ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் புகழ் பெற்றது. எப்போது அங்கு சென்றாலும் பெரிய கோழிகள் ஒன்றிரண்டை அப்படியே உரித்துக் கம்பியில் குத்திச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். |1
அப்போது என்னுடன் தங்கியிருந்த இருவரும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றுதான் நினைவு. ஆனால், ஆந்திரக் காரத்தை ருசிப்பதில் அவர்களுக்கு ஏதோ தயக்கம் இருந்தது. ஆகவே, அவர்களும் தாற்காலிகமாகத் தாவர உண்ணிகளாகியிருந்தார்கள், ஊருக்குப் போகும்போதுமட்டும்தான் மாமிச உணவு. |2
இதனால், அவ்வளவு பக்கத்தில் இருக்கிற அந்தப் புகழ் பெற்ற உணவகம் எங்களுக்குப் பயன்படவே இல்லை. நாள்தோறும் இருமுறை அந்தப் பக்கமாக நடந்து செல்வதோடு சரி, எப்போதும் உள்ளே நுழைந்ததில்லை. |3
பெரும்பாலும் வீட்டிலேயே சமைத்துவிடுவோம், என்றைக்காவது வெளியில் சாப்பிடவேண்டுமென்று தோன்றினால், சற்றுத் தொலைவிலிருக்கிற இன்னோர் (சைவ) உணவகத்துக்குச் செல்வோம். |4
ஒருநாள், அந்த உணவகத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த விலைப் பட்டியலை எதேச்சையாகப் பார்த்தேன். அதில் பலவிதமான மாமிசப் பண்டங்களுக்குக் கீழே, ‘Tandori Roti : 2 ரூபாய்’ என்று எழுதியிருந்தது. |5
அப்போது நாங்கள் வழக்கமாகச் சென்றுவந்த உணவகங்கள் அனைத்திலும் தந்தூரி ரொட்டியின் விலை குறைந்தபட்சம் ரூ10. ஆகவே, இங்கு அதன் விலை 2 ரூபாய்தான் என்பது மிகவும் வியப்பாக இருந்தது. ஒருவேளை, பழைய விலைப் பட்டியலாக இருக்குமோ? விசாரித்துவிடலாம் என்று உள்ளே நுழைந்தேன், ‘ரொட்டி எவ்வளவு?’ |6
'ரெண்டு ரூபாய்’ என்றார் அங்கு மாவு பிசைந்துகொண்டிருந்தவர், ‘எத்தனை ரொட்டி வேணும்?’
‘இல்லை, நான் அப்புறமா வர்றேன்’ என்று வெளியே வந்துவிட்டேன். ரெண்டு ரூபாய்க்கு ரொட்டி என்கிற அதிசயச் செய்தியை என்னுடைய அறைத்தோழர்களிடம் சொல்ல ஓடினேன். |7
நான் சொன்னதை அவர்களும் நம்பவில்லை. ஆனால், உள்ளே சென்று விசாரித்துவிட்டேன் என்று நான் உறுதிப்படுத்தியதும், இது ஃபேக் நியூஸ் இல்லை என்று தெளிந்தார்கள், மகிழ்ந்தார்கள்.
என்ன பெரிய மகிழ்ச்சி? |8
அப்போது நாங்கள் வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்துக்கு வீட்டு உணவுதான் கட்டுப்படியாகும். இயன்றவரை வெளியில் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்தவேண்டும். |9
குறிப்பாக, வட இந்திய உணவுகள் விலை மிகுந்தவை என்பதால், மாதம் ஓரிருமுறை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும், அந்த ருசியை நாக்கில் வைத்துக்கொண்டே அடுத்த இரண்டு வாரங்களை ஓட்டவேண்டும். |10
இந்த நிலையில், ரொட்டிச் செலவை ஐந்தில் ஒரு பங்காகக் குறைப்பதற்கான ஒரு வழி பிறந்திருக்கிறது என்பது பெரிய மகிழ்ச்சிச் செய்திதானே?
