Sriram V Profile picture
23 Jan, 14 tweets, 3 min read
#சமஸ்கிருதம்
#தமிழ்
#செம்மொழி

சமூக வலைத்தளங்களில் சிலர், "சமஸ்கிருதம் செத்த மொழி" என்று சர்வசாதாரணமாகப் பேசிச் செல்கின்றனரே. சற்றுச் சிந்திப்போம்.

முதலில், சமஸ்கிருதம் பற்றிய ஒரு சிறு இழை👇1/
அடுத்து, ஒரு சிலர், "சமஸ்கிருதமே தமிழில் இருந்து தோன்றியது தான்" என்று ஒரு கதை விடுவர்.

சரி - அப்படியானால், அமிழ்தினும் இனிய
தமிழில் இருந்து தோன்றிய ஒன்று - சாகாவரம் பெற்றிருக்க வேண்டுமே?!

இவர்கள் சமஸ்கிருதம் மீதிருக்கும் வெறுப்பில் தமிழை அல்லவா பழிக்கின்றனர்! 2/
தமிழின் சிறப்பு "ழ" சமஸ்கிருதத்தில் இல்லை.

அது போலவே,
க(கங்கை)
ஜ(ஜம்பு)
ஸ(ஸேவை)

போன்ற ஒலிக்குறிப்புகள் தமிழில் இல்லை. இடத்தைப் பொறுத்து இந்த ஒலிகளைப் பயன்படுத்துகிறோம்.

ஒன்றில் உள்ளது மற்றதில் இல்லை.

ஒன்றை உயர்த்தியும் மற்றொன்றைத் தாழ்த்தியும் பேசுவது அறிவுடைமை ஆகுமா? 3/
சரி, இப்படிப் பேசுபவர்கள் யார்? சந்திப் பிழைகளுடன் தமிழை எழுதுபவர்கள்.

அதாவது, தமிழின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாத இவர்கள் இன்னொரு மொழியை அறிந்தது எங்ஙனம்?

மொழி ஆராய்ச்சி வல்லுநர் ஆனது எப்படி?

ஒருதலைப்பட்சமாக யாரோ எழுதுவதைப் படித்து, அதை மட்டுமே உண்மை என்று நம்புவதால் 4/
திருக்குறளுக்கு வெறும் உதட்டளவில் மரியாதை தரும் இவர்கள், வள்ளுவர் சொன்ன

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"

"எப்பொரு(ள்) எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"

என்பதை நடைமுறைப்படுத்துவதே இல்லை. 5/
சரி, வள்ளுவர் சொன்ன "ஆதிபகவன்" என்பதே சமஸ்கிருதச் சொற்றொடர் தானே!!

இதைச் சொன்னால், இவர்கள் பதில்:

1) அது தமிழ்ச்சொல் (!) [எப்படி?]

2) ஆதிபகவன் சமணக் கடவுள் (!!) [அது சமஸ்கிருதமா என்ற கேள்விக்குப் பொருத்தமில்லாத விடை]

3) அக்குறள் இடைச்செருகல் (!!) [அப்படிப் போடு, ஒரே போடு] 6/
இன்னொரு குற்றச்சாட்டு:

"வர்ணாசிரமம் பற்றிய நூல்கள் அந்த மொழியில் உள்ளன. அது பிராமணர்கள் மொழி."

இவர்கள், "சமஸ்கிருதம் பாரதத்தின் தேசிய மொழியாகலாம்" என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதை அறிவார்களா??

வர்ணாசிரமம் வேறு, சாதி வேறு. அந்த வாதம் இங்கு வேண்டாம். 7/
ஆனால்,
மொழியை அறிந்தால் தானே அதில் உண்மையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியும்?

சரி, ஒரு வாதத்துக்காக: அருவருக்கத்தக்க ஆபாசமான நூல்கள் சில, தமிழில் வருவதால் தமிழையே நாம் வெறுத்துவிடுவோமா?

இது, throwing the baby out with the bathwater அல்லவா! 8/
சில "தமிழ் மட்டுமே" ஆன்மீகவாதிகளுக்காக:

நமது சைவத் திருமுறைகளில் சமஸ்கிருதமும் சிறப்பிக்கப்படுகிறதே.

திருநாவுக்கரசர் தேவாரம்:
"வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்"

திருஞானசம்பந்தர் தேவாரம்:
"தமிழ்ச் சொலும் வடசொலும் தாள்நிழற் சேர" 9/
இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமெனில், இந்த இழை காண்க 10/
உண்மை நிலை இப்படியிருக்க, சமஸ்கிருதத்தைப் பழித்து "தமிழ் தெய்வம் வேறு" என்று பேசுபவர்கள், உண்மையிலேயே துளியும் தமிழ் ஆன்மிகப் பரிச்சயம் இல்லாதவர்கள். 11/
உலகில் பேசப்பட்டு வந்த பெருவாரியான மொழிகள் அழிந்துவிட்டன என்று அறிஞர்கள் சொல்கின்றனர்.

