நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் ரொம்ப பிடிச்ச ஆளுமை,நடிகர்.அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய Reference"தொட்டு இருப்பார்.
தளபதி விஜய்,எம்.ஜி.ஆர் ஆக முடியுமா?எதற்காக எம்.ஜி.ஆர் தேவைபடுகிறார் விஜய்க்கு?
பார்ப்போம்..
அவர் படங்கள் பல இடத்தில் அவரோட " நிறைய"தொட்டு இருப்பார் பிகில் படத்தில் "என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே" பாட்டு பாடி கொடுத்த "Reference" முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போ வரை விஜய் எப்படி "சுறா" படத்தை பண்ணார்?அதுவும் அவரோட 50வது படமாக என கேள்வி வரலாம்..
அதுக்கான காரணம் அந்த படத்தில் அவருக்கு "மீனவர்" ரோல் அவ்வளவு தான்.
எம்.ஜி.ஆர்'க்கு "மீனவன்" ரோல் நல்ல ஆச்சு!
படகோட்டி,மீனவ நண்பன் படங்கள் எப்படி கை கொடுத்ததோ அப்படி "சுறா" அமையும் என நினைத்தார் விஜய்.ஆனால் அந்த சுறாவே வளையில் மாட்டிவிட்டது..
விஜய் எம்.ஜி.ஆர்,விஷயத்திலும் மீனவர்கள் விஷயத்திலும் அவ்வளவு சீரியசா?என கேட்கலாம்..சொல்றேன்.
2011'ல் நாகப்பட்டினத்தில் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஒரு கண்டணம் பொதுகூட்டம் நடைந்துச்சி என்ன காரணம் சொல்லப்பட்டது?
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை அடிப்பதும் கொலை செய்வதை கண்டித்தும்.அதுல விஜய் கலந்துகிட்டு சொன்னதை அப்படியே சொல்றேன்..
"தமிழக மீனவர்களுக்கு ஒரு பிரச்சனைனா நான் வந்து நிற்பேன்"
தமிழக மீனவர்கள் பிரச்சனையை ஏன் தமிழக அரசும் மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது?
"நான் அடிச்சா தாங்க மாட்ட நாளு மாசம் தூங்க மாட்ட மோதி பாரு வீடு போய் சேர மாட்ட..உலக வரைப்படத்தில் இலங்கை என்ற நாடே இல்லாம போய்டும்"
"பக்கத்து வீட்டுகாரனாச்சே எந்த பிரச்சனையும் வேண்டாம் என அமைதியா இருக்கோம்.எங்க பொறுமையை சோதிக்காதிங்க"
தமிழக மீனவர்கள் உங்க மேல விழுகுற ஒவ்வரு அடியையும் என் மேல விழுகுறதா நினைச்சி போராடுவேன்"
அதே விழாவில் விஜய் சொல்வார்,சின்ன வயசில் "மீனவ நண்பன்"பார்த்து இருக்கேன்,அதனாலயோ என்னமோ எனக்கு உங்களை எல்லாம் பிடிக்கும் என அவரே சொல்வார்.
என்ன பா,எம்.ஜி.ஆர் மீனவர் விஷயத்தை அவ்வளவு சீரியசா எடுத்து பேச முக்கியத்துவம் இருக்கா? என கேட்கலாம்.. இருக்கு
இன்னைக்கு வந்த மாஸ்டர் படத்தை எடுத்துக்கங்க.அதிலையும் பல இடங்களில் எம்.ஜி.ஆர் வந்து போவார்..
மாஸ்டர்-வாத்தியார்..
இப்போ புரிஞ்சி இருக்கும் என நினைக்கிறேன்!
படத்தில் எத்தனை இடத்தில் 'வாத்தியார்" வருகிறது.எங்க வருகிறது என பார்த்தால் புரிந்துவிடும்.
