சிறு வயதில், எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நெடுஞ்சாலை வழியில் ஒரு மளிகைக்கடை. அங்கு ஐம்பது பைசாவுக்குக் கை நிறைய வேர்க்கடலை கிடைக்கும். வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாகத் தின்றபடி நடந்தால் பள்ளி வந்துவிடும். |1
மறுநாள் மீண்டும் அதே ஐம்பது பைசா, அதே உப்புப்போட்ட வேர்க்கடலை, ஆண்டுமுழுக்க எனக்கு அதே தின்பண்டம்தான், ஒருநாளும் சலித்ததில்லை. |2
அந்த மளிகைக்கடையிலிருந்து சற்றுத்தள்ளி வலப்பக்கம் காந்தித்தாத்தா நின்றிருப்பார். அவருடைய சிலைக்குக் கீழே நீளமாகத் தாடி வைத்த இஸ்லாமியார் ஒருவருடைய தின்பண்டக்கடை. வேர்க்கடலையில் வேறு தினுசுகளும் உண்டு என்பதை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். |3
அவர் கடையில் வேர்க்கடலை எண்ணெயில் வறுக்கப்பட்டுக் காரம் தூவிப் பொன்னிறமாக மின்னும், அதையே கொஞ்சம் மாவில் தோய்த்துப்போட்டுப் பொரித்துக் குவித்துவைத்திருப்பார், பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறும், தின்னத் தொடங்கினால் மறுகணம் தீர்ந்துவிடும், மறுபடி வேண்டும் என்று மனம் ஏங்கும். |4
எங்கள் அத்தை ஒருவர் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடியில் பிரட்டி ஒருவிதமான கடலைப் பண்டத்தைத் தயாரிப்பார், கொஞ்சம் மூலிகை மருந்துபோல இருக்கும், ஆனால் ருசிக்குக் குறைவிருக்காது. |5
முன்பு சொன்னேனே, அந்த மளிகைக்கடைக்கு அருகில் முதியவர் ஒருவருடைய சிறு கடையொன்று உண்டு. அந்தக் கடையில் திரைப்படச் சுருள்களை வைக்கும் பெட்டியைப்போல் உயரம் குறைந்த உருளைப் பெட்டிகள் பலவும் இருக்கும். அவற்றுக்குள் |6
அதேபோன்ற உருளை வடிவில் வேர்க்கடலை இனிப்பொன்று கிடைக்கும். இன்றைக்கு 'Nice Chikki' என்ற பெயரில் பல சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் நொறுக்கிய வேர்க்கடலை + வெல்லம் கலந்த பண்டம்தான் அது, ஆனால், கடினமாக இருக்காது, மென்மையாக இருக்கும், வாயில் போட்டால் தேனாகக் கரையும். |7
அதே பண்டம் பல கடைகளில் உருண்டையாகவும் கிடைக்கும், பர்பியாகவும் கிடைக்கும், ஆனால் என்னைப் பொறுத்தவரை அந்தச் சிறு உருளைக்கு இணையில்லை. |8
வேர்க்கடலையை நொறுக்காமல் அப்படியே முழுதாக (அல்லது, பாதியாக) உருண்டை பிடிப்பதும் உண்டு. ஆனால், எனக்கு அது எப்போதும் பிடித்ததில்லை, அதற்கு வெறும் வேர்க்கடலையையே தின்றுவிடலாமே என்பேன். |9
உண்மையில் வேர்க்கடலைக்கு எந்தக் கூடுதல் ஜிகினாவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம், உப்பு சேர்த்து வேகவைத்தால் ஒரு ருசி, வறுத்தால் இன்னொரு ருசி, வறுக்கும்போது கவனிக்காமல் கொஞ்சம் கருகிவிட்டால் அந்த ருசியும் எனக்குப் பிடிக்கும். |10
