மத அடிப்படையிலான பேரினவாத அரசியலைப் புரிந்துகொள்ள பாலஸ்தீனத்தின் வரலாற்றுடன் யூதர்களின் வரலாற்றையும் அறிவது தேவையாகிறது.
1/
விவிலியத்தின் (#Bible) பழைய ஏற்பாட்டை புனிதநூலாக ஏற்கும் யூதர்கள், புதிய ஏற்பாட்டை ஏற்கும் கிறித்தவர்கள் நம்பும் 'இயேசுவே தேவதூதன்' என்பதை ஏற்காதோர். யூதர்கள் இயேசுவை இறைதூதராய் ஏற்கமறுத்த காலத்திலிருந்தே மத உரசல்கள் மத்திய கிழக்காசியப் பகுதிகளில் நடந்து வந்துள்ளன.
2/
எளிமையாகச் சொல்லப்போனால் இந்துமதத்தில் மனுநீதியை ஏற்போர், ஏற்காதோர் என்பது போன்றே தான் யூதரும் கிறித்தவரும். மனுநீதி பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் உயர்ந்தோரென்ற கருத்தை வலியுறுத்தவதைப் போன்றே யூதமதம் யூதர்களை கடவுளின் நேரடி பிள்ளைகளாக, உயர்ந்தோராகப் போற்றிக்கொள்கிறது.
3/
யூதர்கள் தம் இலக்கியச் சான்றுகளூடே வரலாற்றின் பொற்காலமாகக் கருதுவது, யூதமன்னன் சாலமன் #KingSolomon பாலஸ்தீனத்தைக் கைப்பற்றி, ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு இஸ்ரேலாக ஆட்சி செய்த காலத்தையே. அப்போது சாலமனால் கட்டப்பட்ட தேவாலயம் பின்னாட்களில் ஓர் பாபிலோனிய அரசனால் இடிக்கப்பட்டதாம்.
4/
ஏழாம் நூற்றாண்டில் முகமது நபி தோற்றுவித்த இஸ்லாம் வந்த காலங்களில் மத உரசல்கள் அதிகரித்திருந்தன. சாலமன் தேவாலயம் இருந்து இடிக்கப்பட்ட இடத்திலேயே பின்னாளில் இஸ்லாமியர்களின் மூன்றாம் புனிதத் தலமான அல்-அக்சா #AlAqsaMosque மசூதி கட்டப்பட்டதாக யூத மதத்தால் நம்பப்படுகிறது.
5/
பதினைந்தாம் நூற்றாண்டில் மிகப்பெரும் இஸ்லாமிய பேரரசாகவிருந்த துருக்கிய ஓட்டோமான் பேரரசு #OttomanEmpire பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கு முன்னரே, யூதர்கள் ஐரோப்பியம் அமெரிக்கம் என உலகெங்கும் குடிபெயரத் தொடங்கியிருந்தனர்.
6/
ஓட்டோமான் பேரரசின்கீழ் வந்த பாலத்தீனத்தில் யூதர்களும் கிறித்தவர்களும் சிறுபான்மையாகியிருந்தனர்.
உலகெங்கும் சென்ற யூதர்களின் ஒரேக் கனவு, பாலஸ்தீனத்தை மீட்டு யூதத்தாயகமாக்கி, யூதஅரசனான சாலமன் ஜெருசலத்தில் கட்டியெழுப்பிய தேவாலயத்தை மீண்டும் எழுப்பி தாயகத்தின் தலைநகராக்குவதே.
7/
இதற்கான வேலைகள் உலகம் முழுதும் நடந்தேறின. செல்வச் செழிப்பான யூதர்கள் ஐரோப்பிய ஆட்சியதிகாரங்களை முடிவு செய்யுமளவு வளர்ந்தனர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் 'தாயகத்துக்குத் திரும்புவோம்' என்ற முழக்கம் எழுப்பி, ஐரோப்பியாவிலிருந்த யூதர்கள் பாலஸ்தீனம் நோக்கி நகரத் துவங்கினர்.
8/
தாயகத்தை மீட்கும் யூதர்களின் இந்த இயக்கம் சியோனிசம் #Zionism என்றழைக்கப்படுகின்றது.
