#Pongal #MakaraSankaranthi #பொங்கல் #அர்த்தமுள்ளஇந்துமதம்
இன்று தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் மகரசங்கராந்தி என்று பாரதம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது! இது அறுவடை திருநாளாகும்! விவசாயத்திற்கு உதவியாக உள்ள ஏர், சூரியன், பசு காளைகளுக்கு நன்றி கூறும் விழா! சுருக்கமாக
முல்லை நில மக்களது விழாவாகும்! முல்லை நிலத் தெய்வம் கிருஷ்ணர் கையில் ஏரை உடைய அவரது அண்ணன் விவசாய தெய்வம் பலராமர். எனவே இது கிருஷ்ணர் பலராமன் விழாவாகும்! பொங்கலுக்கு முதல்நாள் போகி -பலராமனை 'புஜங்கம புரஸ்ஸர போகி' எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய
மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது எனவே போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே! போகி இந்திர விழாவா? இல்லை. போகி பலராமன் விழாவே! இந்திரவிழா சித்திரை மாதம் நடந்தது என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது! பூம்புகாரில் இந்திர விழாவின்போது
"சித்திரைச்
சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து மூதிற் பெண்டிர் வழிபட்டனர்"
இரண்டாம் நாள் பொங்கல் திருநாள் என்பது திருமாலை 'சூர்யநாராயணராக' கருதி வழிபடும் நாளாகும்! மூன்றாம் நாள் மாட்டுப்
பொங்கல் -தொல்காப்பியம் காட்டும் முதல் தெய்வம் மாயோன் கிருஷ்ணன் தான் முல்லை நிலத் தெய்வமாவார். கண்ணன் நப்பின்னை எனும் தன் ஆயர்குல மாமன் மகளை ஏழு காளைகளை அடக்கியே மணந்தான் இச்செய்தியை நம்மாழ்வார் தன் பெரிய திருவந்தாதியில் 'மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே’ என்று குறிப்பிடுகிறார்.
இதனால் தான் கண்ணனுக்குரிய விழாவான பொங்கல் மறுநாள் கண்ணனைப் போல் ஏறுதழுவுதல் விளையாடுகிறோம்! பொங்கல் பண்டிகை தோன்றியது எப்படி?கோகுலத்தில் ஆயர்கள் மழைக் கடவுளான இந்திரனுக்குப் பயந்து பயந்து விழா எடுத்தனர்! விழா எடுக்காவிட்டால் இந்திரன் கோபத்துக்கு ஆளவோம் என்ற அச்ச உணர்வைத் தமிழ்
இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன. இதனால் கண்ணன் இந்திர பூஜையை நிறுத்தி ஆயர்களை கோவர்தன மலையை வணங்கச் சொல்லி தானே மலையாக மாறி ஆயர்தம் வழிபாட்டை ஏற்றார். இதனால் கோபமுற்ற இந்திரன் பெருமழை பொழிந்தான் கண்ணன் கோவர்தனகிரியைக் குடையாகப் பிடித்து ஆயரையும் ஆநிரையையும் காத்தார். இந்திரன் தன்
தவறுணர்ந்து கிருஷ்ணரிடம் சரணடைந்தான்! கிருஷ்ணர் இந்திரனுக்குப் பொங்கலுக்கு முன்விழா எடுக்க அனுமதி தந்தார்! இந்நிகழ்வே மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகை தோன்றக் காரணமானது!
✓ பொங்கல் முதல் நாள் போகி எனும் கையில் ஏர் கலப்பை உடைய விவசாய தெய்வமான பலராமனுக்குரிய விழா!
✓ இரண்டாம் நாள்
முல்லை நிலத் தெய்வமான திருமால் (கிருஷ்ணருக்கு) உரிய பொங்கல்!
பின் குறிப்பு - பொங்கல் என்ற சொல்லைக் குறிப்படும் முதல் கல்வெட்டு எது?
கங்கைகொண்ட இராஜேந்திர சோழனின் காளகஸ்தி கல்வெட்டில் “மகர சங்கரமணப் பெரும் பொங்கல்” என்ற குறிப்பு உள்ளது.
இலக்கிய மரபு
சங்க இலக்கியங்கள் தமிழகத்தின்
பண்டை வரலாற்றை உணர்த்தும் கருத்துப் பேழை. ஏறத்தாழ 3000 ஆண்டுகள் தொன்மை மிக்க தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியம்" சங்ககால இலக்கண நூலாகும். தூய ஆன்மிக நெறியோடும், பக்தி உணர்வோடும் கடவுள் வழிபாட்டு வழியை, நாட்டின் நிலப்பகுப்போடு இணைத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியரையே சாரும்.
மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்பது தொல்காப்பியம். தொல்காப்பியர் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில்
கூறி அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார். இந்த நூற்பாவின் படி,
காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தின் கடவுளாக மாயோனாகிய திருமாலும்
மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சேயோனாகிய முருகப்பெருமானும் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தின் கடவுளாக வேந்தன்
இந்திரனும், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தின் கடவுளாக வருண பகவானும் குறிக்கப்பட்டுள்ளனர். மனிதனை தெய்வமாக மாற்றும் சிறப்புடைய சங்க இலக்கியங்களைக் கற்போம்; வாழ்வில் வளம் சேர்ப்போம். பிற மதத்தவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல் என்கிற பொய்யை உடைப்போம். பொங்கல் ஓர் இந்து பண்டிகையே!
இந்த பதிவு வாட்சப்பில் பெறப்பட்டது. இங்கு பகிர்ந்துள்ளேன்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

13 Jan
கோவை திமுக ஹோட்டல் நடத்துநரின் வாட்ஸ் ஆப் பதிவின் சுருக்கம். #திருட்டு_திமுக

சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம் மலிவு விலை சமூக உணவகத்தை ஆரம்பித்து மற்ற ஹோட்டல்கள் உணவை விட தரமான உணவை அவர்கள் விற்கும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு கொடுக்க ஆரம்பித்தவுடன் பல ஹோட்டல்கள் அதனால்
பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இவரும் அவரை சந்தித்து இது எப்படி முடிகிறது என்று கேட்டபோது அவர் சொன்னது, பெரிய முதலீடு செய்து ஆடம்பரமாக கடையை கட்டவில்லை, குறைந்த முதலீடு அதிக வியாபாரம், இரண்டாவது அனைத்து பொருட்களையும் விவசாயிகளிடமே நேரடியாக வாங்குவதால் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு
கொடுக்கமுடிகிறது என்று கூறியிருக்கிறார்.
சில நாட்களில் அந்த ஏரியா திமுக செயலர் அப்பகுதி அனைத்து ஹோட்டல்காரர்களையும் திரட்டி சுப்பிரமணியம் அவர்களை சந்திக்க அழைத்து சென்று விலையை ஏற்ற வேண்டும் என்று அவர்கள் முன்னிலையில் மிரட்டியிருக்கிறார். அசராத சுப்ரமணியம் இன்னும் விலையை
Read 16 tweets
25 Dec 20
#BhagavadGitaDay வைகுண்ட ஏகாதசி அன்று தான் பகவத் கீதை பிறந்த நாளும் கொண்டாடப் படுகிறது. பகவத் கீதை என்றால் கடவுளின் பாடல்கள். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது மகாபாரதப் போர். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் தொடங்கியபோது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக
நிற்கும் பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்ததால் அவர்களை எதிர்த்து போர் புரிய அவனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று யோசித்தான்
அவன் மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தான். அப்போது அவனுக்குத் தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். அவன் மனக் கிலேசத்தைப் போக்கினார். தர்மத்துக்காக போர் புரியும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். அந்த
Read 9 tweets
24 Dec 20
அன்றைய தினம் பற்றி பஞ்சாங்கம் படிப்பதையும் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இதை தினமும் படிப்பதனாலோ கேட்பதனாலோ என்ன பயன் என்று யோசித்ததுண்டு. #TIL யார் தினமும் பஞ்சாங்கம் படிக்கின்றனரோ அல்லது கேட்டறிய ஆசைக்கொண்டு கேட்டு அறிகின்றனரோ அவர்களுக்கு அக்னிஷ்டோம யாகம் செய்தபலன் மற்றும்
தினமும் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும். தானே பஞ்சாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது உரியவர்கள் மூலமாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
திதியை அறிவதனால் ஐஶ்வர்யங்கள் கிடைக்கும், கிழமையை அறிவதனால் ஆயுசு அதிகரிக்கும், நட்சத்திரத்தை அறிவதனால் பாவம் விலகும், யோகத்தை அறிவதனால்
நோய் நீங்கும், கரணத்தை அறிவதனால் செயல்கள் வெற்றிபெறும். பஞ்சாங்கத்தை தினமும் படிப்பதனால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. #பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அவை
1.வாரம் 2.நட்சத்திரம்
Read 5 tweets
23 Dec 20
நம் வீடுகளில் எல்லா சுப காரியங்கள் நடக்கும்போதும் ஆலயங்களிலும் கேட்கும் ஒரு சின்ன சில நிமிஷ ஸமஸ்க்ரித மந்திரம் இது. செவிக்கினிமையான ''மந்த்ர புஷ்பம்''. அதன் பொருளை புரிந்து கொண்டால் அதன் அருமை புரியும். விரும்பி மனப்பாடம் செய்ய தோன்றும். வேதத்தில்
தைத்ரீய அரண்யகம் என்ற பகுதியில் வருகிறது. நீரின்றி அமையாது உலகம். எனவே எங்கும் நீர் வளம் பெருக, வேண்டும் மந்திரம் இது. நீர் ஒன்றே சுபிக்ஷத்தின் அறிகுறி.