For 2K Kids Info-எம்.ஜி.ஆர்-வாத்தியார் என அழைக்கப்படுவார்.
மாஸ் ஹீரோக்கள் மாஸ் சீன்ஸ் கண்டிப்பா வைக்க வேண்டும் என நினைப்பார்கள் ரசிகர்களும் அதை தான் விரும்புவாங்க.ஆனா எம்.ஜி.ஆர் ஏன் வந்து போக வேண்டும்?
காரணம் : Image.
என்ன தான் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக தொடங்கி இருந்தாலும்,
அவருக்கு நடிப்பு பின்புலம் தான் திமுகவில் கரைசே உதவியது..
வடிவேலு ஒரு காமெடியில்,டிவியில் எம்.ஜி.ஆர் சண்டையில் கையில் இருந்த வாளை கீழே போட்டுவிட வடிவேலு பக்கத்தில் இருந்த அருவாளை டி.வியை நோக்கி எறிந்துவிட்டு "பிடிச்சிக்க தலைவா" என்பார்
அது மாதிரி மொரட்டு ரசிகர்கள் அவருக்கு இன்னைக்கு வரைக்கும் இருக்காங்க.
நடிகர் மனோபாலா ஒரு முறை என்னிடம் பேட்டியில் சொன்னார்.தமிழ்நாட்டில் ஒரு மலை கிராமத்தில் அதிமுக கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் பொழுது :
"எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என நினைக்காதிங்க" என சொல்ல "ஏய் என்ன சொல்ற?மாத்தி பேசு என சொல்லி இருக்காங்க.அவங்களுக்கு எம்.ஜி.ஆர் இறந்த விஷயமே தெரியாது.
அவ்வளவு முக்கியமாக இருந்தது எம்.ஜி.ஆர் இமேஜ்.அதனால் தான் ரஜினி கமல் என இருவரும் எம்.ஜி.ஆர் ஆட்சி தருவோம் என்றார்கள்.
நாளை நிச்சயம் விஜய்யும் அரசியலுக்கு வருவார்.அவரும் வந்து நான் எம்.ஜி.ஆர் நீட்சி என சொல்லலாம் அல்லது எம்.ஜி.ஆர் தருவேன் என சொல்வார். ஆட்சி
விஜய் ரசிகனாகவே நான் என் பார்வையை சொல்றேன்,என்னை கேட்டால் ஒருத்தர் நிச்சயமாக இன்னெருவராக இருக்க முடியாது முயற்சி பண்ணிட்டே இருக்கலாம்,அது தொடர் முயற்சியாக தான் இருக்கும்,99% கூட அவரை போல சாத்தியப்படுத்திவிடலாம் ஆனால் 100 % வாய்ப்பில்லை ராஜா தான்.....
ஆனால்,சுயநலமாக ஒருவரின் Image பயன்படுத்தும் எண்ணம் விஜய்க்கு நிச்சயம் இல்லை.ஆனாலும் எம்.ஜி.ஆர் தாக்கம் இன்னமும் விஜய்க்கு உள் வந்து போகும் மாயம்தான் மேஜிக்காக இருக்கிறது.
இந்த 50 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழ்நாடு பல குறியீடுகளில் முன்னேறி இருக்கிறது.மாற்று கருத்து இல்லை.ஆனால் எவ்வளவு நாளுக்கு இதே பெருமையை பேச போகிறோம்?
பெரிய மெட்ரோ சிட்டிகளில் ஒன்று சென்னை.அடிப்படை கட்டுமானங்கள் பல சிறப்பாக இருக்கிறது1/n
என சொல்லும் பொழுது கிட்ட தட்ட நாங்க யாரு தெரியும்ல ? என்ற தரத்தில் பழைய சாதனைகளையே பேசி வருகிறோம்.
சென்னையில் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போகிறது என்பது தான் நிதர்சமான உண்மை. கடந்த சில ஆண்டுகளில் வேற வேற காரணங்களுக்காக நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கிறது என்பதும் உண்மை தான்..
