#கனகதாரா_ஸ்தோத்திரம் #சொர்ணத்து_மனை
#ஆதிசங்கரர் சிறுவயதில் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். ஒரு நாள் அவர் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு. பவதி பிட்சாந்தேஹி என குரல் கொடுத்த ஆதிசங்கரருக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண் தன்னிடமிருந்த
காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். ஒரு ஏழைப் பெண் அளித்த பிட்சையை ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரர் இந்த வீட்டில் ஒரு சன்யாசிக்கு கொடுப்பதற்கு கூட ஒரு நெல் மணி இல்லாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டார். உடனே அவரது காதில் உதவி செய்வதாக இருந்தால் பரிதாபப்பட வேண்டும
உதவி செய்ய இயலாத போது பரிதாபப் படக்கூடாது என்று ஒரு அசிரீரீ கேட்டது. இதனை கேட்ட ஆதிசங்கரர் அவளுக்கு உதவ விரும்பினார். மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். ஆதிசங்கரர் தனது பாடலில் சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய
பூர்வபாவம் மழையே இல்லாத கோடை காலம் மாதிரி இவர்களைத் தகிக்கிறது. ஆனாலும் உன்னிடம் தயை என்கிற காற்று இருக்கிறதல்லவா? அந்தக் காற்றினால் உன் கடாட்ச மேகத்தைத் தள்ளிக் கொண்டு வந்து இவர்களுக்குச் செல்வ மழையைப் பொழியம்மா என்கிறார் இந்தச் சுலோகத்தில். அவர் பாடிய பாடல் கனகதாரா தோத்திரம்
என்று அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் பாடல் பாடி முடித்த உடனே அவள் வீட்டு வாசலின் முன்பாக தங்க நெல்லி மழை போல் பெய்தது. வீடு முழுவதும் தங்கக் கனிகள் குவிந்தன. காலடி என்ற இடத்தில் இருக்கும் அந்த தங்க மழை பெய்த வீடு சொர்ணத்து மனை என இன்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. ஆதிசங்கரரின் அருள்
பெற்ற இந்த ஏழை தம்பதியர்களின் பரம்பரையினர் இன்றும் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டிக்கு #நாலுகெட்டு என்று பெயர். தங்க நெல்லிக்கனி மழை பொழிந்த சொர்ணத்து மனை முதலில் ஒரு சாதாரண ஓட்டு வீடாகத் தான் இருந்தது. இந்த வீடானது சொர்ணத்து மனை பரம்பரையில் வந்தவர்களால் 250 ஆண்டுகளுக்கு முன்னர
கட்டப்பட்டது. கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இந்த வீடானது 250 ஆண்டுகள் பழமையானது. மகாலட்சுமி அன்னையின் அருளுக்கும் பால சன்னியாசியான சங்கரரின் கருணைக்கும் சாட்சியாக இன்றும் உள்ளது இந்த வீடு. இந்த சம்பவத்தையொட்டி ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோவிலில் கனகதாரா யாகம் செய்கின்றனர்.
