சம்சார சாகரத்தில் சிக்கி உழலுகிறோம் என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் அருளுக்கு ஆளாகிறோம். சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் நாம் எம்பெருமானின் லீலைக்கு உகந்தவர்கள் ஆகிறோம் - #பெரியவாச்சான்பிள்ளை. இவர் வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் நாலாயிர
திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” (வியாக்கியானம் என்றால் விளக்க உரை) என்கிற பட்டத்தைப் பெற்றவர். இவர் வடமொழி தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில் யாமுனாசார்யர் நாச்சியாரம்மன்
இருவருக்கும் மகனாக திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார். ஆவணி ரோகிணியில் அவதரித்ததால் இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர். கலிகன்றியாகிய திருமங்கையாழ்வார் திருக்கலிகன்றிதாஸராகிய
நம்பிள்ளையாகவும், கண்ணன் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியோர் கூறுவர். இவருடைய ஆசிரியர்கள் நம்பிள்ளை மற்றும் நஞ்சீயர் ஆகியோர். பெரிவாச்சான் பிள்ளையின் திறமையை நன்குணர்ந்த நம்பிள்ளை இவரைத் திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதும்படி வேண்டினார். அதன்படி இவர் எழுதிய
விளக்க உரை ‘இருபத்து நாலாயிரப்படி’ எனப் போற்றப்படுகிறது. .இவர் இல்லை என்றால் இன்று ஸ்ரீவைஷ்ணவம் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிச்சயம். ஸ்ரீராமானுஜர் காலத்துக்கு முன்பு வரை திவ்யபிரந்தங்களுக்கு எழுத்து வடிவில் உரை இல்லை. ஆசாரியர் தங்கள் சிஷ்யர்களுக்கு வாய் மொழியாக சொல்லப்பட்டு
வந்தது. ஸ்ரீராமானுஜர் காலத்தில் தான் முதன் முதலில் திவ்யபிரந்தங்களுக்கு எழுத்து வடிவில் உரை வந்தது. நாலாயிர திவ்வியப்பிரபந்தம் முழுமைக்கும் வியாக்கியானம் மட்டும் இல்லாமல், சமிஸ்க்ருத ஸ்தோத்திரங்கள், ராமாயணம், ரகசிய கிரந்தங்கள் என்று செய்துள்ளார். வேத வேதாந்தங்களை பற்றி நாம்
அறியாத பொருட்களை எல்லாம் தமிழ் பிரபந்தத்தாலே அறிந்து கொள்கிறோம் என்று வேதாந்த தேசிகன் கூறியுள்ளார். பிரபந்தம் மட்டுமே இருந்திருந்தால், அதன் உட்பொருளை யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது. வேதாந்த அர்த்தங்களை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியவாச்சான் பிள்ளை. புலமையும்,
ஆழ்வார்கள், ஆசாரியர்களின் அருளும் இவருக்கு கிடைத்ததால் இது முடிந்தது. பெரிய பெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை, பெரியஜீயர் என்று அழைக்கப்பட்ட
நால்வரும் அவரவர் பெருமையால் ‘பெரிய’ என்ற பட்டத்தை அடைந்து புகழப்பட்டிருக்கிறார்கள்.
பெரியவாச்சான் பிள்ளை வாழித் திருநாமம் :"தீதறு நம்பிள்ளை பதம் சென்னிவைப்போன் வாழியே
திருமலையில் மால் பதத்தை சிறந்து பெற்றான் வாழியே
ஆதரவாய் தனிச்லோகி தான் அருளினான் வாழியே
ஆழ்வார்கள் சொற்பொருளை அறிந்துரைப்போன் வாழியே
ஒதுபுகழ் சங்கநல்லூர் உகந்துபெற்றான் வாழியே
உரோகிணி நாள் ஆவணியில்
உதித்த பிரான் வாழியே
ஏதமில் எண் மூவாயிரம் இயம்புமவன் வாழியே
எழில் பெரியவாச்சான் பிள்ளை இணையடிகள் வாழியே."
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். #அறிவோம்_ஆச்சார்யர்கள்
இந்த கோவில் - ஆனந்தபத்மனாப சுவாமி கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில். இந்தக் கோவில் உருவான விதம் ஒரு பெரிய அதிசயம்! இந்தக் கோவிலை அடையாளம் காட்டியவர் மகாபெரியவா. (ஸ்ரீ சுரேஷ் பஞ்சநாதன் தளத்தில் உள்ள கட்டுரைக்கு நன்றி). ஒருமுறை காஞ்சி மகாபெரியவா மடத்தில் பக்தர்களுடன் உரையாடும்
போது அவர்களிடம், காஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள சிவன்-விஷ்ணு கோவில் பற்றி உங்களில் யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அது எங்கிருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்று கேட்டார். அக்கோவிலைப் பற்றி யாரும் அறிந்ததாகத் தெரியவில்லை. எனவே, கோவில் பற்றிய வரலாற்று
குறிப்புகளை சரிபார்த்த பிறகு அடுத்த நாள் காலையிலேயே அந்த இடத்தைக் கண்டுபிடிக்க சுவாமிகள் முடிவு செய்தார். அவரும் அவருடைய சீடர்களும் அந்த இடத்திற்குச் சென்றபோது, ஒரு வீட்டைக் கண்டு அவர்கள் ஏமாற்றமடைந்தார்கள். எந்த ஆலயத்தின் அடையாளங்களும் அங்கு இல்லை! சுவாமிகள் பின்னர் ஒரு
இன்று #நவராத்திரி ஆரம்பம். நவராத்திரியில் துர்கா, லக்ஷ்மிய, ஸரஸ்வதி தேவிகளை பூஜிக்கிறோம். இருப்பது ஒரே பராசக்திதான். துர்க்கையாக இருக்கும்போது வீரம், சக்தி தருகிறாள். மஹாலக்ஷ்மியாகி தனங்களைத் தருகிறாள். ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.
