Sasithra Profile picture
19 Nov, 14 tweets, 7 min read
"எனக்கு ஐஜியைத் தெரியும்...
...ஆனா அவருக்கு என்னைத் தெரியாது..."

"எல்லா இடத்திலயும் ப்ளாஸ்டிக்கை வைச்சு எரிக்கறான்... ஓசோன்ல ஓட்டையைப் போட்டுட்டான்..."
...என சர்வ சாதாரணமாக ஓரிரு வரிகளைப் பேசிவிட்டு சர்வகாலமும் நம்மை சிரிக்க வைப்பவர் தான் பத்மஸ்ரீ விவேக் அவர்கள்...
1/n
"என்ன..
காமெடி நடிப்பு தானே... அதெல்லாம் அசால்ட்டா அடிச்சுட்டுப் போயிடலாம்..." என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் தருகிறார் விவேக்..?
2/n
"மார்கழி உற்சவம்" புத்தக வெளியீடு டிசம்பர் 11 என்று நாள் குறித்தவுடன், விழாவில் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் கலந்துகொண்டு, தலைமையேற்று புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் முதன்முதலாக அவரைத் தொடர்பு கொண்டபோது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் சின்னக்கலைவாணர்.
3
தேதிகளை சரிபார்த்து, விழாவில் பங்கேற்க அவர் சம்மதம் தெரிவித்தது டிசம்பர் ஒன்றாம் தேதி.. அவருக்கு நன்றி கூறி, புத்தகத்தின் பிரதி ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தோம்...
அப்போதும் அவர் பிசியாக இருந்தார் என்பதைத் தெரிந்துகொண்டோம்...
4/n
டிசம்பர் 11..
புத்தக வெளியீடு நாள்..
முந்தைய இரவு படப்பிடிப்பு முடித்து, அன்றைய காலைப்பொழுதில் மீண்டும் படப்பிடிப்பு தொடர மதியம் அவசரமாகப் புறப்பட்டு கோவை வந்துசேர்ந்தார்..
நேரில் சென்று அவரை வரவேற்றபோது, அவரது கைகளில், நாங்கள் அனுப்பிய அந்த புத்தகப் பிரதி இருந்தது..
5/n
மாலையில் சரியான நேரத்தில் விழாமேடைக்கும் அவர் வந்தாகிவிட்டது...
இவ்வளவு பிசியாக இருக்கும் ஒருவர், மார்கழி உற்சவம் புத்தகத்தைப் படித்திருக்க வாய்ப்பே இல்லை என்று நாங்கள் எண்ணிக் கொண்டிருக்க, தலைமையேற்றுப் பேசும்போது...
6/n
"திருப்பாவைக்கு
என்னையை தலைமையுரை பேசச் சொல்றாங்க. எனக்கு திருப்பாவைன்னா ஆண்டாள் தெரியும்.
ஆண்டாள்னா ஸ்ரீவில்லிபுத்தூர் தெரியும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்னா பால்கோவா தெரியும்" என்று அவருக்கே உரிய பாணியில் தொடங்கி, பின்பு புத்தகத்திலிருந்த அறிவியல் விளக்கங்களை அழகாக எடுத்துரைத்தார்.
7/n
பின்பு முத்தாய்ப்பாக,
ஆழிமழைக்கண்ணா பாடலில்
"சூரியனோட கதிர்கள் பட்டு, நீர்நிலைகள்ல இருக்கற தண்ணீர் ஆவியாகி, மேகங்களா மாறி, சாரங்கனுடைய வில்லிலிருந்து வர்ற அம்பு மாதிரி மழை பெய்யுதுன்னு இதுல சொல்லியிருக்காங்க.
ஆனா இதையும் சேர்த்து சொல்லியிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்"
8
அந்த கருமேகத்தில இருக்கும் நீரை பூமிக்கு வர ஈர்த்தது மரங்களே. அதன் இலைகளிலுள்ள லட்சக்கணக்கான துளைகளின் வழியாக அவை குடித்த தண்ணீரின் 20% தாம் வைத்துக்கொண்டு, மிகுதி 80% தண்ணீரை ஆவியாக்கி, அவை கருமேகங்களைத் தொடுவதால், அங்கு condensation நிகழ்ந்து பூமிக்கு மழையாகப் பெய்கிறது என்றார்
பின்பு "மார்கழி உற்சவம்" புத்தகத்தை வெளியிட்டு அனுமதிபெற்று புறப்பட்டுச் சென்றார். விழா முடிந்தபின் அவரது இருக்கைக்கு அருகே, அந்த நீலநிற புத்தகப் பிரதியை அவர் மறந்து விட்டுச்சென்றது தெரியவர, மெதுவாக அதன் பக்கங்களைப் புரட்டியபோது காமெடியைத் தாண்டிய கடின உழைப்பு அங்கு தெரிந்தது..
ஒவ்வொரு பாசுரத்திலும் அங்கங்கே பென்சில் கொண்டு அடிக்கோடிட்டு..
சில இடங்களில் அம்புக்குறியிட்டு, ஒருபக்கத்தில் தான் பேச வேண்டியவற்றை தமிழில் குறித்து வைத்து...
என மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்துச் சென்றார் பத்மஸ்ரீ விவேக் அவர்கள்..
மிக்க நன்றி விவேக் சார்...
நீங்கள் எங்கள் அனைவருக்கும் விட்டுச் சென்றது "மரம் நடுதல்" என்ற ஒரு தீர்க்கமான சிந்தனை என்றால், எனக்கு அதனுடன் உங்கள் கையெழுத்து ஏந்திய ஒரு பொக்கிஷத்தையும் விட்டுச் சென்றுள்ளீர்கள்..
இன்று உங்களது பிறந்தநாளன்று நீங்கள் பல்லாயிரக்கணக்கான மரங்களை திருவண்ணாமலையில் நடும்போது, இங்கு சவிதாவில் சில மரக்கன்றுகளை நாங்களும் நடுகிறோம்...

"தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.."
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் விவேக் சார்...!
n/n

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sasithra

Sasithra Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @savidhasasi

20 Nov
#November19

ஒரேநாளில் ஆண்கள் தினமும், கழிப்பறை தினமும்.. ஏனெனில் இரண்டையுமே மேம்படுத்த வேண்டும் போன்ற மீம்ஸ் நேற்று முழுவதும் கண்களில் பட்டபோதும், உலகில் 420 கோடி மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றனர் என்றிருக்கும்போது, Sustainable Sanitation isn't a joke என்பதே உண்மை!
1/n Image
நமது வாழ்நாளில், சராசரியாக மூன்று வருட காலங்களை, நாம் கழிவறைகளில் கழிக்கிறோம். அதிலும் ஆண்களைக் காட்டிலும், ஒன்றிலிருந்து ஒன்றரை வருட காலம் அதிகம் செலவிடுகின்றனர் பெண்கள் என்கிறது ஓர் ஆய்வு..
2/n Image
இந்நிலையில், பொதுக்கழிப்பிடங்களில், அதிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் நோய்த்தொற்று ஏற்படாமல் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது..
3/n
Read 17 tweets
17 Nov
#SavidhaDiary

கவிதா..
மிகவும் புத்திசாலித்தனமான பெண். குழந்தைப்பேறுக்காக, பல வருடங்களாக முயன்று, சவிதாவில் செயற்கைக் கருத்தரிப்பு மூலமாக, இரட்டையர்களைக் கருத்தரித்து, கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்தே ஏற்பட்ட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளை சமாளித்த தைரியம் மிகுந்த பெண்..
1/n Image
ஏழு மாத முடிவில், (முப்பது வாரங்கள்) கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம், கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் அதிக நீர் சுரப்பு ஆகிய காரணங்களால், அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டையர்களைப் பெற்றெடுத்தாள் கவிதா..
2/n Image
குறைகாலப் பிரசவம், குறைந்த எடைக் குழந்தைகள் என்பதால், இரண்டு குழந்தைகளுக்கும், Neonatal Intensive Care Unit (NICU) என்ற பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது..
3/n Image
Read 15 tweets
22 Oct
#SavidhaDiary

இரவு வார்ட் ரவுண்ட்ஸ்.
கர்ப்பப்பை பிரச்சினைக்காக அனுமதியாகியிருந்த அந்த 50 வயதுப் பெண்மணியுடன் அவரது மகளும், 4 வயதுப் பேரனும் அதே அறையில் இருக்க,
"ஏம்மா குழந்தையை ஹாஸ்பிடலுக்கெல்லாம் அழைச்சுட்டு வர்றீங்க?
அதுவும் இந்த சமயத்தில!" என்று கடிந்து கொண்டேன்.
1/n
"சாரி மேடம்...
இவங்கப்பாவுக்கு நைட் ஷிஃப்ட்..
வீட்டில வேற யாரும் இல்ல மேடம்..
நாளைக்கு காலைல வந்து, இவனை கூப்ட்டுட்டு போயிருவாரு.."
என்று மன்னிப்பு கேட்கும் குரலுடன் அவரது மகள் கூற, அனைத்தையும் துறுதுறுக் கண்களோடு கவனித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை..
2/n
இரவு வேளையில் கூட தூங்காமல், அதிலும் மாஸ்க் வேறு அணிந்து நின்றிருந்த அந்தக் குழந்தையிடம்,
"உன் பேர் என்ன குட்டிம்மா..?" என்று நான் கேட்க, "ராகுல் கிஷோர்" என்று என்னிடம் பதிலளித்துவிட்டு, மறுபுறம் திரும்பி,
"சிஸ்டர்.. மாஸ்க்கை சரியாப் போடுங்க..." என்றது..
3/n
Read 9 tweets
15 Sep
#SavidhaDiary
#September15
#திரும்பிப்பார்க்கிறேன்