முதலாம் உலகப்போரின் முடிவில் ஓட்டோமான் பேரரசு வீழ்ந்து, ஆங்கிலேயரின் ஆட்சிப்பகுதிகளுள் வந்தது பாலஸ்தீன். 1917-இல் சியோனிசத்தின் ஆதிக்கமானது,
..
9/
.. ஆங்கிலேயரை யூதர்களின் தாய்நாட்டுக்கு திரும்பி செல்லும் கோரிக்கையை ஆதரிக்க வைத்தது. யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறத் துவங்கினர்.
ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறிப் போக, பிரிட்டிஷானது ஐநாவிடம் பாலஸ்தீனத்தை ஒப்படைத்து விட்டுச் சென்றது.
10/
1948-இல் ஐநா இச்சிக்கலுக்குத் தீர்வாக இரு மாநிலப் பிரிவினையை முன்வைக்க, யூதர்கள் இதனை வைத்து, இஸ்ரேல் நாடு #StateofIsrael பிறந்துவிட்டதாக அறிவித்துக் கொண்டனர்.
அண்டைய அரேபிய நாடுகளை இது கொதிப்படையச் செய்ய, முதலாம் யூத -அரேபியப் போர் மூண்டது.
11/
போரின் முடிவில் யூதர்கள் வென்று மேற்கு ஜெருசலம் உட்பட 78% பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததுடன், கிழக்குப்பகுதியிலிருந்த பாலஸ்தீன பகுதியான மேற்குக் கரை (#WestBank) ஜோர்டனிடமும், தென்மேற்குப் பகுதியான காசா துண்டுப்பிரிவு (#GazaStrip) எகிப்திடமும் சென்றன.
12/
முடிவில் 7,00,000 பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்த நாள் 'அல்-நக்பா(பேரழிவு)' என்று பாலத்தீனர்களால் நினைவு கூறப்படுகின்றது.
1967-இல் ஆறு நாள் போர் வெடித்ததில் அண்டைய அரேபிய நாடுகள் வீழ்த்தப்பட்டு, பாலஸ்தீனம் முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
13/
இஸ்ரேலியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் யூதர்கள் காசா பகுதியிலும் மேற்குக்கரையிலும் குடியேறத் துவங்கினர். எதிர்வினையாக பாலஸ்தீனியர்-இஸ்ரேலியர்குள் போராட்டம் வெடித்து, யாசிர் அராஃபத் #YasserArafat தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் (#PLO) எழுந்தது.
14/
இதன் குறிக்கோள் இஸ்ரேலிடமிருந்து பாலஸ்தீனை எப்படியேனும் மீட்டு மதச்சார்பற்ற பாலஸ்தீனத்தை உருவாக்குவது.
ஆனால், ஒரு கட்டத்தில் PLO இஸ்ரேலின் இரு மாநிலத் தீர்வுக்கு உடன்பட்டது, மற்றைய பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை கொதிப்படையச் செய்தது.
15/
குறிப்பாக தனிப் பாலஸ்தீன மீட்பில் உறுதியாக நின்ற ஹமாஸ் ராணுவ அமைப்பு இதனைக் கடுமையாக எதிர்த்தது. எனினும், PLO ஒரு பக்கம் இஸ்ரேலுடன் போரிட்டுக் கொண்டிருந்த வேளையில் 1993-ஆம் ஆண்டு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அமெரிக்க கட்டபஞ்சாயத்து நடந்தது.
16/
இதன் விளைவாக, அடுத்த பத்தாண்டுக்குள் இருமாநில தீர்வை நிறுவுவது என்றும், மேற்குக்கரை மற்றும் காசாவின் தலைமை மேலாண்மை அமைப்பாக பாலஸ்தீன கட்டுப்பாட்டுசபை (#PalestineAuthority) உருவாக்கப்படுவது எனவுமாக முடிவானது. இது ஆஸ்லோ இசைவு (#OsloAccord) எனப்படுகிறது.
17/
PA உருவாக்கப்பட்டு அதன் முதல் அதிபராக யாசர் அராஃபத் தேர்தெடுக்கப்பட்டார்.
2004-இல் யாசர் அராஃபத்தின் மறைவிற்கு பிறகு, மமூத் அப்பாஸ் #Abbas PAவின் அதிபராகவும் PLAவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே கட்டத்தில், ஹமாஸ் #Hamas அமைப்பு பாலஸ்தீனியர்கள் மத்தியில்
..
