#நற்சிந்தனை விச்வரதன் என்ற மன்னரின் மகன் க்ஷத்திர பந்து. அவன் சிறு வயது முதலே தீய சகவாசத்தால் எந்த நற்குணமும் இல்லாதவனாகவும், பிறரைத் துன்புறுத்துவதையே தொழிலாக கொண்டவனாகவும் வாழ்ந்து வந்தான். அவனது இம்சைகளால் வேதனைப்பட்ட நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரண்மனைக்குச் சென்று,
அந்த இம்சை இளவரசனான க்ஷத்திரபந்துவை நாட்டை விட்டு வெளியேற்றும்படி மன்னரிடம் வேண்டினார்கள். தன் மகனைத் திருத்த மன்னரும் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் அவன் திருந்தாததால், க்ஷத்திரபந்துவைக் காட்டுக்கு அனுப்புவது எனத் தீர்மானித்தார். அனுப்பியும் வைத்தார். நாடு நிம்மதியானது. ஆனால்,
காட்டுக்குச் சென்ற பின்னும் க்ஷத்திரபந்து திருந்துவதாகத் தெரியவில்லை. காட்டில் வாழும் மிருகங்களுக்கும், தவம் புரியக் காட்டில் வசிக்கும் துறவிகளுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்தக் காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அங்கிருந்த ஒரு குளத்தில் நீராட சென்றார். அப்போது ஈரமாக இருந்த
படிகள் வழுக்கி விடவே, தவறிப் போய்த் தண்ணீரில் விழுந்தார் முனிவர். காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என இரு கைகளையும் உயர்த்தி உதவிக்காக வேண்டினார். அச்சமயம் அந்த வழியாகச் சென்ற க்ஷத்திரபந்துவுக்கு இந்த முனிவரைக் காக்க வேண்டும் என்று மனதில் தோன்றியது. அதுவரை எந்த நற்செயலும்
செய்திராத அந்த இம்சை இளவரசன், அன்று குளத்தில் குதித்தான். முனிவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான். மிகவும் களைப்பாக இருப்பதாக முனிவர் சொல்ல, அவர் உண்பதற்குப் பழங்களைப் பறித்து வந்து கொடுத்தான் க்ஷத்திரபந்து. அவரது கால்களை பிடித்து விட்டான். அவனது பணிவிடைகளைக் கண்டு மிகவும் மனம்
மகிழ்ந்த முனிவர், “யார் நீ?” என்று அவனைப் பார்த்துக் கேட்டார். எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி தன் முழு வரலாற்றையும் கூறினான்.
“க்ஷத்திரபந்து! கவலைப் படாதே! நான் உனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்கிறேன். அது உன் பாபங்கள் அனைத்தையும் போக்கி உன்னைத் தூய்மைப் படுத்தும்!” என்று சொன்ன
முனிவர், #கோவிந்தா என்ற திருமாலின் திருநாமத்தை அவனுக்கு உபதேசித்தார். “நீ எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டிரு உனக்கு நல்லது நடக்கும்” என்று சொன்னார்.
க்ஷத்திரபந்துவால் நம்ப முடியவில்லை. “இவ்வளவு பாவங்கள் செய்த எனக்கு வெறும் கோவிந்தா என்று சொல்வதால் எப்படி நன்மை
உண்டாகும்?” என்று கேட்டான். அப்போது முனிவர், “திருமாலை குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் என்றும் வீண் போவதில்லை. நாம் சிறிதளவு முயற்சியை அவனை நோக்கி முன்னெடுத்தாலே போதும். மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான். நீ கோவிந்த நாமத்தைச் சொல்!” என்றார். க்ஷத்திரபந்துவும் மனம்
திருந்தியவனாக எப்போதும் கோவிந்த நாமத்தை ஜபம் செய்யத் தொடங்கினான். அதன் பயனாக அவனது பாபங்கள் யாவும் மெல்ல மெல்ல தீயினில் தூசாயின. அடுத்த பிறவியில் பக்தர்கள் நிறைந்த ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வேத சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றான்.
