அவர் நான்காம் மனைவியிடம் "நான் உனைத் தான் மிகவும் அதிகமாக
நேசித்தேன், என்னிடம் இருந்ததில் சிறந்தவை அனைத்தையும் உனக்கே கொடுத்தேன், இப்பொழ்து நான் மரணமடைய போகிறேன், நீ என்னை பின் தொடர்ந்து வருவாயா?" என்று கேட்டார்.
"முடியாது!" என்றவாறு அவள் நடந்து சென்று விட்டாள். ஒரு கத்தி அவரது நெஞ்ஜை கிழிப்பது போல் இருந்தது ராஜாவுக்கு. அவர் முன்றாம்
மனைவியிடம் "நான் உன்னை என் வாழ்நாள் முழுவதும் நேசித்தேன். இப்பொழ்து நான் மரணமடைய போகிறேன், எனக்கு துணையாய் வருவாயா?"
"முடியாது, வாழ்கை இனிமையாய் உள்ளது, நீ மரித்தால் நான் மறுமணம் செய்து கொள்வேன்" என்றவாறு அவள் நகர்ந்து சென்றாள். அவரது இதயம் கணத்தது.
அவர் இரண்டாம் மனைவியிடம் "நான்
உன்னிடம் தான் அதிகமான ஆலோசனைகள் கேட்டுள்ளேன், நீ எனக்காக பல நன்மைகள் செய்துள்ளாய், அன்பே நான் மரணமடைந்தால் நீயும் என்னுடன் வருவாயா?"
"என்னை மன்னிக்கவும், என்னால் இப்பொழுது உனக்கு உதவ இயலாது, என்னால் உனக்காக ஒரு பூச்செண்டு தான் அனுப்ப முடியும்" என்றவாறு அவளும் சென்று விட்டாள்.
அந்த பதில் ராஜாவின் நெஞ்சில் இடி போல் விழுந்தது. அவர் நிலை தடுமாறினார். அப்போது ஒரு குரல் கேட்டது. "நான் உன்னுடன் நீ எங்கு சென்றாலும் வருவேன்". ராஜா நிமிர்ந்து பார்த்தார். அது அவரது முதல் மனைவி. எலும்பும் தோலுமாக அவள் காட்சியளித்தாள். ராஜா, "எனக்கு வாய்ப்புகள் இருந்த பொழுதேு
உன்னிடம் நான் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்" என்றவாறு வருந்தினார். உண்மையில் நம் அனைவருக்கும் இந்த நான்கு மனைவிகளும் வாழ்வில் உள்ளனர். நான்காம் மனைவி நமது உடல். அதற்கு என்னதான் நன்மை செய்தாலும் அது நம்மை விட்டு சென்று விடும். முன்றாம் மனைவி செல்வம், அந்தஸ்து மற்றும் நம்
உடைமைகள். நம் மரணத்திற்கு பிறகு அது மற்றவரது கைகளுக்கு சென்று விடும். இரண்டாம் மனைவி குடும்பமும் நண்பர்களும். அவர்களால் சுடுகாடு வரை தான் நம்மோடு வர முடியும். முதல் மனைவி, ஆன்மா. வாழ்கை போராட்டத்தில், செல்வம், அந்தஸ்து, அதிகாரம், இவற்றை தேடும் வேகத்தில் நம் அனைவராலும் ஆத்மாவை
ஜடவுலகில் சிக்க வைத்து விடுகிறோம்
தன்னையே பெரிய முட்டாளாக ஏற்றுக் கொண்ட மன்னன், என்னை போல முட்டாளாக இருந்து விடாதீர்கள் என்று தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தினான்.
எஞ்சிய குறுகிய காலத்தில் கிருஷ்ண பக்தியில் முழுமையாக ஈடுபட்டான்.