மொழியோடு, ஒரு கலாசாரமும் வாழ்வியலும் அழிந்துவிடுகின்றது.

எந்த மொழி இறந்தாலும் உண்மையான இழப்பு மானுடத்திற்கே. 12/
39 வயதே வாழ்ந்த பாரதியார் 16 மொழிகள் கற்றவர். அவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து) எங்கும் காணோம்" என்று, உண்மையைப் பறைசாற்றியவர்.

வேறு மொழியே தெரியாமல் அதை விமர்சிப்பதற்கும் vs பலப்பல மொழிகள் அறிந்து, தமிழின் சிறப்பை **உணர்வதற்கும்** பெரிய வேறுபாடு உண்டு. 13/
அது, வெறும் அறியாமையில் எழுந்த வெறுப்பு.

இது, அனுபவ அறிவால் உணர்ந்த இனிமை.

அறிவுபூர்வமாக வாதம் செய்ய இன்றியமையாதது - பேசப்படும் பொருள் பற்றிய சுய அறிவு. இதை மனதில் கொண்டு வாதிட வருவது தான் ஒரு அறிஞருக்கு அழகு. 14/14

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sriram V

Sriram V Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @_VSriram

9 Jan
#தமிழ்க்கடவுள்
#விநாயகர்
#பிள்ளையார்

"முருகன் தமிழ்க் கடவுள், ஆனால் பிள்ளையார் வடநாட்டுத் திணிப்பு" என்ற அறிவிலிப் பிரச்சாரம் செய்யும் திராவிட மற்றும் போலித் தமிழ் இயக்கங்களுக்கு,

பிள்ளையார் பெருமான் தமிழ்க் கடவுளே. ஆதாரங்களைப் பார்க்கலாமா?
@thirumaofficial
@SeemanOfficial +
"கைத்தல நிறைகனி" திருப்புகழ் பாடல் என்ன சொல்கிறது?

"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே"

அதாவது,
முத்தமிழின் பெருமையை மூத்த மலையாகிய மேருவில் முதலில் எழுதினாராம் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான்!

எப்படி! தென்பொதிகைத் தமிழ் வடமேருவில், விநாயகரால்+
எழுதப்பெற்றது. இது எப்படி இருக்கு!

சரி, திருப்புகழ் ஆதாரம் பார்த்தோம். அடுத்து, தேவார ஆதாரங்கள்.

திருநாவுக்கரசர் தேவாரம்:
"சுண்ணவெண் சந்தனச் சாந்தும்" பாடலில்,

"பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்.." என்று வருகிறதே! +
Read 33 tweets
27 Oct 20
மநுதர்ம சாஸ்திரம் பற்றியும் பெண் அடிமைத்தனம் பற்றியும் வாய்கிழியப் பேசும் திராவிட/தனித்தமிழ்நாடு டுமீல் இயக்கங்களின் யோக்கியதையைச் சற்றுச் சிந்திப்போம்.
1/
ஈவெரா, தன் மனைவி நாகம்மையார் கோவிலுக்குச் செல்வதைத் தடுப்பது எப்படி என்று பகுத்தறிவு கொண்டு சிந்தித்துச் சில குண்டர்களை அழைத்தான். "நம் ஊருக்கு ஒரு புது தேவரடியாள் வந்திருக்கிறாள்" என்று தன் மனைவியை அவர்களிடம் கைகாட்டினான். அவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த அம்மையாரைக்
2/
கடுமையாகக் கிண்டல் செய்தனர். அம்மையார் கூனிக்குறுகி ஓடிவிட்டார்.

ஈவெரா பெண்களை மதித்த லட்சணம் இதுதான்.

அவன் கண்ணகியைத் "தேவிடியா" என்று ஏசியவன்.

அதாவது, இவர்களே கண்ணகியைப் பழிப்பர்; இவர்களே "பூம்புகார்" படம் எடுப்பர்; 'சிலம்பொலி' என்று அடைமொழியும் போட்டுக்கொள்வர்.
3/
Read 20 tweets
17 Mar 20
நமது பாராளுமன்ற மாநிலங்களவைக்கு முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரஞ்ஜன் கோகோய் (ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களால்) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த சர்ச்சை சரியானதா?+
முதலில், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முறைகளைப் பார்ப்போம்.

