#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
பண்டரிபுரத்தில் ஓர் அந்தணர், தீவிர விட்டல பக்தர் வசித்து வந்தார். குடும்பம் பெரியது என்பதால் அவருக்குப் பணத்தை தேடுவதற்கும் இடையிடையே நேரம் தேவைப் பட்டது. ஒரு நாள் யாத்திரைக்கு கிளம்பிவிட்டார். போகும் வழியில் விட்டல பஜனையும் ஆச்சு, கையில் ஏதோ கொஞ்சம்
குடும்பத்திற்கு திரவியமும் கிடைத்தது. வித்யா நகர் என்று ஒரு ஊர் வந்து சேர்ந்தார். அந்த ஊருக்கு ராஜா ராமராஜா என்பவர். சிறந்த பக்திமான், மேலும் நிறைய தான தர்மங்கள் செய்பவர் என்று கேள்விப் பட்டு அவரை பார்க்க அவர் அரண்மனை வந்தார். அப்போது ராஜா பூஜை செய்யும் நேரம். காவலாளி யார்
நீங்கள் என்றான். பண்டரி புரத்திலிருந்து ஒரு விட்டல பக்தன் வந்திருக்கிறேன் என்று ராஜாவிடம் சொல்லு என்றார். உள்ளே சென்று திரும்பிய காவலாளி அவரை ராஜாவிடம் அழைத்து சென்றான். ராஜா அவரை உபசரித்தான். நான் அருகே இருக்கும் அம்பிகையின் ஆலயம் சென்று அம்பாளுக்குப் பூஜை செய்து விட்டு
புசிப்பது வழக்கம். தாங்களும் தரிசனத்துக்கு வாருங்கள் என்று அவரையும் அழைத்துச் சென்றார்.
இருவரும் செல்லும் வழியில் ஒரு பெரிய நந்தவனம் தென்பட்டது. இதோ இந்த நந்தவனத்தில் தான் அம்பிகைக்கு தேவையான பூஜைக்கான புஷ்பங்கள் தரும் செடி கொடி மரம் எல்லாம் வளர்க்கிறேன். இது போன்ற நந்தவனம்
செழிப்பாக இருப்பது அபூர்வமானது அல்லவா? இது மாதிரி பார்த்து இருக்கிறீர்களா என்று ராஜா அந்த அந்தணரைப் பார்த்து கேட்டார். அடுத்து, இதோ கோவில் தெரிகிறது பாருங்கள், தக தக பள பளவென்று என்றார். கோவில் சுவர்கள் முழுதும் வெள்ளியாலேயே கட்டப்பட்டு பிரம்மாண்டமாக அம்பிகை கோவில் காணப்பட்டது.
உள்ளே நிறைய பிராமணர்கள் வேதம் பாராயணம் செய்து கொண்டு இருந்தனர். பூஜைக்கு எல்லாம் தயாராக இருந்தது. அம்பாள் நிறைய ஆபரணங்கள் அலங்கார பட்டு வஸ்திரங்களோடு ஜகஜோதியாக தரிசனம் தந்தாள். ராஜா பூஜைக்கு அமர்ந்தார். விஸ்தாரமாக பூஜை நடந்து நைய்வேத்யம் முடிந்து அனைவருக்கும் கை நிறைய பிரசாத
விநியோகமும் ஆனது. ராஜாவும் பிராமணரும் சாப்பிட்டு முடிந்தபிறகு ராஜா பிராமணரை பார்த்து,
அய்யா இது போல் உசத்தியான கோவில், அம்பாள், அலங்கார பூஜைகள் எல்லாம் எங்காவது பார்த்ததுண்டா? உங்கள் பண்டரிபுரத்தில் இப்படி எல்லாம் சிறப்பாக விட்டலனுக்கு பூஜை உண்டா? எதோ பாவம் சில ஏழை பிராமணர்கள்
சேர்ந்து பூஜை பண்ணி அங்கே விட்டல நாம சங்கீர்த்தனங்கள் செய்து வருகிறீர்கள். இந்த அளவுக்கு செல்வ செழிப்பாக அங்கே பூஜைகள் எப்படி நடக்க முடியும்? பிராமணருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. என்ன? என்ன ராஜா! விட்டலனும் பண்டரிபுர ஆலயமும் உங்களுக்கு அவ்வளவு மட்டமாக போய்விட்டதா? பக்தரல்லவா?
