My Authors
Read all threads
'The most awesome picture so far taken'ன்னு யாராவது கேட்டா கண்ண மூடிக்கிட்டு இந்த படத்தை எடுத்து காட்டிடுவேன். விஜய் டிவிகாரன் எப்புடி பலவருட காலமாக கும்கி சிடியை போற்றிப் பாதுகாக்கிறானோ அதைவிட அறிவியல் உலகம் கண்ணும் கருத்துமாக பாதுக்காக்க வேண்டிய படம் இது ❤️
#Thread
அப்படி என்ன இதில் சிறப்பு என்பதை பார்ப்பதற்கு முன் இது எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்கிற டேவிட் பில்லா முன்கதையை பார்ப்போம்.
1900களின் தொடக்கத்தில் ஐரோப்பா பெல்ஜியத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான Ernest Solvay நீண்ட நாட்களாக ஒரு பார்வையாளராக அறிவியல் வளர்ச்சியை கண்டுவருபவராக இருக்கிறார். சடக்கென்று தனது பெயரிலேயே ஒரு Research Instituteடை ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் எட்டிப்பார்க்கிறது.
அறிவியல் முன்னேற்றத்தையே சதாசர்வகாலமும் சிந்தித்துக்கொண்டிருந்த முக்காவாசி சயின்டிஸ்ட்கள் ஐரோப்பா முட்டுச்சந்துகளிலேயே சுற்றித் திறிந்து கொண்டிருந்ததால் அவர்கள் அனைவரையும் 1911 ஆம் ஆண்டில் ஒன்றிணைத்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்கிறார்.
Solvayவின் முதல் அறிவியல் கருத்தரங்கில் அவரது தனிப்பட்ட அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட சயின்டிஸ்ட்கள் வெறும் 25 மட்டுமே. அந்த காலக்கட்டத்தில் அறிவியல் உலகின் தலக்கட்டாக கருதப்பட்ட Hendrik Lorentz தலைமையில் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட Einsteinன் வயது வெறும் 31 தான்.
முதல் கருத்தரங்கு என்பதாலும் அதற்கு முன் பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்திராதிருந்ததாலும் பரஸ்பர குசலவிசாரிப்புகளாகவே இருந்தன. சரியானதொரு தருணத்தில் Solvay தனது ஆசையை சொல்ல சயின்டிஸ்ட்கள் ஆலோசனையின் பேரில் அடுத்த வருடமே (1912) Solvay Institutes for Physics and Chemistry உருவானது
Photo மேட்டர்க்கு வருவோம். Solvayயின் ஐந்தாம் கருத்தரங்கம் 1927ம் ஆண்டு Brusselsல் நடப்பதாக முடிவானது. இந்த முறையும் Hendrik Lorentzசே தலைமையேற்றார். அன்றைய காலத்தில் Quantum Physicsல் சயின்டிஸ்ட்கள் ஓரளவு தெளிவு பெற்றிருந்தனர். அறிவியல் அறிவோடு ஈகோவும் ஏகபோகமாக வளர்ந்திருந்தது.
முதல் கருத்தரங்கில் சாவ சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த Einstein இம்முறை சாவல் விடும் KP கருப்புவாக உருமாறியிருந்தார். கருத்தரங்கிற்கான themeமை முன்னமே முடிவெடுத்திருந்தனர். Theme - 'Electrons and Photons'
அதென்னமோ Lorentzக்கு ஆரம்பத்திலிருந்தே Quantum Mechanics மேல் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை. என்னனாலும் வடிச்ச சோறு போல வருமா என்று குக்கர் சாதத்தை டீல் செய்யும் ஊர்பாட்டியை போலவே Quantum Mechanicsசை பார்த்துக்கொண்டிருந்தார். May be வயதின் காரணமாக கூட இருக்கலாம்.
இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக பேட்டக்காரன் Lorentz கருத்தரங்கின் நடுவராகவும் KP கருப்பு Einstein தலைமையில் ஒரு குழுவையும் துரை Neils Bohr தலைமையில் ஒரு குழுவையும் பிரித்தார். அதாவது Theoriticians vs Instrumentalists.
Theoreticiansகளான Einstein அவரது முன்னோர்களான Karl Popper and Charles Pierce பார்வையில் அறிவியலை டீல் செய்யவேண்டும். அதாவது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்கிற கறிக்கடை பாய் போல கையாள வேண்டும் என்கிறார்.
Instrumentalistடான Niels Bohrரோ Science நம்ம பய தான். அம்புட்டு Strict Officerராலாம் டீல் பண்ண தேவையில்ல. Experiment பண்ணுவோம், வர்ற ரிசல்ட் பொறுத்து துண்ட தோல்ல போட்டுக்கலாமா இல்ல மடிச்சு தலைப்பாகையா கட்டிக்கலாமான்னு அப்பால முடிவு பண்ணிக்கலாம் என்கிறார்.
அனல் பறக்கும் இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பாப்பையா Lorentz, Instrumentalistடே அறிவியலை முன்னேற்ற பாதைக்கு இட்டுச்செல்பவர்கள் என்று பாரதி பாஸ்கர் ச்ச்சீ Neils Bohr பக்கம் தீர்ப்பெழுதுகிறார்.
தீர்ப்பை கேட்டு கொதித்தேழுந்த Einstein 'கடவுள் ஒன்றும் தாயம் ஆடுவதில்லை' என்று Quarantine பொழுதுபோக்கை கையிலெடுத்து அம்பெய்ய, அதற்கு Bohr 'கடவுள் என்ன செய்யவேண்டும் என்று நீங்க சொல்லாதீங்க' இவர் பதிலம்பு விட, அவர் அம்பெல்லாம் புஸ்க்கு. டிரஸ் போட்ட நிராயுத பாணியா நின்னார் Einstein
இந்த பஞ்சாயத்துக்கு அப்புறம் எடுக்கப்பட்ட படம் தான் இது. 29 சயிண்டிஸ்ட்கள் பங்கெடுத்த இந்த கருத்தரங்கில் அப்போதோ அதற்கடுத்தோ 19 பேர் நோபல் பரிசை வென்றனர். முதல் ஐந்து கருத்தரங்குகளில் ஒரே பெண் பங்கேற்பாளராக மேரி க்யூரி மட்டுமே பங்கெடுத்தார்.
சும்மா ஒரு debateல் Instrumentalist வென்றிந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் கையில் தான் அறிவியல் அதற்கான பரிணாமத்தை வென்றெடுத்து கொண்டிருக்கிறது. இந்த கருத்தரங்கு நடக்குற சமயத்துலலாம் மேரி க்யூரி சக சயின்டிஸ்டான Paul Langevinனுடன் தனி ட்ராக் ஒட்டிக்கொண்டிருந்தது தனிக்கதை😂
மிச்ச சொச்சத்தையும் சொச்ச மிச்சத்தையும் அப்பறம் பாக்கலாம் ப்ரெண்ஜ் 🙂🙏
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with PhD Jokes & Memes

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!