நம் வீடுகளில் எல்லா சுப காரியங்கள் நடக்கும்போதும் ஆலயங்களிலும் கேட்கும் ஒரு சின்ன சில நிமிஷ ஸமஸ்க்ரித மந்திரம் இது. செவிக்கினிமையான ''மந்த்ர புஷ்பம்''. அதன் பொருளை புரிந்து கொண்டால் அதன் அருமை புரியும். விரும்பி மனப்பாடம் செய்ய தோன்றும். வேதத்தில்
தைத்ரீய அரண்யகம் என்ற பகுதியில் வருகிறது. நீரின்றி அமையாது உலகம். எனவே எங்கும் நீர் வளம் பெருக, வேண்டும் மந்திரம் இது. நீர் ஒன்றே சுபிக்ஷத்தின் அறிகுறி.
ய ஏவம் வேத’ | யோஉபாமயத'னம்
வேத'| ஆய்தனவான் பவதி |
நீர் என்பதே ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதை புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேருகின்றன. பூக்களாகிய குழந்தைகள்,ஆநிரை , ஆடு முதலிய செல்வங்கள் சேருகின்றன. சந்திரன் என்னும் நிலவு நீரின் குளுமையில் பூவாகிறது. நீரின் ஆதாரம் புரிந்தவன்
உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
H2O என்பதே ஹைட்ரஜன் வாயுவுடன் ஆக்சிஜன் எனும் உஷ்ணத்தின் சேர்க்கை தான் நீர். கொதிக்கும் சூரியன் ஒளியில் கடல் நீர் ஆவியாகி மேகமாகி குளிர்ந்து மழையாகி நீராகிறது. இதை அறிந்தவன் நீரை புரிந்தவன். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு
வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
வாயுர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ வாயோராயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை வாயோராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’
உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |
வாயு எனும் காற்றும் நீருக்கான ஆதாரம். காற்று தான் நீராவியாக மேலே மிதந்து சென்று மழை பொழியும் மேகமாகி நீரை அளிக்கிறது. இதை அறிந்தவன் நன்மை பெறுகிறான். நீரின் ஆதாரம் புரிந்தவன் நீரின் சுவையோடு இனிமையோடு வளத்தோடு கலந்த தன்னையே அறிந்த புண்யசாலி.
மந்த்ர புஷ்ப ஸ்தோத்ரத்தின் கடைசி பகுதி.
ஓம். இது தான் ப்ரம்மா. ஓம். இது தான் வாயு என்கிற காற்று. உயிர் மூச்சு. ஓம். இது தான் என்னுள்ளே இருக்கும் ஆத்மா. ஓம். இது தான் நிரந்தரமான பேர் உண்மை. ஓம். இது தான் எல்லாமே. ஓம் என்நமஸ்காரங்களுக்குரிய புருஷனே, எங்கும் எந்த உயிரிலும் உள்
நின்று இயங்கும் விஸ்வமூர்த்தியே . நீயே நான் செய்யும் யாகத்தீ. நீயே வேதம் சொல்லும் தியாகங்களின் உருவகம். நீயே இந்திரன். நீ தான் வாயு எனும் காற்று. நீ தான் சம்ஹாரம் செய்யும் ருத்ரன். நீயே காக்கும் மஹா விஷ்ணு. நீயே படைக்கும் ப்ரம்ம தேவன். சகல உயிர்களுக்கும் தலைவன் நீயே. ஓம். நீர்
என்பதே ஒளி. வடிகட்டிய அம்ருத சக்தி. ஏழுலகிலும் பிரம்மத்தின் தத்வம். எங்கும் அமைதி உள்ளும் புறமும் அமைதி. அமைதி. அமைதி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#BhagavadGitaDay வைகுண்ட ஏகாதசி அன்று தான் பகவத் கீதை பிறந்த நாளும் கொண்டாடப் படுகிறது. பகவத் கீதை என்றால் கடவுளின் பாடல்கள். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது மகாபாரதப் போர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் தொடங்கியபோது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக
நிற்கும் பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களை எதிர்த்து போர் புரிய அவனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று யோசித்தான்
அவன் மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தான். அப்போது அவனுக்குத் தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். அவன் மனக் கிலேசத்தைப் போக்கினார். தர்மத்துக்காக போர் புரியும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த
அன்றைய தினம் பற்றி பஞ்சாங்கம் படிப்பதையும் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இதை தினமும் படிப்பதனாலோ கேட்பதனாலோ என்ன பயன் என்று யோசித்ததுண்டு. #TIL யார் தினமும் பஞ்சாங்கம் படிக்கின்றனரோ அல்லது கேட்டறிய ஆசைக்கொண்டு கேட்டு அறிகின்றனரோ அவர்களுக்கு அக்னிஷ்டோம யாகம் செய்தபலன் மற்றும்
தினமும் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும். தானே பஞ்சாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது உரியவர்கள் மூலமாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
திதியை அறிவதனால் ஐஶ்வர்யங்கள் கிடைக்கும், கிழமையை அறிவதனால் ஆயுசு அதிகரிக்கும், நட்சத்திரத்தை அறிவதனால் பாவம் விலகும், யோகத்தை அறிவதனால்
