நீதிக்கட்சி அமைச்சரவை அமைந்து நாளையுடன் ஒரு நூற்றாண்டு ஆகிறது .
1920 நவம்பர் 20 முதல் பொதுத் தேர்தல் நடைப்பெற்றது .
1920 டிசம்பர் 4 தேர்தல் முடிவுகள் வெளிவந்தன.
98 இடங்களில் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது .
1/n
1920 டிசம்பர் 20 அன்று நீதிக்கட்சி அமைச்சரவை பதவி ஏற்றக் கொண்டது .
நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் பாராளுமன்ற நடைமுறைகளுக்கான அடித்தளம் இங்கே நாட்டப்பட்டது.
இன்று தமிழ்நாடு நன்கு நிர்வகிக்கப்படும் மாநிலமாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அன்று நீதிக்கட்சி தந்த பயிற்சிதான். 2/n
நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் பின்தங்கிய சமூகங்களுக்கு வகுப்புவாரிப் வழங்கப்பட்டது. 3/n
நீதிக்கட்சி ஆட்சியிலேதான் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும், இலவசப் புத்தகங்களும், இலவச ஆடைகளும், இலவச மதிய உணவும் வழங்கப்பட்டன.
4/n
நீதிக்கட்சியின் ஆட்சியிலேதான் தொழில் வளத்தைப் பெருக்கத் தனியார் தொழில் தொடங்கினால் அதற்கு அரசும் உதவிடும் புதுமைத் திட்டம் கொண்டுவந்தது . 5/n
நீதிக்கட்சி ஆட்சியிலே தான் இந்தியாவிலேயே முதல்முறையாக இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் (Hindu Religious Endowments Act) கொண்டு வரப்பட்டது. 6/n
நீதிக்கட்சியின் தொடர்ச்சித் தான் திராவிடர் கழகமும் , திராவிட முன்னேற்ற கழகமும் .
இன உணர்வுத் தீபம் ஏற்றி வைத்த பெரியோர்களை நினைவு கூறுவோம் .
அதிமுக ஆட்சியில் சீரழிந்த தமிழ்நாட்டை மீட்போம். #DMK4TN
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் தொடர்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற உரை . (14-03-1997). 1/n
தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம் அதிவிரைவில் வளர்ச்சி அடைந்து வருகின்ற, வேகமாக மாறுதல் அடைந்து வருகின்ற தகவல் தொழில் நுட்பத் துறையில் நாம் பின்தங்கிவிடாமல் 2/n
21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற தகவல் தொழில் நுட்பத் துறையிலே உலகத்தில் முன்னோடியாக விளங்குவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளத்தான் இந்தத் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப நிறுவனம்.
In (17/10/2020) yesterday’s debate at @PTTVOnlineNews show named “Naer Pada Pesu”, Dr @sumanthraman , has abruptly recorded as the RTI information provided by the Director of Medical Council as a fake document, when it was presented in a public talk show by @Dr_Ezhilan 1/n
It is a dirty mind game being played by the current government for not making the exact information reach the general public. The information provided by @Dr_Ezhilan was released as a statement by opposition leader @mkstalin , and it had a vide circulation in the social media
Knowing all this, Dr @sumanthraman , being a professional, is trying to create a dark cloud regarding the Medical college admission among the general public.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும்.
திராவிட இயக்கம் இனத்தை முன்னிருத்தி மொழியை காத்தது - மொழியை முன்னிருத்தி இனத்தை காத்தது என்று அண்ணன் ஆ.ராசா அவர்கள் பல முறை சொல்லியுள்ளார்.
அதை வரலாற்று சான்றுகளுடன் நம் பேரறிஞர் அண்ணா விளக்குகிறார் .
1/n
நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திராவிடம் பலமுறை முயன்றிருக்கிறது.
சில நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை.
அடிக்கடி தனித்தமிழ், வேளாளர் நாகரிகம், உண்மை சைவம், பண்டைய நாகரிகம், என்று பல்வேறு தலைப்புகளில் கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு கிறு பதிப்புகளேயாகும்.
கடமையைச் செய்யக் கலங்காதீர் ( திராவிட நாடு 13-08-1950)
நமது மாகாண சர்க்காரில் 20 வருடகால அமுலில் இருந்து வந்த கம்யூனல் ஜீ.ஓ. ஜொலிக்கும் மணிகளை நமக்கு அளித்தது. 1/n
திராவிட மக்கள், சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தால் எவரையும் மிஞ்சிவிடுவோம் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள். இதைப் பார்த்தே, “சதிகார வர்க்கத்தினர்” வெகுகாலமாக திட்டமிட்டு, ஹைகோர்ட் வரை சென்று வழக்காடி வெற்றியும் பெற்றுவிட்டனர்.
உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்; சேலத்தில் பிராமண மாநாடு கூடிய காலத்திலேயே, கம்யூனல் ஜி.ஓ.வை ஒழிக்க அவர்கள் திட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
#திராவிடப்பெருஞ்சுவர் திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கூட்டங்களிலும், ஏடுகளிலும் எழுதும் போதும், பேசும்போதும் மொழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள் என்று 1/n
குறிப்பிடுவேன். தமிழனை, தமிழ் மொழியை நாங்கள் மறந்து விடவில்லை. நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூகநீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல,
இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.