யோ பாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
சம்த்ரமா வா அபாம் புஷ்பம் |
புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி |
ய ஏவம் வேத’ | யோஉபாமயத'னம்
வேத'| ஆய்தனவான் பவதி |
நீர் என்பதே ஒரு புஷ்பம். ஜலபுஷ்பம். இதை புரிந்து கொண்டவனிடம் புஷ்பங்கள் சேருகின்றன. பூக்களாகிய குழந்தைகள்,ஆநிரை , ஆடு முதலிய செல்வங்கள் சேருகின்றன. சந்திரன் என்னும் நிலவு நீரின் குளுமையில் பூவாகிறது. நீரின் ஆதாரம் புரிந்தவன்
Read 10 tweets
22 Dec 20
#நீலகண்டதீக்ஷிதர் இவர் ஒரு மகாவித்வான்! பதினெட்டு வயதுக்குள் எல்லா வேத சாஸ்திரங்களையும் படித்து அனைத்து சில்ப சாஸ்திரங்களையும் பயின்று பெரிய மேதையாக விளங்கினார்! அதனால் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மகாராஜா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருக்கு மந்திரியாக இருந்தார். நீலகண்டதீக்ஷிதர்
மந்திரியாக அபாரமான செயல்களை செய்துள்ளார். இன்றும் நாயக்கர்கள் செய்த சேவை நம் தேசத்துக்கும் நம் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கிறது. ஒரு முறை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தன்னுடைய சிலையும், தன்னுடைய மனைவிமார்கள் சிலையையும் வவைக்க ஆசைப்பட்டார் அரசர். நீலகண்டதீக்ஷிதர் அந்தச்
சிலைகளைச் செய்ய பொறுப்பேற்றுக் கொண்டார். ராணியின் சிலை செய்பவன் சிலையை வடிக்கும்பொழுது முட்டிக்குமேல் ஒரு இடத்தில் சில்லு தட்டிவிடுகிறது. அதை இவரிடம் சிற்பி சொன்னபொழுது நீலகண்டதீக்ஷிதர் ஒரு நொடி யோசித்துப் பார்த்துவிட்டு அந்த இடத்தில் ராணிக்கு ஒரு மச்சம் இருக்கும் என்று அவர்
Read 12 tweets
21 Dec 20
முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ₹10 கோடியை குருவாயூர் கோவிலுக்கு திருப்பித் தரவேண்டும் என்று பினராயி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. #இந்துகோவில்நிதிஅரசுநிதிஅல்ல குருவாயூர் கிருஷ்ணன் கோவில் அசையும் அசையா சொத்துகளுக்கு சொந்தக்காரர் குருவாயூரப்பன் மட்டுமே.
தேசஸ்வம் போர்ட் அறங்காவலர் அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே உள்ளவர். பக்தர்களின் தேவைகளை-குடிநீர், தங்குமிடம், மருத்துவ வசதிகளை செய்யவும் கோவிலின் கலாச்சாரம் பரவவும், இந்து மதத்தைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யவும், சமஸ்கிருதம் மலையாள மொழிகளின் வளர்ச்சிக்கும் பாடு
படவும் கோவில் நிதியை அறங்காவலர் பயன்படுத்த முடியும். இதர இந்து கோவில்களுக்கு நன்கொடை வழங்கலாம். இவை தான் தேவசம் போர்டின் பணிகளாக இருக்கவேண்டும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். மதச்சார்பற்ற அரசு இந்து கோவில் நிதியை மட்டும் தன்னிச்சையாக எடுத்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!