இறைவனின் திருவடிகளில் சரணாகதி செய்து அவனை அடைந்து
அவனுக்குத் தொண்டு செய்வதே அனைத்து வேதங்களின் சாரம் என்பதை அறிந்து கொண்டான். சரணாகதி செய்தான். அந்தப் பிறவியின் முடிவிலேயே முக்தியும் அடைந்தான். க்ஷத்திரபந்து வைகுந்தத்தை அடைந்த போது, அவனுக்கு முற்பிறவியில் உபதேசம் செய்த முனிவர் அவனை வரவேற்றார். “நான் சொன்னது நினைவு இருக்கிறதா?”
என்று கேட்டார். “ஆம்! திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் வீண் போகாது என்று தாங்கள் கூறினீர்கள். அதை அனுபவத்தில் உணர்ந்து விட்டேன். கோவிந்தா கோவிந்தா என்று அவன் திருநாமங்களை உச்சரித்தேன். அது வீண் போகவில்லை. அந்த நாம உச்சாரணம் அடியேனை சரணாகதியில் கொண்டு சேர்த்து
விட்டது. அந்தச் சரணாகதியின் பயனாக எம்பெருமான் அடியேனுக்கு முக்தியும் அளித்து விட்டான்!” என்றான் க்ஷத்திரபந்து. #அமோக: என்றால் வீண் போகாதது என்று பொருள். திருமாலைக் குறித்துச் செய்யப்படும் எந்தவொரு வழிபாடும் வீண் போகாமல் பலன் தருவதால், திருமால் ‘அமோக:’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 111வது திருநாமம். “அமோகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீண் போகாமல் பலனளிக்கும்படி திருமால் திருவருள் புரிவார்.
ஓம் நமோ நாராயணாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை இராமர் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த இராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது இராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன், ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவன் அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளது. நீ அவனிடம் போய் நான்
கேட்டதாகக் கூறி, சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று அனுப்பினார். சென்றவன், இராவணன் ஒன்றும் உபதேசிக்கவில்லை என்று இராமரிடம் வந்து கூறினான். அப்போது இராமர் நீ எப்படி அவனிடம் கேட்டாய் என்றார். நான் தலைமாட்டில் நின்று கேட்டேன் என்றான். உடனே இராமர் வினயத்துடன் கால் மாட்டில் நின்று
கேள் என்று அறிவுறுத்தி அனுப்பினார். லட்சுமணன் பவ்யமாக இராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்து விடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். லட்சுமணனை சிரித்துக் கொண்டே
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் மன்னன் இளங்கோவன் வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை சொல்பவருக்கு, தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான். நிறைய பேர் தினமும் வரத் துவங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரத்தைச் சொன்னர். நமசிவாய என்றார
ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் இளங்கோவன் திருப்தியாகவில்லை. எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை.
இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம்
ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள். அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்
#மகாபெரியவா
பல வருஷங்களுக்கு முன் காஞ்சி மஹா ஸ்வாமிகள் மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த ஆனந்ததாண்டவ புரத்தில் எழுந்தருளி இருந்தார். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் மஹானை தரிசிக்க அங்கே சென்றிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த சிறுவர்களிடம் நோட்டுப் புத்தகங்களைக்
கொடுத்து, அதில் ராம நாமம் எழுதிக் கொண்டு மாலையில் வரும்படி சொல்லி அனுப்பினார் மகாபெரியவா.