இருப்பினும், அவனது வாழ்வின் பெரும் பகுதி, ஒரு பெரிய
முட்டாளின் வாழ்க்கையாகவே அமைந்தது. நாம் சற்று யோசித்துப் பார்த்தால், நம்மில் பெரும்பாலானோர் ஆன்மீக வாழ்வில் ஆர்வம் காட்டாமல், உலகச் சொத்துக்களைச் சேகரிப்பதிலும் இன்பமடைவதிலும் முழுமூச்சாக செயல் பட்டுக் கொண்டுள்ளோம் என்பது புரியும். ஆனால் அவை அனைத்தையும், அல்லது அவற்றில் ஏதேனும்
ஒன்றை கூட மரணத்தின் பின்னே நம்மால் கொண்டு செல்ல இயலாது. இந்த உண்மையை உணர்ந்து, பெரிய முட்டாளாக இருக்காமல், வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும், அந்த நிலையில் இருந்தபடி கிருஷ்ண பக்தியை தீவிரமாகப் பயிற்சி செய்து, புத்திசாலியாக வாழ்வோம். பற்பல பிறவிகளைக் கடந்த பின்னர், யாரொருவன்
புத்திசாலியோ, அவன் எல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணரிடம் சரணடைவான்.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 11
எண்ணற்ற திருநாமங்களை உடைய பரந்தாமனின் ஆயிரம் திருநாமங்களை தொகுத்து பீஷ்மர், யுதிஷ்டிரனிடம் கூறியதுதான் விஷ்ணு சகஸ்ரநாமம். அந்த ஆயிரம் திருநாமங்களை பன்னிரெண்டு திருநாமங்களாக சுருக்கி பரந்தாமனி்ன் பெருமைகளைக் கூறுவதுண்டு. அதற்கு த்வாதச எனப்பெயர். வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் Image
இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்
1. கேசவ - துன்பத்தைத் தீர்ப்பவன்
2. நாராயண - உயிருக்கு ஆதாரமாக இருப்பவன்
3. மாதவ -திருமகள் மணாளனாக இருப்பவன்
4. கோவிந்த - பூமியைப் பிரளயத்திலிருந்து காத்தவன் (அ) பசுக்களை மேய்த்தவன்
5. விஷ்ணு - அனைத்துப் பொருள்களிலும் நிறைந்திருப்பவன்
6. மதுஸுந்த - புலன்களாகிய இந்திரியங்களை ஈர்ப்பவன் (அ) மது என்னும் அரக்கனை வென்றவன்
7. த்ரிவிக்ரம் - மூன்றடிகளால் உலகங்களை அளந்தவன்
8. வாமன - குள்ளமான உருவம் உடையவன்
9. ஸ்ரீதர - ஸ்ரீயான திருமகளைத் தரிப்பவன்
10. ஹ்ருஷிகேச - தன்
Read 4 tweets
Aug 10
#மகாபெரியவா
ஒருசமயம் வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்து ரொம்பவே எளிமையான பக்தர் ஒருவர் தன் குடும்பத்துடன் பெரியவாளை தரிசனம் செய்வதற்கு மடத்துக்கு வந்திருந்தார். மகா பெரியவாளை தரிசனம் செய்து விட்டு, ஏதோ ஒரு விஷயத்தை அவரிடம் சொல்ல வந்திருந்த அவருக்கு, கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே கூச்ச
சுபாவம் இருந்தது. அவரோட ஏழ்மையும் ஒரு காரணமா இருக்கலாம். எல்லா சமயத்திலேயுமே நிறையப் பேர் இருந்ததால் பெரியவா இடம் நெருங்கிப் போய் தன் குறைகளைச் சொல்ல அவரால் முடியவில்லை. வறுமையான நிலையில் ஓட்டல் போன்ற இடங்களில் ஆகாரம் சாப்பிடாத ஆசாரம் கொண்டு இருந்ததால் அந்த இரண்டு நாட்களிலும்
குடும்ப சகிதம் ஸ்ரீமடத்திலேயே சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிட வந்தவரை கவனித்த மடத்து ஊழியர் ஒருவர், அடுத்த நாள் இங்கே சாப்பிட வரக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லி அனுப்பிவிட்டார். தங்க இடமும் இல்லை, சாப்பாட்டுக்கும் வழி இல்லை.
