சிங்கார சென்னை சிங்காரமாக இருக்கிறதா?

இந்த 50 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாடு பல குறியீடுகளில் முன்னேறி இருக்கிறது.மாற்று கருத்து இல்லை.ஆனால் எவ்வளவு நாளுக்கு இதே பெருமையை பேச போகிறோம்?

பெரிய மெட்ரோ சிட்டிகளில் ஒன்று சென்னை.அடிப்படை கட்டுமானங்கள் பல சிறப்பாக இருக்கிறது1/n
என சொல்லும் பொழுது கிட்ட தட்ட நாங்க யாரு தெரியும்ல ? என்ற தரத்தில் பழைய சாதனைகளையே பேசி வருகிறோம்.

சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது என்பது தான் நிதர்சமான உண்மை. கடந்த சில ஆண்டுகளில் வேற வேற காரணங்களுக்காக நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கிறது என்பதும் உண்மை தான்..
ஆனால் அது போதுமா? நிச்சயம் இல்லை.
நிதி ஆயோக் 2020'ல் டெல்லி,சென்னை உட்பட சில நகரங்கள் நிலத்தடி நீர் மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக சொன்னது! என்ன செய்துவிட்டோம் அதற்காக?

2021 ஆரம்பத்தில் இருக்கிறோம் இனி தான் கோடை காலத்தை நாம் பார்க்க இருக்கிறோம்.
அப்பெழுது உங்களுக்கு இந்த #Thread நினைவுக்கு வரலாம்.இப்பொழுதே சொல்கிறேன் ,சென்னையில் பல இடங்களில் போர் போட முடியாத சூழ்நிலை தான்! மடிப்பாக்கம், பள்ளிகரணை,துரைப்பாக்கம் என அதில் சில இடங்களில் நீர் உப்பாக ஆனதால் அந்த தண்ணீரை வாய்யில் கூட வைக்க முடியாத சூழ்நிலை
காரணம் அதன் (TDS) Total Dissolved Solids அளவு உச்சத்தை தொடுகிறது..
Industrial Desalination Unit பயன்படுத்தினால் மட்டும் தான் பயன்படுத்தும் தண்ணீராக மாற்ற முடியும் என்ற நிலைமைகக்கு வந்துவிட்டது,அதுவும் அவ்வளவு எளிது இல்லை அதிகமாக செலவு ஆகும்.
சரி இவர்கள் சென்னையில் என்ன செய்கிறார்கள் தண்ணீர்காக?
மெட்ரோ டேங்கர் லாரியை நம்புகிறார்கள்.,இல்லை தனியார் டேங்கர் லாரியை நம்புகிறார்கள்.

டேங்கர் லாரி கோடை காலம் இல்லாமல் மற்ற நேரங்களில் தண்ணீரை எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுகிறது.ஆனால் கோடை காலத்தில்
அந்த தனியார் டேங்கர் லாரிகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் பழைய கல் குவாரிகளில் தேங்கி இருக்கும் நீரை சுத்தம் கூட செய்யாமல் சிலர் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.அவர்களும் தண்ணீர் கிடைக்கிறதே பெரிய பாடாக இருக்கிறதே என சொல்லி வாங்கிடுறாங்க.
இப்படி "கிடைச்சா போதும்,கிடைச்சா போதும்" என்பது எத்தனை ஆண்டுகளுக்கு வண்டியை தள்ளி ஓட்டலாம் என நினைக்குறீங்க?

அடுத்த தலைமுறைக்கு தண்ணீர் வேண்டும் என நினைக்கிறோமா?

இன்னும் சில இடங்களில் தண்ணீர் கிடைக்காம் தெருவில் ரோட்டில் சண்டை போடும் காட்சிகளையும் பார்க்கிறோம்....
ராமநாதபுரம் தண்ணீர் பஞ்சத்துக்கு பெயர் போன ஊராக மாறி போனது நமக்கு தெரியும்! அவர்கள் தண்ணீர் பிடிக்க ஒரு ஸ்பேஷல் வண்டி வச்சி இருக்காங்க தெரியும்ல?? அது போல சென்னை வாசிகளும் ஒரு வண்டி தயார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் இப்பொழுதே நிலத்தடி நீரை நாம் பாதுகாக்க வேண்டும்..
சென்னையில் மெட்ரோ தண்ணீர் பைப் இணைப்பு இன்னும் இனனும் நிறைய இடங்களுக்கு போய் சேரவில்லை ஆனால் அவர்கள் சிட்டி இணைப்பில் வந்துவிட்டார்கள்....

