காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகக்குலத்தை சேர்த்த செல்வந்தன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.தம்பதிகள் அறிவிலும் அறத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர்.காலப்போக்கில் வணிகன் ஒரு பெண் குழந்தையைப் பெற்றான். அக்குழந்தை சீராட்டி வளர்க்கப்பட்டு,உரிய காலத்தில் மணப்பருவத்தை அடைந்தது.
வணிகன் மதுரையில் வாழ்ந்து வந்த,ஏற்கனவே திருமணமான தன் மருமகனுக்கே பெண்ணை கொடுக்கப் போவதாக உறவினர்களிடம் கூறிக்கொண்டிருந்தான்.சில நாட்கள் சென்றதும் வணிகனும், அவனது மனைவியும் இறந்துவிட்டனர்.இறந்தவருக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்த சுற்றத்தார்,
மதுரையில் உள்ள மருமகனுக்கு அச்செய்தியை ஓலை மூலம் தெரிவித்தனர்.அவ்வோலையில், “உன் மாமனும்,மாமியும் இறந்து விட்டனர்.உன் மாமனுக்கு நிறைய சொத்தும் ஒரு பெண்ணும் உண்டு.ஆதலால் நீ வந்து உன் மாமன் பெண்ணைத் திருமணம் செய்து செல்வாயாக"என்று எழுதியிருந்தனர்.
மாமனும்,மாமியும் இறந்ததைக் கேட்டு மனம் வருந்திய மருமகன், தன் உறவினருடன் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள தன் மாமன் வீட்டுக்கு வந்தான்.சில நாட்கள் சென்றதும்,"மாமன் பெண்ணை அழைத்துச்சென்று,மதுரையில் உள்ள சுற்றத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லி,
மாமன் தேடிய செல்வங்களையும்,மற்றவற்றையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.தன்னுடன் வந்த சுற்றத்தார்களை முன்னே போகுமாறு செய்துவிட்டு, தனது ஏவலர்களுடன் நாள் ஒன்றுக்கு,ஒன்றரை காததூரம் வழிநடந்து வந்து கொண்டிருந்தான்.திருப்புறம்பயம் என்ற ஷேத்திரத்தை அடைந்தபோது சந்தியாகாலத்தை நெருங்கவே,
இதற்கு மேல் பயணத்தை தொடர விரும்பாமல்,அன்றிரவு அங்கு தங்கிச்செல்ல எண்ணினான்.அந்தத் தலத்தின் ஆலயத்துக்கு அருகில் இருந்த கிணற்றில் நீராடிவிட்டு, வன்னி மரத்தடியில் உணவு சமைத்து சாப்பிட்டனர்.
ஆலயத்தினருகே படி ஒன்றின் மேல் தலைவைத்து உறங்கிய சமயம், கொடிய நச்சுப்பாம்பு ஒன்று வந்து அவனைக் கொத்தியதால்,விஷம் வேகமாக தலைக்கேறி வணிகனுடைய மருமகன் இறந்தான். ஏவலாளர்களும்,தோழியர்களும் புலம்பி அழ,மாமன் மகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள்.
மணமாகாததால்,அவனைத் தீண்டாமல் ஒதுங்கி நின்று அழுதாள். தனக்கு நிச்சயிக்கப்பட்ட நல்வாழ்க்கை தன் கண்ணெதிரே கருகிப்போனதோடு,பழியும் தன் மேல் விழுமே என்று மாமன் மகள் அழுது அரற்றி கீழே விழுந்து மயங்கினாள்.பல சிவத்தலங்கள் தோறும் சென்று வணங்கிய திருஞானசம்பந்தர்,
அப்போது அவ்வூர் மடத்தில் எழுந்தருளியிருந்தார். ஒரு பெண் அழும் ஒலியை கேட்ட அவர்,விவரம் அறிந்ததும்,ஆலயத்தின் பக்கம் விரைந்து சென்று,வணிகப் பெண்ணைப்பார்த்து, “பெண்ணே!நீ யார்?” என்று பரிவுடன் கேட்டார்.அந்த வணிகப் பெண்ணும் அவரை வணங்கி,நடந்ததை எல்லாம் அவரிடம் கூறி,
தனக்கும் மதுரை வணிகனுக்கு ஏற்படவிருந்த திருமணத்தையும் பற்றியும் தெரிவித்தாள்.நிராதரவாக விடப்பட்ட அப்பெண்ணின் துயரைப் போக்க எண்ணிய சம்பந்தர்,உயிர் நீத்த வணிகனின் உடலருகே சென்று,அவனுடைய உடல் அமிர்த மயமாகும்படி ஈசனை நோக்கி பதிகம் ஒன்றை பாடியருளினார்.
