ஒரேநாளில் ஆண்கள் தினமும், கழிப்பறை தினமும்.. ஏனெனில் இரண்டையுமே மேம்படுத்த வேண்டும் போன்ற மீம்ஸ் நேற்று முழுவதும் கண்களில் பட்டபோதும், உலகில் 420 கோடி மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றனர் என்றிருக்கும்போது, Sustainable Sanitation isn't a joke என்பதே உண்மை! 1/n
நமது வாழ்நாளில், சராசரியாக மூன்று வருட காலங்களை, நாம் கழிவறைகளில் கழிக்கிறோம். அதிலும் ஆண்களைக் காட்டிலும், ஒன்றிலிருந்து ஒன்றரை வருட காலம் அதிகம் செலவிடுகின்றனர் பெண்கள் என்கிறது ஓர் ஆய்வு.. 2/n
இந்நிலையில், பொதுக்கழிப்பிடங்களில், அதிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் நோய்த்தொற்று ஏற்படாமல் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது..
3/n
நமது மலக்குடலிலிருந்து வெளியேறும் மலத்தில், ஏறத்தாழ கோடிக்கணக்கான வைரஸ்கள், லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாராசைட் என்ற ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன..
எனவே பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற கிருமிகளின் புகலிடமாக கழிவறைகள் இயல்பாக விளங்குகின்றன.. 4/n
அதிலும் வெஸ்டர்ன் டாய்லெட்டின் கம்மோட் மீது நேரடியாக அமர்வதால் சிறுநீர்த் தொற்று, பிறப்புறுப்பில் புண், வெள்ளைபடுதல், தோல் அழற்சி போன்ற பல நோய்த் தொற்றுகள் பெண்களுக்கு மிகச் சுலபமாக ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன..
5/n
டாய்லெட் கம்மோடுகளில் மட்டுமன்றி, கழிப்பறை கதவுகள் மற்றும் கைப்பிடிகளில் இருக்கும் கிருமிகளின் அளவு 40000த்திற்கும் மேல். இவற்றால் சிறுநீர்த்தொற்று, பிறப்புறுப்பில் தொற்று, வயிற்றுப்போக்கு, டைஃபாய்ட் காய்ச்சல், காமாலை ஆகியன ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.. 6/n
பெண்களுக்கான சில பாதுகாப்பு முறைகள்:
-டாய்லெட்டை உபயோகிக்கும் முன்பும், பின்னரும் ஃபளஷ் செய்தல்.
-கைகளை சுத்தமாக சோப் கொண்டு கழுவுதல்.
-இந்தியன் கழிப்பறைகளில் கடைப்பிடிப்பது போல தண்ணீர் கொண்டு கழுவுதல்.
-டிஷ்யூ அல்லது டாய்லெட் பேப்பரை உபயோகித்தல்.
பெண்களுக்கு மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதுமா, ஆண்களுக்கு வேண்டாமா என்றால் இல்லங்களிலும், சில பணியிடங்களிலும் Unisex என்ற இருபாலருக்குமான கழிப்பறைகளில், வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும்
ஆண்களும் Toilet Etiquettes சிலவற்றை பின்பற்றுவது அவசியமாகும்..
அதற்கு முன்பாக
வெஸ்டர்ன் டாய்லெட்டின் பகுதிகளையும், அவற்றின் உபயோகங்களையும் சிறிது புரிந்து கொள்வோம்..
கர்ப்பிணிப் பெண்கள், மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள இந்த வெஸ்டர்ன் டாய்லெட் எனப்படும் கம்மோடில்
மூன்று பகுதிகள் உள்ளன..
அவை,
- டாய்லெட் பேசின்,
- டாய்லெட் சீட் என்ற பிளாஸ்டிக் வளையம்,
- டாய்லெட்டின் மேல் மூடி அல்லது தட்டு.
சிறுநீர் மட்டும் கழிப்பவர்கள், வளையம் மற்றும் தட்டு இரண்டையும் தூக்கிவிட்ட பிறகு தான் பயன்படுத்த வேண்டும்..
இல்லையெனில் ஆண்களும் அமர்ந்தே சிறுநீர் கழிக்கலாம்..
ஏனெனில் மூடியை மட்டும் வெறுமனே தூக்கி சிறுநீர் கழித்தால், முந்தைய நபர் அதன் மீது சிதறிய சிறுநீர், பின்பு வருபவரின் உடலில் பட வாய்ப்புள்ளது என்பதால், சுகாதாரத்தை வலியுறுத்தவே, இந்த வளையம் அமைக்கப்பட்டுள்ளது..