சங்கரர் முக்தியடைந்தது 32 ஆம் வயதில். எனவே அன்றைய தினம் 32 நம்பூதிரிகள் கனகதாரா சுலோகத்தை 1008 முறை ஜெபித்து அர்ச்சனை செய்வார்கள். தங்க நெல்லிக்கனிகள் வெள்ளி நெல்லிக் கனிகள் ரட்சைகள் வைத்துப் பூஜை செய்வார்கள். இந்த வீட்டிற்கு யார் வந்தாலும் வெளியே திண்ணையில் அமர்ந்து தியானம்
செய்துவிட்டு கனகதாரா ஸ்தோத்திரம் படித்துவிட்டு அமைதியாக செல்லலாம். மற்றபடி வீட்டுக்குள் நுழைய யாருக்கும் அனுமதியில்லை.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
* ஆதிசங்கரர் சன்னியாசி ஆனவுடன் அல்ல உபநயனம் ஆன பிறகு. குருகுலத்தில் படிக்கும் பொழுது இவ்வழக்கம் பிரம்மச்சாரிகள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. தவறுக்கு மன்னிக்கவும்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 14
#MahaPeriyava Source: Sri Maha Periyava Mahimai Newsletter-Aug 10 2008
This experience of Sri Jagadeesha Bhat signifies that Sri Sri Sri Mahaperiyava is omnipresent and blessing all His devotees even today. Sri Maha Periyava had showered His blessings towards a Nataraja temple in Image
Satara, named as Uttara Chidambaram. Sri Maha Periyava also ordered Sri Jagadeesha Bhat to take care of the temple activities when the temple was about to be built completely. Sri Jagadeesha Bhat also went to Satara and took care of the temple activities with utmost sincerity as
per Sri Periyava’s orders. But he faced lot of difficulties there. When he could not manage, he returned to Kanchipuram. When Sri Maha Periyava enquired, he mentioned all the difficulties to Sri Periyava. But Sri Periyava, a karunamoorthy, after hearing all his problems, gave His
Read 11 tweets
Feb 14
#தெய்வ_நம்பிக்கை ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்கு பகவான் நாரயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதர், ஸ்ரீமன் நாராயணனை சந்திக்க சென்று கொண்டிருப்பதை அறிந்த அவர், நாரதரை வணங்கி, “தாங்கள்  பகவான் ஸ்ரீமன் Image
நாராயணனைப் பார்க்கும்போது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?” என்று விண்ணப்பம் வைத்தார். நிச்சயமாக என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார். சற்று தொலைவில், ஒரு ஆலமரத்தடியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார்
நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்மதித்து அங்கிருந்து வைகுந்தம் போனார். வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடு Image
Read 13 tweets
Feb 14
உத்தரணி அல்ல, அதனை #ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் 5 என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நாம் நினைப்பது போல் 5 பாத்திரங்களோ அல்லது 5 விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும் Image
சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்! அது போல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும் போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால்
பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள். பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும் போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள். உதாரணத்திற்கு பிள்ளையார் பூஜை செய்யும்போது ‘விநாயகாய நமஹ: த்யாயாமி’ -விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்
Read 7 tweets
Feb 14
#நற்சிந்தனை
அதிக நேரம் இருந்தால் அதை வாசிப்பதில் நாம் செலவிடவேண்டும். நாம் இது வரை கற்றது கைமண் அளவே. இறுதிவரை நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
நம்மை குறைவாகவும் மதிப்பிடாமல் அதிகமாகவும் மதிப்பிடாமல் அதே சமயம் நம் சுய மதிப்பை சரியாக தெரிந்து கொண்டு பெருமையுடன் வாழ வேண்டும். Image
கோபம் நம் மன நிம்மதிக்கும் ஆரோக்கியத்துக்கும் பெரும் எதிரி. அதை குறைத்துக் கொள்ள தினமும் விடாமல் பயில வேண்டும்.
நம் தவறை யாரேனும் சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அதை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நேர்மை சிந்தனையிலும் செயலிலும் மிக முக்கியம். உண்மையாக
நடந்து கொண்டால் யாரிடமும் எந்த சந்தர்ப்பத்திலும் பயப்பட தேவையில்லை.
பேசுவதற்கு முன் சொல்லப் போவது அடுத்தவருக்கு நல்லதா அல்லது அவரை காயப் படுத்துமா என்று சிந்தித்து அதன் பின் பேச வேண்டும்.
நம் எண்ணத்தை மற்றவர் மேல் திணிக்கக் கூடாது. மிக நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவருக்கு அது
Read 4 tweets
Feb 13
#வல்லக்கோட்டைஅருள்மிகுசுப்பிரமணியசுவாமி_திருக்கோயில்

மூலவர் : சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்)
தல விருட்சம் : பட்டரி மரம்
தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம்
பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண
ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பி வைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார
அவன் பல தேசங்களுக்கு திக்விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் “பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால் தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்” என்றார், நாரதர். இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத்
Read 20 tweets
Feb 13
#மகாபெரியவா ஒரு சமயம் மகா பெரியவா தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் அவரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.
தருமபுரம் மடம் வழியாக அவரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதை யுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம். நாதசுவரம்
சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் அகில உலக நாதசுவரம் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் என்றுதான் அச்சிடப் பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில் தான் பயணிப்பார். இந்த
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(