என்னுடைய நண்பர்கள் மூவர் சமீபத்தில் ஆளுக்கொரு புது முயற்சியை நிறைவுசெய்திருக்கிறார்கள்: ஒருவர் தமிழ்க் குறுநாவல் ஒன்றை எழுதியுள்ளார், இன்னொருவர் ஆங்கிலத்தில் முழு நீள நாவல் ஒன்றை எழுதியுள்ளார், |1
மூன்றாமவர் (இதுவரை சிறுகதை, நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தவர்) முதன்முறையாக ஒரு கதையல்லாத நூலை வெளியிட்டுள்ளார். வெவ்வேறு சூழ்நிலைகளில் இவர்கள் மூவருடனும் பேசியதில் எனக்குத் தென்பட்ட சில பொதுத்தன்மைகள்: |2
1. ஒரு புதிய விஷயத்தை நிறைவு செய்யும்போது ஒரே நேரத்தில் மிகுந்த மகிழ்ச்சி வருகிறது; இன்னொருபக்கம், மிகுந்த எரிச்சலும் வருகிறது, 'இந்த வேலையில்தான் எத்தனை தொல்லை! இனி இதைத் தொடவே கூடாது' என்று தோன்றுகிறது. |3
ஆனால், அது உண்மையில்லை என்று நமக்குத் தெரியும், நாம் மிகவும் ஈடுபாட்டுடன் மகிழ்ந்து செய்கிற விஷயம் நம்மைப் பாடாகப் படுத்தினாலும் மறுபடி அங்கேயேதான் சென்று நிற்போம். |4
2. முதன்முறை எழுதும்போது (அல்லது, எழுத்தில் முதன்முறையாக ஒரு புதிய விஷயத்தில் ஈடுபடும்போது) நம் மனம் ஒரு வெளி Validationஐத் தேடுகிறது; அதாவது, இன்னொருவர் ஏதோ ஒருவிதத்தில் நம்மை உறுதிப்படுத்தவேண்டும் என்று ஏங்குகிறோம். |5
அந்தப் பாராட்டைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவதற்காக இல்லை, நாம் செல்வது சரியான வழிதான் என்று தெரியவேண்டும், அதை நாமே சொல்வதைவிட, இன்னொருவர் சொன்னால் மகிழ்ச்சி. |6
3. நாம் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் உள்ள விஷயங்களை எப்படியாவது நாம் செய்துவிடுவோம், அந்தக் கட்டாயம் இல்லாத விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு மிகுந்த தன்னூக்கம் தேவை. |7
ஆகவே, மேற்சொன்ன வெளி ஊக்கம் ஓர் ஓபனிங் பேட்ஸ்மேன்தான், அதன்பிறகு மிடில் ஆர்டர் வலுவாக இருந்தால்தான் அத்துறையில் நாம் தொடர்ந்து நிற்போம், எல்லாவற்றுக்கும் வெளி ஊக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது சரிப்படாது. |8
4. ஒருவேளை, அந்தப் புது விஷயம் நமக்குச் சரிப்படாவிட்டால்? அதை உடனே தீர்மானித்துவிடுவது சரியில்லை. ஒரே ஒரு data pointஐ வைத்துக்கொண்டு எதையும் சொல்ல இயலாது, அது எதேச்சையாக நடந்ததாகவும் இருக்கலாம். |9
அதே வழியில் இன்னும் சற்று நடந்தபிறகுதான் இது நமக்குப் பிடிக்கிறதா, ஒத்துவருகிறதா என்பது புரியும், அதற்காகவேனும், தொடங்கியதை இன்னும் சிறிது தொலைவு கொண்டுசெல்லவேண்டும். |10
அந்தச் சிறு தொலைவுக்குள் அது நமக்கு ஒத்துவரவில்லை என்று உறுதியாகத் தெரிந்துவிட்டால், மகிழ்ச்சியுடன் திரும்பி வந்துவிடலாம், தவறான பாதையில் எவ்வளவு விரைவாக, எவ்வளவு தொலைவு சென்றாலும் பயன் இல்லை. |11
சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் புதிதாக எதையேனும் செய்துகொண்டிருந்தால், சிரமம் பார்க்காமல் அதை நிறைவு செய்து முற்றுப்புள்ளி வையுங்கள், |12
கூச்சம் பார்க்காமல் அதை நான்கு பேரிடம் காண்பியுங்கள், கருத்து கேளுங்கள், அந்தக் கருத்துகளைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொண்டு சிந்தியுங்கள், அதன்பிறகு, |13
மாலை நேரத்தில் நகராட்சி அலுவலகத்தில் ஒருவர் ஒரு ஸ்விட்சைத் தட்டியதும், அதுவரை இருண்டு கிடந்த சாலைகளெல்லாம் ஒரே நொடியில் ஒளிமயமாவதுபோல் அடுத்து எங்கு செல்லலாம் என்பது உங்களுக்கே தெரிந்துவிடும். |14/14
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் ஒரு சிறிய உணவகம், அசைவ உணவுக்கு மிகவும் புகழ் பெற்றது. எப்போது அங்கு சென்றாலும் பெரிய கோழிகள் ஒன்றிரண்டை அப்படியே உரித்துக் கம்பியில் குத்திச் சுட்டுக்கொண்டிருப்பார்கள். |1