மலம் கழிப்பவர்கள், தட்டை மட்டும் தூக்கி, வளையத்தின் மேல் அமர வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் முதலில், ஃப்ளஷ் செய்துவிட்டு மலம் கழிக்க வேண்டும். இறுதியில் மீண்டும் மறவாமல் ஃப்ளஷ் செய்ய வேண்டும். முக்கியமாக டாய்லெட் பேசின், எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்..
நமது நாட்டில் டிஷ்யூ பேப்பரை குறைவாக உபயோகப்படுத்துகிறோம் என்றாலும், இது கைகளில் கிருமிகளைப் பரப்புவதை பெரிதும் குறைக்கிறது என்பதை நினைவில் கொள்வோம்..
மேலும் பக்கெட், மக் ஆகியவற்றால் பரவும் நோய்த்தொற்றை குறைக்க, டாய்லெட் ஹேண்ட் ஷவரை பயன்படுத்தலாம்..
வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் டாய்லெட்கள் இரண்டும் இருக்கும் பொதுகழிப்பறைகளில், இந்தியன் டாய்லெட்களை பயன்படுத்துதல் ஏற்றதாகும். ஏனெனில் நமது இயல்பான குத்தவைத்து அமரும்நிலை (Squatting Method) முழுமையாக மலம் கழிக்க உதவுவதோடு
இடுப்பு மற்றும் தொடையின் தசைகளுக்கு வலிமையையும் அதிகரிக்கும்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொகஞ்சதாரோ நாகரிகத்தில் முதன்முதலாக கழிப்பறைகளை ஏற்படுத்திய நமக்கு, அதன் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு சற்று அதிகம் தேவைப்படுகிறது என்பது தான் இன்றைய உண்மை நிலை..
இயற்கை அழைக்கும்போது, (When Nature Calls) இவற்றையெல்லாம் முழுமையாக அறிந்திருப்பதுடன்,
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, நம் வீட்டை மட்டுமல்லாமல், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாகயும், சுகாதாரமாகவும் வைத்திட இந்த உலக கழிப்பறை தினத்தில் உறுதி ஏற்போம்!
n/n #WorldToiletDay
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"என்ன..
காமெடி நடிப்பு தானே... அதெல்லாம் அசால்ட்டா அடிச்சுட்டுப் போயிடலாம்..." என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் தருகிறார் விவேக்..?
2/n
"மார்கழி உற்சவம்" புத்தக வெளியீடு டிசம்பர் 11 என்று நாள் குறித்தவுடன், விழாவில் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் கலந்துகொண்டு, தலைமையேற்று புத்தகத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் முதன்முதலாக அவரைத் தொடர்பு கொண்டபோது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் சின்னக்கலைவாணர்.
3
கவிதா..
மிகவும் புத்திசாலித்தனமான பெண். குழந்தைப்பேறுக்காக, பல வருடங்களாக முயன்று, சவிதாவில் செயற்கைக் கருத்தரிப்பு மூலமாக, இரட்டையர்களைக் கருத்தரித்து, கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்தே ஏற்பட்ட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளை சமாளித்த தைரியம் மிகுந்த பெண்.. 1/n
ஏழு மாத முடிவில், (முப்பது வாரங்கள்) கர்ப்ப கால உயர் இரத்த அழுத்தம், கர்ப்ப கால சர்க்கரை நோய் மற்றும் அதிக நீர் சுரப்பு ஆகிய காரணங்களால், அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம், ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டையர்களைப் பெற்றெடுத்தாள் கவிதா.. 2/n
குறைகாலப் பிரசவம், குறைந்த எடைக் குழந்தைகள் என்பதால், இரண்டு குழந்தைகளுக்கும், Neonatal Intensive Care Unit (NICU) என்ற பச்சிளம் குழந்தைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது.. 3/n
இரவு வார்ட் ரவுண்ட்ஸ்.
கர்ப்பப்பை பிரச்சினைக்காக அனுமதியாகியிருந்த அந்த 50 வயதுப் பெண்மணியுடன் அவரது மகளும், 4 வயதுப் பேரனும் அதே அறையில் இருக்க,
"ஏம்மா குழந்தையை ஹாஸ்பிடலுக்கெல்லாம் அழைச்சுட்டு வர்றீங்க?
அதுவும் இந்த சமயத்தில!" என்று கடிந்து கொண்டேன். 1/n
"சாரி மேடம்...
இவங்கப்பாவுக்கு நைட் ஷிஃப்ட்..
வீட்டில வேற யாரும் இல்ல மேடம்..
நாளைக்கு காலைல வந்து, இவனை கூப்ட்டுட்டு போயிருவாரு.."