ஆனால், அது அசைவ உணவகமாயிற்றே! நாங்கள் அசைவம் உண்பதில்லையே! |11
அதனால் என்ன? ரொட்டியில் மாமிசமா கலக்கப்போகிறார்கள்? ரொட்டியைமட்டும் இங்கே வாங்கிக்கொள்ளலாம், அதற்குத் தொட்டுக்கொள்ளும் பண்டத்தை ஒரு சைவ உணவகத்தில் வாங்கிக்கொண்டால் ஆச்சு என்று எங்களில் யாரோ திட்டமிட்டோம், மற்ற இருவரும் அதை ஆமோதித்தோம். |12
அன்று மாலையே நாங்கள் வழக்கமாக உண்ணுகிற கடையில் பனீர் பட்டர் மசாலாமட்டும் பார்சல் வாங்கிக்கொண்டோம், வீடு திரும்பும் வழியில் இந்த உணவகத்திற்குள் நுழைந்து, வேண்டிய ரொட்டிகளைமட்டும் வாங்கிக்கொண்டோம், பின்னர் மூவரும் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டோம். |13
அதன்பிறகு, இதுவே எங்கள் வழக்கமாகிவிட்டது. அங்கிருந்த சில மாதங்களில் பலமுறை இவ்வாறு செய்திருப்போம், ஏகப்பட்ட பணத்தை மிச்சப்படுத்தியிருப்போம். |14
ஆனால், அத்தனைப் புகழ் பெற்ற கடையில் ரொட்டிமட்டும் இவ்வளவு குறைந்த விலைக்குக் கிடைத்தது ஏன்? இந்த ரகசியத்தை நான் பல ஆண்டுகளுக்குப்பிறகுதான் தெரிந்துகொண்டேன். |15
அப்போது நான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்திருந்தேன். எங்கள் அலுவலகத்தில் ஏதோ விழா, அதில் உணவு பரிமாறுவதற்காக யாரிடமோ பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு வண்ணக் கேடலாக் உதவியுடன் பல சுவையான பண்டங்களைக் காண்பித்து அவற்றின் விலையை விளக்கினார். |16
’ஆனா, இதெல்லாம் தொட்டுக்கறதுக்குதானே; ரொட்டி, நான், குல்ச்சா, இதெல்லாம் என்ன விலை?’ என்று கேட்டேன் நான்.
அநேகமாக அந்த ஹைதராபாத் உணவகமும் இந்த நுட்பத்தைத்தான் பயன்படுத்தியிருக்கிறதுபோல. அவர்களுக்கு அசைவப் பண்டங்கள், அதாவது, ரொட்டிக்குத் தொட்டுக்கொள்ளும் விதவிதமான உணவு வகைகள்தான் முக்கியம். |18
அவற்றைக் காசு கொடுத்து வாங்குவோருக்கு ரொட்டியை இலவசமாகத் தருவதற்குப் பதில் இரண்டு ரூபாய் விலை வைத்திருக்கிறார்கள், அவ்வளவுதான். |19
அதன்படி பார்த்தால், நாங்கள் அங்கு ரொட்டியைமட்டும் குறைந்த விலையில் வாங்கிச்சென்றது ஒரு சிறிய ஊழல்தான். கடைக்காரர் நினைத்திருந்தால் அதைத் தடுத்திருக்கலாம், ’தொட்டுக்கறதுக்கு எதாவது வாங்கினால்தான் ரொட்டி தருவோம்’ என்றோ, |20
‘ரொட்டியைமட்டும் தனியா வாங்கினா ஒரு ரொட்டி 10 ரூபாய்’ என்றோ ஒரு கூடுதல் விதிமுறையைப் போட்டு எங்கள் திட்டத்தை உடைத்திருக்கலாம். ஆனால் ஏனோ, அவர் அப்படிச் செய்யவில்லை. ’சின்னப் பசங்க, சந்தோஷமாச் சாப்டுட்டுப் போகட்டும்’ என்று நினைத்துவிட்டாரோ என்னவோ! |21/21
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
என்னுடைய நண்பர்கள் மூவர் சமீபத்தில் ஆளுக்கொரு புது முயற்சியை நிறைவுசெய்திருக்கிறார்கள்: ஒருவர் தமிழ்க் குறுநாவல் ஒன்றை எழுதியுள்ளார், இன்னொருவர் ஆங்கிலத்தில் முழு நீள நாவல் ஒன்றை எழுதியுள்ளார், |1
மூன்றாமவர் (இதுவரை சிறுகதை, நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தவர்) முதன்முறையாக ஒரு கதையல்லாத நூலை வெளியிட்டுள்ளார். வெவ்வேறு சூழ்நிலைகளில் இவர்கள் மூவருடனும் பேசியதில் எனக்குத் தென்பட்ட சில பொதுத்தன்மைகள்: |2
1. ஒரு புதிய விஷயத்தை நிறைவு செய்யும்போது ஒரே நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி வருகிறது; இன்னொருபக்கம், மிகுந்த எரிச்சலும் வருகிறது, 'இந்த வேலையில்தான் எத்தனை தொல்லை! இனி இதைத் தொடவே கூடாது' என்று தோன்றுகிறது. |3