“ராஜா, நீங்கள் பண்டரிபுரம் சென்று விட்டலனை தரிசனம் பண்ணினது உண்டா?”
"இன்னும் இல்லை"
"அதனால் தான் இவ்வாறு பேசுகிறீர்கள். விட்டலன் ஆலயம் பண்டரிபுரத்தில் தங்கத்தாலேயே கட்டப்பட்டது. நீங்கள் கட்டியது போல வெறும் வெள்ளியால் அல்ல.
இது நீங்கள்கட்டிய ஆலயம். அது தேவ சிற்பி
விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டது. முப்பத்துமுக்கோடி தேவர்களும் வந்து வணங்கி நிற்கும் புனித ஸ்தலம். சந்திரபாகா என்று ஒரு நதி ஓடுகிறதே கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதில் ஸ்நானம் செய்தால் பல ஜென்மங்களின் பாவம் ஒழியும்.” பிராமணர் இவ்வாறு பொரிந்து தள்ளியதை கேட்ட ராஜாவுக்கு
அதிர்ச்சியும் ஆத்திரமும் வந்தது. இந்த பிராமணனுக்கு கடும் தண்டனை கொடுக்க முடிவு எடுத்தான்.
"நீ சொல்வது உண்மையா"
"நான் சொன்னது கொஞ்சம் தான்."
ராஜா உடனே மந்திரியை அழைத்தான். பண்டரிபுரம் செல்ல ஏற்பாடுகள் செய்ய சொன்னான். ஒரு சிறிய படையே நிறைந்து விட்டது. ராஜாவின் பின்னால் பிராமமணன்
அழைத்து செல்லப் பட்டான். நான் விட்டலன் மீது உள்ள பக்தியால் விட்டலன் ஆலயத்தை குறைத்து சொன்னதை தாங்க முடியாமல் ஏதேதோ உளறிவிட்டேனே. விட்டலா! நான் சொன்னது போல் இல்லையென்று தெரிந்தவுடன் என் கழுத்தை ராஜா வெட்டப் போகிறான். வெட்டட்டும், பரவாயில்லை. விட்டலா உன்னை குறை கூறி அதை கேட்டுக்
கொண்டிருப்பதை விட என் உயிர் போவதே சிறந்தது. இந்த ராஜாவுக்கு நீயே வழிகாட்டு. வழியெல்லாம் விட்டலனை தியானம் பண்ணிக் கொண்டே வந்தார் அவர். ராஜாவின் சேனை பண்டரிபுரம் வந்து சேர்ந்தது. யானை மீது அமர்ந்திருந்ததால் தூரத்திலேயே விட்டலன் ஆலயம் கண்ணில் பட்டது. ராஜா திகைத்தான். அடாடா! என்ன
திவ்ய தரிசனம் இது! அந்த பிராமணன் சொன்னது போலவே இருக்கே. தங்கத்தால் கட்டப்பட்ட கோவில் கோபுரம் கண்ணை குருடாக்குகிறதே. சுற்றிலும் அடர்ந்த பசுமையான காடு நிறைய பூத்து குலுங்கும் வித விதமான புஷ்பங்கள், பழங்கள். ராஜா பார்த்து அதிசயித்தான். ராஜா யானை மீது இருந்து கீழே இறங்கினான்.
பிராமணரிடம் ஓடி வந்தான். சுவாமி நீங்கள் சொன்னது அத்தனையும் அப்பட்டமான உண்மை. உங்களால் தானே எனக்கு விட்டலன் தரிசனம் இன்று கிடைத்தது. உள்ளே விட்டலன் ஸ்ரீ கிருஷ்ணன் வடிவில் சிரித்துக்கொண்டு காட்சி தந்தான்.
விட்டலா!! என்னே உன் கருணை!!
இந்த ஏழை பிராமணனின் வார்த்தை பொய்க்கக் கூடாது
என்று என்னமா தரிசனம் கொடுத்தாய்! நான் பாக்யவான் என்று நெஞ்சுக்குள்ளேயே ஆனந்தம் அடைந்தார் பிராமணர்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 21
தானத்தை பற்றி #கருடபுராணம் கூறுபவை:
1 அன்னதானம் செய்தால் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

