கடந்த வெள்ளிகிழமை நீங்களும் உங்கள் தங்கையும் பாசிசத்தின் கரங்களில் சிக்கியது கண்டு வருந்துகிறோம் , நீதிக்கான உங்கள் சண்டையில் துணை நிற்கிறோம்.
அதற்க்கு முன்
70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம்
சமத்துவம்
1/N
சகோதரத்துவம் என்பதற்கு முற்றிலும் எதிரான ஆட்சியை
வழங்கியவர்களாகவே உங்கள் காங்கிரஸ் அரசும் இருந்து வந்துள்ளது என்பதை முதலில் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் ..
அக்டோபர் 1 உங்கள் சட்டையை பிடித்து இழுத்த அன்றே இந்தியாவை மிக நீண்ட
ஆண்டுகள் ஆண்ட உங்கள் கட்சியில் இருந்து
2/N
எந்த எதிர்வினையும் இல்லாதது
கண்டு எங்களுக்கு எந்த வியப்பும் இல்லை, காரணம் இந்த நீண்ட ஆட்சி
அதிகாரத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டவர்கள் வெறும் பண்ணையார்களே.
இந்த சோம்பேறி பண்ணையார்களை தாண்டி எந்த சமூகத்தோடும் உங்கள் கட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவில்லை என்பதற்கு இன்றைக்கு
3/N
நீங்கள் தேடி
செல்லும் வால்மீகி சமூகமே சான்று, 80களின் இறுதிவரை உங்களை ஆதரித்து பின்
உங்களிடம் இருந்து விலகி BSP ஐ ஆதரித்து ஏமாந்து கடந்த 10 ஆண்டுகளாக
பிஜேபியை ஆதரித்தும் இறுதியில் ஏமாந்து நிற்கிறார்கள்.
உங்கள் ஆட்சின் கீழும் இதுபோன்ற அரச வன்முறைகள் இந்த துணைக்கண்டத்தின்
4/N
ஒவ்வொரு பகுதியிலும் நிகழ்ந்துகொண்டேதான் வந்திருக்கிறன்றன.
இன்றைக்கு நீங்களும் உங்கள் தங்கையும் எப்படி அரசவன்முறைக்கு ஆளானீர்களோ
அப்படித்தான் 2010 களில் தமிழ்நாட்டின் இடிந்தகரையில் எங்கள் தமிழ்
பெண்களும் குழந்தைகளும் உங்கள் அரசின் வன்முறைக்கு ஆளானார்கள்.
5/N
உண்மையில் இன்று நீங்கள் எதிர்கொண்டிருக்கும் பாசிசம் என்பது நேரு
காலம் தொட்டு உங்கள் கட்சியின் நிழலில் வளர்ந்ததே.
50 ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் ஆட்சியின் கீழ் இருந்த அதிகார வர்க்கம்
திடீரென்று ஒருநாளில் பாசிசத்திற்கு நகர்ந்திருக்க முடியாதல்லவா?
6/N
இன்றைக்கு நீதித்துறை தொடங்கி இந்தியாவின் அத்தனை சுதந்திரமான
அமைப்புகளும் பாசிசத்தின் வேர் பிடித்து வளர்ந்திருப்பதற்கு உங்கள்
முன்னோர்களின் ஆட்சியே முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதை
உணர்வதில் இருந்தே பாசிசத்திற்கு எதிரான
சண்டையில் எங்களின் நம்பிக்கையை பெற முடியும் அல்லவா?
7/N
நேற்றைய நிகழ்வை வெறும் ஆதித்யநாத் அரசிற்கு எதிரான அரசியல் நிகழ்வாக
குறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன், காரணம் தொடர்ந்து RSS ஐ உறுதியாக
எதிர்க்கும் தலைவராக நீங்கள் இருந்துவருகிறீர்கள் என்பதே
அப்படியென்றால் நேருகாலத்தில் இருந்தும் குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக
RSS-ன்
8/N
சங்கல்ப் அகாடமியில் இருந்தும் சப்ளை செய்யப்பட்டிருக்கும்
இந்தியாவின் டாப்ரேங்க் பியூரோக்ரஸியை கொண்ட ஒரு அதிகார வர்க்கத்தின்
பாசிச நுகத்தடியை உணர்ந்த கடைசி இளவரசர்களாக இருக்கும் நீங்கள்
இந்த பாசிசத்தை வீழ்த்த இந்த துணைக்கண்ட மக்களுக்கு என்ன அரசியலை
சொல்லித்தர போகிறீர்கள்?
9/N
RSS முன்வைக்கும் இந்துராஷ்டிரத்தில் வால்மீகி சமூகம் எதிர்கொள்ளும்
நெருக்கடிகளுக்கும் நேரு குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும்
வேறுபாடுகள் குறைந்துவிட்ட நிலையில் உங்களுக்கு எங்களோடு
நிற்பதை தவிர வேறு ஏதும் வழிகள் இருக்கிறதா?
மேலாடை இழுக்கப்பட்ட உங்கள் தங்கையின்
10/N
புகைப்படம் அநேக தமிழர்களின்
அனுதாபத்தை பெற்ற அதே வேளையில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு இதற்க்கு
முன் நீங்கள் என்ன மரியாதை கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் கேட்க
விரும்புகிறோம்.