சிறு வயதில், எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நெடுஞ்சாலை வழியில் ஒரு மளிகைக்கடை. அங்கு ஐம்பது பைசாவுக்குக் கை நிறைய வேர்க்கடலை கிடைக்கும். வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாகத் தின்றபடி நடந்தால் பள்ளி வந்துவிடும். |1
மறுநாள் மீண்டும் அதே ஐம்பது பைசா, அதே உப்புப்போட்ட வேர்க்கடலை, ஆண்டுமுழுக்க எனக்கு அதே தின்பண்டம்தான், ஒருநாளும் சலித்ததில்லை. |2
அந்த மளிகைக்கடையிலிருந்து சற்றுத்தள்ளி வலப்பக்கம் காந்தித்தாத்தா நின்றிருப்பார். அவருடைய சிலைக்குக் கீழே நீளமாகத் தாடி வைத்த இஸ்லாமியார் ஒருவருடைய தின்பண்டக்கடை. வேர்க்கடலையில் வேறு தினுசுகளும் உண்டு என்பதை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். |3
17 வயது இளைஞர் ஒருவர், பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லை, ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நினைக்கிறார், சட்டைப்பையில் வெறும் 200 ரூபாயுடன் பெரிய ஊரொன்றுக்குச் செல்கிறார், மிகவும் அலைந்து திரிந்தபிறகு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலைக்குச் சேர்கிறார். |1
அந்த மென்பொருள் நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு கணினி இருக்கிறது, அலுவலகத்தில் கூட்டமில்லாத நேரங்களில் இவர் அந்தக் கணினியை நோண்டிப்பார்க்கிறார், சில விஷயங்களைத் தானே கற்றுக்கொள்கிறார். |2
ஒருநாள், இவர் இப்படிக் கணினியில் வேலை செய்துகொண்டிருப்பதை இன்னோர் ஊழியர் பார்த்துவிடுகிறார், ஆனால், அதட்டவில்லை, மிரட்டவில்லை, |3
எங்கள் நிறுவனத்திலுள்ள ஒரு வேலை வாய்ப்பைப்பற்றி இன்று மதியம் பதிவுசெய்திருந்தேன். அதற்காகப் பலர் தங்களுடைய தகவல்களை அனுப்பியிருந்தார்கள், அவற்றை உரியவர்களுக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறேன். |1
அந்த மின்னஞ்சல்களையெல்லாம் மேலோட்டமாக இன்னொருமுறை பார்த்தபோது, இவ்விதமான வேலை நாடல் மின்னஞ்சல்களுக்கென்று சில சிறு குறிப்புகளை எழுதத் தோன்றியது. வேலை தேடுகிற புதியவர்கள்/ வேலை மாற எண்ணியுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். |2
1. உங்களுடைய படிப்பு, வேலை அனுபவம் போன்ற விவரங்களைக் கொண்ட கோப்புக்கு resume.docx என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் வைக்காதீர்கள். உங்கள் முழுப்பெயர் அதில் இருக்கட்டும், இயன்றால் உங்களுடைய சிறப்புத்திறன், எத்தனை வருட அனுபவம் போன்றவற்றையும் சேர்க்கலாம். |3
இத்தனை ஆண்டுகளில் நான் ஒருபோதும் அலுவலகம் செல்ல அலுப்படைந்ததில்லை. வாரத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாள் திங்கட்கிழமைதான். அந்த அளவுக்கு அலுவலகப் பணியில் ஆர்வமுள்ளவன். |1
இப்போது, முதன்முறையாக அதில் சலிப்பு தோன்றத்தொடங்கியிருக்கிறது. அதற்குக் காரணம், வயதோ பணி அழுத்தமோ இல்லை, பெங்களூரின் புகழ்பெற்ற போக்குவரத்து நெரிசல்தான். |2
பேருந்து, கார் என எதை முயன்றாலும் ஒரு நாளைக்கு 3மணிநேரம் தெருவில் வீணாகிறது. அதில் பெருமளவு புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என்று பயன்படுத்தினாலும், மதிப்புமிக்க நேரத்தை வீசி எறிகிறோம் என்ற எரிச்சலைத் தவிர்க்கமுடிவதில்லை. |3