3 பசு கன்றீனும் சமயம் ஸத் ப்ராம்மணருக்கு அல்லது கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் Image
வைகுண்ட வாசம் உண்டு.

4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்

5 தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

6 வஸ்திர தானம் கொடுத்தவர் 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
வஸ்திர தானம் கடவுளுக்கு சாற்றினால் எந்த கடவுளுக்கு சாற்றுகிறாரோ அவர் உலகத்தில் 10000 ஆண்டுகள் வாழ்வார்.

7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர் அக்னிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.

8 விஷ்ணு சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்வர்.

9 குதிரையும்,
Read 13 tweets
Aug 21
#MahaPeriyava
My brother-in-law's daughter Jaana and I often used to go to Kanchi and have darshan of Periyava. We would submit different offerings each time we went there. On one occasion, it occurred to us to string a beautiful arugampul garland and offer it to him. With arali Image
flowers forming the border, we prepared a large arugampul garland and went on the next morning to offer it. By the time we reached Kanchi, it was eight in the morning. Periyava was sitting, conversing with everyone around him. We kept the garland pack and a packet of sugar lumps
in front of him. He took it and kept it aside in a corner. He did not even open the pack to see what it contained. We were having darshan of him. A woman came around ten o' clock. She had in her hand an intricately designed silver Kavacham for Ganesha. As instructed by the sage,
Read 8 tweets
Aug 21
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் யசோதை குழந்தை கண்ணனைப் படுக்கையில் கிடத்தி விட்டு, வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தாள். அப்போது கம்ஸனால் அனுப்பப்பட்ட த்ருணாவர்த்தன் என்ற அசுரன் காற்று ரூபத்தில், புழுதி பறக்க, பெரும் சத்தத்துடன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். கோகுலம் முழுவதும் Image
புழுதியால் இருண்டது. எதையும், பார்க்க முடியாத அந்த இருளில், யசோதை குழந்தையைக் காணாமல் கதறி அழுதாள். யசோதையின் அழுகையைக் கேட்ட இடையர்கள், நந்தகோபனின் வீட்டிற்கு வந்தனர். குழந்தையைக் காணாமல் அனைவரும் அழுதனர். அதே சமயம், த்ருணாவர்த்தன் கண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வானில் உயரப்
பறந்தான். அப்போது கண்ணன், தன்னுடைய எடையை மிகவும் அதிகமாக்கிக் கொண்டான். அவனுடைய பாரம் தாங்க முடியாமல், த்ருணாவர்த்தன் வேகம் குறைந்தவனானான். அவனுக்குக் கண்ணன் மலையைப் போல் கனத்தான். புழுதியும், சத்தமும் ஓய்ந்தது. இப்போது அசுரன் குழந்தையை விட்டுவிட நினைத்தான். ஆனால் கண்ணன் அவனை
Read 8 tweets
Aug 20
ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹீ
தந்நோ ஸ்ரீகிருஷ்ண ப்ரசோதயாத்.
#கோகுலாஷ்டமி #ஸ்பெஷல்
#HappyJanmashtami #HappyKrishnaJanmastami2022
ஸ்ரீமத் பாகவதம் படித்தவர்களுக்கு
கண்ணனின் மீது அதீத பிரேமை இருக்கும். இதில் சொல்லப்பட்டிருக்கும் அவர் லீலைகள் நம்மை பக்தி கடலில் ஆழ்த்தும் Image
ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா என்று கூவிக் கொண்டு இருந்தாள். அந்த சத்தத்தைக் கேட்ட கண்ணன் வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை
எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவில் வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கண்ணன் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த
Read 7 tweets
Aug 20
#NahaPeriyava #Happyjanmashtami2022 #HappyKrishnaJanmashtami
Sri Maha Periyava’s Message on Gokulashtami.
“Bhagawan Sri Krishna, in the Gita, says that when the entire world is sleeping, Jnani is awake, to convey the meaning that the enlightened soul is always present in the Image
light of Superior knowledge, which is not visible to the non-enlightened, ignorant world. When it is absolutely dark everywhere and if a light appears, we welcome it. In a desert, if water and shade is found, it gives unlimited joy. The lightning that appears between two dark
clouds, is much brighter. Sri Krishna Paramathma, was born in the midnight of Krishna Paksha Ashtami, in the month of Avani during the Dakshinayana. What is one year for us, is one day for Devas. Our Utharayana is their day time. Dakshinayana is their night time. Therefore, the
Read 15 tweets
Aug 20
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு பக்தர் மதன் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரகம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் திருமஞ்சனம், அலங்காரம் செய்வது Image
மலர்களைக் கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த குட்டி கிருஷ்ணனுக்கு #சதங்கைஅழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, “இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம்” என்று பக்தி
மேலிட கூறி மகிழ்வார் மதன். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு, ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது, அவரது கனவில் ஒரு அழகான குழந்தை, தெய்வீக களையுடன் தோன்றியது! அவரை பார்த்து அழகாக சிரித்தது
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(