சில நிமிடங்களில் கொடிய நஞ்சு உடலிலிருந்து இறங்கிச் சென்றவுடன்,இறந்து கிடந்தது வணிகமகன் புத்துயிர் பெற்று, உறங்கி கிடந்தவன் போல் எழுந்து உட்கார்ந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் இந்த அதிசயத்தைக்கண்டு, திருஞானசம்பந்தரை போற்றித் தொழுதனர்.
கன்னிப் பெண்ணும் பேருவகை அடைந்து சம்பந்தப் பெருமானை வணங்கி துதித்தாள்.வணிகக் கன்னி,மாமன் பெண்ணாக இருந்தாலும், தலைவன் இறந்தபோதும்,உயிர் பெற்றபோதும், அவனைத் தொடாமல் இருந்த நெறியையும், அன்பையும் கண்டு வியந்த திருஞானசம்பந்தர், மதுரை வணிகனைப் பார்த்து,
“வணிகனே!உனது மாமன் மகளான இத்திருமகள் மாதர் குல விளக்கு.எப்பொழுதும் உன் உடலை தீண்டும் தகுதிப்பெற்றவள். இவளை இங்கேயே திருமணம் செய்துக்கொண்டு பின்னர் ஊர் செல்க”என்று கூறினார்.சம்பந்தரின் திருவாக்கை போற்றிய அவ்வணிகனும் “ஐயனே,தேவரீர் எங்கள் பால் வைத்துள்ள அன்புக்கும்,
நல்லெண்ணத்திற்கும் நன்றி. ஆனால் தக்க சான்றுகளும் இல்லாமல் இப்படி ஏதோ ஒரு ஊரில் நான் எவ்வாறு மணம் செய்து கொள்வேன்?” என்று கேள்வி எழுப்பினான்.அதற்கு சம்பந்தர், “மகனே!இப்பெண் பிறக்கும்போதே,உன் மாமன் உனக்காகவே இவளை பேசியதை உறவினர்கள் அறிவார்கள்.எனவே கவலை வேண்டாம்.
இதோ இந்த வன்னியும்,கிணறும்,லிங்கம் இம்மூன்றையும் சாட்சிகளாக கொண்டு எனது பேச்சை தட்டாமல் திருமணம் செய்து கொள்வாயாக"என்று அருளினார்.சம்பந்தரையே ஆசிரியரும், நண்பரும்,தெய்வமும்,சுற்றமுமாகக் கொண்ட அவ்வணிகன் அந்த இடத்திலேயே முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு, விடைபெற்றுக் கொண்டான்.
ஏவலாளர்களும்,பெண்கள் கூட்டமும் உடன் வர, மதுரையை அடைந்தான்.உறவினர்கள்,அவன் மாமன் பெண்ணை அவன் திருமணம் செய்துக்க கொண்ட செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.காலாகாலத்தில் வணிகனின் இரு மனைவியரும், குமாரர்களைப் பெற்றுக் கொடுத்தனர்.வணிகன் மிக நலமாக வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் தெருவில் இரு மனைவியர்களுடைய குமாரர்களும் விளையாடிக்கொண்டிருந்தபோது,திடீரெனெ சண்டையில் மூத்தாளுடைய புதல்வர்கள் இளையவளுடைய மகனைக் கோபத்துடன் அடித்தனர்.இதன் காரணமாக இளையவளுக்கும் மூத்தாளுக்குமிடையேயான பேச்சு தடித்து, மூத்தவள் இளையவளை அவமரியாதையாகப் பேசியதுடன்,
“நீ எந்த ஊர்?எந்தக் குலம்?என் கணவனைக் கண்டு ஆசைப்பட்டு வந்த உனக்கு என்னை கண்டிக்க என்ன தகுதி இருக்கிறது?நான் கட்டி வந்தவள்.உன்னைப் போல ஒட்டி வந்தவள் அல்ல.”என்றாள்.