மாநிலங்களவையின் மொத்த இடங்கள்: 245

இதில், மாநில, யூனியன் பிரதேச சட்டமன்றங்கள் தேர்ந்தெடுத்து அனுப்புவது: 233

ஜனாதிபதி நியமிப்பது: 12
+
சரி, ஜனாதிபதி நியமன உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்?

கலை, இலக்கியம், சமூக சேவை, நிர்வாகம், விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம், சட்டம் - இவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்கள், பெரும் அனுபவம் பெற்றவர்கள் ஆகியோர். +
Read 9 tweets
10 Feb 20
#செவ்வேள்
#தமிழ்க்கடவுள்
#முருகன்

"முருகப்பெருமான் ஆரிய ஆகமங்களுக்கு உட்படாத அழகு; தமிழர்களின் முருகன் கருப்பு நிறம்" என்றெல்லாம் சிலர் பிதற்றுகிறார்களே;

உண்மையில், சமஸ்கிருத, தமிழ் இலக்கியங்களில் முருகப்பெருமானின் நிறம் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது எது?+
முருகன் "செவ்வேள்" என்று தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகிறார்.

செவ்வேள் = செம்மை நிறம் பொருந்தியவர்!

சங்க இலக்கியமான பரிபாடல்,

"மூவிரு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள், ஞாயிற்று ஏர் நிறத் தகை.. செவ்வேள்"

என்று பாடுகிறது

அதாவது,உதிக்கின்ற செங்கதிர் நிறம் கொண்ட செவ்வேள்!+
கந்தபுராணம் சொல்வது:
"செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க"

அவனது கையும் சிவந்த நிறம் என்னும் திருப்புகழ்:
"செங்கை வேல் வென்றிவேல்"

அவனது பாதம் சிவப்பு என்னும் திருப்புகழ்:
"கோல ப்ரவாள பாதத்தில்" (அதாவது, முருகனின் சிவந்த பாதத்தில்)+
Read 8 tweets
31 Jan 20
திருஞானசம்பந்தர் பெருமான் திருக்கல்லூர்ப்பெருமணம் திருக்கோவிலில், தம் திருமண நாளன்று, இறைவனின் ஜோதியில் கலந்தார்.

இதைக் கொச்சைப்படுத்தும் விதமாக "அவரைத் தமிழ் எதிரிகள் எரித்துக் கொன்றனர்" என்று வாதிடுவது எவ்வளவு மூடத்தனம் என்று பார்ப்போம்.+
பாண்டிய அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இருவரின் வேண்டுகோளை ஏற்றுப் பாண்டிய மண்ணில் சைவம் தழைக்க மதுரை வந்து சேர்ந்தார் சம்பந்தர்.

மதுரை சைவ மடத்தில், தம் பரிவாரத்துடன் தங்கியிருந்தார்.

அவரை அழிக்கச் சமணர்கள் மடத்திற்குத் தீ வைத்தனர்.+
இதற்கு, சமணராக மாறியிருந்த மன்னன் கூன் பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் உடந்தை.

உடனே சம்பந்தர், "பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பதிகம் பாடினார்.

இதுவே பாண்டிய மன்னன் உடம்பை நோயாகப் பற்றியது. +
Read 8 tweets
31 Jan 20
"தேவார மூவர் முதலிகள் , பிராமணர்களின் வேள்வி முறைகளை ஏற்கவில்லை" என்ற கூற்று மிக மிகப் பொய்யானது.

1) வேதத்தையும் வேள்விகளையும் சிறப்பித்தனர்
2) வேத நிந்தனை செய்தோரைக் கண்டித்தனர்.

சில எடுத்துக்காட்டுகள்.+
திருஞானசம்பந்தர் பெருமான், தான் கௌடின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவன் (கவுணியன்) என்று பலப்பல தேவாரப் பாடல்களில் உரைக்கிறார்.

வேள்விகள் பற்றிய சம்பந்தர் பிரான் பாடற்குறிப்புகளில் சிலக் கற்கண்டுச் சிதறல்கள்:

"வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை"+
"வைதிகத்தின் வழியொழுகாத அக் கைத்தவமுடைக் காரமண் தேரர்" (வைதிகத்தின் படி ஒழுகாத புத்தமத்தினரைக் கடிதல்)

"வேட்டு வேள்வி செயும் பொருளை விளிமூட்டு சிந்தை முருட்ட மண் குண்டர்"

"அழல் அது ஓம்பும் அருமறையோர் திறம் விழல் அது என்னும் அருகர்" (அழல் = அக்னி)

"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்"+
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!