ஆதிபராசக்தியான துர்க்கையைப் பார்வதியோடு
ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். ஹிமவானின் மகளானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி எல்லா ஞானமும் தருவதால் கலைமகள். பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், பாற்கடலில் பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.
மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் மகளாக பிறந்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.
‘பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா’ எனறு ஸம்ஸ்கிருத அகராதியான ‘அமர கோசம்’
Who is the real culprit behind the crimes committed by Vijay Mallya? Shame on #ManmohanSingh and #Chidambaram to be named by the British court as being behind the fraud committed by Mallya. Hearing the Mallya case on Friday, Justice Emma Arbaughnott stated in clear terms that,
that, "Indian banks had grossly violated their own rules and regulations in lending to Mallya's airline company Kingfisher. This can be seen 'with closed eyes' she stated. The above remarks were with reference to the then Prime Minister Manmohan Singh and Finance Minister
Chidambaram ordering the loan to Mallya, despite the bank's objection. On Friday Judge Emma Arbhannot of the Westminster Magistrate Court of London has openly exposed the malpractices and corruption committed by Indian banks in giving loans to Vijay Mallya. "Does any bank officer
#சரம_ஸ்லோகம்
ஸ்ரீ வைஷ்ணவர்களாக இருப்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய சுலோகம் இது. ஜீவாத்மாக்களை கரை சேர்க்கும் உயர்வான விஷயம் இதிலுள்ளது.
"சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் விரஜ
அஹம்த்வா சர்வ பாபேப்யோ
மோஷயிஷ்யாமி மாசுச"
இந்த நாலு வரிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் உயர்வான பொருளுள்ளது.
1. சர்வதர்மான் பரித்யஜ்ய- இந்தப் பதத்திற்கு மட்டும் ஆசார்யர் வேதாந்த தேசிகன் ஆறு அர்த்தங்களைக் கற்பிக்கிறார்.
(அ) பக்தியோகம் முதல் வேறெந்த யோகத்தையும் முழுமையாக கடைபிடிக்க முடியாத நம் இல்லாமையை உணர்ந்து, இங்கிருக்கும் வெறுமையினை உணர்ந்து எல்லா வழிகளையும் விட்டுவிடு என்பது முதல்
பொருள்.
(ஆ) நம் கையில் ஒன்றுமில்லை. எந்த விதமான சக்தியும் இல்லாதவர்கள் என்ற நமது சிறுமையை உணர்வது இரண்டாவது அர்த்தம்.
(இ) சரணாகதிக்குச் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு அங்கங்கள் இல்லையென்று உணர்வது, ப்ரபத்தியொன்று தான் இறுதியானது, உத்தமம் என்று அறிவது தான் மூன்றாவது பொருள்.
மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் பாதாரவிந்த சதகம் 92வது ஸ்லோகத்தில் ‘ஸ்வஸங்கா³த் கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ என்று ஒரு வரி. கங்கேலி, அசோகம், காமகேலி என்று சில மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் சுமங்கலிகள் வந்து பேசிக்கொண்டிருந்தாலோ காலால் உதைத்தாலோ நன்றாக பூக்கும் என்று ஓர் ஐதீகம். அதே போல்
அம்பாளுடைய பாதத்தினுடைய சம்பந்தம் ‘ஸ்வஸங்கா³த்’.. ‘கங்கேலி ப்ரஸவஜனகத்வேன ச ஶிவே’ – சாதாரண சுமங்கலி பெண்கள் பாதம் பட்டாலே கங்கேலி மரம் பூக்கும் என்றால்.. “நாரீ குலைக சிகாமணி:”அம்பாளுடைய பாதம்பட்டு அந்த மரம் எவ்வளவு சந்தோஷம் பட்டு எவ்வளவு பூக்கும்! சாதாரணமாக வசந்தகாலம் வந்தால் இந்த
மரங்கள் எல்லாம் கொஞ்சம் பூக்கும். அம்பாளுடைய பாதத் தொடர்பாலே நன்றாக பூக்கின்றன. அதனால் உன் பாதத்தை வசந்தகாலம்.. ஸுரபி என்று சொல்லலாம். “ஸுரபி” என்கிற சொல்லுக்கு மூன்று வித பொருள் உள்ளன. எல்லாமே அம்பாளுடைய பாதத்துக்கு பொருந்தும் என்று மூக கவி அந்த ஸ்லோகத்தில் சொல்கிறார்.
சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ கான் -
இஸ்லாம் பரவியது வாள்முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிப்பதுடன்
கல்வியிலும், கலாச்சாரத்திலும், செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற பல நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன, படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். 629-ஆம் வருடம் மலபார் கரையில் குடியேறிய அரேபிய முஸ்லிம் வியாபாரிகள் அங்கிருந்த இந்துப் பெண்களை மணந்தார்கள். பின்னர் அங்கிருந்த இந்துக்களை மதம் மாற்றினார்கள். அந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில்
பல்கிப் பெருகியது. இஸ்லாமிய சூஃபிக்களின் தூண்டுதல்களின் பேரில் அந்த முஸ்லிம்கள் இந்துக்களுக்கு எதிராகவும் அப்போது மலபாரின் சில பகுதிகளை ஆண்ட போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகவும் அடிக்கடி ஜிகாத் செய்வதினை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். 1836-ஆம் வருடத்திலிருந்து 1919-ஆம் வருடம் வரை