இளையவள் தனக்கும் வணிகனுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றதை எடுத்துக்கூறினாள்.இருப்பினும் மூத்தவள் அதை ஏற்க மறுத்தாள்.
என் கணவனை அக்கினி சாட்சியாக மணம் செய்துகொண்டவள் என்பதற்கு சாட்சி இருந்தால் காட்டுக”என்று கடுமொழி கூறினாள்.
கற்பிலே சிறந்த இளையவள்,மிகவும் மனம் வருந்தி,"என் கணவர் பாம்பு கடித்து இறந்தபோது,உயிர் அளித்த திருஞானசம்பந்தரின் ஆணையால் என் கணவன் திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும்,
சிவலிங்கப்பெருமானும்,வன்னி மரமும்,கிணறும் காண திருமணம் செய்துகொண்டேன்.அந்த மூன்றும் தான் சாட்சிகள்”என்றாள்.
அதைக்கேட்ட மூத்தாள் சிரித்தாள்.நல்லது.வெகு அழகு.நல்ல சாட்சிகளாகத்தான் கூறினாய்.அந்த மூன்று சாட்சிகளும்,இங்கு வருமானால்,அதுவும் உண்மையாகத்தான் இருக்கும்”என்று ஏளனம் செய்தாள்
துன்பமடைந்த இளையவள்,"தெய்வமே!தாய்,தந்தை இழந்த பேதையான எனக்கு யார் துணை!மாமனாக வந்து வழக்குரைத்து, உரிமை வாங்கித்தந்த எம்பெருமானே!நீரே கதி.என்று மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தர பெருமானை எண்ணியவளாய், அன்றிரவு முழுவதும் சாப்பிடாமல் கிடந்தாள்.
மறுநாள்,ஆலயம் சென்று எம்பெருமானை வணங்கி “அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டபோது,சாட்சியாக இருந்த வன்னிமரமும், கிணறும்,சிவலிங்கமாகி தேவரீரும் இன்று இங்கு வந்து தோன்றி,என் மூத்தாளின் ஏச்சை நீக்கி,எளியவளைப் பாதுகாக்காவிடில் இறந்து விடுவேன்”என்று முறையிட்டாள்.
உடனே சோமசுந்தர பெருமாளை அருளால் எல்லாரும் பார்த்து வியப்படையும் வண்ணம்,திருமணம் ஆன காலத்தில், திருபுறம்பயத்தில் தலத்தில் இருநதபடியே மூன்று சாட்சிகளும் ஆலயத்தின் வடகிழக்கு திக்கில், விரைவாக வந்து சேர்ந்தன. சோமசுந்தரக் கடவுளுக்கு நன்றி சொன்ன இளையவள் உடனே ஓடோடிச் சென்று மூத்தாளையும்
அக்கம்பக்கத்தினர் சிலரையும் அழைத்து வந்தாள்.மீண்டும் சோமசுந்தர்ப் பெருமானை வணங்கிவிட்டு, “இது வன்னிமரம்! இது கிணறு!இது சிவலிங்கம்!இந்த மூன்றும் எனது திருமணத்துக்கு சாட்சியாக நின்றன” என்று சுட்டிகாட்டி கூறினாள்.
இளையவளாகிய வணிகப்பெண்ணின் கற்பின் சிறப்பையும், சிவபக்தியையும்,
சோமசுந்தரபெருமான் அவளுக்காக அருளியதை அறிந்த மக்கள் எல்லாரும் மிகுந்த ஆச்சர்யம் அடைந்து,மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை வணிகன்,தனது இளைய மனைவியின் கற்பின் சிறப்பால், ஆயுள்,ஆரோக்கியம்,ஐசுவரியம் ஆகிய எல்லாம், தருமமும், புகழும், ஓங்க, ஒழுக்கத்தில் சிறந்து திகழ்ந்தான்.

திருச்சிற்றம்பலம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

17 Feb
ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது. குனிந்து அதை எடுத்தார்.அது ஒரு பழைய மணி பர்ஸ்.ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி,மெருகு குலைந்திருந்தது.   பர்ஸைத் திறந்தார்.சில கசங்கிய நோட்டுகளும்,சில்லறைகளும் இருந்தன.அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது. Image
பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர்,இது யாருடையது?என்று குரலை உயர்த்திக்கேட்டார்.ஒரு முதியவர்,அது  என்னுடையது என்றார்.பர்ஸின் நிலையையும்,முதியவரின் வயதையும் கண்டு,ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸை தந்திருக்கலாம்.ஆனாலும் பரிசோதகர்,உம்முடையதுதான்  என்பதற்கு என்ன ஆதாரம்?