ஆனால் அது போதுமா? நிச்சயம் இல்லை.
நிதி ஆயோக் 2020'ல் டெல்லி,சென்னை உட்பட சில நகரங்கள் நிலத்தடி நீர் மொத்தமாக இல்லாமல் போக வாய்ப்பு இருப்பதாக சொன்னது! என்ன செய்துவிட்டோம் அதற்காக?
2021 ஆரம்பத்தில் இருக்கிறோம் இனி தான் கோடை காலத்தை நாம் பார்க்க இருக்கிறோம்.
கடந்த இரண்டு நாட்களாக கீழே இருக்குற மாதிரி தான் வீட்டுக்கு போற வழி எல்லாம் இருந்தது.பெரிய மன உளைச்சல் உண்டானது.
தினமும் காலை ஆபீஸ்க்கு போகும் பொழுதும் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரம்பொழுதும் இதில் நடந்து தான் வீட்டுக்கு போய் வந்தேன். 1/n
நான் வளர்ந்த விதத்தில் இப்படி சாக்கடையில் நடை பழகியதில்லை. ஒரு இரண்டு நாட்கள் இப்படி இருக்கவே கடுமையான மன உளைச்சல்.இரவில் தூங்கும்பொழுது கூட இதே சாக்டையில் நடப்பது போல உணர்வு.....
இதே வேளையில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்களை நினைத்து பார்க்கிறேன்
.நண்பர்கள் யாரும் திவ்ய பாரதி எடுத்த "கக்கூஸ்" ஆவணப்படத்தை பார்த்தது இல்லை என்றால் நிச்சயம் பாருங்கள்..அந்த வலியில் 1 சதவீதம் தான் இது என்றாலும் அந்த வலியே போதுமானதாக இருந்தது ஒரு சமூக பிரச்சனையை உணர.....
சமீபத்தில் என் மகளுக்கான பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம்.டெக்கரேஷன் எல்லாம் சிறப்பாகவே செய்து முடித்தோம். சின்னதாக பலூன் ஆரச் ஒன்று ரெடி செய்ய சொல்லி இருந்தேன் அதுவும் குறை ஏதும் இல்லை.,நல்லாவே வந்து இருந்ததது!
எடுத்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது, 1/n
இன்னும் பெரிதாக பலூன் ஆர்ச் பண்ணி இருந்து இருக்கலாம்,கூட ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி இருந்து இருக்கலாம் என யோசிச்சிசேன்.இன்னும் கூட Grand ஆக இருந்து இருக்கும் என நினைச்சிகிட்டே....
அடுத்த நாள் அந்த டெக்கரேஷனுக்கான கணக்கை அந்த மண்டபத்தில் வைத்து முடித்து கொண்டு இருந்தேன்.
அப்போ அதை வடிவமைத்தவர் "சார் இந்த பலூனை விழாவுக்கு வந்த குழந்தைகளுக்கே கொடுத்து இருக்கலாமே?" என சொன்ன படியே அவரோட இருந்த பசங்களிடம் அதை தூக்கி மண்டபத்துக்கு வெளியே போட சொன்னார்....
வெளியேவும் போட்டனர்... கொஞ்ச நேரம் கழிச்சி வெளியே போய் பார்த்தேன்....
நேத்து பெய்த கனமழை காரணமாகவும் பாதாள சாக்கடை சரியா Maintain-பண்ணாத காரணத்தினாலும்,ஏரி இருக்கும் இடமாக பார்த்து வீடு கட்டியதாலும் வீட்டிற்க்கு உள்ளே தண்ணீர் வந்துவிட்டது. இதை பற்றி மீடியாவிடம் மக்கள் சொன்னால் அல்லது பதிவு செய்தால் கிட்ட தட்ட Zombies போல பாய்ந்து வந்து 1/n #Thread
"உன்னை யாரு ஏரிக்கு உள் வீடு கட்ட சொன்னது?" என பெரிய இயற்கை ஆர்வலர் போல காட்டிக்க முயற்சி பண்றாங்க சிலர்.உண்மையிலே ஏரியில் பேராசை கொண்டு வீடு கட்டியவர்களா அவர்கள்?