18/
..வெகுவாக வளர்ந்தெழுந்து 2006 தேர்தலில் PLO வை வீழ்த்த, இரு அமைப்புகளுக்கிடையே மோதல் வலுத்தது. ஹமாஸ் அமைப்பு காசா பகுதியை மொத்தமாக கைப்பற்ற, அப்பாஸ் ஹமாஸ் அமைத்த சட்டமன்றத்தை கலைத்துவிட்டு PLA தலைமையில் மேற்குக்கரையை திரும்பக் கொண்டுவந்தது.
19/
எனினும், காசாவை ஹமாஸிடம் இழந்திருந்தது. ஹமாஸ் அமைப்பு 2007-இல் ஐநாவின் இரு மாநில கோரிக்கையை '1967க்கு முன்பிருந்த எல்லைகளின் அடிப்படையில்' ஏற்க முடிவெடுத்தது.
இரு அமைப்புகளும் தனித்தனியே இயங்கினாலும், பாலஸ்தீன விடுதலை என்ற இலக்கில் வழுவாது நிற்கின்றன.
20/
2012-இல் பாலஸ்தீனம் அப்பாஸின் முன்னெடுப்புகளின் மூலம் ஐநாவின் உறுப்பினரல்லாத பார்வையாளராக (#NonObserverState) ஆனது.
எனினும், ஐநாவும் அமெரிக்காவும் பல முன்னெடுப்பை எடுத்ததாகச் சொல்லியும் ஆஸ்லோ இசைவின்படி இரு மாநிலங்களை இதுவரையிலும் உருவாக்க முடியவில்லை.
21/
ஆனால், மேற்குக்கரையிலும் காசாவிலும் இ்ஸ்ரேலியர்கள் குடியேறுவதும் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுவதும் நின்றபாடில்லை. ஆஸ்லோ இசைவின் பிரதான நடுநிலையாளனான வல்லாதிக்க அமெரிக்கா 2017-இல் ஜெருசெலத்தை இஸ்ரேலின் தலைநகராக்க இசைவு தெரிவித்ததுடன்,
..
22/
2020-இல் மேற்குக்கரை மற்றும் காசா பகுதியில் இஸ்ரேலியர் குடியேறியுள்ள பகுதிகளை இஸ்ரேலுடன் சேர்ப்பதையும் ஆதரித்தது.
சில பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டு, மீண்டும் பழைய பாலஸ்தீன நாடாக உருவாக்கப்பட வேண்டுமென்று கோருகின்றன.
23/
பெரும்பாலான பாலஸ்தீன மக்களின் கோரிக்கையோ 1967-க்கு பின் மேற்குக் கரை மற்றும் காசாவிற்குள் குடிபெயர்ந்த இஸ்ரேலியர்களை வெளியேற்றி தனி பாலஸ்தீன மாநிலமாக தங்களை ஏற்கக் கோரும் அளவுக்கு இறங்கியுள்ளது. காரணம் இஸ்ரேலின் ஆண்டுக்கணக்கான ஒடுக்குமுறைகள்.
24/
அடிப்படை தேவைகளான தண்ணீர் வரையிலும் பாலஸ்தீனுக்கு கிடைக்காதவாறு ஒடுக்கி வருவதே அங்குள்ள களநிலவரம். இப்படி 70 ஆண்டுகளுக்கும் மேலாக இனஅழிப்புக்குள்ளாகி வரும் பாலஸ்தீனத்தை தனிநாடாக விடுவிப்பதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
கடந்த பத்தாண்டுகளாக பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலிற்குமிடையில் வான்வழித் தாக்குதல் நடப்பது தொடர்ந்து வந்தாலும், இஸ்ரேலியர்களை காசா மற்றும் மேற்குக்கரையில் குடியேற்றுவதை நிறுத்தாமலிருக்கும் இஸ்ரேல் உரைக்கும் செய்தி ஒன்றுதான்:
26/
பாலஸ்தீனியர்களை முற்றுமாக பாலஸ்தீனை விட்டு விரட்டிவிட்டு, முழுவதையும் இஸ்ரேலாக்கி, சாலமன் கட்டிய தேவாலயத்தை மீண்டும் ஜெருசலத்தில் எழுப்புவதே.
2013 இந்தி தேசிய காங்கிரசு ஆட்சி வரையிலும், ஏன் வாஜ்பாய் கால பாஜக ஆட்சியிலும் கூட பாலஸ்தீன மக்களுக்காதரவாய் நின்ற இந்தியா,
..