எங்கள் வீட்டில் வேர்க்கடலை வறுக்கும்போது, நானும் மங்கையும் வறுக்க வறுக்கச் சுமார் இருபது சதவிகிதத்தைத் தீர்த்துவிடுவோம், மீதியிருப்பதுதான் டப்பாவுக்குப் போகும், அதன்பிறகும், அவ்வப்போது அள்ளித் தின்றுகொண்டே இருப்பேன், |11
பொரி, மிக்சர் என்று எதைச் செய்தாலும் அதில் கடலைகளைப் பொறுக்கித் தின்றுவிடுவேன், 'போதுமே' என்று சிரிப்பார் என் மனைவி, 'போதும்ன்னா கடவுள் ஏன் இதை இவ்ளோ ருசியாப் படைச்சார்?' என்பேன். |12
வேலை விஷயமாக மும்பை சென்றிருந்தபோது அளவில் பெரிய வேர்க்கடலைகளை எல்லா இடங்களிலும் பார்த்தேன், அவற்றின் ருசியும் அபாரமாக இருந்தது, இப்போதும் பெங்களூரில் சில கடைகளில்மட்டும் கிடைக்கிற அந்தப் பெருங்கடலையை மாதத்துக்கு ஓரிருமுறை ஆசையுடன் வாங்கியுண்கிறேன். |13
எங்கள் ஊர்க் காந்தி சிலைக்கடியில் அந்த இஸ்லாமியர் விற்ற மாவு தோய்த்த கடலை இப்போது அடையாறு ஆனந்தபவனில் கிடைக்கிறது, அதையே ஹல்திராம்ஸிலும் விற்கிறார்கள், ஆனால், நல்லவன் ஒருவனுக்கு வில்லன் வேஷம் போட்டாற்போல் ஏகப்பட்ட மசாலாவைக் கலந்துவிடுகிறார்கள், ஆகவே, அதை நான் ஆதரிப்பதில்லை. |14
இந்நகரத்தில் வேறு சில வடிவங்களிலும் வேர்க்கடலை கிடைக்கிறது; அதை அரைத்துத் தேய்த்து வெண்ணெயெடுத்து ரொட்டியில் தடவி உண்கிறார்கள், வேர்க்கடலை பொதித்த சாக்லெட்கள் இருக்கின்றன; அவையெல்லாம் எப்போதாவது உண்ணலாம், மற்றபடி |15
வறுத்த கடலைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டு நொறுக்கும் சுகத்துக்கு ஈடாகாது. என்னைக் கேட்டால் அதுவும் ஒரு தியானம்தான். |16/16
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் புகழ் பெற்றது. எப்போது அங்கு சென்றாலும் பெரிய கோழிகள் ஒன்றிரண்டை அப்படியே உரித்துக் கம்பியில் குத்திச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். |1
அப்போது என்னுடன் தங்கியிருந்த இருவரும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றுதான் நினைவு. ஆனால், ஆந்திரக் காரத்தை ருசிப்பதில் அவர்களுக்கு ஏதோ தயக்கம் இருந்தது. ஆகவே, அவர்களும் தாற்காலிகமாகத் தாவர உண்ணிகளாகியிருந்தார்கள், ஊருக்குப் போகும்போதுமட்டும்தான் மாமிச உணவு. |2
இதனால், அவ்வளவு பக்கத்தில் இருக்கிற அந்தப் புகழ் பெற்ற உணவகம் எங்களுக்குப் பயன்படவே இல்லை. நாள்தோறும் இருமுறை அந்தப் பக்கமாக நடந்து செல்வதோடு சரி, எப்போதும் உள்ளே நுழைந்ததில்லை. |3
என்னுடைய நண்பர்கள் மூவர் சமீபத்தில் ஆளுக்கொரு புது முயற்சியை நிறைவுசெய்திருக்கிறார்கள்: ஒருவர் தமிழ்க் குறுநாவல் ஒன்றை எழுதியுள்ளார், இன்னொருவர் ஆங்கிலத்தில் முழு நீள நாவல் ஒன்றை எழுதியுள்ளார், |1
மூன்றாமவர் (இதுவரை சிறுகதை, நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தவர்) முதன்முறையாக ஒரு கதையல்லாத நூலை வெளியிட்டுள்ளார். வெவ்வேறு சூழ்நிலைகளில் இவர்கள் மூவருடனும் பேசியதில் எனக்குத் தென்பட்ட சில பொதுத்தன்மைகள்: |2