அதே போல மாலையில் அச்சிறுவர்கள் ராம நாமம் எழுதி வந்து அவரிடம் தந்தனர். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவனைப் பார்த்து ராம நாமம் சொல்லுமாறு பணித்தார் மஹான். பக்கத்தில் இருந்தவர்கள் தயங்கியவாறு,
அவனால் பேசமுடியாது ஸ்வாமி என்றனர். அவர்களைக் கையமர்த்தித் தடுத்த மஹான், மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்து, "ம் நீ ராம நாமம் சொல்லு!" என்று பணித்தார். என்ன ஆச்சரியம்! வாய் பேச இயலாத அந்தச் சிறுவன் முதலில் சற்று திணறிவிட்டு, பின்பு படிப்படியாக தெளிவான உச்சரிப்பில் ராம நாமம் சொல்ல
#ஸ்ரீமன்நாராயணீயம் நூறு தசகங்களை கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் தோராயமாக பத்துப் பாடல்கள் இருக்கும். இதை இயற்றியவர் #நாராயண_பட்டத்திரி அவர் தன் குருவின் வியாதியை தான் வாங்கிக் கொண்டு தன்ஆச்சாரயனுக்கு அந்நோயிலிருந்து விடுதலை கொடுத்து, மற்ற மாணாக்கர்களுக்கு அவர் தொடர்ந்து பாடம்
எடுக்கும்படி உதவினார். ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட வாத நோய் அவரை மிகவும் வருத்தியது. அவர் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவர் வீட்டு வேலையாள் அவரின் துன்பத்தைக் காண பொறுக்காமல் ஒரு ஜோசியரிடம் சென்று பரிகாரம் வேண்டினார். அவர், நாக்கில் மீனை வைத்துக் கொண்டு குருவாயூரப்பன் கோவிலில் அவரை பாட
சொல்லு என்றார். இதை வந்து பட்டத்திரியிடம் வேலையாள் சொன்னார். முதலில் அதிர்ச்சி அடைந்தார், பின் புரிந்து கொண்டார். மகா விஷ்ணுவும் மச்சாவதாரத்தில் இருந்து பாட ஆரம்பித்தார். தினம் அவரை தூக்கிக் கொண்டு கோவிலில் ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டுப் போய் விடுவார்கள். மாலை வந்து திரும்பவும்
#மகாபெரியவா
என் மனைவிக்கு எப்போதும் உடம்பு சரியில்லை. தலைவலி என்று படுத்துக் கொண்டே கிடக்கிறாள். சமையல் செய்வதில்லை. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில்லை சொல்லிக் கொண்டே போனார் நடுத்தர வயது பக்தர். கொஞ்ச நேரத்துக்குப் பின் பெரியவா சொன்னார்கள், "இதையே உன் சிநேகிதர்களிடம் சொல்லி
பார், சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணுன்னு உபதேசம் பண்ணுவா. உன் பந்துக்களிடம் சொல்லு, அவள் கிடக்கிறாள் கழிசடை, பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டு, வேற நல்ல பெண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ என்பார்கள். ஜோஸ்யரிடம் போய்க் கேட்டுப் பார், ராகு தசை,கேது தசை பரிகாரம் பண்ணணும் என்பார்.
டாக்டரிடம்
போ. எக்ஸ்-ரே ரத்தப் பரிசோதனை இஸிஜி டெஸ்ட் எடுக்கச் சொல்லி, ஒரு பக்கம் நிறைய மருந்து எழுதிக் கொடுப்பார். சொந்தக்காரப் பாட்டியைக் கேள், உனக்குத் திருஷ்டி தோஷம், செய்வினை,ஆபிசாரம் இருக்கு. மந்திரவாதியிடம் போ என்பாள். சரி என்னிடம் வந்தே, என் சம்சாரத்துக்கு உடம்பு குணமாகணும்னு என்னை
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆழ்வார்களிலே, நான்காமவரான திருமழிசைப் பிரான், திருமாலின் அவதாரங்களுக்குள் அழகுப் போட்டி ஒன்றை வைத்தாராம். 1) மத்ஸ்ய 2) கூர்ம 3) வராஹ 4) நரசிம்ம 5) வாமன 6) பரசுராம 7) ஸ்ரீராம 8) பலராம 9) கிருஷ்ண 10) கல்கி
அவதாரங்களை வரவழைத்தார். முதல் சுற்றில் மத்ஸ்ய, கூர்ம,
வராஹ மூன்று அவதாரங்களும் முறையே மீன், ஆமை, பன்றி ஆகிய மிருக வடிவங்களில் இருந்தமையால், அழகுப் போட்டியில் அவர்கள் பங்கேற்க இயலாது எனக் கூறி, நிராகரித்து விட்டார். நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும், உடல் மனித வடிவில் இருந்ததால், அவரை நிராகரிக்கவில்லை. நரசிம்மர் முதல் கல்க
வரை உள்ள ஏழு அவதாரங்களும் இரண்டாவது சுற்றுக்குச் சென்றார்கள். இரண்டாவது சுற்றில், வாமன மூர்த்தி முதலில் வந்தார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி, மூவடி நிலம் கேட்டு, பின் பெரிய காலால், மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோல போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள