மூலவர் : சுப்பிரமணியசுவாமி (கோடை ஆண்டவர்)
தல விருட்சம் : பட்டரி மரம்
தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம்
பகீரதன் என்ற மன்னன், இலஞ்சி என்னும் தேசத்தில் உள்ள சலங்கொண்டபுரம் என்ற நகரை சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அந்த மன்னனைக் காண
ஒரு முறை நாரத முனிவர் வந்திருந்தார். ஆனால், தான் சிறப்பான ஆட்சியை வழங்கும் ஒப்பற்ற அரசன் என்னும் ஆணவத்தில் இருந்த மன்னன், நாரதரை மதிக்காமல் அவமதித்து அனுப்பி வைத்தான். இதனால் கோபம் கொண்ட நாரத முனிவர் அருகில் இருந்த காட்டிற்குச் சென்றார். அங்கு வழியில் கோரன் என்ற அசுரனை சந்தித்தார
அவன் பல தேசங்களுக்கு திக்விஜயம் செய்து வந்திருந்தான். அவனிடம் “பகீரத மன்னன், தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவம் கொண்டுள்ளான். நீ அவனை வெற்றி கொண்டால் தான், உன்னுடைய திக்விஜயம் முழுமைப் பெற்றதாகும்” என்றார், நாரதர். இதையடுத்து கோரன், பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத்
தோற்கடித்தான். பகீரத மன்னன் தனது ஆணவத்தால், நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்கு சென்றான். அங்கே அவனுக்காக காத்து இருந்தார் நாரத முனிவர். அவரது காலில் விழுந்து தன் தவறை எண்ணி வருந்தி, மன்னித்து அருளும்படி மன்றாடினான். நாரதர் மனம் இரங்கினார். “துர்வாச முனிவரிடம் சென்று
முறையிடு. உனக்கு நல்ல வழி பிறக்கும்” என்று ஆசி கூறி அனுப்பினார். பகீரதனும், துர்வாச முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூறி மனம் வருந்தி, தனக்கு நல் வழி காட்டுமாறு வேண்டி நின்றான். துர்வாச முனிவர், பகீரதனுக்கு சில உபதேசங்களை வழங்கினார். அதன்படி வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து
முருகப்பெருமானை வழிபாடு செய்து, அழியாத பேறு பெற்றான், பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே, #வல்லக்கோட்டை_முருகப்பெருமான் திருக்கோயில். வள்ளி-தெய்வானை உடனாய கோடையாண்டவர் என்ற பெயரோடு, இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், தன்னை வேண்டி
வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி, நல்வினைகளை வழங்கும் அபயகரத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ர தீர்த்தம் இங்கு உள்ளது. பகீரதன் விரதம் இருந்து விமோசனம் பெற்ற நாள், வெள்ளிக்கிழமை. எனவே இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்புவழிபாடுகள்
செய்யப் படுகின்றன. 7 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும், சகல நன்மைகளும் பெறலாம் என்பது நம்பிக்கை. வல்லன் என்ற அசுரனின் கோட்டையாக இந்தப் பகுதி இருந்தது. அந்த அசுரன், தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதை
அடுத்து தேவர்கள், முருகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருப்பெருமானும் தேவர்களின் துயரைத் துடைக்க எண்ணினார். அதன்படி அசுரனை அழித்து அவனுக்கு முக்தி அளித்தார். மேலும் அசுரனின் வேண்டுகோள்படி, இந்த ஊர் ‘வல்லன் கோட்டை’ என்று சிறப்பு பெறும் என்றும் அருளினார். அந்த வல்லன்கோட்டையே,
வல்லக்கோட்டை என்று மருவி உள்ளது. 1000+ ஆண்டுகள் பழமையான கோவில். இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு 7 அடியில் முருகனும், உடன் வள்ளி தெய்வானையும் உள்ளனர். முருகனுக்கு எதிரே இரட்டை மயில் கோயிலின் கருவறை எந்த நாகரிக அலங்காரமும் இல்லாமல், விளக்கின் வெளிச்சத்தில் மட்டுமே முருகனை
காணும்படி இருப்பது அழகைக் கூட்டுகிறது. இந்திரன் தன் குருவாகிய பிரகஸ்பதியிடம் முருகப்பெருமானை வழிபட்டு அருள் பெறுவதற்கு ஒரு சிறந்த இடத்தை உபதேசியுங்கள் என்று கேட்டான். அதற்கு அவரும் பூலோகத்தில் வல்லக்கோட்டை என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் முருகனை வழிபட்டு நலம் பெறுவாய் என அருள்
பாலித்தார். இந்திரன் இத்தலம் வந்து தனது வஜ்ராயுதத்தை ஊன்றி ஒரு திருக்குளத்தை உண்டாக்கி, அந்த நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது இஷ்ட சித்திகளை பெற்று சென்றான். எனவே இத்தல தீர்த்தம் வஜ்ர தீர்த்தம் என்றும் இந்திர தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது. அருணகிரிநாதர் தல
யாத்திரை செய்து வருகையில் திருப்போரூர் முருகனை வழிபட்டு, மறுநாள் திருத்தணி செல்லலாம் என நினைத்து கொண்டே இரவில் அங்கு தங்கினார். இவரது கனவில் கோடைநகர் குமரன் தோன்றி, "என்ன அருணகிரியாரே! வல்லக்கோட்டையினை மறந்தனையே" என்று கூறி மறைந்தார். கண்விழித்த அருணகிரிநாதரும் திருத்தணி செல்லும்
முன் வல்லக்கோட்டை முருகனை தரிசித்து திருப்புகழ் பாமாலை (8பாடல்) பாடி மகிழ்ந்தார். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆலயத்தின் பெருமையை அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதினால் அந்த ஆலயம் நிச்சயமாக 700 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அவர் அந்த ஆலயம் உள்ள இடத்திற்கு
சென்ற போது அந்த ஆலயத்தின் தலவிருட்சம் பட்டரி என்ற மரத்தின் அடியில் தான் அவர் முருகனின் அருளைப் பெற்றார். பல்லவர்களின் சிற்பக் கலை எப்படி இருந்தது என்றால் அவர்கள் எழுப்பிய ஆலயங்கள் அனைத்துமே பாறைகளைக் குடைந்து, அதில் இருந்த பாறைகளின் மீதே சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. மேலும்
அவற்றை செதுக்குவதற்கு கற்களையோ, ஜல்லிகளையோ அல்லது மற்ற எந்த விதமான உலோகங்களையோ அவர்கள் பயன் படுத்தவில்லை. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் ஆகியோர் திருமேனிகள் வரிசையாக உள்ளன. பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி
கருமாரி, உற்சவர் ஆகியோரது சன்னிதிகள் காணப்படுகின்றன. அன்ன தானம் இக்கோவிலின் சிறப்பாகக் கூறப் படுகிறது. 50, 100 என்று நபர்களுக்கு அன்னதானம் வழங்க வழிமுறைகளைத் திருக்கோவில் நிர்வாகம் செய்துள்ளது. அறுபடை வீடு போன்று புகழ்பெற்ற இக்கோயிலுக்கு பரணி, கார்த்திகை நாட்களிலும், மற்றும்
முருகனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜை நடக்கிறது.
திறந்திருக்கும் நேரம்: காலை 5.30 மணி முதல் 1 மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
வல்லக்கோட்டை - 602 105
காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்: +91- 44 - 2717 2225.
அமைவிடம்
காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிமீ, கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிமீ, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 10 கிமீ தொலைவிலும் வல்லக்கோட்டை உள்ளது. அங்கிருந்து 17 கிமீ தொலைவில் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது.
ஓம்சரவணபவாய
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
#MahaPeriyava Source: Sri Maha Periyava Mahimai Newsletter-Aug 10 2008
This experience of Sri Jagadeesha Bhat signifies that Sri Sri Sri Mahaperiyava is omnipresent and blessing all His devotees even today. Sri Maha Periyava had showered His blessings towards a Nataraja temple in
Satara, named as Uttara Chidambaram. Sri Maha Periyava also ordered Sri Jagadeesha Bhat to take care of the temple activities when the temple was about to be built completely. Sri Jagadeesha Bhat also went to Satara and took care of the temple activities with utmost sincerity as
per Sri Periyava’s orders. But he faced lot of difficulties there. When he could not manage, he returned to Kanchipuram. When Sri Maha Periyava enquired, he mentioned all the difficulties to Sri Periyava. But Sri Periyava, a karunamoorthy, after hearing all his problems, gave His
#தெய்வ_நம்பிக்கை ஒருமுறை நாரதமுனி வைகுந்ததிற்கு பகவான் நாரயணனைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார், வழியில் வேதங்கள் அனைத்தையும் பயின்ற ஆச்சாரமான ஒரு அந்தணரைச் சந்தித்தார். நாரதர், ஸ்ரீமன் நாராயணனை சந்திக்க சென்று கொண்டிருப்பதை அறிந்த அவர், நாரதரை வணங்கி, “தாங்கள் பகவான் ஸ்ரீமன்
நாராயணனைப் பார்க்கும்போது, அடியேன் எப்போது வீடு பேரு அடைவேன் என்று கேட்டுச் சொல்கிறீர்களா?” என்று விண்ணப்பம் வைத்தார். நிச்சயமாக என்று நாரதர் பதிலளித்துவிட்டு அங்கிருந்து பயணத்தை மேலும் தொடர்ந்தார். சற்று தொலைவில், ஒரு ஆலமரத்தடியில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியைச் சந்தித்தார்