Read 13 tweets
Aug 10
#MahaPeriyava
When Periyaval was camping in Kollankode, He had convened a vidvat sadas (assembly of scholars) there. Since the invitation came to our Thatha also, he had gone there. Whatever else is not available for my Thatha in the morning, a cup of coffee was a must! But in
ShrImatham there was no coffee supply. Strict niyama (regulations)! When Thatha was yearning for a cup of coffee, a man came and took him outside the Matham and bought him a cup of coffee. Only then Thatha felt his life-force returning to his body! Thatha went and sat in the
Sadas. In a short while Periyaval came there. After doing namaskaram to the sage, Thatha went near him. Looking at Thatha, Periyaval asked, "Had your coffee?"
What reply to give? Thatha was confused. With the remorse that no one present there took a cup of coffee except him, he
Read 6 tweets
Aug 9
#Kerala is indeed God’s own land! #கேரலா_கோவில்கள் மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமனால் உருவாக்கப்பட்டது கேரளம். இன்று அங்கு பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களாக கிறுஸ்துவர்களாக மாறிவிட்ட போதும் அங்கிருக்கும் இந்துகள் வழிபாட்டு முறையும், கோவில்களில் இருக்கும் ஒழுங்கும், கோவிலின் உள்ளே
பக்தர்களின் ஒழுக்கமும், அர்ச்சகர்களின் சுத்தம், பூஜையில் ஒரு முக கவனமும் பிற மாநில இந்துகள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. அங்கே சிவ, விஷ்ணு பேதங்கள் இல்லை. மஹா தேவர் என்று அழைக்கப்படும் சிவ சன்னிதானத்தில் கூட சந்தனம் மட்டுமே பிரசாதம். ஒரே கோவிலில் சிவலிங்கம், மஹாவிஷ்ணு, பகவதி,
சர்ப்பக்காவுகள் தரிசனம் செய்யலாம்.
தெருவுக்கு ஒரு புதிய கோவில், அதற்கு ஒரு தர்மகர்த்தா குழு என்றெல்லாம் கிடையாது. கோவிலுக்குள் சாதி சண்டைகள், முதல் மரியாதை, பரிவட்டம் கட்டுதல் இல்லை. எந்த கோவிலிலும் கட்டண தரிசனம், விரைவு தரிசனம் கிடையாது. எல்லாமே பணம் கொடுக்காமல் கிடைக்கும்
Read 14 tweets
Aug 9
#மகாபெரியவா
மகா பெரியவாவை பார்ப்பதற்கு ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருகை தருவார்கள். நிறைய கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் ஒரு பக்தன் கண்களில் கண்ணீரோடு முகத்தில் வாட்டதோடு வந்து மகா பெரியவா அவர்களைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, குங்குமத்தை பிரசாதமாகவும் வாங்கிக்
கொண்டு செல்கிறான். இதே போல மூன்று நாட்களும் நகர்ந்து சென்றது. மூன்று நாட்களும் மகா பெரியவா, கஷ்டத்தில் வந்த அந்த பக்தனை கவனித்துள்ளார். நான்காவது நாளும் அந்த பக்தன் கஷ்டத்தோடு வந்து, சொல்ல வந்த கஷ்டத்தை சொல்லாமல் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு மஹா பெரியவாவை கடந்து சென்ற போது, மகா
பெரியவா அந்த பக்தனை நிறுத்தி, “சொல்ல வந்த கஷ்டத்தை ஏன் சொல்லாமல் செல்கிறாய்” என்று கேடார். கண்கலங்கி கஷ்டத்தை சொல்லத் தொடங்கினான். “தீர்க்கவே முடியாத பணக்கஷ்டம். அள்ளி அள்ளிக் கொடுத்த எங்களுடைய குடும்பம் இப்போது கிள்ளி கொடுப்பதற்கு கூட எதுவும் இல்லாமல் நிற்கிறது. அன்றாட
Read 11 tweets
Aug 9
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தார். சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர், அப்பனே பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி
என்றார். அதற்கு கிருஷ்ணர், பரவாயில்லையே சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது. என்னுடன் வா என அழைத்துச் சென்றார். பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உடன் சென்றார். சிறிது தூரம் சென்றதும் "பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக
உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளை இட்டார். பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார். வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார். உங்கள் வீட்டிலிருந்து சொம்பில் தண்ணீர் வாங்கி வரச் சொன்னார்” எனச்
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(