சென்னை சிட்டி பெரிதாக வளர்ந்து கொண்டே போகிறது.....நிலத்தடி நீர்வளம் வளர்கிறதா? இல்லை வளர என்ன செய்து இருக்கிறோம்????
அடுத்ததாக கழிவுநீர் வெளியேற்றம்.....
எனக்கு நல்லா நினைவு இருக்கு.எங்க வீட்டில்"Septic Tank" அமைக்கும் பொழுது அந்த வேலையை செய்து வந்த அந்த அண்ணன் என் அப்பாவை பார்த்து,அங்க நின்று கொண்டு இருந்த என்னை காட்டி இவன் இல்லை,இவனோட பையன் வரை
இந்த "Septic Tank Clean" பண்ண வேண்டிய நிலைமையே வராது என்றார்....ஆனால் இங்க 2,3 வீடுகள் இருக்கும் "Flat" கூட மாதம்,மாதம் ஆனா Septic Tank Clean பண்ணிட்டு இருக்காங்க லாரி வச்சி! ஊரில் பல ஆண்டுகள் ஆனாலும் அதில் யாரும் கையே வைக்க தேவைபடுவதில்லை.
ஏன் இங்கே மாதம்? மாதம் இப்படி ஒரு சூழ்நிலை? நல்ல "Contractor" இல்லையா? "Poor Planning"?

அதைவிடவும் அடுத்ததாக மெட்ரோவில் இருக்கும் "Sewerage System"

கேட்க நல்லா இருக்கிறது இந்த சிஸ்டம்!

சென்னை மாசம் மாசம் வளர்வதில்லை,நாளுக்கு நாள் வளர்கிறது.
புதிய புதிய Apartments,Indiviudal Houses என பல..பல..அதை சமாளிக்க சில நேரங்களில் குறிப்பாக மழை நேரங்களில் தவறி விடுகிறது.

குறிப்பாக உங்கள் வீடு பழைய வீடாக இருந்து அதன் பின்னால் தான் "Sewerage System" கொடுக்கிறார்கள் என வச்சிகிட்டோம் என்றால்
உங்க வீடு பாதாளத்தில் தள்ளப்படும்.காரணம் ரோட்டை உயர்த்துவார்கள் Sewerage System கொடுப்பார்கள். உங்க வீடு பள்ளமாக போய் விடும்மழை நேரத்தில் உங்கள் வீடு தாழ்வாக இருப்பதால் கழிவு நீர் வெளியே போக வேண்டிய இடத்தில் இருந்து கழிவு நீர்,கண்ட கண்டதெல்லாம் வீட்டுக்கு உள்ளே வர தொடங்கிவடும்
இதுக்கு காரணம் அவங்க வச்சி இருக்குற "Low Capacity Pumping Station Capacity" தான் என நினைக்கிறேன்...அவர்கள் வைத்திருக்கும் "Low Capacity Pumping Station Capacity" மழை நேரத்தில் தாக்குபிடிக்காமல் தாழ்வான பகுதியான உங்க வீட்டில் கழிவு நீர் வந்துவிடும்,கீழே இருப்பது போல....
சென்னையின் வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டதன் விளைவே தான் இப்பொழுது சென்னை சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணம்!

இன்னும் நாம் தண்ணீர் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவில்லை எனில்,துபாய் போல கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தான் பெரும்பாலும் நம்பும் இடத்துக்கு போய்விடுவோம்..
துபாய்க்கு வேற வழி இல்லை ஆனால் நமக்கு வழியா இல்லை? செய்ய மனம் தான் இல்லை..

சென்னையை ஐடி காரிடர் என பெருமையாக பேசுகிறோமே அதே ஐடி காரிடரில் போன ஆண்டு தண்ணீர் பிரச்சனையின் காரணமாக 5000 பணியாளர்களை வீட்டில் இருந்து வேலை பாருங்க என சொல்லிவிட்டு நகர்துவிட்டார்கள்.
என்ன இல்லை சென்னையில்? CTS,TCS,Infosys,Wipro,Syntel,சரி தண்ணீர்?

இன்னிக்கு ஆப்பீஸ்'ல் தண்ணீ இல்ல,வீட்டுல இருந்து வேலை பாருங்க என சொன்னவர்கள்.....நாளை உங்க மாநிலத்திலே தண்ணீர் இல்லை என இடத்தை காலி செய்தால் என்ன செய்ய? அவர்கள் தான் "MNC" ஆச்சே!!
இதற்க்கு தீர்வு சொல்லும் அளவுக்கு நான் அறிஞன் அல்ல விஞ்சானி அல்ல.. என் கண் முன்னே தெரிந்த பிரச்சனையை சொன்னேன் அவ்வளவு தான்....