ஈழ இனப்படுகொலை, மூவர் விடுதலை, கூடங்குளம் போன்ற விஷயங்களில் தமிழர்களின் உணர்வையும்
காங்கிரஸ்
11/N
ஆட்சியின் துரோகத்தை எவ்வளவு சீக்கிரம் நேர்மையாக சுயவிமர்சனம்
செய்ய போகிறீர்கள் என்பதில் இருந்தே நீங்கள் தமிழர்களிடம் நெருங்க
முடியும் அல்லவா
இந்திய துணைக்கண்டம் முழுதும் இதுபோன்ற குறிப்பான பிரச்சினைகளுக்கு
நீங்கள் எப்படி முகம் குடுக்க போகின்றீர்கள் என்பதில் இருந்தே நீங்கள்
12/N
நீங்கள் எங்களுக்கு இன்னொரு பிசாசாக இருக்க போகின்றீர்களா அல்லது ஜீவனும்
ரத்தமுமாக இருக்க போகின்றீர்களா என்பது முடிவாகும்
இறுதியாக மாநில மக்களை கிஞ்சித்தும் மதிக்காத இந்த சோம்பேறி பண்ணையார்கள் வைத்துக்கொண்டு ஆர்எஸ்எஸ் ஐ வீழ்த்த முடியும் என்று நீங்கள் நம்பினால்
12/N
இந்தப் பாசிஸ்டுகளின் கைகளில் கடைசி இளவரசர்களாக நீங்களும் வீழ்த்தபடுவீர்கள் என்று எச்சரிக்கிறோம்..
பழங்குடிகளும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களும் துணைக்கண்டத்தில் ஒவ்வொரு தேசிய இனமும் பாசிசத்திற்கு எதிரான போரில் உறுதியாக நிற்கிறோம்.. நீங்கள் என்ன
செய்ய போகிறீர்கள்?
13/N
எப்போது எங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்க போகிறீர்கள்?
எதை விட்டுத்தரப் போகிறீர்கள்?
எதை பெறப்போகிறீர்கள்?
N/ N
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கடந்த தேர்தலில் கோவையில் போட்டியிட்ட கல்யாண் அவர்கள் வெளிநாட்டிலிருந்து 38 லட்சம் நிதி பெற்று கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தும் செய்தி உண்மை என்றே இருக்கும் பட்சத்தில், மீதி 39 வேட்பாளர்கள் சேர்ந்து கையாடல் செய்த தொகையின் மதிப்பு தோராயமாக எவ்வளவு இருக்கும் அண்ணா?
1/N
கோவையில் தேர்தல் நிதியில் கையாடல் என்று கண்டுபிடிக்க முடிந்த உங்களுக்கு, கும்பகோணம் என்ற ஒரு தொகுதி இருக்கிறது என்பது தெரியுமா?
கும்பகோணம் பற்றி நீங்கள் விசாரித்தால், காஞ்சிபுரத்தில் நீங்கள் கட்டி வருகின்ற சொகுசு பங்களா பற்றி "மணி, மணியாக" அவர் பேசிவிடுவார் என்ற அச்சமா?
2/N
திருவொற்றியூர் மாரிமுத்து இரண்டாம் திருமணம் செய்ததில் தகராறு, கட்சியின் பெயர் கெட்டுவிடும் என்று அவனை நீக்கினீர்கள் சரி, மகளிர் பாசறை பொருப்பாளரின் வீட்டு சுவரேறி குதித்து, பல் உடைந்தபடி வந்த "பச்சகிளி" யை ( அன்பு தென்னரசு) இன்றுவரை நீக்கவில்லையே ஏன் அண்ணா?
3/N
சில வருடங்களுக்கு முன்னாள் நடிகர் சத்யராஜின் மகள் ஒரு புகாரை எழுப்பினார், வெளிநாட்டு மருந்து கம்பெனிகளின் தரமற்ற மருந்துகளை பரிந்துரைப்பதற்கு லஞ்சம் தருவதாக சொல்கிறார்கள் மறுத்த பிறகு மிரட்டுகிறார்கள் என்றார்.
அனிதா மரணத்தின் போது நடந்த பாஜக அலுவலக முற்றுகை கைதின் போது
1/N
வந்திருந்த தோழர் ஒரு விஷயம் சொன்னார்.
தமிழகம் தெற்காசியாவின் மருத்துவ சுற்றுலா, இந்தியாவிலேயே சிறந்த சுகாதார கட்டமைப்பு என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம்.
இந்த நீட்டின் மூலமாக அவர்கள் UnEthical மருத்துவர்களை உருவாக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் வெறும் 20,000 ரூபாயில்
2/N
அனிதா மாதிரி ஒரு பொண்ணு எந்த தடையும் இல்லமால் இங்கு மருத்துவராகிவிட முடியும்.
அப்படி சமூகத்தின் விளிம்புகளில் இருந்து உருவாகும் மருத்துவர்கள் சமூகத்தின் வலியை புரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சவாலாக இருக்கிறார்கள்.
3/N
இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்கள் ஆனால்
பீஹாரின் தாய்மொழி போஜ்புரி, மைத்திலி
உபி-யும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலம்தான் ஆனால்
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி
1/N
வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி, மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி.
அடுத்ததாக உத்தராகண்ட்டின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி
2/N
அடுத்து ஹரியானாவின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால் தாய்மொழி ஹரியாணி
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி
மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி
3/N