என்று மன்னிப்பு கேட்கும் குரலுடன் அவரது மகள் கூற, அனைத்தையும் துறுதுறுக் கண்களோடு கவனித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.. 2/n
இரவு வேளையில் கூட தூங்காமல், அதிலும் மாஸ்க் வேறு அணிந்து நின்றிருந்த அந்தக் குழந்தையிடம்,
"உன் பேர் என்ன குட்டிம்மா..?" என்று நான் கேட்க, "ராகுல் கிஷோர்" என்று என்னிடம் பதிலளித்துவிட்டு, மறுபுறம் திரும்பி,
"சிஸ்டர்.. மாஸ்க்கை சரியாப் போடுங்க..." என்றது.. 3/n
சாலையில் தூரத்தில் பயணிக்கும்போதே வெண்ணிறக் கட்டிடமாக "சவிதா" நீலநிற LED விளக்குகள் ஒளிர, மருத்துவமனையாக சவிதா இயங்கத் துவங்கி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன.. 1/n
ஆறு வருடங்களுக்கு முன்பு, வெற்றிடமாக இருந்த ஒரு சிறிய இடம்.. இன்று மூன்று மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்க..
அதன் முகப்பில் ஒளிரும் "சவிதா மருத்துவமனை" பெயர்ப் பலகை, பல நினைவலைகளை அள்ளி வீசுகிறது.. 2/n
அப்போது இதே முகப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓலைக் குடிசை ஒன்றில், ஒரு சிறிய மேஜையின் முன்னால், கைகளில் பெரிய வரைபடத்தோடும், கண்களில் பெருங்கனவோடும் அமர்ந்திருப்பார் ஆர்க்கிடெக்ட் மனோகரன் சார்..
அவருடன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயர் சகாயராஜ் மற்றும் கட்டிட கட்டுமானி பாரதி.. 3/n
#வாமனனா? #மகாபலியா?
"செத்த மகாபலியையும் கொண்டாடறாங்க, அவனைக் கொன்ன வாமனனையும் கும்பிடறாங்க."
நண்பர் @minimeensன் ஸ்டேட்டஸ் இது..!
உடன் கன்னத்தில் கைவைத்த ஸ்மைலி வேறு.!
...ஆக இவர்களில் நல்லவர் யார்.?
ஏன்..?
ஒரு சிறிய விவாத மேடை இது..! 1/n
மகாபலி..
அசுர அரசர்களிலேயே வலிமை மிகுந்த அரசர். சிவபக்தர். அறிவார்ந்த ஞானி. அன்பானவர். தர்மத்தின் அடையாளச் சின்னமாக விளங்கியவர். தன்னிடம் பிச்சை கேட்டுவந்த வாமனன் என்ற ஏழை பிராமண வேடம் தரித்த கடவுளுக்கு, கொடுத்த வாக்கிலிருந்து தவறாததால், தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தவர். 2/n
அனைத்தையும் இழந்தபின்னும், தனது மக்கள் நலமும், வளமும் பெற்று வாழ்ந்திட வரம் கேட்டதோடு, அவர்களை ஆண்டிற்கு ஒருமுறை காண வருபவர் மகாபலி.
அவர் வருகை தரும் நாளான ஓணத்தையும், அன்பு நிறைந்த அந்த மகாபலியையும், மக்கள் கொண்டாட வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது..!! 3/n
"என்னது..
பிரசவ வலியில்லாம இருக்கற ஊசியா..?
அதெல்லாம் வேணாம்..!"
என்று மறுத்துக் கூறிய புவனேஸ்வரியின் பாட்டிக்கு வயது எண்பதைத் தாண்டியிருக்கும்..
கூன் விழுந்த உடல்..
சுருக்கங்கள் நிறைந்த முகம்..
ஆனால் குரலில் மட்டும் அத்தனை தெளிவு.. 1/n
"பாட்டிம்மா..
உங்க பேத்தி வலி தாங்க மாட்டேங்கறா..
பனிக்குடம் வேற உடைஞ்சிடுச்சிருக்கு..
இந்த ஊசியைப் போட்டுட்டா, அவளுக்கு கொஞ்சம் சுலபமா இருக்கும்..
இந்த ஊசியால, அம்மாவுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு எதுவும் இல்ல.."
என்று நான் கூறியதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை. 2/n
"எனக்கு நாலு புள்ளைங்க. எல்லாம் வீட்டில தான் பிரசவம். இவ அப்பன் பொறந்தப்ப உதவிக்கு கூட யாருமில்ல"
என்றார் அவர்.
"ம்மா, உங்க காலம் வேற. இப்ப நிலமை வேற. அப்ப வீட்டில நீங்க எத்தனை வேலை பாத்திருப்பீங்க?
ஆனா உங்க பேத்திக்கு மெஷின்தானே வேலை செஞ்சு தருது?" என்று நான் சொன்னதை ஏற்கவில்லை