சென்னையை நோக்கி அனைவரையும் வர வைப்பதே இதுக்கான பெரிய பிரச்சனை!
சில மாதங்களுக்கு முன் வந்த வெள்ளத்துக்கு ஆளான "
Telangana" பார்க்கிறேன் UP,Bihar பார்க்கிறேன்...அதற்க்கு தமிழ்நாடு "ஓகே" என தான் நானும் சொல்லி வந்தேன்.
இனி வரும் காலங்களில் அது ஓகே இல்ல பாஸ்!
Pallikaranai Marsh Land :
Lakes in Chennai :

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avudaiappan

Avudaiappan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ImAvudaiappan

13 Jan
#Master விஜய்-நாளைய எம்.ஜி.ஆர்.?? #Thread

நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் ரொம்ப பிடிச்ச ஆளுமை,நடிகர்.அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய Reference"தொட்டு இருப்பார்.

தளபதி விஜய்,எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?எதற்காக எம்.ஜி.ஆர் தேவைபடுகிறார் விஜய்க்கு?

பார்ப்போம்.. Image
அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய"தொட்டு இருப்பார் பிகில் படத்தில் "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே" பாட்டு பாடி கொடுத்த "Reference" முக்கியத்துவம் வாய்ந்தது.

இப்போ வரை விஜய் எப்படி "சுறா" படத்தை பண்ணார்?அதுவும் அவரோட 50வது படமாக என கேள்வி வரலாம்..
அதுக்கான காரணம் அந்த படத்தில் அவருக்கு "மீனவர்" ரோல் அவ்வளவு தான்.

எம்.ஜி.ஆர்'க்கு "மீனவன்" ரோல் நல்ல ஆச்சு!

படகோட்டி,மீனவ நண்பன் படங்கள் எப்படி கை கொடுத்ததோ அப்படி "சுறா" அமையும் என நினைத்தார் விஜய்.ஆனால் அந்த சுறாவே வளையில் மாட்டிவிட்டது.. Image
Read 17 tweets
8 Jan
கடந்த இரண்டு நாட்களாக கீழே இருக்குற மாதிரி தான் வீட்டுக்கு போற வழி எல்லாம் இருந்தது.பெரிய மன உளைச்சல் உண்டானது.
தினமும் காலை ஆபீஸ்க்கு போகும் பொழுதும் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரம்பொழுதும் இதில் நடந்து தான் வீட்டுக்கு போய் வந்தேன்.
1/n
நான் வளர்ந்த விதத்தில் இப்படி சாக்கடையில் நடை பழகியதில்லை. ஒரு இரண்டு நாட்கள் இப்படி இருக்கவே கடுமையான மன உளைச்சல்.இரவில் தூங்கும்பொழுது கூட இதே சாக்டையில் நடப்பது போல உணர்வு.....

இதே வேளையில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்களை நினைத்து பார்க்கிறேன்
.நண்பர்கள் யாரும் திவ்ய பாரதி எடுத்த "கக்கூஸ்" ஆவணப்படத்தை பார்த்தது இல்லை என்றால் நிச்சயம் பாருங்கள்..அந்த வலியில் 1 சதவீதம் தான் இது என்றாலும் அந்த வலியே போதுமானதாக இருந்தது ஒரு சமூக பிரச்சனையை உணர.....
Read 13 tweets
5 Jan
சமீபத்தில் என் மகளுக்கான பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம்.டெக்கரேஷன் எல்லாம் சிறப்பாகவே செய்து முடித்தோம். சின்னதாக பலூன் ஆரச் ஒன்று ரெடி செய்ய சொல்லி இருந்தேன் அதுவும் குறை ஏதும் இல்லை.,நல்லாவே வந்து இருந்ததது!
எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது, 1/n Image
இன்னும் பெரிதாக பலூன் ஆர்ச் பண்ணி இருந்து இருக்கலாம்,கூட ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருந்து இருக்கலாம் என யோசிச்சிசேன்.இன்னும் கூட Grand ஆக இருந்து இருக்கும் என நினைச்சிகிட்டே....

அடுத்த நாள் அந்த டெக்கரேஷனுக்கான கணக்கை அந்த மண்டபத்தில் வைத்து முடித்து கொண்டு இருந்தேன்.
அப்போ அதை வடிவமைத்தவர் "சார் இந்த பலூனை விழாவுக்கு வந்த குழந்தைகளுக்கே கொடுத்து இருக்கலாமே?" என சொன்ன படியே அவரோட இருந்த பசங்களிடம் அதை தூக்கி மண்டபத்துக்கு வெளியே போட சொன்னார்....