எனக் கேட்டார்.அதில் கிருஷ்ணர் படம் இருக்கும் என்றார் பெரியவர்."இதெல்லாம் ஒரு ஆதாரமா?யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே". "ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார். வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.
Read 12 tweets
13 Feb
நீதி நூல் - இனிய சொல் 

நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும்?எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.
"வட்டவுல கெட்டுமிசை மட்டற நிரப்பும்
வெட்டவரு துட்டரை விலக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ"

முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம்,சிரிச்சு பேசி,மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்"னு,
நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா,எப்ப பாரு எரிஞ்சுஎரிஞ்சு விழும்.வாயில நல்ல வார்த்தையே வராதே"என்ற இகழ் வரும்.இரண்டாவது,நம்மை பிடிக்காதவர்கள்,வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள்.
Read 5 tweets
13 Feb
ஜனக மகராஜா ஒருநாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார்.
கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது.சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.
இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும்போது, கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.
பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.
ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?
அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.
Read 18 tweets
6 Feb
பெண்மணி ஒருத்தி், ஐரோப்பாவில் தன்னுடைய மிக நீண்ட சுற்றுலாவை முடித்துக்கொண்டு, தன் சொந்தநாடான தென் ஆப்பிரிக்கா போக, லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்தாள்.அடுத்த பிளேனுக்கு நேரம் நிறைய இருந்ததால், டீயும் பிஸ்கெட்டும் வாங்கிகொண்டு, யாருமில்லாத ஒரு டேபிளில் வந்தமர்ந்தாள்.
காலைப்பேப்பரைப் படித்துக்கொண்டிருந்த அவளுக்கு எதிரிலிருந்து,சடசட என்று சத்தம்கேட்டது.நிமிர்ந்து பார்த்தவளுக்கு, பலத்த அதிர்ச்சி.பார்க்க, படித்தவன்போல் நன்றாக, உயர்ந்த விலையில் உடை உடுத்தி இருந்த ஒரு இளைஞன்,அவள் பிஸ்கெட் ஒன்றை அதன் கவரில் இருந்து எடுத்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிஸ்கெட்டுக்காக, அந்நிகழ்ச்சியை பெரிதுபடுத்த விரும்பாத அப்பெண், அமைதியாக தானும் ஒன்றை எடுத்துத் தின்றாள். ஒன்று இரண்டு நிமிடங்கள் கடந்தன. திரும்பவும் சடசட என்ற அதே சத்தம். இன்றொரு பிஸ்கெட்டை எடுத்து அந்த இளைஞன் தின்றுக் கொண்டிருந்தான். மாற்றி மாற்றி இருவரும் எடுத்துத்தின்று,
Read 10 tweets
4 Feb
சுப்பன் சொன்னான் மந்திரத்தை
   சொக்கன் கேட்டான் தலைகுனிந்து
இப்புவி மயங்குது காட்சிகண்டு
   இதற்கு சாட்சி சுவாமிமலை
மாம்பழம் கேட்டது இருபிள்ளை
   மதியால் வென்றது முதல்பிள்ளை
மலைமேல் நின்றது மறுபிள்ளை
   மயிலுமே சாட்சி பழநிமலை
தீயவன் சூரனைக் கொன்றவனே
   செந்தூர் கடலினைக் கொண்டவனே
மாயோன் மருகன் முருகையனே
   மலரொன்று சாட்சி திருச்சீரலை
Read 7 tweets
4 Feb
ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர்,ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்துக்கொண்டிருந்தார்.அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு சத்தம் கேட்டது.ராமானுஜர் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார்.அவரைக் கண்டதும் அனைவரும் வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து என்ன விஷயம்?என்று வினவினார்.அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்,இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர்.இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக,இவருக்கு ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது.இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. ராமானுஜர் திரும்பி அவரைப் பார்த்தார்.வேலைச்செய்பவர் சொன்னார்,"ஸ்வாமி,அவர் சொல்வது உண்மைதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிவிட்டது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!