நோய் நீங்கும், கரணத்தை அறிவதனால் செயல்கள் வெற்றிபெறும். பஞ்சாங்கத்தை தினமும் படிப்பதனால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. #பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அவை
1.வாரம் 2.நட்சத்திரம்
#நீலகண்டதீக்ஷிதர் இவர் ஒரு மகாவித்வான்! பதினெட்டு வயதுக்குள் எல்லா வேத சாஸ்திரங்களையும் படித்து அனைத்து சில்ப சாஸ்திரங்களையும் பயின்று பெரிய மேதையாக விளங்கினார்! அதனால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மகாராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு மந்திரியாக இருந்தார். நீலகண்டதீக்ஷிதர்
மந்திரியாக அபாரமான செயல்களை செய்துள்ளார். இன்றும் நாயக்கர்கள் செய்த சேவை நம் தேசத்துக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறது. ஒரு முறை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தன்னுடைய சிலையும், தன்னுடைய மனைவிமார்கள் சிலையையும் வவைக்க ஆசைப்பட்டார் அரசர். நீலகண்டதீக்ஷிதர் அந்தச்
சிலைகளைச் செய்ய பொறுப்பேற்றுக் கொண்டார். ராணியின் சிலை செய்பவன் சிலையை வடிக்கும்பொழுது முட்டிக்குமேல் ஒரு இடத்தில் சில்லு தட்டிவிடுகிறது. அதை இவரிடம் சிற்பி சொன்னபொழுது நீலகண்டதீக்ஷிதர் ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு அந்த இடத்தில் ராணிக்கு ஒரு மச்சம் இருக்கும் என்று அவர்
முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ₹10 கோடியை குருவாயூர் கோவிலுக்கு திருப்பித் தரவேண்டும் என்று பினராயி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. #இந்துகோவில்நிதிஅரசுநிதிஅல்ல குருவாயூர் கிருஷ்ணன் கோவில் அசையும் அசையா சொத்துகளுக்கு சொந்தக்காரர் குருவாயூரப்பன் மட்டுமே.
தேசஸ்வம் போர்ட் அறங்காவலர் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளவர். பக்தர்களின் தேவைகளை-குடிநீர், தங்குமிடம், மருத்துவ வசதிகளை செய்யவும் கோவிலின் கலாச்சாரம் பரவவும், இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும், சமஸ்கிருதம் மலையாள மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடு
படவும் கோவில் நிதியை அறங்காவலர் பயன்படுத்த முடியும். இதர இந்து கோவில்களுக்கு நன்கொடை வழங்கலாம். இவை தான் தேவசம் போர்டின் பணிகளாக இருக்கவேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். மதச்சார்பற்ற அரசு இந்து கோவில் நிதியை மட்டும் தன்னிச்சையாக எடுத்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
இரண்டே வரி ஸ்லோகம் ஆஞ்சநேயர் மீது ஆனால் அத்தனை சக்தி வாய்ந்த ஸ்லோகம்!
புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||
அனுமனை ஸ்மரணை செய்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது: முதலில் ‘புத்தி’–எல்லாவற்றுக்கும்
முதன்மை தேவை அறிவுதான். அது அறிவு 'பலம்’, அடுத்து உடல் பலம். ‘யசஸ்'- புகழ். ‘தைர்யம்’- வீரம். ‘நிர்பயத்வம்’ – அஞ்சாமை. ‘தைர்யம்’ என்றாலே அஞ்சாமையும்தான் ஆனால் நிர்பயத்வம் என்றும் வருகிறது. காரணம் ‘தைர்யம்’ என்பதற்கு இன்னும் பல பொருள் உள்ளன. மனோதிடம், சாந்தகுணம் முதலியவற்றைக்கூட
‘தைர்யம்’ குறிக்கும். ‘அரோகதா’ என்றால் ஆரோக்யம். ‘அஜாட்யம்’ - ஜடமாக இல்லாத தன்மை என்று பொருள். புத்தி மந்தித்து, சுருசுருப்பில்லாமல், உற்சாகமில்லாமல் சோம்பேறியாக இருப்பது ஜடத்தன்மை.
அனுமன் அஜாட்யம் என்ற பண்பின் ஊற்றாக உள்ளார். ஊக்கத்தை கொடுப்பார். ‘வாக்-படுத்வம்’-வாக்குதன்மை
#குசேலோபாக்கியானம் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாக குருவாயூரில் கொண்டாடப்படுகிறது. இன்று தான் குசேலர் கிருஷ்ணனை துவாரகையில் சந்தித்த நாள். கிருஷ்ணன் குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாள். பக்தர்கள் இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை வைத்து வணங்குவது வழக்கம்.
குசேலரும் கிருஷ்ணனும் சாந்தீபனி என்ற முனிவரிடம் ஒரே குருகுலத்தில் 64 நாட்கள் ஒன்றாகப் பயின்றனர். பின் வரும் நாட்களில் கிருஷ்ணன் மதுராவின் அரசரானார். குசேலனோ 27 குழந்தைகளோடு வறுமையில் வாடினார். தங்கள் குடும்பத்தின் வறுமை நீங்க என்ன வழி என்று யோசித்த குசேலரின் மனைவிக்கு தன் கணவரின்
பால்ய நண்பரும் துவாரகை மன்னருமான பகவான் கிருஷ்ணரின் நினைவு வந்தது. பகவானை நோக்கி நம்மை வழிப்படுத்துவது குருநாதராக இருப்பார். இங்கே குசேலரின் மனைவி அவரை துவாரகை கண்ணனிடம் அவர் கடவுள் என்று அறியாமலே ஆற்றுப்படுத்தினார். மேலும் கண்ணனுக்குக் கொடுக்க அக்கம்பக்கத்தில் யாசித்துப் பெற்ற