வெளியேவும் போட்டனர்... கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே போய் பார்த்தேன்....
Read 9 tweets
26 Nov 20
நேத்து பெய்த கனமழை காரணமாகவும் பாதாள சாக்கடை சரியா Maintain-பண்ணாத காரணத்தினாலும்,ஏரி இருக்கும் இடமாக பார்த்து வீடு கட்டியதாலும் வீட்டிற்க்கு உள்ளே தண்ணீர் வந்துவிட்டது. இதை பற்றி மீடியாவிடம் மக்கள் சொன்னால் அல்லது பதிவு செய்தால் கிட்ட தட்ட Zombies போல பாய்ந்து வந்து 1/n
#Thread
"உன்னை யாரு ஏரிக்கு உள் வீடு கட்ட சொன்னது?" என பெரிய இயற்கை ஆர்வலர் போல காட்டிக்க முயற்சி பண்றாங்க சிலர்.உண்மையிலே ஏரியில் பேராசை கொண்டு வீடு கட்டியவர்களா அவர்கள்?

நிச்சயம் அதிகப்படியான மக்கள் குறைந்த வாடகையில் ஒரு வீடு! குழந்தைகளுக்கு பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் கணக்கு
பண்ணி போற வீடு தான் அது! அது அவங்களோட சொந்த வீடு இல்லை.ஆனா இவங்க ஏதோ அந்த ஏரியை அவங்க 2-Years ah ப்ளான் பண்ணி பித்தாலாட்டம் பண்ணி CMDA Approval வாங்கியவர்கள் போல பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள்!

சென்னையில் பாதி பேருக்கு இருக்கும் ஒரு கனவு "சொந்த வீடு".
Read 16 tweets
14 Oct 20
Must Read :

ஹத்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இறந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விந்து மாதிரிகள் கிடைக்கவில்லை என உபி போலீஸ் கூறியது,அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையாம்.

சரி.அந்த பரிசோதனை எப்பொழுது எடுக்கப்பட்டது? என கேட்டா வன்கொடுமை நடந்து 11 நாள் கழித்து எடுக்கப்பட்டதாம்!🤦‍♂️
நேற்று நீதிமன்றத்தில் பல வழக்கில்,விந்து
மாதிரிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என முடிவுக்கு வர முடியாது என்ற விதி இருப்பது தெரியுமா என மாவட்ட நீதிபதிக்கு கேட்க நல்லா தெரியும் என சொல்லி இருக்கிறார்.அப்படி இருக்க இது பாலியல் வன்கொடுமை இல்லை
என எந்த முகத்தை வைத்து சொன்னார் மாவட்ட நீதிபதி? இன்னும் சம்மந்தப்பட்ட போலீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.அந்த மாவட்ட நீதிபதி இன்னும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டு இருக்கிறது.

ஏன் ஹத்ரா சம்பவத்தை அதிகமாக பேசுறீங்க என பலர்
Read 7 tweets
9 Oct 20
மீடியா TRP பசி :

இன்னைக்கு பலர் மீடியா TRP'க்காக தானே இதெல்லாம் பண்றீங்க? என சொல்றத பார்க்க முடியும்.அந்த TRPல் நடந்த பித்தலாட்டத்தை தான் பார்க்க போகிறோம்..

TRP என்றால் என்ன?

குறிப்பிட்ட அந்த டி.வி சேனலை எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதை வைத்து BARC ஒரு Rating கொடுக்கும்.
இந்த Rating,ஒவ்வரு வியாழக்கிழமையும் BARC வெளியிடும்.அன்னைக்கு தேதிக்கு எல்லா செய்தி ஆசிரியர்களும்,நம்ம சேனல் எந்த இடத்தில் இருக்க போகிறதோ! என டென்சனாக இருப்பாங்க.😐

இந்த TRP வச்சி என்ன பயன்?

TRP லிஸ்டில் எந்த சேனல் Top'ல இருக்கோ,அந்த சேனலுக்கு விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க
லைன்ல நிற்பாங்க!அதுக்கு காரணம் TRP Direct /Indirect ஆக மக்கள் TRP லிஸ்ட்டில் முதலில் இருக்கும் சேனலை தான் அதிகம் பார்க்கிறார்கள் என சொல்கிறது.இப்போ புரிகிறதா?

இங்க விசயம் இருக்கு :

TRP என்பது மக்கள் அதிகம் பார்ப்பதை குறிக்கிறது.சரி அப்போ மீடியா பரப்பரப்பை கொடுக்கிறது என்றால்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!