27/
..இன்று மோடியரசின் தலைமையில் இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றது.
ஈழ இனப்படுகொலைக்குப் #TamilGenocide பின்னான சிங்கள பெளத்தப் பேரினவாத அரசு இஸ்ரேலின் வழியில் தமிழர் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றுவதன் மூலம் இனஅழிப்பு வேலைகளை நடத்தி வருகிறது.
28/
இதைத் தெரிந்தும் கண்டிக்காது கள்ளமௌனம் காக்கும் தமிழர்விரோத இந்தியப் பேரினவாத அரசிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இனப்படுகொலைக்குட்பட்டுவரும் தமிழினத்திற்கு புரியாததா பாலஸ்தீனியர்களின் வலி?
பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோயில் கட்டும் இந்துத்துவமானாலும் சரி,
.
29/
...அல்-அக்சா மசூதியை இடித்துவிட்டு அங்கு சாலமன் தேவாலயத்தை எழுப்ப எண்ணும் யூதத்துவமானாலும் சரி, உலகுக்கு உணர்த்துவது ஒன்று தான் - அடிப்படைவாத வலதுசாரிகள் மனிதத்தன்மையற்றவர்கள்.
30/
'எண்ணித் துணிக கருமம்' எனும் முப்பாலர் மொழி புரிந்தோர் தமிழர்!
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் திராவிடர் தமக்கு இறையியல் மறுக்கும் மெய்யியலுமுண்டு!
அஃது காட்டிடும் தீவினையார்க்கு காரிருள் யாதென!
பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தமிழில், 'தமிழறிவன்'
👇🏼🧵👇🏼
ஏன் 'தமழறவன' என்று இருக்குன்னா அன்று திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறை ஒன்றே!
👉🏼 மெய்யெழுத்திற்குப் புள்ளிவைப்பது, நெடிலுக்கு துணைக்கால் வந்தது, அச்சு வந்த காலம் கொடுத்த 'நிறுத்தற்குறிகளை'(Punctuations) ஏற்றது;
1/ஃ
👉🏼கிரந்தமேற்றப்பட்டத் தமிழ், க்ருத எழுத்து முறையேற்ற கன்னடம், மலையாளம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, தெலுங்கு, கோண்டி, கூயி, கூலி, கோலாபி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டோ, குரூக், மால்தோ, பிராகூய் என திராவிட மொழிக் குடும்பமாக தமிழ் பிளவுபட்டது என தமிழ்
2/ஃ
ஈராயிரமாண்டுகளாய் பல்வேறு மாறுதலுக்குள்ளானதற்கு மூலக்காரணம் பார்ப்பனியத்தின் ஆரியமேற்றல்!
இவற்றனைத்தையும் பேசாம தமிழில் இல்லாத Phonetics-களுக்கு தமிழில் வழிவர பரிந்துரைத்த பெரியாரின் தமிழ்க்காதலை புரியாது ஜெயமோகன்களின் குரலாய் சேறிறைக்கும் மொழி அடிப்படைவாத லும்பர்களுக்கு,
சமத்துவத்தை விரும்பும் அனைவருக்குமான தலைவரை ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு மட்டுமான தலைவராக ஆக்கவே இந்துத்துவம் திட்டமிட்டு டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதியை இடித்தது.
1/
மாட்டு மூத்திரம் குடித்தால் புற்றுநோய் வராது, கொரானாவே ஓடிவிடும் என்றெல்லாம் சிந்திக்கும் கூட்டத்துக்கு எப்படி அம்பேத்கரின் சிந்தனை வெளியை முடக்கிட திட்டமிடும் அளவுக்கான கட்டமைப்பும் கோட்பாடும் வந்தது?
2/
கடந்த நூற்றாண்டில் எழுந்த இந்துத்துவம் எனும் அடிப்படைவாத வலதுசாரிக் கோட்பாட்டுக்கு தந்தையாக பார்க்கப்படும் சாவர்க்கர், ஆங்கிலேயரின் காலை நக்கி சிறைவாசத்திலிருந்து தப்பித்தது மட்டுமல்ல, இந்த கோட்பாட்டையே சியோனிசத்திடமிருந்து தான் ஆட்டையப் போட்டார்.