சாலையில் தூரத்தில் பயணிக்கும்போதே வெண்ணிறக் கட்டிடமாக "சவிதா" நீலநிற LED விளக்குகள் ஒளிர, மருத்துவமனையாக சவிதா இயங்கத் துவங்கி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன..
1/n
ஆறு வருடங்களுக்கு முன்பு, வெற்றிடமாக இருந்த ஒரு சிறிய இடம்.. இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்க..
அதன் முகப்பில் ஒளிரும் "சவிதா மருத்துவமனை" பெயர்ப் பலகை, பல நினைவலைகளை அள்ளி வீசுகிறது..
2/n
அப்போது இதே முகப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓலைக் குடிசை ஒன்றில், ஒரு சிறிய மேஜையின் முன்னால், கைகளில் பெரிய வரைபடத்தோடும், கண்களில் பெருங்கனவோடும் அமர்ந்திருப்பார் ஆர்க்கிடெக்ட் மனோகரன் சார்..
அவருடன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயர் சகாயராஜ் மற்றும் கட்டிட கட்டுமானி பாரதி..
3/n
Read 12 tweets
31 Aug
#வாமனனா?
#மகாபலியா?
"செத்த மகாபலியையும் கொண்டாடறாங்க, அவனைக் கொன்ன வாமனனையும் கும்பிடறாங்க."
நண்பர் @minimeensன் ஸ்டேட்டஸ் இது..!
உடன் கன்னத்தில் கைவைத்த ஸ்மைலி வேறு.!
...ஆக இவர்களில் நல்லவர் யார்.?
ஏன்..?
ஒரு சிறிய விவாத மேடை இது..!
1/n
மகாபலி..
அசுர அரசர்களிலேயே வலிமை மிகுந்த அரசர். சிவபக்தர். அறிவார்ந்த ஞானி. அன்பானவர். தர்மத்தின் அடையாளச் சின்னமாக விளங்கியவர். தன்னிடம் பிச்சை கேட்டுவந்த வாமனன் என்ற ஏழை பிராமண வேடம் தரித்த கடவுளுக்கு, கொடுத்த வாக்கிலிருந்து தவறாததால், தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தவர்.
2/n
அனைத்தையும் இழந்தபின்னும், தனது மக்கள் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வரம் கேட்டதோடு, அவர்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருபவர் மகாபலி.
அவர் வருகை தரும் நாளான ஓணத்தையும், அன்பு நிறைந்த அந்த மகாபலியையும், மக்கள் கொண்டாட வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது..!!
3/n
Read 17 tweets
29 Aug
#SavidhaDiary

"என்னது..
பிரசவ வலியில்லாம இருக்கற ஊசியா..?
அதெல்லாம் வேணாம்..!"
என்று மறுத்துக் கூறிய புவனேஸ்வரியின் பாட்டிக்கு வயது எண்பதைத் தாண்டியிருக்கும்..
கூன் விழுந்த உடல்..
சுருக்கங்கள் நிறைந்த முகம்..
ஆனால் குரலில் மட்டும் அத்தனை தெளிவு..
1/n
"பாட்டிம்மா..
உங்க பேத்தி வலி தாங்க மாட்டேங்கறா..
பனிக்குடம் வேற உடைஞ்சிடுச்சிருக்கு..
இந்த ஊசியைப் போட்டுட்டா, அவளுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும்..
இந்த ஊசியால, அம்மாவுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு எதுவும் இல்ல.."
என்று நான் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
2/n
"எனக்கு நாலு புள்ளைங்க. எல்லாம் வீட்டில தான் பிரசவம். இவ அப்பன் பொறந்தப்ப உதவிக்கு கூட யாருமில்ல"
என்றார் அவர்.
"ம்மா, உங்க காலம் வேற. இப்ப நிலமை வேற. அப்ப வீட்டில நீங்க எத்தனை வேலை பாத்திருப்பீங்க?
ஆனா உங்க பேத்திக்கு மெஷின்தானே வேலை செஞ்சு தருது?" என்று நான் சொன்னதை ஏற்கவில்லை
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!