நிச்சயம் அதிகப்படியான மக்கள் குறைந்த வாடகையில் ஒரு வீடு! குழந்தைகளுக்கு பக்கத்தில் ஸ்கூல் இதெல்லாம் கணக்கு
பண்ணி போற வீடு தான் அது! அது அவங்களோட சொந்த வீடு இல்லை.ஆனா இவங்க ஏதோ அந்த ஏரியை அவங்க 2-Years ah ப்ளான் பண்ணி பித்தாலாட்டம் பண்ணி CMDA Approval வாங்கியவர்கள் போல பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள்!
சென்னையில் பாதி பேருக்கு இருக்கும் ஒரு கனவு "சொந்த வீடு".
ஹத்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இறந்த பெண்ணின் பிறப்புறுப்பில் விந்து மாதிரிகள் கிடைக்கவில்லை என உபி போலீஸ் கூறியது,அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லையாம்.
சரி.அந்த பரிசோதனை எப்பொழுது எடுக்கப்பட்டது? என கேட்டா வன்கொடுமை நடந்து 11 நாள் கழித்து எடுக்கப்பட்டதாம்!🤦♂️
நேற்று நீதிமன்றத்தில் பல வழக்கில்,விந்து
மாதிரிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என முடிவுக்கு வர முடியாது என்ற விதி இருப்பது தெரியுமா என மாவட்ட நீதிபதிக்கு கேட்க நல்லா தெரியும் என சொல்லி இருக்கிறார்.அப்படி இருக்க இது பாலியல் வன்கொடுமை இல்லை
என எந்த முகத்தை வைத்து சொன்னார் மாவட்ட நீதிபதி? இன்னும் சம்மந்தப்பட்ட போலீஸ் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.அந்த மாவட்ட நீதிபதி இன்னும் பணி இடை நீக்கம் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் நேற்று குறிப்பிட்டு இருக்கிறது.
இன்னைக்கு பலர் மீடியா TRP'க்காக தானே இதெல்லாம் பண்றீங்க? என சொல்றத பார்க்க முடியும்.அந்த TRPல் நடந்த பித்தலாட்டத்தை தான் பார்க்க போகிறோம்..
TRP என்றால் என்ன?
குறிப்பிட்ட அந்த டி.வி சேனலை எவ்வளவு மக்கள் பார்க்கிறார்கள் என்பதை வைத்து BARC ஒரு Rating கொடுக்கும்.
இந்த Rating,ஒவ்வரு வியாழக்கிழமையும் BARC வெளியிடும்.அன்னைக்கு தேதிக்கு எல்லா செய்தி ஆசிரியர்களும்,நம்ம சேனல் எந்த இடத்தில் இருக்க போகிறதோ! என டென்சனாக இருப்பாங்க.😐
இந்த TRP வச்சி என்ன பயன்?
TRP லிஸ்டில் எந்த சேனல் Top'ல இருக்கோ,அந்த சேனலுக்கு விளம்பரதாரர் விளம்பரம் கொடுக்க
லைன்ல நிற்பாங்க!அதுக்கு காரணம் TRP Direct /Indirect ஆக மக்கள் TRP லிஸ்ட்டில் முதலில் இருக்கும் சேனலை தான் அதிகம் பார்க்கிறார்கள் என சொல்கிறது.இப்போ புரிகிறதா?
இங்க விசயம் இருக்கு :
TRP என்பது மக்கள் அதிகம் பார்ப்பதை குறிக்கிறது.சரி அப்போ மீடியா பரப்பரப்பை கொடுக்கிறது என்றால்