நாரதர் எங்கு செல்கிறார் என்பதையறிந்த அவரும் அதே வேண்டுகோளை விடுக்க நாரதரும் சம்மதித்து அங்கிருந்து வைகுந்தம் போனார். வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைச் சந்தித்த நாரதர் முதலில் தனது அலுவல்கள் குறித்து பேசிவிட்டு இறுதியாக தான் அன்று சந்தித்த இருவரைப் பற்றி கூறி, அவர்கள் எப்போது வீடு
உத்தரணி அல்ல, அதனை #ருத்ரணி என்று சொல்லவேண்டும். பஞ்ச என்றால் 5 என்று மட்டுமல்ல, அகலமான என்ற பொருளும் உண்டு. பஞ்ச பாத்திரம் என்றால் ‘வாய் அகன்ற பாத்திரம்’ என்று பொருள். நாம் நினைப்பது போல் 5 பாத்திரங்களோ அல்லது 5 விதமான உலோகங்களின் கலவையோ அல்ல. அதேபோல அதனுடன் இணையாக இருக்கும்
சின்னஞ்சிறு கரண்டிக்கு ருத்ரணி என்று பெயர். ருத்ரனின் அணிகலனான பாம்பின் உருவினைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும். பாற்கடலை பாம்பைக் கயிறாகக் கொண்டு கடைந்துதானே அமிர்தத்தை எடுத்தார்கள்! அது போல பஞ்சபாத்திரத்தில் உள்ள தீர்த்தத்தை எடுக்கும் போது அது அமிர்தமாக வேண்டும் என்பதால்
பாம்பின் உருவில் அதனை வடிவமைத்தார்கள். பஞ்சபாத்திரம்-ருத்ரணி என்பதே சரி. இறைவனை முறைப்படி பூஜை செய்து வழிபடும் போது, முதலில் அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லி தியானிப்பார்கள். உதாரணத்திற்கு பிள்ளையார் பூஜை செய்யும்போது ‘விநாயகாய நமஹ: த்யாயாமி’ -விநாயகப்பெருமானே உம்மை தியானிக்கிறேன்
#நற்சிந்தனை
அதிக நேரம் இருந்தால் அதை வாசிப்பதில் நாம் செலவிடவேண்டும். நாம் இது வரை கற்றது கைமண் அளவே. இறுதிவரை நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
நம்மை குறைவாகவும் மதிப்பிடாமல் அதிகமாகவும் மதிப்பிடாமல் அதே சமயம் நம் சுய மதிப்பை சரியாக தெரிந்து கொண்டு பெருமையுடன் வாழ வேண்டும்.
கோபம் நம் மன நிம்மதிக்கும் ஆரோக்கியத்துக்கும் பெரும் எதிரி. அதை குறைத்துக் கொள்ள தினமும் விடாமல் பயில வேண்டும்.
நம் தவறை யாரேனும் சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அதை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
நேர்மை சிந்தனையிலும் செயலிலும் மிக முக்கியம். உண்மையாக
நடந்து கொண்டால் யாரிடமும் எந்த சந்தர்ப்பத்திலும் பயப்பட தேவையில்லை.
பேசுவதற்கு முன் சொல்லப் போவது அடுத்தவருக்கு நல்லதா அல்லது அவரை காயப் படுத்துமா என்று சிந்தித்து அதன் பின் பேச வேண்டும்.
நம் எண்ணத்தை மற்றவர் மேல் திணிக்கக் கூடாது. மிக நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவருக்கு அது
#மகாபெரியவா ஒரு சமயம் மகா பெரியவா தஞ்சாவூர் ஜில்லாவில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் அவரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.
தருமபுரம் மடம் வழியாக அவரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதை யுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை கெளரவம் செய்து மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம். நாதசுவரம்
சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் அகில உலக நாதசுவரம் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் என்றுதான் அச்சிடப் பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில் தான் பயணிப்பார். இந்த
#கனகதாரா_ஸ்தோத்திரம்#சொர்ணத்து_மனை #ஆதிசங்கரர் சிறுவயதில் சன்னியாசி ஆனவுடன் யாசகத்திற்குப் புறப்பட்டார். ஒரு நாள் அவர் யாசித்த வீடு மிகவும் ஏழ்மையான வீடு. பவதி பிட்சாந்தேஹி என குரல் கொடுத்த ஆதிசங்கரருக்கு கொடுக்க ஏதுமில்லையே என வருந்திய அவ்வீட்டிலிருந்த ஏழைப் பெண் தன்னிடமிருந்த
காய்ந்த நெல்லிக்கனி ஒன்றைக் கொடுத்தாள். ஒரு ஏழைப் பெண் அளித்த பிட்சையை ஏற்றுக் கொண்ட ஆதிசங்கரர் இந்த வீட்டில் ஒரு சன்யாசிக்கு கொடுப்பதற்கு கூட ஒரு நெல் மணி இல்லாத அளவுக்கு ஏழ்மையில் இருக்கிறார்களே என்று பரிதாபப்பட்டார். உடனே அவரது காதில் உதவி செய்வதாக இருந்தால் பரிதாபப்பட வேண்டும
உதவி செய்ய இயலாத போது பரிதாபப் படக்கூடாது என்று ஒரு அசிரீரீ கேட்டது. இதனை கேட்ட ஆதிசங்கரர் அவளுக்கு உதவ விரும்பினார். மகாலட்சுமியை நோக்கி மனம் உருகப் பாடினார். ஆதிசங்கரர் தனது பாடலில் சாதக பட்சி மழைத் துளிக்கு ஏங்குகிற மாதிரி இவர்கள் சம்பத்துக்காக ஏங்குகிறார்கள். இவர்களுடைய