1. ஒரு புதிய விஷயத்தை நிறைவு செய்யும்போது ஒரே நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி வருகிறது; இன்னொருபக்கம், மிகுந்த எரிச்சலும் வருகிறது, 'இந்த வேலையில்தான் எத்தனை தொல்லை! இனி இதைத் தொடவே கூடாது' என்று தோன்றுகிறது. |3
17 வயது இளைஞர் ஒருவர், பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லை, ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நினைக்கிறார், சட்டைப்பையில் வெறும் 200 ரூபாயுடன் பெரிய ஊரொன்றுக்குச் செல்கிறார், மிகவும் அலைந்து திரிந்தபிறகு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலைக்குச் சேர்கிறார். |1
அந்த மென்பொருள் நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு கணினி இருக்கிறது, அலுவலகத்தில் கூட்டமில்லாத நேரங்களில் இவர் அந்தக் கணினியை நோண்டிப்பார்க்கிறார், சில விஷயங்களைத் தானே கற்றுக்கொள்கிறார். |2
ஒருநாள், இவர் இப்படிக் கணினியில் வேலை செய்துகொண்டிருப்பதை இன்னோர் ஊழியர் பார்த்துவிடுகிறார், ஆனால், அதட்டவில்லை, மிரட்டவில்லை, |3
எங்கள் நிறுவனத்திலுள்ள ஒரு வேலை வாய்ப்பைப்பற்றி இன்று மதியம் பதிவுசெய்திருந்தேன். அதற்காகப் பலர் தங்களுடைய தகவல்களை அனுப்பியிருந்தார்கள், அவற்றை உரியவர்களுக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறேன். |1
அந்த மின்னஞ்சல்களையெல்லாம் மேலோட்டமாக இன்னொருமுறை பார்த்தபோது, இவ்விதமான வேலை நாடல் மின்னஞ்சல்களுக்கென்று சில சிறு குறிப்புகளை எழுதத் தோன்றியது. வேலை தேடுகிற புதியவர்கள்/ வேலை மாற எண்ணியுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். |2
1. உங்களுடைய படிப்பு, வேலை அனுபவம் போன்ற விவரங்களைக் கொண்ட கோப்புக்கு resume.docx என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் வைக்காதீர்கள். உங்கள் முழுப்பெயர் அதில் இருக்கட்டும், இயன்றால் உங்களுடைய சிறப்புத்திறன், எத்தனை வருட அனுபவம் போன்றவற்றையும் சேர்க்கலாம். |3
இத்தனை ஆண்டுகளில் நான் ஒருபோதும் அலுவலகம் செல்ல அலுப்படைந்ததில்லை. வாரத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாள் திங்கட்கிழமைதான். அந்த அளவுக்கு அலுவலகப் பணியில் ஆர்வமுள்ளவன். |1
இப்போது, முதன்முறையாக அதில் சலிப்பு தோன்றத்தொடங்கியிருக்கிறது. அதற்குக் காரணம், வயதோ பணி அழுத்தமோ இல்லை, பெங்களூரின் புகழ்பெற்ற போக்குவரத்து நெரிசல்தான். |2
பேருந்து, கார் என எதை முயன்றாலும் ஒரு நாளைக்கு 3மணிநேரம் தெருவில் வீணாகிறது. அதில் பெருமளவு புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என்று பயன்படுத்தினாலும், மதிப்புமிக்க நேரத்தை வீசி எறிகிறோம் என்ற எரிச்சலைத் தவிர்க்கமுடிவதில்லை. |3