அப்போது என்னுடன் தங்கியிருந்த இருவரும் அசைவம் சாப்பிடுகிறவர்கள் என்றுதான் நினைவு. ஆனால், ஆந்திரக் காரத்தை ருசிப்பதில் அவர்களுக்கு ஏதோ தயக்கம் இருந்தது. ஆகவே, அவர்களும் தாற்காலிகமாகத் தாவர உண்ணிகளாகியிருந்தார்கள், ஊருக்குப் போகும்போதுமட்டும்தான் மாமிச உணவு. |2
இதனால், அவ்வளவு பக்கத்தில் இருக்கிற அந்தப் புகழ் பெற்ற உணவகம் எங்களுக்குப் பயன்படவே இல்லை. நாள்தோறும் இருமுறை அந்தப் பக்கமாக நடந்து செல்வதோடு சரி, எப்போதும் உள்ளே நுழைந்ததில்லை. |3
சிறு வயதில், எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் நெடுஞ்சாலை வழியில் ஒரு மளிகைக்கடை. அங்கு ஐம்பது பைசாவுக்குக் கை நிறைய வேர்க்கடலை கிடைக்கும். வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாகத் தின்றபடி நடந்தால் பள்ளி வந்துவிடும். |1
மறுநாள் மீண்டும் அதே ஐம்பது பைசா, அதே உப்புப்போட்ட வேர்க்கடலை, ஆண்டுமுழுக்க எனக்கு அதே தின்பண்டம்தான், ஒருநாளும் சலித்ததில்லை. |2
அந்த மளிகைக்கடையிலிருந்து சற்றுத்தள்ளி வலப்பக்கம் காந்தித்தாத்தா நின்றிருப்பார். அவருடைய சிலைக்குக் கீழே நீளமாகத் தாடி வைத்த இஸ்லாமியார் ஒருவருடைய தின்பண்டக்கடை. வேர்க்கடலையில் வேறு தினுசுகளும் உண்டு என்பதை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். |3
17 வயது இளைஞர் ஒருவர், பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லை, ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று நினைக்கிறார், சட்டைப்பையில் வெறும் 200 ரூபாயுடன் பெரிய ஊரொன்றுக்குச் செல்கிறார், மிகவும் அலைந்து திரிந்தபிறகு, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலைக்குச் சேர்கிறார். |1
அந்த மென்பொருள் நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு கணினி இருக்கிறது, அலுவலகத்தில் கூட்டமில்லாத நேரங்களில் இவர் அந்தக் கணினியை நோண்டிப்பார்க்கிறார், சில விஷயங்களைத் தானே கற்றுக்கொள்கிறார். |2
ஒருநாள், இவர் இப்படிக் கணினியில் வேலை செய்துகொண்டிருப்பதை இன்னோர் ஊழியர் பார்த்துவிடுகிறார், ஆனால், அதட்டவில்லை, மிரட்டவில்லை, |3
எங்கள் நிறுவனத்திலுள்ள ஒரு வேலை வாய்ப்பைப்பற்றி இன்று மதியம் பதிவுசெய்திருந்தேன். அதற்காகப் பலர் தங்களுடைய தகவல்களை அனுப்பியிருந்தார்கள், அவற்றை உரியவர்களுக்கு அனுப்பிவைத்துக்கொண்டிருக்கிறேன். |1
அந்த மின்னஞ்சல்களையெல்லாம் மேலோட்டமாக இன்னொருமுறை பார்த்தபோது, இவ்விதமான வேலை நாடல் மின்னஞ்சல்களுக்கென்று சில சிறு குறிப்புகளை எழுதத் தோன்றியது. வேலை தேடுகிற புதியவர்கள்/ வேலை மாற எண்ணியுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். |2
1. உங்களுடைய படிப்பு, வேலை அனுபவம் போன்ற விவரங்களைக் கொண்ட கோப்புக்கு resume.docx என்று பொத்தாம்பொதுவாகப் பெயர் வைக்காதீர்கள். உங்கள் முழுப்பெயர் அதில் இருக்கட்டும், இயன்றால் உங்களுடைய சிறப்புத்திறன், எத்தனை வருட அனுபவம் போன்றவற்றையும் சேர்க்கலாம். |3
இத்தனை ஆண்டுகளில் நான் ஒருபோதும் அலுவலகம் செல்ல அலுப்படைந்ததில்லை. வாரத்தில் எனக்கு மிகவும் பிடித்த நாள் திங்கட்கிழமைதான். அந்த அளவுக்கு அலுவலகப் பணியில் ஆர்வமுள்ளவன். |1
இப்போது, முதன்முறையாக அதில் சலிப்பு தோன்றத்தொடங்கியிருக்கிறது. அதற்குக் காரணம், வயதோ பணி அழுத்தமோ இல்லை, பெங்களூரின் புகழ்பெற்ற போக்குவரத்து நெரிசல்தான். |2
பேருந்து, கார் என எதை முயன்றாலும் ஒரு நாளைக்கு 3மணிநேரம் தெருவில் வீணாகிறது. அதில் பெருமளவு புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என்று பயன்படுத்தினாலும், மதிப்புமிக்க நேரத்தை வீசி எறிகிறோம் என்ற எரிச்சலைத் தவிர்க்கமுடிவதில்லை. |3